எதை, எதையோ
சாதிக்கணும்னு
நினைத்த நான், எதையாவதுசாதிப்போம்னு இறங்கி வந்து
எதையுமே சாதிக்க முடியாதுனு
தெரிந்தபோது எதுவுமே நம்
கையில் இல்லை என்பதை
தெரிந்து கொண்டதே எனக்கு
இறைவன் தந்த அனுபவப்பாடம்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
என்று பெருமையாக நினைத்த
எனக்கு பலரும் நம்மை ஊறுகாயாக
பயன்படுத்தியதை அறிந்து கொண்டது
மனதுக்கு வலியை கொடுத்தாலும்
உணவாய் வாழ்ந்ததே உண்மை
என்பது உணர்ந்து கொண்ட,
உண்மையான உண்மை.
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
காக்கும் என்று நம்பிய எனக்கு
உண்டாக்கியதை உறுதியாக்க
தெரியவில்லை என்பது நான்
உண்டாக்கியது உதிர்ந்து போன
பிறகே உறுதியாக தெரிந்தது
உழைக்க தெரிந்த எனக்கு உறுதி
செய்ய தெரியவில்லை என்பது.
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
வேசம் தரித்து உரித்தவர்கள்
என்பது, பாசம் வழுக்கவும்
செய்யுமென்று பாடம் படித்து
கொடுத்த பிறகும், பாசம்
வைக்கும் பாசக்கார என் மனது
பைத்தியக்காரத்தனம் என்று
தன்னைத்தானே சொல்கிறது.
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
அலைபவர்களுக்கு மத்தியில்
அற்புதமான வாழ்வை ஆண்டவன்
கொடுத்திருந்ததை அறியாத
மடந்தையாய் வாழ்ந்திருக்கிறோம்
என்பது அனைத்தும் இழந்த பிறகே
கண் போன பின் சூரிய நமஸ்காரம்
செய்கிறோம் என்பது புரிந்தது.
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
என்று பெருமைப்பட்டு வாழ்ந்து
கொண்டு காலம் கடந்த பிறகே
பேச்சை கேட்டவர்கள் எல்லாம்
கேட்பது போல் காலம் கடத்தி
லாபம் பெற்றவர்கள் சைகை
காட்டிய பிறகே புரிந்தது நாம்
பேசியது செவிடர்களிடம் என்று.
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
செவிடன் செவிலியப்பன் ஊமையன் ஊமைத்துரையிடம் பேசியதை குருடன் குருநாதன் பார்த்து சொன்னது போல இருக்குது கதை.
காணொளி
இனியாவது எல்லாம் சரியாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
பதிலளிநீக்குவாழ்க ஜி தங்களது பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி
நீக்குநீங்கள் மீண்டும் அபுதாபி சென்றதற்கான காரணம் புரிகிறது. சம்பாதித்துக்கொண்டு தாயகம் திரும்புங்கள். இனியும் இளகிய மனத்தராய் ஏமாற வேண்டாம்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களது எண்ணங்களில் உருவான வார்த்தைகளில், தங்களது வலிகளை உணர்ந்து கொண்டேன். இனி எல்லாமும் சரியாகி அனைத்தும் நல்லபடியாக நடக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பிரார்தனைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
நீக்குஎன்னுடைய தந்தை வழி தாய் வழி உறவினர்கள் பலரும் சிலோன், பர்மா, மலேயா நாடுகளில் பணிசெய்து தாயகம் திரும்பியவர்கள். இந்தியா வந்தவுடன் அவர்கள் கொண்டு வந்த செல்வம் முழுதும் படிப்படியாக கரைந்து கடைசியில் பராசக்தி சிவாஜி போல் யார் வீட்டிலாவது ஓசி சாப்பாடு கிடைக்குமா என்ற நிலைக்கு வந்து மடிந்தார்கள்.
பதிலளிநீக்குஇந்நிலை அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கும் தற்போது ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. சொகுசாக இருந்த வாழ்வை துறக்க முடியவில்லை. இந்தியாவில் சம்பளம் குறைவாக வேலை செய்யவும் முடியவில்லை. கொண்டு வந்த பணத்தில் சொந்த கம்பெனி துடங்கி போண்டி யானது தான் மிச்சம்.
Jayakumar
வாழ்க ஐயா தங்களது கருத்து நூறு சதவீதம் நிகழும் உண்மை.
நீக்குபொன்னெழுத்துக்கள்..
பதிலளிநீக்குசிறப்பான பதிவு..
நன்றி ஜி
நீக்குஞான மார்க்கம் உபதேசிப்பது இதைத்தான்..
பதிலளிநீக்குகருத்து கண்டு மகிழ்ச்சி
நீக்குகாணொளி சிறப்பு..
பதிலளிநீக்குகாணொளி கண்டமைக்கு நன்றி ஜி
நீக்குஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. பாடலை நினைவுபடுத்தியது. கவலை வேண்டாம். நல்லவர்கள் எப்போதும் தொடர்ந்து துன்பம் அனுபவிப்பதில்லை
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஎனக்கும் பல வலிகள் இருக்கிறது நண்பரே! தாங்கள் பகிர்ந்து விட்டீர்கள்.. நான் பகிரவில்லை...பகிர்தால் அது புலம்லாகிவிடுமாம்.. அறிவாளிகள் சொன்னார்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே தாங்கள் சொல்வதும் உண்மையே...
நீக்கு