தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 20, 2023

உறவும், நட்பும்

றவுகள் உயிர்களை எடுக்கலாம்
நட்புகள் உயிரையும் கொடுக்கலாம்
உறவுகள் பகையை தொடுக்கலாம்
நட்புகள் தவறுகளை தடுக்கலாம்
 
உறவுகள் பொய்யாய் இருக்கிறது
நட்புகள் மெய்யாய் சிலிர்க்கிறது
உறவுகள் உதவிட மறுக்கிறது
நட்புகள் நன்மை கொடுக்கிறது
 
உறவுகள் உபத்திரம் தந்தது
நட்புகள் உணர்வாய் வந்தது
உறவுகள் கறுவியே வெந்தது
நட்புகள் உறவுக்கு உகந்தது
 
உறவுகள் குரோதம் காட்டியது
நட்புகள் உதவிக்கரம் நீட்டியது
உறவுகள் தேளாய் கொட்டியது
நட்புகள் புத்தியை தீட்டியது
 
உறவுகள் முள்ளாய் தைத்தது
நட்புகள் நம்பிக்கை வைத்தது
உறவுகள் உறவே பொய்த்தது
நட்புகள் நலமாய் வாய்த்தது
 
கில்லர்ஜி (இவை எனக்குள் உட்பட்டது மட்டுமே) தேவகோட்டை

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

 1. இதற்கு ஒரே காரணம்தான். உறவுகள் எதிர்பார்க்கும். நட்பில் எதிர்பார்ப்பில்லை, உணர்வுபூர்வமானது.

  பதிலளிநீக்கு
 2. யாரிடமும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் நாம் இருந்தால் உறவானாலும் சரி நட்பானாலும் சரி இனிக்கும் அப்படியில்லையெனில் கசக்கும் இதுதான் உண்மை

  பதிலளிநீக்கு
 3. உறவுகளிலேயே கூட எதிர்பார்ப்பு இல்லாதவர் ஒன்றிரண்டு பேர் தேறக்கூடும்!  படங்கள் ஒரே நாளில் எடுக்கப்பட்டிருந்தாலும் வெவ்வேறு வருடங்கள் இல்லையா?!!                                         

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஒரே தினம், முதல்படம் அதிகாலை நான்கு மணி அபுதாபி, இரண்டாவது படம் மாலை ஆறுமணி கோவை.

   நீக்கு
 4. உறவு :- உண்மை தான்... ஆனால் அதுவே நம்மை முன்னேற்றும் என்பதும் உண்மை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி உறவு தேவைதான்.

   ஆனால் உண்மையாய் வேண்டும்

   நீக்கு
 5. தென்னைய பெத்தா இளநீரு...
  பிள்ளைய பெத்தா கண்ணீரு...
  பெத்தவன் மனமே பித்தம்மா - பிள்ளை மனமே கல்லம்மா...

  பானையிலே சோறிருந்தா - பூனைகளும் சொந்தமடா...
  சோதனையை பங்கு வச்சா - சொந்தமில்லே பந்தமில்லே...

  யாரை நம்பி நான் பொறந்தேன்...? - போங்கடா போங்க...
  என் காலம் வெல்லும் - வென்ற பின்னே வாங்கடா வாங்க...

  பதிலளிநீக்கு
 6. என்னை பொருத்த வரை உறவென்றாலும் நட்பென்றாலும் எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது கில்லர்ஜி...இருந்தா பிரச்சனைதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நட்புகளிலும் கூட எதிர்பார்ப்புகள் இருக்கு....உதாரணத்திற்கு, ஒரு நட்பின் கல்யாணம் நு வைங்க....மொய்...எதிர் மொய் இதெல்லாம் கூடப் பார்ப்பதுண்டு....நட்புகளுக்குள் கடன் இருந்தா என்னாகும் சொல்லுங்க....

  எனவே உணமையான எதிர்பார்ப்பில்லா அன்பு இருந்தால் ஒழிய எந்த உறவும் கசக்கும் என்பதுதான் நிதர்சனம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது நட்புகள் உண்மையாக வாய்த்தது எனது பாக்கியம் .

   ஆகவே நானும் உண்மையாக இருக்கிறேன்.

   நீக்கு
 8. இப்படியெல்லாம் பதிவு இடுவதற்கு தங்களால் மட்டுமே ஆகும்...

  சிறப்பு..

  பதிலளிநீக்கு
 9. தாங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே ஏறுக்கு மாறாக அமைவதும் உண்டு..

  பதிலளிநீக்கு
 10. நட்புகளிலும் முதுகுக்குப் பின்னால் துரோகங்கள் செய்த நட்புக்கள் இருக்கின்றன. உறவுகளிலும் நாம் வீழ்ந்த பின்னும் கை கொடுக்கும் உறவுகள் இருக்கின்றன. கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எந்த உறவிடமும் நட்பிடமும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பாசமும் அன்பும் வைக்காமலிருப்பது தான்!! அனுபவம் மட்டுமே இந்தப்பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 11. உறவுகள், நட்புகள் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் இருந்தால் உறவில் சிக்கலே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. எனது அனுபவத்தினால் ஒரு சில இடங்களில் உங்களுடன் உடன்படுகிறேன். இருப்பினும் ஓர் ஐயம். உறவினர்களும் நண்பர்கள் ஆவதுண்டு , நண்பர்களும் உறவினர்கள் ஆவதுண்டு தானே. அப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   கீழே நான் குறிப்பிட்டு உள்ளதை கவனிக்கவும்.
   (இவை எனக்குள் உட்பட்டது மட்டுமே)

   தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 13. இரண்டிலும் இரண்டும் உண்டு தானே

  பதிலளிநீக்கு
 14. இரண்டிலும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தால்தான் நீடித்து இருக்கும் ஜி.
  அது முடியாத ஒன்று. அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம் என்று சொல்கிறார்கள்.
  அன்புக்கு பதிலாக அலட்சியபடுத்தபடுவதும் நடக்கிறது.
  அதுவும் தகுதி இல்லா இடத்தில் அன்பை கொடுத்து விட்டு அவதிபடுவதும் உண்டு.
  படங்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு