தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், ஆகஸ்ட் 03, 2017
செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017
தேவகோட்டை to கீழக்கரை
ஒருமுறை நானும் எனது
மனைவியும் தேவகோட்டையிலிருந்து கீழக்கரைக்கு மருது பாண்டியர்
போக்குவரத்து கழக பேருந்தில் போனோம், எனது மனைவியின் கையில் எனது மகன் தமிழ்வாணன்
கைக்குழந்தையாக, எனது கையில் எனது சகோதரரின் மகள் ஸபரி 3 ½ வயது குழந்தையாக, எனது
மனவாட்டிக்கு இருக்கை கிடைத்து உட்கார (கணவனுக்கு முன் உட்காரக் கூடாது
என்பது பொய் வேஷம்) நான் நின்று கொண்டு ஸபரியை
கையில் பிடித்து இருந்தேன், சுற்றி இருந்த பெண்கள் என்னையே உற்று நோக்கி கொண்டு
இருந்தார்கள் (காரணம் நான் மிகவும் அழகாக இருந்தது என்பது பிறகு
நானாகவே எனது சுயஅறிவால் புரிந்து கொண்டேன் என்பதும், இதன் காரணமாகத்தான் எனது
மனைவி என்னை ஃபாரன் லவ்லி உபயோகப்படுத்த விடுவதில்லை என்பதும் வேறு விடயங்கள்)
அதில் எனக்கு ஓரத்தில்
இருந்தபெண், குழந்தையை தாருங்கள் நான் மடியில் வைத்துக்கொள்கிறேன் எனக்கேட்டு
வாங்கி கொள்ள, குழந்தையும் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டது, அந்தப்பெண் சும்மா
இருந்திருந்தால் இந்த பதிவு வந்து இருக்காது அவள் என்னிடம் குழந்தை மூத்ததா ? எனக்கேட்க, நான் சொன்னேன் இல்லை
இரண்டாவது என்று, உடனே அந்தப்பெண் என்னையும், என்னவளையும் ஆச்சர்யமாக மாறி
மாறிப்பார்த்தாள். எனக்கு சந்தேகம் ஒருவேளை நான் இளவயதாக அழகாகவும் இருப்பதால்,
என்னை சைட் அடிக்கின்றாளோ ? குழப்பமாய் எதேச்சையாக திரும்பியவன், என்னவள் என்னை
பத்ரகாளி மாதிரி பார்த்தாள் எனக்கு மீண்டும் குழப்பம் ஏன்... நமது தேவகோட்டை தேவதை
தேவையில்லாமல் இப்படி அதுவும் அஷ்டகோணலாக முறைக்கிறாள் ? சிறிது நேரத்தில் விடையும்
கிடைத்தது பக்கத்துப்பெண் R.S.மங்கலத்தில் இறங்கவும் நான் குழந்தையை வாங்கி
கொண்டு மணவாட்டியின் அருகில் உட்காரவும் மணவாட்டியின் முதல் கேள்வி
அந்தப் பெண்ணுக்கிட்டே ஏன்... அப்படி சொன்னீங்க ?
எப்படி ?
இரண்டாவதுனு...
பின்னே ஸபரி இரண்டாவதுதானே... ராஜா மூத்தவன்ல,
ஐயோ அவங்க நம்ம குழந்தைனு நினைச்சுட்டாங்க,
நம்மளே சின்னவயசு அப்படினா ? மூத்தது ஒண்ணு வீட்டிலே
இருக்குனு நினைக்க மாட்டாங்களா ?
(உண்மைதான் அந்தநேரம் எனக்கு
வயது 24 மனைவிக்கு வயது 22 இந்த வயசுக்குள்ளே மூணா ? சரிதா’’ஙே’’)
ஓஹோ... இப்படியொரு கணக்கு இருக்கா ? இது எனக்கு தெரியலையே....
உங்களுக்கு எதுதான் தெரியுது ?
எதுவும் தெரியாமலா ? தமிழ் படித்து கையில் தமிழை
கொடுத்தேன் ? சரி, சரி முறைக்காமல் கீழே இறங்கு
இராமநாதபுரம் வந்துருச்சு.
இறங்கி கீழக்கரை பேருந்தை பிடிக்கும் முன்பு
மணையாள் சாப்பிடணும் என்று சொல்லவும் சரி பக்கத்துல ஆரியபவனில் சூடாக தோசை
சாப்பிடலாம் எனப்போனோம்.
ரோட்டுல போற பேதியில பெரண்டு
போயிறுவாங்கே என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு எங்களைத்தான் பார்க்கிறாங்கே.. இதனால்
எனக்குதானே பிரச்சனை காரணம் வராத குழந்தை ஸபரியை நான்தானே இழுத்துக்கொண்டு வந்தேன்
மணையாளின் கண்ணில் பொறி பறக்கிறது வீட்டுக்குப்போய் எப்படி சமாளித்து... ? எப்படியோ கடந்து உணவகத்துக்குள்ளே நுழைந்தால் ? அங்கேயொரு கிரகம் எனது
அம்மாவைவிட 25 வயது மூத்தது ஆனால் எனக்கு உறவுமுறை அத்தாட்சி
இது எப்படி ? கிராமத்து கிழம் வேறு என்னை கண்டதும் கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாமல்,
ஏண்டா..... தூ........ எப்படியிருக்கே ?
கல்லாவில்
இருக்கும் பெரிசு முதல் சாப்பிட்டுக்கொண்டு இருந்த அனைவரும் எங்களையே பார்த்து ’’கொல்’’ என
சிரித்தார்கள், எனக்கு அந்த தருணமே இந்த கிழவியை கழுத்தை நெறித்து ’’கொல்’’வோமா ? என்று தோன்றியது பொது இடத்தில் இப்படியா ? ’’ச்சே’’ என்ன செய்ய ?
இருக்கேன் அத்தாட்சி நல்லாயிருகியலா ?
எனக்கேட்டு மணையாளை அறிமுகப்படுத்தி வைத்தேன்,
எனது மனைவி சந்திப்பது முதல்தடவை மனைவியிடம்
ஏண்டி சக்காளத்தி எப்படியிருக்கே ? ய்யேங் கொழுந்தன் உன்னை, எப்படி வச்சுக்கிறான் ?
எனக்கேட்டு குழந்தையை கொஞ்சி விட்டு இடத்தை காலி
செய்தது கிழவி.
சரியென உட்கார்ந்து ஆர்டர்
கொடுத்து விட்டு மணையாளை பார்த்தால் ? அவள் முகத்தில்1000 வாட்ஸ் பல்பு காரணம் என்ன ? எல்லாம் அந்தக்கிழவி என்னை ‘’அந்தக்கேள்வி’’ கேட்டதுதான் எப்படியோ,
நாக்கைப்பிடுங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டாலும் நமக்கு ஒருவேலை முடிஞ்சு போச்சு
நல்லாயிருக்கட்டும் இன்னும்
100 வருஷத்துக்கு
அந்தக்கிழவி SORRY
அத்தாட்சி (வயது 75) என நினைத்துக்கொண்டு காத்திருந்(தோம்)தேன், சூடான தோசைக்காக
ஆரியபவனில் எனது தேவகோட்டை தேவதையின் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல்.....
சனி, ஜூலை 29, 2017
வியாழன், ஜூலை 27, 2017
திங்கள், ஜூலை 24, 2017
வரலாறு முக்கியம்
கடந்த
வாரத்தில் ஒருநாள் காலை
பத்து மணி காளையார் கோவில் பேருந்து நிலையம் தேவகோட்டையிலிருந்து பரமக்குடி
போவதற்காக சிவகங்கை பேருந்தில் ஏறியவன் வழியில் காளையார் கோவிலில் இறங்கி
பரமக்குடி பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவனின் விழிகளில் முதலில் தென்பட்டது விமானம்
ஆம் காளையார் கோவிலின் கோபுரக் கலசத்தின் விமானம் சட்டென உடன் நினைவில் வந்தவர்
சரித்திர பதிவர் இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் அவர் எழுதியிருந்த
மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியார் மற்றும் குயிலியைப்பற்றிய பதிவின் நினைவோட்டங்கள்
இதோ இந்த இடத்தில்தானே வெள்ளையர்கள் அவரை சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டு
இருந்தார் இதோ இந்த இடத்திலிருந்து சுமார் முப்பது அடி தூரமிருக்குமா ? இதே இடத்தில் நாம் கடந்த காலங்களில் ஐநூறு
முறையாவது நின்று இருந்திருப்போமா ? நமக்கேன்
உள்ளே சென்று வரவேண்டுமென்று தோன்றவில்லை இதோ நண்பரால் தோன்றி விட்டதே...
பரமக்குடிதானே போகிறோம் ஒரு பேருந்தை விட்டால் மறு பேருந்தில் போவோமே உடன் கோவிலை
நோக்கி நடந்தேன்.





