தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 14, 2017

கோமளவள்ளி


ஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா ?
உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு...

வாய் தவறி வந்துடுச்சு அதுக்கேன் கோவிக்கிறே.... ?
ஒரு தடவை தவறுனாச் சரி எப்பவுமேவா ?

இதெல்லாம் ஒரு பிரச்சனையா. ஒங்க அப்பா நல்லா பேராத்தான் வச்சாயென்ன ?
இப்ப அதான் குறைச்சலாப் போச்சா ?

அப்ப யேண்டி... குரைக்கிறே ?
இஞ்சே பாருங்க இப்படி ரெட்டை அர்த்தத்துலே பேசுனீங்க.... ?  

என்னடி... செய்வே ?
எங்க ஊருக்குப் போயிட்டு வந்துடுவேன்.

யேன்.. ஒங்க ஊருலருந்து மச்சானுக்கு என்ன கொண்டு வரப்போறே.. ?
கொண்டு வரமாட்டேன் அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்.

வச்சுட்டு வந்துடுவியா ? மச்சானுக்காக ஊருக்குப் போறவ... அங்கே ஏன்... வச்சுட்டு வர்றே... ?
இதெல்லாம் கொண்டு வரமுடியாது... எங்க ஊரு ஆத்துலதான் வச்சுட்டு வரமுடியும்.

என்னடி ஒண்ணும் புரியலையே.... ஆத்துல என்ன... வைக்கப்போறே... ?
செய்வினைதான்.

? ? ?
என்ன... பேச்சைக் காணோம். ?

யேண்டி... இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமாடி ?
உங்களை வாயைக்கட்டி வச்சாத்தான் சரியா வரும் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை சாப்பிட மட்டும் வாயைத் திறங்க போதும்.

அடியே இனிமேல் அப்படிக் கூப்பிட மாட்டேன் எனக்கு வாயில அதான் வருது வேற ஏதாவது பேரு நீயே சொல்லேன். ?
ஏன்... வள்ளினு கூப்பிட்டா என்ன ?

சரி அதுக்கும் வள்’’ளுனு விழமாட்டியே ?
சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்த ஊர் புத்திதானே வருது.

அடியே.... ராஜபாளையம் தமிழ் நாடு முழுக்க பேமஸு தெரிஞ்சுக்க.
இனிமே இப்படிப் பேசினீங்க... உடனே பஸ் ஏறிடுவேன் ஞாபகம் வச்சுக்கங்க...

ஹும் அன்னைக்கே தரகர்கிட்டே சொன்னேன் எமனேஸ்வரத்துல பொண்ணு வேண்டாம்னு கேட்டாரா.... அந்த ஆளு... எதுக்கெடுத்தாலும் ஊர்ப்புத்தியை காட்டிடுறா.... அந்த தரகர் மட்டும் மாட்டுனான்....

திடீரென வீட்டுக்குள் நுழைந்த ஆறு வயதில் ஆணும், நாலறை  வயதில் பெண்ணுமான இரண்டு வாண்டுகள் வந்து தாத்தா.... அம்மாச்சி... என்று பெரியசாமி ஐயாவையும், கோமளவள்ளி அம்மாளையும் கட்டிப்பிடிக்க... அடடே.... வாங்க வாங்க செல்லங்களா... தங்கம் வாங்க, தங்கம் வாங்க மாப்பிள்ளை, வாம்மா, வாங்க மாப்பிள்ளை... நல்லாயிருக்கியாம்மா..... ஏங்க சேர் எடுத்துப்போடுங்க... வாங்க உட்காருங்க... 
கோமண..... அது... அது... வந்து சீக்கிரம் தூக்குச்சட்டியை எடுத்தா கடைக்குப் போயிட்டு வர்றேன் 
என்ற பெரியசாமி ஐயாவை கோமளவள்ளி அம்மாள் முறைத்து விட்டு தூக்குச்சட்டியை எடுத்துக் கொடுத்ததை மதுரையில் இருந்து வீட்டுக்கு விருந்தாளி வந்த இளைய மகளும், மருமகனும், பேரனும், பேத்தியும் கவனிக்கவில்லை ஐயா தனது T.V.S.50-யை எடுத்துக்கொண்டு பேரன் முகேஷை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு விரைந்தார் கறிக்கடையை நோக்கி... சரி அவங்க சந்தோஷமாக இருக்கட்டும் நீங்க கருத்துரையை போட்டுப் போங்க... நான் ய்யேன் வேலையைப் பார்க்கிறேன் அடுத்த பதிவைப் போடணும்...

சாம்பசிவம்-
நாற்பது வருஷமா கூப்பிட்டு வந்த பேரை மாற்ற முடியுமா ?

Chivas Regal Sivasambo- 
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தரகரு இன்னும் உசுரோட இருக்காரா ?

சிவாதாமஸ்அலி-
பெருசுக.. இந்த வயசு வரைக்கும் சந்தோஷமாக விளையாடுதுகளே இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா ? 


