தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 03, 2024

கற்புக்கரன்ஸி

 

திரைப்பட நடிகைகளை திருமணம் செய்யும் பெரும்பாலான கூமுட்டைகள் பிறகு விவாஹரத்து செய்வது. இதையும் பெரும்பாலும் அத்துறையில் இருப்பவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது நடிகையின் வாழ்க்கையைப்பற்றி இவ்வுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்களின் வாழ்வு அப்படித்தான்... அதாவது அப்படித்தான் ஆம் அப்படித்தான். இதை குறை சொல்லவே முடியாது.
 
அப்படிச் சொன்னாலும் ஆண் வர்க்கத்தைத்தான் சொல்ல இயலும் ஆம் விபச்சாரன்களே விபச்சாரிகளை உருவாக்குகின்றனர் தொண்ணூறு 90 சதவீதம் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகிறது. ஒரு நடிகை என்பவள் அழகிய கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்ட செருப்பு போன்றவளே... காலில் மாட்டிய பிறகு பேழைக்கு போக இயலாது. நடிகையாகும் வரையில்தான் அவள் கற்புக்கரசி, ஒரு படத்தில் அரிதாரம் பூசி விட்டால் பிறகு வேறொரு நிலைதான். அதேநேரம் சில தமிழ்க் கூதரைகளால் கோயில்கூட கட்டி வணங்கப்படுவார்கள்.
 
திருமணம் செய்வதற்கு முன்பு அந்த நடிகையை, இந்த நடிகன் காதலிக்கின்றானாம் இருவரும் மனம்மொத்து திருமணம் செய்கின்றார்கள். இதில் வேடிக்கை என்ன தெரியுமா ? பல திரைப்படங்களில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்து தாலி கட்டி பள்ளியறைக்காட்சி வரையில் உலகறிய நடித்து இருப்பாள் ஆனால் சிலருக்கு உண்மையாக திருமணம் நடக்கும்போது யாருக்கும் தெரியாமல் திருப்பதியில் தாலி கட்டி வருவார்கள்.
 
தனக்கு திருமணம் முடிந்தாலும் நாம் ஒரு வீட்டுக்கு வாழவந்தவள் என்ற எண்ணம் எந்த நடிகைக்கும் வராது. எவளாவது வீட்டு வாயிற்படியில் வாசல் தெளித்து கோலம் போட்டு இருக்கின்றாளா ? ஆனால் பல திரைப்படங்களில் நல்ல மருமகளாக நடித்து இருப்பாள். அதன் மூலம் அவளுக்கு இதுதான் நமது வாழ்க்கை முறைகள் என்பது நன்றாகவே தெரிந்தும் வைத்திருப்பாள். திருமணத்திற்கு பிறகும் தன்னை பழைய வாழ்க்கைச் சூழலிலிருந்து மாற்றிக் கொள்ள இயலாது.
 
தன்னைச்சுற்றி உதவியாளர்கள், ஒப்பனையாளர்கள், மகிழுந்து கதவைத் திறந்து விடுவதற்கு காக்கா மனிதர்கள் இவர்கள் நமது வாழ்வில் என்றும் வேண்டும் என்ற சிந்தையே மேலோங்கி இருக்கும். ஆனால் கணவனாக வேலை செய்ய வந்தானே ஒருவன் அவன் பெருந்தொழிலதிபராக இருந்தாலும், ஒரு நடிகனாக இருந்தாலும். இவைகளை சகித்துக் கொள்ள இயலாது காரணம் இவள் எனது மனைவி என்ற எண்ணம் வரும் அட மூதேவி நீதான் அப்படி நினைத்துக் கொள்ளணும்.
 
இந்த செயல்கள் நாளாக, நாளாக வெளியே சொல்லிக் கொள்ள முடியாமல் மனதுள் புழுங்கி கொண்டு வாழ்வான் .சுமார் ஒரு வருடம் வரையில் காலம் ஓடும் பிறகு மனக்குமுறல்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறி விவாஹரத்தில் முடியும். இப்படி திருமணம் செய்பவர்களில் சிலர் அவளது சொத்துக்களை அனுபவிப்பதற்காகவே திருமணம் செய்வார்கள். இவர்களை இறுதிவரையில் பொருத்து போகின்றவர்களின் குணாதிசியம் மாமா வேலை பார்ப்பவனைப் போன்றே இருந்தாக வேண்டும்.
 
இந்தக்குழப்பத்தில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா ? அந்த நடிகையிடம் மாமியார் தனக்குரிய மரியாதை வேண்டும் என்று எதிர்பார்ப்பது. தனுஷ் திருமணம் செய்தது, ரஜினியின் சொத்தில் தனக்கு பாதி கிடைக்கும் என்ற கருத்தை வைத்துதான். அல்லது கஸ்தூரி ராஜாவின் கணக்காக இருக்கலாம். இன்று தனுஷின் நிலைப்பாடும் உயர்ந்து விட்டது. அதேநேரம் ஐஸ்வர்யாவின் எண்ணம் நாம் பெரிய நடிகர் ரஜினிகாந்தின் மகள் என்ற ஆணவம், திமிர், ஒரு வீட்டுக்கு மருமகளாகி விட்டோம். இனி இந்தக்குடும்பந்தான் நமது வாழ்க்கை, குழந்தைகள்தான் நமது உலகம் என்ற சிந்தை இன்று வரையில் இல்லை.
 
காரணம் வளர்ப்பு அப்படி வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கவில்லை, ரஜினிக்கு முதல் தரசம்பளம் வாங்கி தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ளும் திட்டம், ஓயாத உழைப்பு, ஓட்டம், லதா ரஜினிகாந்துக்கு வருகின்ற கோடிக்கணக்கான பணத்தை எப்படி முதலீடு செய்வது ? என்று தனது சமூகத்தினரோடு ஆலோசனை செய்வது. இச்சூழலில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறையில் கவனமின்மை. வேண்டிய பணத்தை செலவுக்கு கொடுத்து வறுமையின் நிழலைக்கூட காணாத வாழ்வு.
 
நடிகர் திரு.மயில்சாமி அவர்களைப் போல் உழைத்து சம்பாத்தியத்தில் சிறு பங்கை ஏழைகளுக்கு உதவி இருக்கலாமே... குறைந்தா போய் விடும் இறைவன் உங்களது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வை அமைத்து இருப்பானே இதோ முதல் மகளுக்கும், இரண்டாவது திருமணம் செய்யும் நிலைக்கு வந்து விட்டீர்கள். இன்றிருப்பார் நாளை இல்லை. இருப்போர் இல்லாதோருக்கு கொடுத்து வாழுங்கள். ஆனால் என்னைப்போல் எல்லாவற்றையும் உறவுகளுக்கு கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் வாழ்க்கை ஒரு முறையே... அதை வாழ்ந்து பாரீர் முறையே...
 
கில்லர்ஜி அபுதாபி
காணொளி

20 கருத்துகள்:

 1. மூன்றாவது பாராவையும், நான்காவது பாராவையும் மிக ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

   நீக்கு
 2. பிரியாமல் வெற்றிகரமாக குடும்பம் நடத்தும் சிலர் இன்னும் திரையுலகில் இருக்கிறார்கள்தான்.

  பதிலளிநீக்கு
 3. காக்கா மனிதர்கள் ஹாஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தமிழரே இவர்கள் அரசியலிலும் உண்டு.

   நீக்கு
 4. வாழ்க்கை ஒரு முறையே வாழ்ந்துபாரீர் னு சொல்றீங்க அவங்களும் எல்லாத்துக்கும் வேலையாட்கள் வச்சிக்கிட்டு எஞ்சாய் பண்றாங்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிகர் பாலா & லாரன்ஸ் போன்றவர்கள்ப்போல் சிறிதேனும் வாழட்டும்.

   நீக்கு
 5. நீங்கள் ஏற்கனவே பல முறை சொல்லியிருப்பது போல இந்தக் கூத்தாடிச்சிகளைக் கோபரத்தில் தூக்கி உட்கார வைப்பவன் கூ முட்டை ரசிகன். இவன் திருந்துவது எப்போது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அன்றாவது படிக்காதவர்கள், சிவாஜி கணேசன் எம்ஜிஆருக்கு ரசிகனாக இருந்து தொண்டராக அடிமையானார்கள்.

   இன்று அனைவரும் பட்டதாரிகள்தானே ஏனிப்படி ?

   நீக்கு
 6. ஆதங்கம்... வேறென்ன சொல்ல! பல்லாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. காக்கா மனிதர்கள்...

  காக்கை கரவா கரைந்துண்ணும்...

  மனிதர்களில் காக்கையைப் போல எத்தனை பேர்??..

  பதிலளிநீக்கு
 8. /// சிலர் அவளது சொத்துக்களை அனுபவிப்பதற்காகவே ///

  இளைய தலைமுறையினர்
  சிந்திக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 9. கூத்தன் - கூத்தி என்றே தமிழில் இருக்கின்றது...

  கழைக் கூத்தாடிக்கு அன்றைய வயிற்றுப் பாட்டிற்குக் கிடைத்ததும் திருப்தி அடைந்து நகர்ந்து விடுகின்றான்..

  திரைக் கூத்தாடிகள் மட்டும் திருப்தி அடைவதே இல்லை கடைசி மூச்சு வரைக்கும்..

  அதன் பிறகு யூ குழாயையும் விட்டு வைப்பது இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி பணம் பெருத்தவுடன் பாதுகாக்க அரசியல்வாதி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இன்றைய உண்மை சூழ்நிலைகளை நன்றாக எழுதியுள்ளீர்கள். புகழ் வரும் போது ஏதாவது பிரச்சனைகளும் உடன்பிறப்பாக வருவது இயல்புதான்.அனைவருக்கும் பணம் ஒன்றே பிரதானமாக போனதும் ஆசைகளின் வழிகாட்டல்கள்தான். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  காணொளி கண்டேன். நான்கு வித சட்டங்களுக்கும் பொருள் புரிந்து உரையாற்றுகிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நேற்று நான் பதிவுலகம் வர இயலவில்லை அதனால் தாமதம்.. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு