தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 07, 2017

கண்மணிக்கு கண்ணீரஞ்சலி


இன்னும் நம்ப முடிய வில்லையடா
உனக்கு மரணம் வந்து விட்டதடா
எனக்கு கனவு போன்றே உள்ளதடா
இதற்குத்தான் நான் இந்தியா வந்தேனாடா
உனது வாழ்வின் கடைசி பத்து தினங்களடா
அவசியமின்றி எனது மடியில் படுத்தாயடா
இதன் அர்த்தம் அன்று புரிய வில்லையடா
இன்று நினைத்து அழ வைத்து விட்டாயடா
என்னை விட்டுப் போகாதண்ணே என்றாயடா
என்னை விட்டுப் போய் விட்டாயடா
எனது கையைப் பிடித்திருந்த காட்சியடா
இன்னும் கண்ணுக்குள்ளே நிற்குதடா
எனது கைச்சூடு தணிய வில்லையடா
உயிர்களுக்கு இங்கு மதிப்பு இல்லையடா
இவர்களால் மூன்றறை மணி நேரத்திலடா
இவ்வளவு பணம் பறிக்க முடியுதடா
உனது உயிர் பறிக்க பணமாடா
மருத்துவர்கள் இறைவனுக்கு சமமடா
என்று சொன்னவன் மடையனடா
உன்னை சராசரி பெண்ணைப் போன்றடா
சிகிச்சை அளித்து விட்டார்களடா
நீ குழந்தை என்று அவர்கள் நம்ப வில்லையடா
பதினாறு வருடங்களுக்கு முன்பேடா
என் வாழ்க்கையை வகுத்தது உன்னால் தானடா
இன்று பாதையை மாற்றி விட்டாயடா
நீ மட்டும் பயணம் கொண்டாயடா
எனக்கு வழி தெரிய வில்லையடா
எல்லாக் குழந்தைகளின் திருமணத்திலடா
நீ இருந்து சந்தோஷமாய் வாழ்த்தினாயடா
என் குழந்தைகளை மறந்து விட்டாயடா
நான் உனக்கு தவறு செய்து விட்டேனாடா
நீ ஒரு வருடமாவது இருந்திருக்கலாமடா
என் மகளின் திருமணம் பார்த்திருப்பாயடா
நம் இருவருக்கும் மறுபிறவி இருக்குமடா
அதில் நான் உனக்கு மகனாய் பிறப்பேனடா
அல்லது நீ எனக்கு மகளாய் பிறப்பாயடா
அன்று சராசரி பெண்ணாய் வேண்டாமடா
இதே கள்ளம் கபடமற்ற குழந்தை போன்றேடா
நீ மீண்டும் பிறந்தால் மட்டும் போதுமடா
அதில் நான் இதே அண்ணன் என்ற விபரமடா
நீ அதே வனிதா இது அறியப்படல் வேண்டுமடா
இப்பொழுதே இறைவனிடம் சொல்லி வையடா
எனக்கு சில கடமைகள் பாக்கி உள்ளதடா
முடித்து விட்டு நான் உன்னை காண வருவேனடா
அதுவரை அப்பாவின் கையைப் பிடித்து விளையாடடா

இறுதிவரை மறக்காமல் நடைபிணமாய் வாழும் உன் அன்பு அண்ணன்


தில்லை அகத்தாரின் விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே ! இந்த பதிவில் வந்து எனது அன்புத்தங்கை க. வனிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைத்து உள்ளங்களுக்கும், மின்னஞ்சல் வழியாக எனக்கு ஆறுதல் அளித்த உள்ளங்களுக்கும் மற்றும் செல்பேசி வழியாக ஆறுதல் தந்த உள்ளங்களுக்கும் பதிவிட்டு என்னை அடிக்கடி அழைத்து ஆறுதல் தந்த சகோ திருமதி. கீதா மற்றும் பதிவுலகிற்கு தகவல் கொடுத்த அன்பு ஜி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது விழிகள் நிறைந்த நன்றி.

34 கருத்துகள்:

 1. கண்ணீருடன்...

  சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
 2. காலம் உங்களை மாற்றட்டும்..வருந்துகிறேன்

  பதிலளிநீக்கு
 3. ஆறுதல் சொல்லி ஆறாது நண்பரே. தங்கள் வலியது ஆறிட வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஆழ்ந்த இரங்கல்கள் சில நடப்புகள் நம் கையில் இல்லை ஆனால் மனோதைரியம் நம்வசமே தில்லையகத்துப் பதிவிலேயே செய்தி அறிந்தேன்

  பதிலளிநீக்கு
 5. ஆறுதல் சொல்லுவது கடினம். காலம் மனப்புண்ணை ஆறவைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. ஆழ்ந்த இரங்கல்கள் .
  அதுவும் வெகு நாட்களுக்கு அப்புறம் சொந்த ஊர் வந்து சேர்ந்தபின் ....
  தாங்க முடியாத துயரம் தான் .
  ஆன்மாசாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. ஒ! எனக்கு இப்போது இதை படித்த பின் தான் தெரியும் சார். மன்னிக்கவும், உயிரானவர்கள் இழப்புக்களை எதனாலும் எவராலும் ஈடுகட்ட முடியாதெனினும் காலம் அனைத்துக்கும் மருந்தாகட்டும்.

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 8. அன்பு தங்கச்சியை இழந்து வாடும் உங்கள் மனம் சாந்தியடைய இன்னும் காலம் ஆகும்.

  உங்களுடன் இன்னும் சிறிது காலம் இருந்து இருக்கலாம்.

  ஆறுதல் அடையுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. It is terrible to hear about your loss and my heartfelt condolences.

  பதிலளிநீக்கு
 10. ஈடு செய்ய முடியாத இழப்பு காலம் மட்டும்தான் உங்கள் துயர் துடைக்க முடியும்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஜி !

  இறப்பும் பிறப்பும் இறையின் செயலாய்
  இருந்தும் வலிகள் சுமக்கின்றோம் - மனம்
  மறக்கும் வழிகள் காணும் முன்னே
  மடிந்தே மண்ணுள் தொலைகின்றோம்!

  தங்கள் தங்கையின் பிரிவால் துயருறும் தங்களுக்கு இறைவன் நம்பிக்கையைக் கொடுக்கட்டும் தங்கையின் ஆன்மாவும் சாந்தியடையட்டும்

  இதயம் கனத்தும் இருக்கும்வரை இதமாய் வாழ்வோம்

  பதிலளிநீக்கு
 12. தங்கையிடம் உங்கள் பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்கையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான்! காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்.

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்குத் தெரியாததில்லை..
  மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் - ஜி!..

  காலம் கண்ணீரை மாற்றும்..

  சகோதரியின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்..

  பதிலளிநீக்கு
 14. சொல்வதற்குள் சொற்கள் சொரூபம் இழந்து போனது நண்பரே!
  ஆறுதல் ஆறுகள் நாடிவந்து தங்களது இதயத்து அணைக்குள் நிறையட்டும்!
  துயரத்து தூசிகள் வடித்தெடுத்து வாழ்வின் இயல்பு நிலைக்கு மீண்டு வருக!
  ஈடு செய்ய இயலாத இழப்பு. தேறுதல் உம்மை தேற்றட்டும்.

  பதிலளிநீக்கு
 15. மனம் கனக்கிறது...

  சகோதரி என்றும் துணை இருப்பார்...தெய்வமாக..

  பதிலளிநீக்கு
 16. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கையின் ஆன்மா அமைதி பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 17. ஆழ்ந்த இரங்கல்கள்.தங்கள் தங்கையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் இ றைஞ்சுகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. அன்பு சகோதரியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டி நிற்கிறேன்.
  தங்களது மீளாத் துயரம் நீங்கி இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன். நண்பரே!.

  பதிலளிநீக்கு
 19. அன்பு சகோதரியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று ..சகோதரியின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன் .
  இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் சக்தியை உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தருவாராக .

  பதிலளிநீக்கு
 20. எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெறிவிட்டது கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 21. அன்பு சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தியா வந்த தங்களுக்கு மீண்டும் துயரம் என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கு சகோ.இதிலிருந்து மீண்டு வர கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.

  பதிலளிநீக்கு
 22. வார்த்தைகளால் தங்களின் இழப்பை ஈடு செய்ய இயலாது நண்பரே
  பலமுறை தங்களை அலைபேசியில் அழைக்க எண்ணியும்,வார்த்தைகள்இல்லாமையால் தயங்கித் தயங்கியே அழைக்காமல் இருந்து விட்டேன்.
  மீண்டு வாருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 23. வருத்தமளிக்கிறது.. நண்பரே..

  பதிலளிநீக்கு
 24. செய்தியறிந்து உங்களுடன் பேசவே எனக்கு தயக்கமாக இருந்தது. பின்னர்தான் அழைத்தேன். எந்த சூழலையும் தாங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். இறைவன் அந்த தைரியத்தை உங்களுக்கு வழங்க பிரார்த்திக்கிறேன். உங்களது மனச்சுமைகள் குறைந்து நீங்கள் இயல்பு நிலைக்கு வருவீர்கள். காலம், உங்களது சோதனைகளுக்கு நல்ல தீர்வினைத் தரும்.

  பதிலளிநீக்கு
 25. காலம்தான் மனப்புண்ணை ஆற்றவேண்டும்.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்
  ஜி

  இழப்பின் பிரிவு இழந்த உறவுக்குத்தான் தெரியும் இறைவன் துணை ஜி...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 27. மிகுந்த வருத்தம் அண்ணா...
  இழப்பின் வலி மிகக் கொடுமையானது.
  அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. தில்லை அகத்தாரின் தளத்திலும்
  தங்கள் முகநூலில் பக்கத்திலும்
  என் துயரைப் பகிர்ந்தேன்...
  என்றும் ஆறாத துயரில் இருந்து
  விடுபட்டு வருக தம்பி! - நீ
  என்றும் அமைதி காணும் வரை
  எங்கள் உள்ளம் ஆறாதே!

  பதிலளிநீக்கு
 29. ஆழ்ந்த இரங்கல்கள்! காலம் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்றாலும் உங்கள் மனதை இது போன்ற குழந்தைகளுக்குச் சேவை செய்திட முனையுங்கள்!

  கீதா: நான் தங்களிடம் சொன்னதைச் செய்வது பற்றி யோசியுங்கள் ஜி! உங்களுக்கு நிச்சயமாக மன அமைதி கிடைக்கும் ஜி! உங்கள் பின்னூட்டம் கண்டோம்...அதற்கும் சேர்த்துத்தான் ஜி!

  பதிலளிநீக்கு
 30. கேள்விப்பட்டேன் அண்ணா ஜி. ஈடு செய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. மன அமைதிக்கு என் பிராத்தனைகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 31. இப்பொழுதுதான் இந்தப் பதிவு காணக் கிடைத்தது. நீங்கள் இது பற்றி எழுதவே இல்லை என்று நினைத்து விட்டேன். சரியாகத் தேடவில்லை போலும்.

  //அன்று சராசரிப் பெண்ணாய் வேண்டாமடா
  இதே கள்ளங் கபடமற்ற குழந்தை போன்றேடா// - உடல் புல்லரிக்கிறது! தொடர்ந்து புல்லரித்துக் கொண்டே இருக்கிறது! கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. இதயத்தை உடைத்து விட்ட வரிகள்!

  பதிலளிநீக்கு
 32. இப்படி ஒரு அருமையான அண்ணனை விட்டுப் போக எப்படி மனம் வந்தது பெண்ணே.

  காலம்தான் உங்கள் மனப் புண்ணை கொஞ்சம் கொஞ்சமாக ஆற்ற வேண்டும்.

  பதிலளிநீக்கு