நகைச்சுவை பதிவு எழுத வைத்த நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன் என்னால் பிறர் சிரித்து மகிழட்டும் என் சோகம் என்னோடுதான். 

சனி, மார்ச் 11, 2017

வறுமையின் நிறம் இருட்டே...

வறுமையின் நிம் இருட்டே...

இறைவா என்னை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு முதற்கண் நன்றி.
நீ படைத்த இவர்களை என்னை காண வைத்தமைக்கும் நன்றி.
கண்டு இவர்களுக்கு என்னை உதவ வைத்தமைக்கும் நன்றி.
இவர்களுக்கு உதவ என்னை செல்வந்தனாக்கியதற்கும் நன்றி.
என் சந்ததிகளை இந்நிலைக்கு ஆகவிடாமல் என்னை தடுக்க வைத்தமைக்கும் நன்றி.
பின்குறிப்பு ஆக்கமாட்டாய் என்பதற்கும் நன்றி.

இருப்பினும் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயடா... சண்டாளா...

என் நெஞ்சிருக்கும்வரை என் நினைவில் நிற்க வேண்டியவை.

நட்பூக்களே கீழ்காணும் இவையனைத்தும் முதலில் எனக்கே பிறகே தாங்களுக்கு.

ஸ்ரீ சாரதா சக்தி பீடம் சென்னை.

சிவானந்தா சரஸ்வதி சேவாஸ்ரமம் சென்னை.
தி யுனைடெட் பேஸிக்கிலி ஹேண்டிகேப்பிட் ஸ்கூல் கோவை.

செவ்வாய், மார்ச் 07, 2017

கண்மணிக்கு கண்ணீரஞ்சலி


இன்னும் நம்ப முடிய வில்லையடா
உனக்கு மரணம் வந்து விட்டதடா
எனக்கு கனவு போன்றே உள்ளதடா
இதற்குத்தான் நான் இந்தியா வந்தேனாடா

திங்கள், பிப்ரவரி 13, 2017

சினி சிரிப்பூக்கள்


டைரக்டர் மீடியாக்கள் மேலே கோபமாக இருக்காரே ஏன் ?
படத்தோட பேரு ''சுட்டகதை''னு வச்சதாலே பத்திரிக்கையில் பூராம் இயக்குனர் சுட்டகதை பிரமாதமாக சுட்டு இருக்காருனு எழுதிட்டாங்களாம்.
* * * * *01* * * * *

நடிகை நந்திதா ஏன்... திடீர்னு கால்ஷீட் தரமாட்டேனு சொல்றாங்க ?
நம்ம டைரக்டரு நடிகையோட சீட்ல கையை வச்சிட்டாராம்.
* * * * *02* * * * *

வில்லன் நடிகர் கற்புக்கலைஞன் ஏன் நூறு கற்பழிப்புக்காட்சி வைக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறாமே ?
அவருக்கு இது நூறாவது படமாம்.
* * * * *03* * * * *

சிரிப்பு நடிகர் சிங்காரத்தை டைரக்டர் ஏன்... வேண்டாம்னு சொல்றாரு ?
அவருக்கு ஹீரோவை அறையிறது மாதிரி ஒரு ஸீன் கண்டிப்பாக வேணும்னு சொன்னாராம்.
* * * * *04* * * * *

இசையமைப்பாளர் இந்திரனுக்கும், தயாரிப்பாளார் தயாநிதிக்கும் சண்டையாமே ?
ஆமா ட்யூன் போட ஸ்விஸ் போவதற்கு கொழுந்தியாள் கோகிலாவுக்கும் விசிட் விசா போடச்சொன்னாராம்.
* * * * *05* * * * *

அந்த வடநாட்டு புதுமுக நடிகரை டைரக்டர் ஏன் அறைஞ்சாரு ?
துணிவை இழக்க மாட்டேனு வசனம் சொல்லச் சொன்னதுக்கு துணியை இழுக்க மாட்டேனு சொல்லிட்டாராம்.
* * * * *06* * * * *

நடிகர் நந்தா ‘’லைட்பாய்’’ படத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாராமே ?
தனது ஆரம்பகால வேலையை குத்திக்காட்டுவற்காக டைரக்டர் வச்ச தலைப்புனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாராம்.
* * * * *07* * * * *

நடிகை அகிலா அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஹீரோயினா சும்மா நடிச்சாலும் நடிப்பேனே தவிர அம்மா வேடத்துல நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்களாம்.
* * * * *08* * * * *

புதுமுக நடிகை முதலிரவு ஸீன்ல நடிக்கும்போது எல்லோரையும் வெளியே போகச் சொன்னாங்களாமே ?
ஆமா ஸீன் தத்ரூபமாக இருக்கனும்னா... யாரும் இல்லாட்டாதான் இயற்க்கையா இருக்கும்னு சொல்றாராம்.
* * * * *09* * * * *

