வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள செய்தியை பார்த்தீர்களா ? எனக்கு இதில்
ஆச்சர்யமே இல்லை இவர்களும் மனிதர்கள்தானே... ஆனால் தமிழக மக்கள் குறிப்பாக தன்னை
ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஜடங்கள் இவர்களைத்தான் பெரிய அறிவு ஜீவிகளாக
நினைத்து வாழ்கின்றார்கள். திரைப்படங்களில் யோக்கியசிகாமணியாக நடிக்கும் இவர்கள்
இப்படித்தான் இவனுகள் மட்டுமல்ல பெரும்பாலான கூத்தாடன்கள் இப்படித்தான்.
அதற்காக விஜய்காந்த்,
அஜீத் போன்றவர்களை சொல்ல முடியாது. பிரபு, திரு. சிவாஜி கணேசன் அவர்கள்
இறந்தபோது தலைமுடியை மழிக்கவில்லை காரணமென்ன ? நடிக்கும்
வாய்ப்புகள் குறைந்து போகலாம். அதேநேரம் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் ரசிகர்கள்
இன்று வரையில் அவரது நினைவு தினத்தில் சுமார் நூறு ரசிகர்களாம் தலைமுடியை
மழித்துக் கொள்கின்றனர். அடப்பாவிகளா ? இதன் உள்
அர்த்தம் போனால் என்னாகும் ? வெட்கமாக
இல்லையா ? அல்லது
அந்த அளவுக்கு சிந்திக்கும் திறன் இல்லையா ? பிரபுவுக்கு இல்லாத அக்கரை
உனக்கு ஏன் ?
எனக்கு முழுமையாக
சொல்லி எழுத மனம் கூசுகின்றது நீ செய்த தவறுக்கு பிறரை குற்றம் சுமத்தக்கூடாது.
சரி அது கிடந்துட்டுப் போகுது. ரசிகன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்பது
எழுதாத சட்டமாகி விட்டது. கோடிக்கணக்கில் சர்வ சாதாரணமாக நூறு கோடிகள் தாண்டி
விட்டது இந்தக் கூத்தாடன்களின் சம்பளம். இதற்கான வேலைகள் சுமார் மூன்று மாதம்
இருக்கலாமா ? அதற்கு
மேல் இருக்கவும் சாத்தியமில்லை. அரசியல்வாதி பணக்காரன் ஆனால் லஞ்சம், கூத்தாடன்,
கூத்தாடிகள் இப்படி சம்பளம் வாங்கினால் லஞ்சம் என்று சொல்ல வேண்டாம் கொள்ளைதானே ?
இந்தக் கூத்தாடன்களுக்கு
சங்கம் இருக்கிறதாம் அதுவும் கடனில் இருக்கிறதாம் இதனை அடைப்படதற்கு நிகழ்ச்சிகள்
நடத்தி கோடிக்கணக்கில் பணம் உண்டாக்குகின்றார்கள். முட்டாள் ரசிகர்களும்
மக்களும்கூட எதையும் ஆழ்ந்து சிந்திப்பதில்லை. இவர்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கு
பணம் இல்லையாம் ஏண்டா... நாதாரிப்பயல்களா... மனசாட்சி இருக்கின்றதா ?
இவ்வளவு
கோடிகள் சம்பாரிக்கும் நீங்கள் கட்டக்கூடாதா ? திரு.சிவாஜி
கணேசன் அவர்கள் போர்க்காலத்தில் நூறு பவுன் நகைகளை நன்கொடையாக கொடுத்து
இருக்கிறார்.
எம்ஜிஆர் செய்தது
விளம்பரமாகி கொண்டே வந்தது இவர் செய்தது வெளியே தெரியவில்லை ஆகவேதான் என் தமிழ் என் மக்கள் கட்சி அடையாளம்
தெரியாமல் அழிந்து விட்டது. திரு.சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்த பிறகுதான் அவர்
செய்த தர்மங்கள் தெரிய வருகிறது. அப்பேர்ப்பட்டவருக்கு பிறந்த பிள்ளைகள் சொந்த
சகோதரிகளுக்கே துரோகம் செய்கிறது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர்களாம் மூன்று லட்ச
ரூபாய் செலவில் கிரேன் மூலம் கமல்ஹாசனின் பதாகைக்கு ரோஜாப்பூ மாலை போட்டு
இருக்கின்றார்கள். ரசிகன் என்பவன் திருந்தாதவரையில் தமிழகம் இன்னும் மோசமான
வாழ்க்கைச் சூழலுக்கு போகும்.
திரு.விஜய்காந்த்,
திரு.அஜீத் அவர்களை நான் குறிப்பிட்டதற்கு காரணம் விஜய்காந்த் நடிகர் சங்கத் தலைவராக
இருந்து நியாயமான முறையில் செய்து இருக்கிறார். அஜீத் மலேஷியாவில் நிகழ்ச்சி வைக்க
வேண்டாம் நாம் எல்லோரும் பணம் போட்டு சங்க கட்டிடம் கட்டுவோம் என்று சொல்லி வர
மறுத்து இருக்கிறார். இது மற்ற யோக்கியமூர்த்திகளுக்கு பிடிக்கவில்லை. ஆனால்
இவனுகள்தான் அடுத்த ஆட்சியை பிடிக்கலாம் என்று கணக்கு போடுகின்றனர்..
அன்று
படிக்காதவர்கள்தான் எம்ஜிஆர், சிவாஜி என்று மயங்கி, மழுங்கி, மடங்கி, மடக்கி
கிடந்தார்கள் என்றால் இன்று அனைவரும் பட்டதாரிகள். இவர்கள் கல்லூரியில் கற்றதுதான்
என்ன ? ஆசிரியர்களை
குற்றம் சொல்ல முடியாது காரணம் அவர்களின் கண்டிக்கும் உரிமையை பெற்றோர்கள் என்றோ
பறித்து விட்டோம். ஆகவே நமது, எமது, உமது தமிழகம் முன்னேற இனி வாய்ப்பு இல்லை ராஜா.
கில்லர்ஜி
தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
இதே ரூபாயை
ஏழைகளுக்கு பத்து நாட்களுக்கு உணவு வழங்கி இருக்கலாம்,
காணொளி
பந்தம் பாசம் நட்பு தியாகம் முதலான குணாதிசயங்கள் பொருந்திய கதைகளில் நடித்துத் தன் குடும்பத்திற்குப் பொருள் சேர்த்தார்.. அந்தக் கதையம்சங்களால் நல்லவைகளைக் கற்றுக் கொண்டோர் பலர்..
பதிலளிநீக்குஆனால் அவரது குடும்பத்தினர் ஒன்றையும் கற்றுக் கொள்ளவில்லை போல் இருக்கின்றது..
பணத்தின் மீது தான் பற்று என்ற பின் பந்த பாசங்கள் ஏதடா?..
நடிகர் திலகம் நடித்த படத்தின் பாடல் இது!..
வாங்க ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குசிவாஜி குடும்ப செய்தி வந்தபோது வருத்தமாக இருந்தது. காணொளி, மொத்த வயிற்றெரிச்சல் காணொளிகளையும் ஒன்றாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆமாம் ஜி மேலும் சில காணொளிகள் இருக்கிறது.
நீக்குகாணொளி வயிற்றைக் கலக்குகிறது. உண்மையிலேயே தமிழகத்தின் எதிர்காலம் கவலைக்குரியதே!
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஇந்தப் பதிவைப் படித்துவிட்டு கட்அவுட்டுக்குப் பாலூற்றிவிட்டு வரவா இல்லை அந்த வேலையை முடித்துவிட்டு பதிவைப் படிக்கவா?
பதிலளிநீக்குவருக தமிழரே. இரசிகன் மாறணும் இல்லையெனில் இதுதான் நிகழும்.
நீக்குநடிகர் கார்த்திக்கை (முத்துராமன் மகன்), அவரது மூத்த செஓதர்ர் சொத்து தராமல் ஏமாற்றிவிட்டதாகப் படித்திருக்கிறேன். நடிகைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பாவப்பட்ட ஜென்மங்கள். உறவினர்களால் ஏமாற்றப்படுவதற்கே அவதாரம் எடுத்தவர்கள்.
பதிலளிநீக்குஆம் தமிழரே
நீக்கு9தாராவை சிவனடியார் திருமணம் செய்தது உண்மைக்காதலா ?
அவளை வைத்து தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளத்தான்.
நீங்க சொல்றதைப் பார்த்தால் சுந்தர்.சி யும் அந்த வேலையைத்தான் செய்திருப்பாரா?
நீக்குயானை லத்தியில் முன் லத்தி வேறு, பின் லத்தி வேறா ?
நீக்குகாணொளி நிஜமா? அல்லது விளையாட்டுக்கு எடுக்கபட்டதா? பெண் குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபெற்றோர், ஆசிரியர் சந்திப்பு முன்பு இருக்கும் குழந்தைகளை பற்றி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் சொல்வார்கள். தனி கவனம் தேவை படுவதை. இனி நாம் வளரும் தலைமுறைக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வருக சகோ காணொளி உண்மைதான்.
நீக்குபிள்ளைகளை கண்டித்த, ஆசிரியர்களை துண்டித்து விட்டதின் விளைவு அழிவையே தரும்.
கோமதிக்கா பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் தான்...
நீக்குகில்லர்ஜி இப்போதைய ஆசிரியர்களில் மிகச் சிலரே நல்லாசிரியர்களாக இருக்காங்க. மீதியை நான் சொல்வதற்கில்லை. அடுத்து பெற்றோர். வீட்டிலிருந்துதான் தொடங்குது ஒழுக்கம். அதன் பின் பள்ளி.
பள்ளியிலேயே இப்படிச் செய்யும் பிள்ளைகளை அப்பள்ளி கண்டித்ததா? ஆசிரியர் அல்லது பள்ளித் தலைமை வரை செய்தி போயிருக்காதுன்னு நினைக்கறீங்களா?
கீதா
//பள்ளி கண்டித்ததா?// - கீதா ரங்கன் எந்த உலகத்துல இருக்காங்க? பசங்களை ஏதாவது கேட்டால், பெற்றோர் ஆட்களை அழைத்துவந்து கூட்டாக பள்ளி ஆசிரியர்களை மிரட்டும் காலம். இப்போ என்ன என்ன நடக்குதுன்னு எழுதினா... அவ்ளோதான்.
நீக்குபள்ளிக்குச் செல்லும் முன் பெற்றோர் நல்லொழுக்கம் கற்பித்திருக்க வேண்டும். இப்போதைய சமூக வலைகளில் எத்தனை குழந்தைகளின் வீடியோக்கள் சுத்துது? அது பண்ணும் அடம், செல்ஃபோன் கையாள்வது ரொம்பப் பெருமையா காணொளிகள் எடுத்துப் போடுறாங்க....பிள்ளையை அடிப்பதும் பிள்ளை பதில் சொல்வதையும் கூட ரசித்து எடுத்துப் போடுறாங்க...இதெல்லாம் நல்ல அடையாளங்கள் இல்லை. இங்கிருந்து தொடங்குவதுதான் ஒழுக்கம். பள்ளி அறிமுகம் ஆவது அதன் பின் தான்.
நீக்குவேறு சில உண்டு நான் சமீபத்தில் கலந்துகொண்ட வகுப்புகள்...அதை நான் பதிவுக்காக எழுதி வைத்துள்ளேன்...
கீதா
நெல்லை, அதைத்தானே பெற்றோர்னு சொல்லிருக்கேன் அங்கிருந்துதான் ஒழுக்கம் ஆரம்பிக்குது. ...பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரே....அதிலும் சிலர் எப்படின்னு உங்களுக்குத் தெரியலை ஒருபக்கம் சாயக் கூடாது...
நீக்குஇங்கு பங்களூரில் சமீபத்தில் சிக்கிய பள்ளிகள் பத்தி வாசிக்கலையோ?
கீதா
இங்கு ஆசிரியர்களே பெண் குழந்தைகளைச் சீரழிப்பது நடக்குதே...
நீக்குஏன் சென்னையில நடக்கலையா
கீதா
ஆசிரியர்களின் உறவை நாம்தான் பிள்ளைகளிடமிருந்து துண்டித்து விட்டோமே... பிறகு எப்படி அவர்கள் கண்டிப்பார்கள் ?
நீக்குபேதையர்கள்... தானாக திருந்த வேண்டும்...
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மையான வார்த்தை.
நீக்குகில்லர்ஜி, நடிகர் அஜித் நிறைய நல்ல விஷயங்கள் பேசுகிறார் கூடவே கொள்கைகளும் வைத்திருக்கிறார் என்றுதான் அறிகிறேன். விஜயகாந்தும் கொஞ்சம் நியாயவாதி ஆனா குடி அவரைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிவிட்டது.
பதிலளிநீக்குசினிமால நீங்க சொல்லிருப்பது எல்லாம் சர்வசகஜமப்பா....அதுவும் பல நடிகைகள் அவங்க குடும்பத்துக்காகவே தன்னை இழக்கிறாங்க...வருத்தமான விஷயம்தான்
கீதா
கீதா
சமீப காலமாக விஜயுடன் மோதவேண்டும் என்ற ஈகோவால் ரசிகர்களை மோத விடுவதற்கான வழியில் இறஙகி விட்டதாக தெரிகிறது
நீக்குகாணொளிகள் என்னத்த சொல்ல? நாளைய சிற்பிகளாம் இவங்க....இந்தப் பசங்க அம்மா அப்பா எல்லாம் என்ன செஞ்சுட்டுருக்காங்க?
பதிலளிநீக்குஎனக்கு ஒரு விஷயம் ரொம்ப நாளா உறுத்திக்கிட்டே இருக்கு....எழுதக் கை துடிக்கும்....ஆனா பொதுவெளில என்னால் சொல்ல முடியலை. சொன்னா அவ்வளவுதான் என்னைய ரவுன்ட் கட்டி அடிக்க வந்துருவாங்க....
கீதா
அன்று கவிஞர் எழுதியது உண்மையே...
நீக்குஇன்று பொய்த்து விட்டது.
காணொளியை (அதாவது பலவித காணொளிகளை) முன்பே பார்த்திருக்கிறேன். ஆசிரிய உறவினர்களும் எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
பதிலளிநீக்குமாணவ மாணவிகளின் இந்த நிலைமைக்குக் காரணம் அவர்களது பெற்றோர்கள்தாம். அது சரி... படித்துவிட்டு டாஸ்மாக்கே கதியாக இருக்கப்போகிறவர்களுக்கு ஆசிரியர்களைப் பற்றியோ இல்லை கல்வியைப் பற்றியோ என்ன மரியாதை இருக்கப்போகிறது?
ஆம் தமிழரே பெற்றோர்களே காரணம்... மதுக்கடைகளை மூடினால்தான் விடிவு காலம் வரும்.
நீக்குகொஞ்சுன்னு கூட வாய்ப்பு இல்லையா நண்பரே!!!
பதிலளிநீக்குவாய்ப்பு குச் நஹி நண்பரே...
நீக்குகாணோளியில் ஒரே குரங்கு கூட்டங்களாக இருக்கிறது!!! இப்போ ZOO விலும் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுட்டாங்காளா?
பதிலளிநீக்குஆம் நண்பரே இனி இப்படித்தான் ஆசிரியர்களின் பிழைப்பு.
நீக்கு