தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 11, 2024

விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்

ணக்கம் நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை படித்தீர்களா ? இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 118 கோடி தினசரி இறப்பு விகிதம் 62389 தினசரி பிறப்பு விகிதம் 86853 இன்றைய நிலவரப்படி பார்வை இழந்தோர்கள் 682497 மரணம் அடைந்தவர்கள் அனைவருமே கண் தானம் செய்தால் ? ? ? அடுத்த பதினொன்று 11 தினங்களில் இந்தியாவில் ஒரு குருடர்கூட இருக்க மாட்டார்கள்.
 
இதை சாத்தியப்படுத்த முடியுமா ? முடியும் அதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும் இது எங்கு கிடைக்கும் ? எமனேஸ்வரத்திலா ? மனித மனம் மிகப்பெரிய பக்குவம் அடைய வேண்டும். தனது வீட்டு உறவுகளை விழியை எடுத்து விட்டு புதைத்தால் இரவில், கனவில் வீட்டுக்கு குருடர்களாக மீண்டும் வருவார்கள். என்ற குருட்டு நம்பிக்கை நம்மிடம் உள்ளது.
 
குருடர்களின் ஒருநாள் வாழ்க்கையை நீங்கள் ஒத்திகையாக வாழ்ந்து பாருங்கள். அதன் கஷ்டம் புரியும். அதுவும் இடையில் விழியை இழந்தவர்களின் மனநிலை சொல்லி மாளாது. திடீரென்று இயற்கை சீற்றத்தாலோ, அல்லது மனித மிருகங்களின் இழிவான செயலாலோ நாம் கோரமாக சிதறிச்சாகின்றோம். அப்பொழுது நம் உறுப்புகளின் நிலை என்ன ?
 
இறந்த பிறகு விழியை கொடுத்து மறைந்தால் இறந்தும் நாம் உலகை கண்டு கொண்டு இருப்போம், அந்த மனிதர்களின் மனங்களிலும் கடவுளாகவே வாழ்வோம். இப்படி இந்திய மக்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே இந்த முடிவை எடுத்தால் பல மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க முடியும். வாரிசு இல்லாத மனிதர்கள்கூட கொரோனாவின் கொடூரமான காலகட்டத்தில் தங்களது பெருஞ்செல்வத்தை பிறருக்கு கொடுக்காமல். இருந்தார்களே... இவர்களா விழிகளை கொடுப்பார்கள் ?
 
ஆனால் ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் மனிதர்கள் தங்களது பணத்தை (Euro) கோபத்துடன் தெருவில் வீசினார்கள் நகராட்சி ஊழியர்கள் தெருவை பெறுக்கி அள்ளினார்கள் என்பது வரலாறு. இவ்வளவு பேசும் உனக்கு தகுதி இருக்கிறதா ? என்றால் இருக்கிறது என்பதே எமது பதில் நான் இறந்த பிறகு விழிகளை கொடுப்பதற்கான அதிகார வாக்குறுதிகளை வாங்கி எழுதி வைத்து இருக்கிறேன். இரண்டு நண்பர்களில் ஒரு நண்பரது சாட்சி கையெழுத்துக்காக காத்திருக்கிறேன்.
 
மேலும் எனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடுப்பதாக தீர்மானித்து இருக்கிறேன். இதன் மூலம் எனது இரத்த உறவுகளுக்கு இடையூறு செய்யாமல், கஷ்டத்தை கொடுக்காமல் நான் இறைவனடி சேர்தல் வேண்டும் என்பதும் எமது சுயநல ஆசையே. நான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாத வாழ்வில் இதனையாவது இறைவன் நடத்தி வைப்பார் என்று நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன்.
 
கில்லர்ஜி அபுதாபி

12 கருத்துகள்:

  1. நாங்களும் கண் தானத்திற்கு எழுதி வைத்தோம். நான் அவர்களுக்கும் என் கணவர் எனக்கும் உறுதி மொழி கொடுத்து கையெழுத்து இட்டோம்.

    அவர்கள் திடீர் மறைவு கையும் ஓட வில்லை காலும் ஒடவில்லை 6மணி நேரத்தில் கண்களை கொடுக்க வேண்டும். மறதி வந்து புலம்பி கொண்டு இருக்கிறேன்.
    என் கண்களை யார் நினைவு படுத்துவார்கள். எல்லோரிடமும் சொல்லி வைத்து இருக்கிறேன். அப்புறம் இறைவன் விட்ட வழி. உடல் தானமும் செய்ய ஆசை அதை இன்னும் உறுதி படுத்தவில்லை. வாய் மொழியில் சொல்லி கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

      நீக்கு
    2. வருக சகோ தங்களது செயல் போற்றுதலுக்குரியது வாழ்க வளத்துடன்...

      நீக்கு
  2. விழிதானம் பற்றி எவ்வளவோ விளம்பரங்கள், விழிப்புணர்வுச் செய்திகள் வந்தாலும் இந்நிலைதான் உள்ளது.  வியப்புதான்.  நீஎங்கள் விழிதானத்துக்கும், உடல் தானத்துக்கும் எழுதிக் கொடுத்து விட்டீர்கள் என்பது சிறப்பு.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு..

    விழி கொடுத்தோர் பெருமை சொல்லவும் அரிது..

    சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. நல்ல சிந்தனை, செய்தி

    விழித்திரை தானம் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் போய்ச் சேரவேண்டும். பலர் கண்ணைப் பிடிங்கிடுவாங்க என்று நினைத்துக்கொண்டுள்ளனர்

    பதிலளிநீக்கு
  5. //நான் ஆசைப்பட்டது எதுவும் நிறைவேறாத நிலையில்...//

    நீங்கள் கிழவர் ஆகிவிடவில்லை. உங்களின் நல்ல மனதுக்கு, இனி நீங்கள் ஆசைப்படுவனவற்றில் மிகப் பெரும்பாலானவை நிறைவேறும்.

    இது என் மனப்பூர்வ நம்பிக்கை. அன்புகொண்டு மனதைத் தளரவிடாதீர்கள் நண்பர் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆறுதலுக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு