20.10.1986
தொட்டிச்சியம்மன் துணை.
என் மோகப்பசி மோகனாவுக்கு, உன் மோகமுள்
மோகன் மோகத்துடன் எழுதுவது, நான் உன் நினைவால் வாடுகிறேன், நீ உன் அம்மா
வீட்டுக்கு சென்று, இன்றோடு ஒன்பது மாதங்களாகி விட்டது, இதுவரை ஒரு லட்டர்கூட
போடவில்லை, நானும் ஆபீஸில் வேலை கூடிவிட்டதால், போடலாமென இருந்து விட்டேன், அடுத்த
அபார்ட்மெண்ட் அபர்ணாதான், எனக்கு சோறு சமைத்து வைக்கிறாள், அடுத்த மாதம் அவளுக்கு
பிரசவமாம், மேலும் மூன்று வருடங்களாக லீவு கிடைக்காத அவளுடைய கணவன் மருதகாசிக்கு,
லீவு கிடைத்து விட்டதாம் அதனால் அடுத்த மாதம் 18 ம் தேதி துபாயிலிருந்து வருகிறாறாம், ஆகையால்
அடுத்த மாதம் முதல் சமைத்துப் போட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று
வருத்தப்பட்டு, உனக்கு கடிதம் போட்டு, 19 ம் தேதி உன்னை வரச்சொல்லச் சொன்னாள், காரணம் 20 அல்லது 21 ம் தேதி குழந்தை பிறக்கலாமென, நமது குடும்ப
டாக்டர் காமினி சொன்னார், மேலும் அபர்ணாவுக்கும் உன்னை பார்க்க வேண்டுமென ஆவலாக
இருக்கிறதாம், பாவம் அவளும் என்ன செய்வாள், அவள் அம்மா அலமேலுவையும், அடுத்ததெரு
அழகர்சாமி கூட்டிட்டு ஓடிட்டான், துணைக்கு இருந்த அவள் தங்கச்சி சீமாவும் சீரியல்ல
நடிக்கப்போயி சீரழிஞ்சு போயிட்டா, அவள் அப்பாவும் வேலூரிலிருந்து வர இன்னும்
ரெண்டு மாசம் இருக்காம், அவளுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா... நம் அன்பு மகன் அன்பரசன், எப்படி இருக்கிறான் ? அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க
முடியவில்லை, அதனால நீ கண்டிப்பா அடுத்த மாதம் 19 ம் தேதி வரவும், என் அன்பு மகனுக்கும்,
உனக்கும் என் ஆசை முத்தம்.19 ம் தேதி காலை, நான்
ரயில்வே ஸ்டேஷனில் உனக்காக காத்திருப்பேன்.
இப்படிக்கு
உன்
ஆசை, மோகனாவின் மோகன்.
சாம்பசிவம்-
துபாய்க்காரன், எதுக்கு வர்றானாம் புள்ளைக்கு பேர் வைக்கவா ? வச்சுட்டு, அப்படியே அவனை பாதயாத்திரையா,
காசிக்கு போகச் சொல்லுஞங்க, அவன் கர்மமெல்லாம் தொலையட்டும்,
இன்ஷியல்ல கூட பிரச்சனை இல்லை போலயே !
குறிப்பு- 19 ம் தேதி மோகனா வருவாளா... அல்லது
கடிதம் ஏதும் வருமா ? எப்படியும், அடுத்த வாரம் நமக்கு தெரிந்து விடும், நல்லதே நடக்கட்டுமென,
நல்ல பெருமாளை பிரார்த்திப்போம்