அந்தப் பாடலாசிரியரை தயாரிப்பாளர் ஏன் வேண்டாம்னு சொல்றாரு ?
அவரு, தமிழ் வார்த்தையிலதான் பாட்டு எழுதுவாராம் அதனாலதான்.
* * * * *10* * * * *

பானை, சட்டி கழுவுற மாதிரியெல்லாம் நடிக்க முடியாதுனு ஹீரோயின் சொல்லிட்டாங்களாமே ?
ஆமா ஜட்டியோட வேண்டுமானாலும் நடிப்பேன் ஆனால்... சட்டியை கழுவுற ஸீன் மாதிரி நடிக்க வராதுனு சொல்றாங்க.
* * * * *11* * * * *

புது கேமராமேன் புருஷோத்தமனை ஏன்... திடீர்னு படத்துலருந்து நீக்கிட்டாங்களாமே ?
முதலிரவு ஸீன் ஒரு மணிநேரம் எடுத்த பிறகு பார்த்தால் ரெக்காடிங்குல ஒண்ணுமே வரலையாம் கேட்டதுக்கு பழைய ஞாபகத்துல தூங்கிட்டேன் அப்படினு சொன்னாராம்.
* * * * *12* * * * *

சனி, பிப்ரவரி 11, 2017

விழித்தெழு தமிழா...


நண்பா பேரூந்திலோ, ரயிலிலோ பயணம் போகிறோம் பொழுது போக்கிற்காக ஏதாவதொரு பத்திரிக்கை வாங்குகிறோம் பத்திரிக்கை எதற்காக நேரத்தை கழிப்பதற்காக பத்திரிக்கை சுமார் முப்பது பக்கம் என்று வைத்துக் கொள்வோம் அதில் சரிபாதி விளம்பரம். முன் புறமும், பின்புறமும் திரைப்படத்திலும், தொல்லைக்காட்சியிலும் நாம் அன்றாடம் பார்த்துப் பார்த்து சலித்துப் போன திரைப்பட நடிகர் நடிகையரின் புகைப்படம். எல்லா பத்திரிக்கையுமே வருடத்திற்க்கு ஒருமுறை மை விலையேற்றம், பேப்பர் விலையேற்றம், மின்சாரக் கட்டணஉயர்வு, போக்குவரத்துக் கட்டணஉயர்வு, தொழிளாலர் சம்பளஉயர்வு என்று விலை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்க நேரமில்லை ஏன்னா நமக்கு தூங்கணும்.
சரி மறுபாதியில் என்ன இருக்கு அதைக்காண்போம்,

01. தூ.... வில் தொடங்கும் அந்த மூன்றெழுத்து நடிகையின் நாய்க்கு சுகமில்லை அதனால் நடிகை மூட்அவுட்.
02. உஜாலா நடிகை கொடைக்கானலில் குஜாலா
03. மீன் குழம்பு எனக்கு உயிர் கைலாஞ்சி நடிகையின் சுவையான பேட்டி.

இந்த மாதிரியான அறிவுப்பூர்வமான விசயங்கள் நண்பா, நண்பி சிந்தித்துப்பார் இவையெல்லாம் தேவையா ?
கரும்பு தின்னக்கூலியும் கேட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாம். நான் ஒருவன் வாங்காமல் இருந்தால் இவர்கள் திருந்தி விடுவார்களா ? என்று கேட்காதே சிறுதுளி பெருவெள்ளம் ஒருகை தட்டினால் ஓசை வராது மறு கையும் தட்டவேண்டும் மறுகை தட்டினால் பல கைகளும் தட்டும். வேறு என்னசெய்வது பொழுது போக வேண்டுமே என்கிறாயா ?
இயற்கையை ரசித்துப்பார்... இல்லையேல்...
உன்சக பயணிகளிடம் பேசிப்பார்...
விஞ்ஞானம்பேசு
மெய்ஞானம்பேசு
அஞ்ஞானம்பேசு
ஏன் உன் ஞானமும்பேசு
பேசு நண்பா உன் வைரத்திற்கு (மூளைக்கு) பட்டை தீட்டு இல்லையேல் இவர்கள் உன் நெற்றியில் பட்டை போட்டு விடுவார்கள். ஏமாந்து விட்டு ஏமாற்றியவனை குறை சொல்லாதே அது கையாலாகாதவன் பேச்சு.

ஏமாற்றியவன் அயோக்கியன்
ஏமாறுபவன் அப்பாவி
இது அந்தக்காலம்.

ஏமாற்றியவன் அறிவாளி
ஏமாறுபவன் முட்டாள்
இது இந்தக்காலம்.

நண்பா... ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்.
ஏமாறுபவன் முதல் இலக்கம் ஏமாற்றுபவன் இரண்டாம் இலக்கம் முதலாமாவன் இல்லையேல் உலகில் இரண்டாமாவன் தோன்றவே முடியாது ஆகவே இரண்டாமாவனை உருவாக்கிய முதலாமாவனே குற்றவாளி எல்லாவற்றிலும் முன்னோக்கிப் போகும் நீ இதில் மட்டும் பின்னோக்கிப் போவதேன் ?