ஞாயிறு, ஜனவரி 26, 2014

அங்கீகாரம்.

वनदे मातरम्
இந்த தமிழன் இந்தியாவை விட்டுப்போனதற்க்கு காரணம் யார் ? திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காததனால் தானே ! அமெரிக்க விண்வெளி ஓடத்தில் உயிரைத்துறந்தாரே நம் இந்தியப்பெண்மணி கல்பனா ஜாவ்லா அவரது மரணத்திற்க்கு நாமும் ஒருகாரணம் தானே ! இவர்களெல்லாம் மக்களுக்கு அறிமுகமானதால் உலகிற்க்கு தெரிகிறது வெளியே தெரியாமல் திரையின் மறைவில் இருட்டுக்குள் வாழ்பவர்கள் எத்தனைபேர் எல்லாமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு இதன் நஷ்டம் யாருக்கு ? நம் இந்தியாவுக்குத்தானே ! நாட்டுப்பற்று இல்லாதவர்களிடம் நாட்டையாளும் அதிகாரத்தை கொடுத்ததுயார் ? கல்பனாவை இந்தியாவுக்கு உழைக்காமல் போனதற்க்கு குற்றம் சொல்லும் அறியாமைவாதிகளே... பிண்ணனி என்ன ? பார்த்தீரா.... இராஜபாளையத்தமிழன் வி. ஏ. சிவா அய்யாத்துரையை ? இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கிறது வரலாறு, இலங்கை கடலை நீந்திக்கடந்து சாதனை புரிந்து இங்கிலீஷ் கால்வாயை நீந்திக்கடப்பேன் எனசூளுரைத்தானே 11 வயதுச்சிறுவன் குற்றாலீஸ்வரன் அவன் எங்கே ? அவனுக்கு அங்கீகாரம் கிடைத்ததா ? இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு, மூலிகை மூலம் பெட்ரோல் உண்டாக்கியதை அமெரிக்கா உள்பட உலகில் நான்கு நாடுகள் ஏற்று சான்றிதழ் கொடுத்தும் இந்தியாவில் மட்டும் ஓரங்கட்டப்பட்டாரே... ராமர்பிள்ளை இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு, 1964 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்தாரே... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதற்கு முன்பே 1945 ஆம் ஆண்டு விமானவிபத்தில் இறந்து விட்டதாக சொல்லப்பட்டதே... இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கிறது வரலாறு, சமீபத்தில்கூட தங்களது தொழிலுக்கு சம்பந்தமில்லாத திரைப்பட நடிகர்கள் இருவர் கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள யானையின் தந்தங்களை மறைத்து வைத்ததை ராணுவ கௌரவபதவியின் அதிகாரத்தால் தகர்த்தெறிந்தார்களே... இப்படித்தான் மறைக்கப்படுகிறது வரலாறு, மறைக்கப்பட்டவை மறைந்தவையாகவே இருக்கட்டும் இனியெனினும் ''விழிதெழு தமிழா'' ஏனெனில் தியாகிகள் நம்மிலும் உண்டு, தியாகஉணர்வுகள் சிதறப்படுவது மறைக்கப்படுவதின் ஏக்கப்பெருமூச்சே.... குடியரசு தினமான இன்றாவது குரல் கொடு, சிந்தித்து செயல்படு, நாளை சிறகடித்து சிலிர்த்துயரும் சிறந்த இந்தியா.
video
Video
(Please ask Audio Voice)

Related Posts Plugin for WordPress, Blogger...