தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 21, 2014

என் நூல் அகம் 1


மதுரை பதிவர் விழாவில் கலந்து கொண்டதே ஒரு மகிழ்ச்சியான விசயம் அதில் பெரும் மதிப்பிற்குறிய ஐயா ஜியெம்பி அவர்களை சந்தித்து பேசியதும், அவரிடம் பெற்ற ஆலோசனைகளும், தன்கைப்பட ஒப்பமிட்டு கொடுத்த ‘’வாழ்வின் விளிம்பில்’’ என்ற நூலை தந்தது ஒரு அளப்பெரிய பொக்கிஷம் பெற்றதைப் போன்ற உணர்வைப் பெற்றேன் இதை எழுத்துக்களில் தங்களிடம் விவரிக்கும் பக்குவம் இந்தக் கத்துக்குட்டிக்கு போறா.... இதை படித்து முடித்து விட்டேன். 
ஐயாவைப் பாராட்டி எழுதப்போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள் அந்த வேலையை நான் செய்தால் மெர்க்குரி லைட்டுக்கு மெழுகுவர்த்தி பிடித்தவன் நிலையாகி விடும் ஆகவே எமக்கு அது தேவையில்லாத வேலை சரி, வேறு எதற்கு ? இந்தப்பதிவு ஐயாவின் கருக்களில் கிடைத்த பொன்மொழிகளை தங்களுடன் பகிரவே யாம் பெற்ற இன்பம் இவ் வலையகமும் பெறட்டுமே இந்த பதிவு 10 சிறு தொகுப்புகளில் நமக்கு வகுப்பு நடத்தி இருக்கிறார், முதல் தொகுப்பில் வந்த வாழ்வின் விளிம்பில் எமக்கென்னவோ சொந்த அனுபவத்தை எழுதியுள்ளார் என்றே தோன்றியது இருக்கட்டும் அதில் வரும்

ரங்கசாமியின் கதாபாத்திரத்தில் நானும் 10 % இருக்கிறேன் என்பதை உணந்ததும் குற்ற உணர்ச்சியில் நூலை மூடிவிட்டேன்.

மீண்டும் மறுநாளே படிக்கத் தொடங்கினேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாழ்வியல் உண்மையை கொடுத்தது இடையில் கேரளத்து கதை அதில் வரும் மலையாள வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தது ஐயா அந்த வார்த்தைகளை மலையாளத்திலேயே தட்டச்சு செய்திருந்தாலும் படித்திருப்பேன் ஆனால் நூல் நம் இனிய தமிழ் அல்லவா !

எம்மை, ஈர்த்த ஐயாவின் பொன் வரிகள்.

\\\எந்த எண்ணம் வரக்கூடாதோ அந்த எண்ணம்தானே வரும் அதுதான் மனித மனம்\\

\\அறிவுக்கும், உணர்வுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு தோற்று உணர்வுதான் வெல்லும் இது எப்போதைக்கும் பொருந்தும் உண்மை\\

\\நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது\\

\\வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பு உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் தடைக்கற்கள் அல்ல, படிக்கட்டுகளே\\

\\எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள். சோமவார விரதம், காரடையான் நோன்பு, ரக்ஷ் பந்தன், இத்தியாதி இத்தியாதி... ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி ஏதாவது செய்கிறார்களா ?

(ஒரு பெண்ணின் நிலைப்பாட்டிலிருந்து ஐயா கேட்டிருப்பது எம்மை பிரமிக்க வைத்து கண்ணம்மாவின் காதலனை நினைவு படுத்தியது)

அரண்டவன் கண்ணுக்கு.... என்ற சிறு தொகுப்பில் நகைச்சுவை கொடுத்த விதம் நன்று.

\\குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா ?

\\நினைவுகள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. சில அந்தரங்கமானவை. வாய்விட்டுக் கதற முடியவில்லை\\

ஒரு தொகுப்பில்...
மனைவி கேட்கிறாள் கணவனிடம்... \\வாழ்க்கையில் வேறு பெண்ணை நினைத்திருக்கிறீர்களா ?

கணவன் மனைவியிடம் சொல்லும் பதில்... 
\\என் மனம் ஒரு ஃபிலிம் நெகட்டிவ் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் ஆகும். நீதான் எக்ஸ்போஸான அந்த படம்\\

நான் என்னையறியாமல் மீண்டும் நூலை மூடிவிட்டேன், என்ன இவர் கதைதான் எழுதினாரா ? 19 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டை நோக்கி ஓடியது எனது நினைவோட்டங்கள், உவமைகள் மாறிய வேற்று வார்த்தைகள் இதெப்படி சாத்தியம் ? என்னை நானே கேட்டு பழமைகளில் மூழ்கி உறங்கிப்போய், மீண்டும் மறுநாளே தொடர்ந்தேன்....

\\என் குழந்தையும், உன் குழந்தையும், நம் குழந்தையோடு விளையாடுகிறார்கள் என்று சொன்னால் அது நிதர்சனத்தை உணர்த்துவதாக இருக்கும்\\

//காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன், என்றன் காலருகே வாடா... சற்றே உனை மிதிக்கிறேன் என் காலால்\\

இப்படி எம்மை கவர்ந்த வார்த்தை ஜாலங்களை மட்டுமல்ல ! தனிப்பட்ட எமது வாழ்வோடும் ஒன்றியவை கண்டு மயங்கினேன் மதுவை அருந்தி மாதுவை கண்டவனாய்... இந்த போதை சுகம் நீங்களும் காண்பீர் என தங்களை கேட்டுக்கொண்டு ஐயா அவர்கள் மதுரையில் எம்மிடம் சொன்ன அவரது நூல்களான ‘’முதுமை ஒரு பரிசு’’ மற்றும் ‘’முதுமை ஒரு தண்டனை’’ இரண்டையும் தேடுகின்றேன் எதிர் வரும் முதுமை எமக்கு பரிசா ? தண்டனையா ?  

தேடலில் தேவகோட்டை கில்லர்ஜி


இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்களை மதுரை விழாவில் சந்திக்கும்போது... அன்புடன் கையொப்பமிட்டு கொடுத்த ’’கரந்தை மாமனிதர்கள்’’ என்ற நூல் படித்தேன் படிக்க, படிக்க ஆச்சர்யமும், ஆனந்தமுமாய் இருந்தது. காரணம் இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பிறந்த மண்ணை விட்டு அயல் தேசங்களில் வாழ்ந்து கொண்டு அதில் மூழ்கி தனது நாட்டையும், கலாச்சாரங்களை மறப்பதோடு இல்லாமல் தனது சந்ததிகளுக்கும் எதையுமே சொல்லிக் கொடுக்காமல், இனிய மொழியாம் நம் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்காமல், ஏன் ? சிலர் தனது தாய்நாட்டையே காண்பிக்காதவர்களும் உண்டு.

(விதிவிலக்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப சகிதம் இருக்கும் காரைக்குடி எமது இனிய நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள்) 

ஆனால் மனிதர் தனது மண்ணின் மணத்தை ஆழ்ந்த மனதுடன் எவ்வளவு நேசித்து வாழ்கிறார் என்பதை ஒவ்வொரு வரியிலும் செதுக்கி இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே உள்ள சரித்திரங்களை அவர் எப்படித் தோண்டி எடுத்தார் ? மஹாத்மா காந்தி அவர்களால் இந்தியா சுதந்திரம் பெற்றது அதாவது நான் பிறக்கும் முன்பே இது உலகறிந்த சரித்திரம் ஆனால் இவர் சொல்வது தமது சொந்த மண்ணின் உலகறியப்படாத சரித்திரம்.

அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1910ல் நடந்தவை இது எப்படி ? இந்தக் கேள்வி எமது மனதை வருடிக்கொண்டே இருந்தது... இல்லை இருக்கிறது... இந்தத் தேடுதலுக்கான இவரின் சிரத்தையை கண்டு அதிசயித்தேன் பொருத்தமான ஐந்து மாமனிதர்தளை தேர்ந்தெடுத்து தனது பிறந்த மண்ணை மணம் விச செய்துள்ளார். எமது மண்ணுக்கு நான் என்ன செய்தேன் ? என்னை நானே கேட்டுக் கொண்டேன். எமது கடைசிகாலம் வரை எமது புத்தக அலமாரியை இந்நூல் அலங்கரிக்கும் அவரை எமது நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். பலரும் படித்திருக்கலாம் படிக்காதவர்கள் வாங்கிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி.
தொடரும் எமது நூல் அகத்தில் வருவது....
ஒரு கோப்பை மனிதம்
துளிர் விடும் விதைகள்
சரிதாயணம்
ஆவிப்பா.
காணொளி கேட்பீரே...

87 கருத்துகள்:

  1. வணக்கம்

    பதவில் பொன் மொழிகள் சொல்லியும் ஜியெம்பி ஐயா கரந்தை ஜெயக்குமார் ஐயா தங்களுக்கு அன்பளிப்பு செய்த நூல் பற்றி அவற்றி சிறப்பு பற்றி கூறிய விதம் என்னையும் அந்த புத்தகத்தை வேண்டி படிக்க சொல்கிறது.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீண்ட காலங்களுக்குப் பிறகு எமது வலைப்பூவையும் கண்டு பிடித்து வந்து முதல் கருத்துரை இட்டது அதனினும் சிறப்பாய் எமக்கு தோன்றுகிறதே.... நன்றி நண்பரே...

      நீக்கு
    2. வணக்கம்
      ஜீ
      சொல்லாமல் சொல்லி விட்டீங்கள்... சில நேரங்களில் எனது வலைப்பூ பட்டியலில் வருவதில்லை சிலரது பதிவுகள்... அதனால் வருவது தாமதம்.....

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    3. பரவாயில்லை நண்பரே இனி கண்டிப்பாக வரும்,,,,,,

      நீக்கு
  2. தவறாது வாங்கிப்படிக்க வேண்டும் சகோதரரே.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துரைக்குமாக... நன்றி சகோதரியே....

      நீக்கு
  3. இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க ஆசை மேலிடுகிறது! எழுத்தாளர்களுக்கு விண்ணப்பம் அனுப்பி விடுகிறேன்! சிறந்த பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லகாரியம் செய்தீர்கள் நன்றி நண்பரே...

      நீக்கு
  4. வரக்கூடாத எண்ணம்..எந்த எண்ணம்.........???????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமுமே, மறைந்தவரை மனம் மறக்கவேண்டும் ஆனால் ? எண்ணம் நினைக்கத்தூண்டும் தாங்கள் கேட்ட ‘’எந்த’’ எண்ணம் ? ? ? ‘’அந்த’’ எண்ணமும்கூட நிறைய சொல்லிக்கொண்டே........... போகலாம் நண்பா...

      நீக்கு
  5. அருமையான விமர்சனம்...
    அண்ணா இங்கிட்டு வரும்போது புத்தகங்களை கொடுத்தருள்க... நெல்லு இறைத்த நீர் புல்லுக்கும் பாய்ந்தது மாதிரி நானும் படிச்சிட்டுத் தாரேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து விட்டேனே... சந்தோஷமா ? நண்பா அவசரமில்லை அனுபவித்து, மனம் ஒன்றி படியுங்கள்.

      நீக்கு
  6. உங்களது பதிவு டாஷ்போர்டில் வருகிறது.... இப்போ பிரச்சினை முற்றுப் பெற்றதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பா கூகுள் ஆண்டவர் சில நேரங்களில் கண் திறக்கிறார்... பல நேரங்களில் (தேவகோட்டைக்கு பக்கத்து ஊர்க்காரர்) கண்ணேறோ ? என்னவோ ?

      நீக்கு
  7. வித்தியாசமான பார்வையில் இரண்டு நூல்களை விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பார்வையே அப்படித்தானே நண்பரே,,,

      நீக்கு
  8. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ சொல்லி தங்களை வரவேற்கிறேன் நேரமே வந்து படித்து கருத்துரை இட்டு வந்தேன் நண்பா,,
      ‘’ஹலோ’’ என்பது டெலிபோணைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்கள் முதல் முறையாக பேசும்போது எதிர்முனையிலிருந்த அவர்களின் சகோதரியை ஹலோ என அழைத்தார் அது முதல் டெலிபோணை நாம் எடுத்தவுடன் ஹலோ என்கிறோம் கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயர்தான் ஹலோ.. அவர்களிருவரும் ஜெர்மனியர்களே...
      வருகைக்கு நன்றி நண்பா. தொடர்ந்து மலரட்டும் நமது நட்பூ

      நீக்கு
  9. படித்து மிக முக்கியப் பகுதிகளை
    அருமையாக சுவாரஸ்யமாக
    தொகுத்துத் தந்த விதம் அருமை
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு

  10. ஐயா GMB அவர்களின் ‘வாழ்வின் விளிம்பில்’ நூலை படித்துவிட்டேன். விரிவாக மதிப்புரை எழுதிவிட்டேன். மதிப்புரையை அழகாக சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். கரந்தையாரின் நூலை வாங்கி படிக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே.... அடுத்த பதிவை போட்டு விட்டீர்கள் போலயே இதோ வருகிறேன், காந்திஜியை மறந்து விட்டீர்களா ?

      நீக்கு
  11. புத்தகங்களை விமர்சகர் போல் பார்க்காமல் வாசகர் போல் அணுகி எழுதியிருக்கிறீர்கள். எடுத்தாண்டுள்ள வரிகளே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நூலாசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாசகர்தானே.... விமர்சகருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. நூலினை முழுமையாக படிக்கத்தூண்டும் விமர்சனங்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கண்டிப்பாக படியுங்கள் நண்பரே...

      நீக்கு

  13. அக்கா ஒருவர் கனவில் வந்த காந்தி எழுதியாச்சு... அதையும் பாருங்க...

    http://thoorikaisitharal.blogspot.ae/2014/11/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று கருத்துரை இட்டு வந்தேன் நண்பரே, அருமையாக... காந்திஜியை சத்தாய்ச்சுருக்காங்க....

      நீக்கு
  14. அன்பின் கில்லர்ஜி. ”செய்யாத குற்றமும் “ ”முத்மையின் பரிசும் “ நான் எழுதியபதிவுகளே, உங்கள் மினஞ்சல் முகவரி தெரிவித்தால் அவற்றின் தொடுப்பை அனுப்புகிறேன் நன்றி ஒரு வித்தியாசமான அணுகலுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக, ஐயா இணையம் முழுவதும் எனது புகைப்படமும், மின்னஞ்லும் இணைந்து கிடைக்கிறதே... பரவாயில்லை இதோ.... இரண்டு தருகிறேன்..

      sivappukanneer@gmail.com

      devakottaiyan@yahoo.co.in

      நன்றி.

      நீக்கு
  15. ஆஹா வித்தியாசமாருக்கே...சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிச்சொல்லியே எனது சிந்தனையை ரணகளப்படுத்திட்டீங்களே...
      (அவ்வ்வ்வ் உபயம் சகோதரி மைதிலி)

      நீக்கு
  16. 'வாழ்வின் விளிம்பில்',
    'கரந்தை மாமனிதர்கள்'
    இரு நூல்களின் சில வரிகளைத்
    தொகுத்து அளித்ததோடு,
    உங்களது எண்ண ஓட்டங்களையும்
    சிறப்பாய் பகிர்ந்தீர்கள்.
    அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே.... தருக கருத்துரையை தொடர்ந்து...

      நீக்கு
  17. இதுவும் ஒரு தொடர் பதிவா?
    நடத்துங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, இந்த தொடர் எனக்கு மட்டுமே....
      (தில்லை அகத்தார் கண்டால் கோபப்படுவார்கள், இப்ப வருவார்கள் பாருங்களேன்)

      நீக்கு
  18. அருமையான நூல் அறிமுகங்கள்.வித்தியாசமான அணுகல். அதுவே படிக்க ஆவல் கொடுக்கிறது.மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹனின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி தொடரட்டுமே... வருகை

      நீக்கு
  19. தங்களின் தொடர் பதிவ பார்த்துவிட்டு இதுக்கு முன்னோடி “அவர்கள் உண்மைகள்”தான் என்று சொல்கிறார். அப்படியா....???ஜி

    பதிலளிநீக்கு
  20. ஆஹா அருமையான விமர்சனங்கள். நீங்கள் ஒரு புத்தகம் எழுதுங்கள், பார்ப்போம் என்னால் உங்களை மாதிரி விமர்சனம் எழுத முடிகிறதா என்று.
    என்னை விதிவிலக்காக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே. மற்ற நூல் விமர்சனங்களையும் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே உண்மையானவரைப்பற்றிய உண்மையைத்தானே சொன்னேன்... ஆம் நண்பரே நூல் எழுதும் எண்ணம் மனதுள் எழுந்து விட்டது, அதற்க்கான தகுதியை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தங்களைப் போன்றவர்களின் கருத்துரை மூலம்.

      நீக்கு
  21. நூல்களைப் படிப்பது ஒரு ரகம். ரசிப்பது ஒரு ரகம். அது பற்றி அலசுவது ஒரு ரகம். இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தாங்கள் இந்நூல்களில் முழுமையாக உணர்வுபூர்வமாக மூழ்கி அருமையான செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். உணர்வுபூர்வமான தங்களது சில சொற்றொடர்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், ஆழமான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஆம் ஐயா நான் எதிலுமே, என்றுமே, மாறு’’பட்டு’’போனவன் தங்களின் தொடர் வருகையால் நான் இன்னும் நன்றாக எழு(க)த முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

      நீக்கு
  22. அனுபவம் - அனைவருக்கும் ஒரு பாடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே... தங்களது காந்திஜிக்கு சொல்லும் பதில்கள் sorry பாடல்கள் எங்கே ?

      நீக்கு
    2. இதோ : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

      நீக்கு
    3. சென்று வந்தேன் நண்பரே அருமை.

      நீக்கு
  23. நான் ஓட்டு போட..ஓட்டுப்பெட்டியைக காணோம். ???????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்டி ஆச்சாரி செய்து கொண்டு இருக்கிறார் நண்பரே விரைவில், உங்களின் பார்வைக்கு...

      நீக்கு
  24. அன்பின் ஜி..
    தாங்கள் நலமா?..

    நேற்று மாலை நலமுடன் குவைத் வந்து சேர்ந்தேன்..
    அன்பின் உமையாள் காயத்ரி அவர்களின் தளத்தில் கண்டறிந்து விசாரித்தமைக்கு நன்றி..

    ஜாம்பவான்கள் இருவரது கைவண்ணத்தைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு நலமே,,, சந்தோஷமாக தொடரட்டும் தங்களது ஆன்மீகத்தொண்டு வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. சிறந்த அனுபவப் பகிர்வைப் படிக்க முடிந்திருக்கிறது.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  26. இதோ ஐம்பதாவது கருத்து,,,,,,
    நூலகம் என்று சொல்லாமல் நூல் அகம் என்று சொல்லி இருப்பதில் இருந்தே பதிவர்கள் இருவர் சொன்ன கருத்துக்களை எவ்வளவு தூரம் நீங்கள் உள்வாங்கி இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது ...உங்களின் கதையை விரைவில் வெளியிட்டு நானும் உள்வாங்க உதவுங்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பகவான்ஜி அவர்களே.... எழுதிக்கொண்டே..... இருக்கிறேன்.

      நீக்கு
  27. நூலை அகத்து மட்டும் வைத்துக் கொள்ளாமல் எல்லாரும் அறியத் தந்தமைக்கு நன்றி உண்டு கில்லர்ஜி அவர்களே!
    தாமத வருகைக்கு வருந்துகிறேன்.
    ஒரு நாள் பார்த்ததற்கே மணவையாரை உங்கள் ரசிகர் ஆக்கி விட்டீர்களே..!
    அது எப்படி?
    ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றி ஏதேனும் பேசிக் கொண்டிருக்கிறார்.
    நூலுக்கு இப்படி ஒரு விமர்சனம்...
    சிந்திக்க வைத்துவிட்டது.
    பகிர்வுக்கு நன்றி!
    பெட்டி செய்து முடித்திருந்தால் + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே, நான்தான் மேலேயே சொல்லியிருக்கிறேன் ‘’யாம் பெற்ற இன்பம் இவ் வலையகமும் பெற’’ என..
      நான் எழுதியதுகூட(?) தங்களை சிந்திக்க வைத்தது என்றால் ? நான் நன்றாக எழுதியிருக்கிறேன் என்றுதானே அர்த்தம் சந்தோஷமான நன்றி கவிஞரே...
      மணவையாருக்கு எம்மையும், எமக்கு மணவையாரையும் ஏதோ ஒன்று இணைக்கிறதே இனம் புரியாத பந்தம் அது.. நானொன்றும் அறியேன் நாராயணா....

      நீக்கு
  28. மன்னிக்கவும் பெட்டி இல்லை.
    சீக்கிரம் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கள் ஜி!

    பதிலளிநீக்கு
  29. பதிவு அருமை..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள அய்யா,

    ஜி.எம்.பி. -யின் ‘வாழ்வின் விளிம்பில்...’
    கரந்தையாரின் ‘மாமனிதர்கள்’ -இரு நூல்களின் விமர்சனங்களைப் படித்தாலே நூலைப் படிக்கத் தூண்டுகிறது. பொன்மொழிகள்...ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களை உரக்கப் பேசியது... எல்லாம் அருமையான பார்வை.

    பட்டிதோறும் பெட்டி தயாராகிக்கொண்டு இருக்கிறது!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே,,, இப்பொழுதுதான் நானும், கவிஞர் ஊமைக்கனவுகளும் மௌனமாய் தங்களைப்பற்றி பொறணி பேசினோம் அதற்க்குள் கேட்டு விட்டதா ? ‘ஒளி’ கண்டதோடு, ‘ஒலி’ கேட்டதையும் அழகாக ‘வெளி’ ப்படுத்தி விட்டீர்களே… கருத்துரை மூலம் நன்றி நவிழ்கின்றேன் மணவையாருக்கு.

      நீக்கு
  31. ஜி எம் பி சாரின் அறிவு மிகவும் உயர்வான அறிவு கில்லர் ஜி! அவர் ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர். அறிவு ஜீவி! நாங்கள் மிகவும் மதிக்கும், போற்றும் பெரியவர். அருமையான எழுத்தாளர்! இத்தனைச் சிறப்புகளையும் கொண்ட மிகச் சிறந்த தந்தை! குடோஸ் டு ஜி எம் பி சார்!

    அவரது சிந்தனைகள் ஆஹா! அட! போட வைக்கின்றன. அருமை. கொடுத்து வைத்தவர் நீங்கள் அவரது கையெழுத்துடன் உங்களுக்குக் கிடைத்த பிரதிக்காக...பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    அடுத்துக் கரந்தையார்! மிகச் சிறந்த மனிதர் எழுத்தாளர்! சொல்லத் தேவையே இல்லை. அபார உழைப்பு. தேடல்களில். தேடித் தேடி, தோண்டி எடுத்து புதையல் ஆராய்ச்சி செய்து ப;அ அரிய தகவல்களை தனது அநாயாசமான, கவர்ச்சிகரமான எழுத்தில் எல்லோரையும் சுண்டி இழுத்துப் படிக்க வைப்பவர். என்றால் ஆசிரியரான அவரது வகுப்புகள் எப்படி இருக்கும் ஜி? ! அதுவும் கணித வகுப்பு!! பலருக்கும் வேப்பங்காயான கணிதம் இவரது கைகளில் பல மாணாக்கரையும் கட்டிப் போடுமல்லவா....!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே, உண்மையில் நான் கொடுத்து வைத்தவனே ஐயாவை சந்தித்து பேசியதே ஒரு சந்தோஷமான விசயம்தானே...
      அதேபோல் கரந்தையாரின் தொடர்பு கிடைத்ததும் ஒரு சந்தோஷமான விசயமே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  32. என் ரசனை.

    இரு நூல்களையும் படித்து, மேற்கோள்களுடன் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மலிங்கம் அவர்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  33. கரந்தையாரின் புத்தகத்தை வாங்கியிருக்கிறேன், அய்யா ஜிஎம்பி ன் புத்தகத்தை கவனிக்க தவறிவிட்டேன். சிறந்ததொரு மேற்கோள்கள் ... தொடரட்டும் தங்களின் நூல் அகம் ... படங்களுக்கு மனம் நிறை நன்றிகள் சார் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து கருத்துரையும் தந்த அரசருக்கு நன்றி.

      நீக்கு
  34. எதையும் விருப்பமுடனும் வித்தியாசமாகவும் தருவதில் வல்லவர் நீங்கள் சகோ. அறிமுகம் படிப்பவரை கவர்ந்திழுக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  35. தமிழ்மண ஓட்டும் போட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நண்பரே, நலம்தானே,
    தங்களின் வலையில் என் நூல் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    வலையின் மகிமையினைப் பார்த்தீர்களா, உலகின் இரு துருவங்களில் வசித்தாலும், தமிழ் என்னும் ஓர் உணர்வு நம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறதல்லவா?
    தங்களின் பதிவினைப் படிக்கப் படிக்க மனம் ஆனந்தக் கூத்தாடியது.
    தாமத வருகைக்கு பொறுத்தருள வேண்டுகின்றேன்.
    நான் பணி யாற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்காக, சங்கத்தின் மீதான வழக்கு ஒன்றிற்காக, தொடர்ந்து, ஊரில் தங்காமல், வீட்டில் தங்காமல் அலைந்து கொண்டே இருக்க வேண்டிய சூழல்.அதனால் வலையின் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட இயலவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில், வலையில் அமர்வதற்கான நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் நண்பரே. அதனால்தான் தங்கள் வலைக்கு வருகை தந்து உடனடியாக நன்றி சொல்ல இயலவில்லை.
    தங்களின் அன்பும், அலைபேசி வழி அழைத்து விசாரித்த தங்களின் பாசமும், என்னை நெகிழ வைத்துவிட்டது நண்பரே
    என்றும் வேண்டும் இந்த அன்பு.

    பதிலளிநீக்கு
  37. பதில்கள்
    1. வருக நண்பரே இப்பொழுதுதான் என்மனம் அமைதி பெறுகிறது இந்தப்பதிவுக்கு தங்களிடமிருந்தும், ஐயா ஜியெம்பி அவர்களிடமிருந்தும் கருத்துரையை நான் எதிர்பார்ப்பது நியாயம்தானே காரணம் பதிவு தாங்களைப்பற்றியதே தங்களுக்கு மற்ற வேலைகள் இருந்திருக்கலாம் என்பது எமக்கு தெரிந்ததே இருப்பினும் மனக்குழப்பத்தால் பதிவில் ஏதும் தவறு இருக்கிறதோ என எண்ணி மீண்டும், மீண்டும் படித்தேன் தங்களின் வருகையின் கருத்துரை கண்டு மனம் மகிழ்கின்றேன்.
      நண்பரே இந்த வலைப்பூதானே தங்களைப்போன்ற எத்தனையோ தமிழ் அறிஞர்களிடம் பழகும் வாய்ப்பை எமக்கு கொடுத்தது எம் தமிழுக்கு நன்றி.
      தமிழ் மணம் வாக்களிப்பிற்க்கும் நன்றி.

      நீக்கு
  38. நன்றி நண்பரே
    தங்களின் பதிவின் வழி
    வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
    மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில்
    பெரு மகிழ்வு கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  39. உங்களுடைய அருமையான எழுத்தாக்கத்தில் இரு அருமையான நூல்கள் பற்றிய பகிர்வு..கரந்தை மாமனிதர்கள் படித்துவிட்டேன்..மிக அருமை..ஜெயக்குமார் அண்ணா வரலாற்றைத் தேடி நமக்கு கொடுத்துள்ளார்..
    ஜிஎம்பி ஐயாவின் நூல் வாங்கவேண்டும்...
    பகிர்விற்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ...

      நீக்கு
  40. தங்கள் நூல் அகத்திற்கு இன்றுதான் வர முடிஞ்சது.

    நூல் விமரிசனம் வகையில் இது ஒரு மாதிரி இல்லையாக்கும். புது மாதுரியா இருக்கு!

    இனிய பாராட்டுகள்.

    எனக்கும் ஒரு வாழ்வின் விளிம்பில் கொடுத்தார் ஜி எம் பி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடத்தின் வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி.

      நீக்கு
  41. ஜி எம். பி ஐய்யாவின்நூல் பற்றி தாங்கள் எடுத்துக்காட்டிய வரிகள் எனை
    படிக்கத்தூண்டுகிறது சுவைபடக்கூறுவது தங்களின் இயல்புதானேசகோ,
    கரந்தைமாமனிதர்கள் படித்தேன்அன்றேகருத்தும்போட்டுவிட்டேன்
    மிகமிகநல்ல நாம் தெரிந்துகொள்ளவேண்டியவிடயங்கள் அறிந்துகொள்ளத்தந்ததற்கு கரந்தைசகோவிற்கும் அதை அற்புதமாக
    எடுத்துக்காட்டிய தங்களுக்கும் வாழ்த்துக்களும் பாரட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  42. வித்தியாசமான அலசல். அனுபவ உணர்வோடு கூடிய நூலறிமுகங்கள்... மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின்பாராட்டுகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு