தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 04, 2023

ஆண்டிப்பட்டி, ஆருடர் ஆண்டியப்பன்


சில நேரங்களில் நாம் எத்தனையோ ஆண்டுகள் கடந்த பிறகு சிலரைக் கண்டு இருபாலருமே நினைக்க கூடியது இவரை நாம் திருமணம் செய்து இருக்கலாமோ ? இவளை நாம் திருமணம் செய்து இருக்கலாமோ ? இதன் அடிப்படைக் காரணம் இருவருடைய வாழ்வுமே நிகழ் காலத்தில் சுபமில்லை அதாவது இணையால் மன இணைப்பு இல்லை.
 
அதே நேரம் இருவருமே நல்வாழ்வு வாழ்ந்திருந்தால் இந்த வகை குழப்ப நினைவோட்டங்கள் வந்து இருக்காது ஆனால் நம்மில் தொண்ணூறு (90) சதவீதம் இப்படித்தான் நினைக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அதே நேரம் கிடைத்த வாழ்க்கையை நிறைவாக எண்ணும் மனிதர்களும் உண்டு உதாரணம் தொழிலதிபர் திரு.முகேஷ் அம்பானி அவர்கள் காதல் மணம் செய்தவர்தான் இன்று வரையில்,  இந்நிலையிலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வது பெருமையான விடயமே... நிலைத்தோங்கட்டும் இறைவா...
 
இதுபோல உலகறியாத நிலையில் பட்டி, தொட்டிகளில் வாழும் சுப்பனும், குப்பம்மாளும் உண்டு. எத்தனை நபர்களை திருமணம் செய்தாலும் திருப்தி வாழ்க்கை அடையாத திரைப்படக் கூத்தாடிகளில் இருபாலரும் நிறைய உண்டு அதேபோல பல திருமணங்கள் நிகழ்ந்த பிறகு இது நடந்திருக்க வேண்டாமே என்று எண்ணும் தம்பதியர்கள் மட்டுமல்ல, பெரியோர்களும் உண்டு. இதற்கு நாம்தானே காரணம் என்று வருந்திய பெரியோர், சிறியோர்களும் உண்டு இனி பயன் ?
 
ஒரு மனிதனுக்கு நல்ல மனை, மனைவி, மக்கள் சிறப்பாக அமைவது பெரும் பாக்கியம் நல்ல மனைவி அமைந்து விட்டால் மற்ற இரண்டும் தானாகவே அமைந்து விடும் சூழல் உருவாகி விடும். காரணம் மனைவி இந்தப் பொறுப்புகளை தானேற்றுக் கொள்வாள். சரி நல்ல மனைவிக்கு எங்கு போவது ? சோசியரை நம்பித்தான் இந்த ஜாதகம் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று சொன்னதை நம்பி இறங்குகிறோம். அவர் வாங்கிய காசுக்கு கூவி விட்டார் அவ்வளவுதான்.
 
நமது வாழ்வை சிறப்பாக அமைக்க நினைக்கிறோம், முயல்கிறோம் இறைவன் நினைக்க வேண்டுமே அவன் எழுதிய விதிப்படியே நிகழ்ந்தது, நிகழ்கிறது, நிகழவும் போகிறது... பிறகு நாம் முயன்று பயனென்ன ? என்ற கேள்வி எழுகிறதல்லவா... விதியை மாற்றும் சாஸ்த்திரங்கள், சம்பிரதாயங்கள் உண்டு ஆனால் இவைகளை சரியாக கணித்து சொல்லும் ஆருடர்கள் இப்பொழுது இல்லை இவர்கள் எல்லாம் மறைந்து விட்டார்கள் அவர்களை பின்பற்றும் வழித்தோன்றல்களும் இல்லை

இன்று இருப்பவர்கள் இணையத்தில் ஏதோ படித்து விட்டு தன்னை ஆருடர்கள் என்று சொல்லிக் கொல்வது பிழைப்புக்காண வழிமுறையே வேறொன்றுமில்லை. காலம் மாறி விட்டது என்று நாம் அனைவருமே பொய் சொல்லிக் கொண்டு எல்லாவற்றையுமே மாற்றுகிறோம் உதாரணம் நல்ல உடையை கிழித்து விட்டு இதுதான் புதிய நாகரீகம் என்று சொல்லி அணிகிறோம். இதை உருவாக்கியது யார் ? இளைய தலைமுறைதான் இது தவறென்று தடுக்காத ஆசிரியர்களும், பெற்றோர்களுமே இதன் குற்றவாளிகள். சரி இதை நாம் ஏற்கிறோமா ? இல்லையே.... இந்த சந்ததிகளின் வாழ்வு இழிநிலைக்கு சென்று விட்டது இனி பாக்கி இல்லை.
 
இன்றைய பெண்கள் எதற்கெல்லாம் விவாகரத்து கோருகின்றார்கள் என்பதில் ஓர் வரைமுறையே இல்லாமல் போய் விட்டது. விருப்பமிருந்தால் வாழ்க்கை இல்லையெனில் வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் துளியும் தயக்கமில்லை. இது மட்டுமா ? எனக்கு நீ துரோகம் செய்தால் உனக்கு நான் துரோகம் செய்வேன் என்ற கோட்பாடு பெறுகி விட்டது. உன் வழியில் நீ போ என் வழியில் நான் போகிறேன் குழந்தைகளுக்காக கணவன் மனைவி என்ற உறவு இருக்கட்டும் என்பது இவர்களின் கருத்து. ஆனால் இதுதானே குழந்தைகளின் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதை அறியா மடந்தைகளாக வாழ்கிறார்கள்.
 
எவ்வளவோ காரணங்களுக்காக விவாகரத்து கேட்கும் பெண்மணிகளை பார்த்து விட்டோம். ஆனால் ஆண்கள் கேட்பது குறைவாகவே தெரிகிறது காரணம் பெண்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு பெறுகி விட்டது. இவளை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைதான் காரணம். கணவன் குறட்டை விடுகிறான் என்பதற்காக விவாகரத்து கேட்ட பெண்மணியை பார்த்து விட்டோம். ஆனால் இதோ கீழே இருக்கும் காணொளியை கேளுங்கள்.
 
காணொளி
 
Chivas Regal சிவசம்போ-
என்னையா இது காலக்கொடுமையா இருக்கு.... எம் பொஞ்சாதி தங்கம்யா...

Share this post with your FRIENDS…

34 கருத்துகள்:

 1. இவரைத் திருமணம் செய்திருக்கலாமோ என்று வேறொருவரைப் பார்த்து எனக்கு இதுவரை தோன்றியதே இல்லை.  எனக்குப் பொருத்தம் என் பாஸ்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இவரைத்// இப்படி இல்லாமல் "இவரையும்" என்ற யோசனை வந்திருக்கிறதா?.... ஹாஹாஹா கோபம் வேண்டாம்... சும்மாதான் கேட்டேன்.

   நீக்கு
  2. வாழ்க வளமுடன் ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 2. பெண்கள்தான் அதிகம் விவாகரத்து கேட்கிறார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?  சம அளவு திருப்தி இல்லா ஆண்களும் கேட்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீப இருபது வருடங்களில் பெண்கள்தாம் அதிகமாக்க் கேட்கின்றனர்

   நீக்கு
  2. நெல்லைத்தமிழர் சொல்வதுதான் உண்மை.

   நீக்கு
 3. ஜோசியம் கேட்டு இணைகிறோம்.  தவிர்க்க முடிவதில்லை.  பிற்பாடு வாழ்க்கையில் நேரும் பச்சனைகள் சதோஷங்களுக்கெல்லாம் நாமே பொறுப்பு.  எல்லாவற்றையும் கைகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடம் படிக்கும்போது வாழ்வு முடிந்து விடுகிறது ஜி

   நீக்கு
 4. காணொளி பின்னர் மொபைலில்தான் பார்க்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாருங்கள் ஜி காரணம் புல்லரிக்கும்...

   நீக்கு
  2. பார்த்தேன். அதிர்ந்தேன்.

   நீக்கு
 5. விதி ஜோசியர் கண்ணை மறைத்துவிடும். ராஜீவ் காந்தி இறந்த தினத்தில் நடந்தவைகளை எண்ணிப் பாருங்கள். இந்திரா காந்திக்கும் அதேதான். சீக்கிய காவலாளிகள், ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் விளைவு, அவர்களை மாற்றிவிடுவோம் என அவசர ஆலோசனை சொன்ன பின்னரும், இந்திரா, அரசியலுக்காக அந்தக் காவலர்களை மாற்றவில்லை. ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆனபின்னும் காத்திருந்து ஶ்ரீபெரும்புதூர் சென்றார் ராஜீவ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இதில் சோசியரின் விதியே அவருக்கு தெரியாது.

   நீக்கு
 6. ஜோசியர் எல்லா பொருத்தமும் இருக்கிறது என்று சொல்லி திருமணம் முடித்து பிரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
  ஜாதகமே பார்க்காமல் திருமணம் முடித்து வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
  திருமணம் நிச்சியம் செய்தபின் போனில் இருவரும் உரையாடி கொண்டே இருந்தவர்கள் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
  கணவன், மனைவி பலவருடம் சகித்து வாழ்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் பொறுத்து கொள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள்.
  இறைவன் வகுத்த வழி வேறு என்ன சொல்வது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 7. காணொளி பார்த்தேன். உண்மையா? அல்லது பேச்சுக்கு சொன்னாரா தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர் மேடைப் பேச்சாளர் அல்ல நீதிபதி. அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

   நீக்கு
 8. மணமுறிவுக்கு காரணம்

  வளர்த்த விதமா...?
  வளர்ந்த விதமா...?

  பட்டிமன்றம் வைத்து விடலாமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   வளர்த்த விதம் சரியில்லை என்பதே எமது கருத்து ஜி

   நீக்கு
 9. இன்றைய காலத்தில் விட்டுக் கொடுப்பதும் இல்லை பொறுமையும் இல்லை . 'நீயா ...நானா...என்று போட்டி ' நிலைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்றைய கால நிலைகளை சரியான அலசலுடன் கூடிய பதிவு அருமை. அந்தக் காலத்தில் திருமண பந்தத்தை புனிதமாக கருதினார்கள். வீட்டு பெரியவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தந்து குடும்பம் என்ற பந்தங்களை வழி நடத்துவதில் தம் சந்ததிகளுக்கு சிறப்பான பயிற்சியும் தந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. மாறிய காலத்திற்கேற்ப நாமும் மாறினால்தான் நமக்கு சிறிதாவது மரியாதை என்ற நிலை வந்து விட்டது. ஆனால், இதுவும் ஒரு நாள் மாறும்... யார்கண்டது? காணொளி விஷயம் எதிர்பார்த்ததுதான்...! இப்போதுதான் யாருக்குமே புடவை கட்ட பிடிப்பதில்லையே!! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 11. பசு மாடு வளர்த்த சாமியாரின் கதை தெரியுமா?..

  அதுதானுங்கோ வாழ்க்கை!..

  நல்ல பதிவு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 12. கில்லர்ஜி, எந்த ஜோசியரானாலும் அவருக்கும் நேரம் சரியில்லை என்றால் அவர் கண்ணை மறைத்துவிடும். எனக்கு மனித கணிப்புகளின் மீது நம்பிக்கை இல்லை. எதையும் அறியாமல் என்ன நடக்கும் என்பதை அறியும் ஆர்வமும் இல்லை... எல்லாமே நம் கைக்கு அப்பாற்பட்டது என்று இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கும் போது அதை மாற்ற எந்த மனித சக்தியும் இல்லை கில்லர்ஜி. இது என் தனிப்பட்ட கருத்து.

  சில விஷயங்களை யோசித்து முடிவு எடுத்திருக்கலாம் என்று தோன்றும் தான். திருமணம் உட்பட....ஆனால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருக்கும் போது அந்த நேரத்தில் யோசிக்கும் சக்தி கூட இருக்காது மூளை ஆஃப் ஆகியிருக்கும்....

  திருமணம் உட்பட....

  ஆனால் குழந்தைகள் நல்ல சூழலில் வளர வேண்டும் நன்றாக வளர்க்கப்பட வேண்டும், ஓவர் செல்லம் கூடாது, அதே சமயம் மிலிட்டரி ஹிட்லர் வழி முறையும் கூடாது என்பதில் முழு நம்பிக்கை உண்டு. குழந்தை வளர்ப்பு என்பது 64 கலைகளில் இல்லை....ஆனால் அதுதான் மிக மிகக் கடினமான கலை...அது நன்றாகச் செய்யப்பட்டால்தான் சமுதாயம் நன்றாக இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான கருத்து தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. நான் திருமணத்தில் விருப்பம் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் கட்டாயம் எனவே பல சமயங்களில் தோன்றியதுண்டு....ஆனால் இபப்டித்தான் நடக்க வேண்டும் என்றிருக்கும் போது அதை ஏற்று அதை நல்ல விதத்தில் கொண்டு போகணும் என்ற பக்குவம் அப்போதே வந்துவிட்டதால்...நகர்கிறது.

  இந்தப் பதிவிற்கு நிறைய சொல்லலாம்....

  எனக்குத் தெரிந்து ஆண்களும் இருக்கிறார்கள் விவாகரத்து சொல்ல....பெண்கள் மட்டுமல்ல....நீங்கள் சொல்லியிருப்பது போல்.....ஆனால் ஏன் ஆண்கள் ஃபைல் செய்வதில்லை தெரியுமா? சட்டம் பெண்களுக்குத்தான் சப்போர்ட் கூடுதல். ஆன்கள் கூடுதலாக நிரூபிக்க வேண்டும்.

  அதே இது பெண்கள் தம்மாத்துண்டு காரணத்திற்குக் கூட ஃபைல் செய்ய முடியும். அதுதான் காரணம் புள்ளிவிவரங்களில் பெண்கல் ஃபைல் செய்வது தெரிகிறது.

  ஆனால் ஆண்கள் பெண்களை எத்தனை கொடுமைப் படுத்தினாலும் பிரியாத பெண்கள், ஆண்கள் விட்டுச் சென்றாலும் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள், ஆண்கள் குடித்து கும்மி அடித்தாலும் (டாஸ்மாக்கைச் சொல்லவில்லை, உயர்தர இடங்களிலும் கூட) கூட வாழும் பெண்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் ஆண்களைக் கூடப் பொருத்து தங்களால் முடிந்த அளவு வேலை செய்து உழைக்கும் ,
  குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள், மாமியார்க்கொடுமைகளைப் பொறுத்துப் போகும் பெண்கள் என்று எவ்வளவோ பேர் இருக்காங்க.

  இப்படியான விஷயங்களில் என் கருத்து வேறு. விவாகரத்து என்பது தவறல்ல. அதை நாம் மோசமாகப் பார்க்கிறோம். ஆனால் மிகவும் சில்லி காரணங்களுக்காக விவாகரத்து என்பது தவறு. காணொளியில் சொல்லியிருப்பது போலான காரணங்களுக்கு விவாகரத்து ....அப்படி அது உண்மை என்றால் அந்தப் பெண் சரியாக வளர்க்கப்படவில்லை.

  கில்லர்ஜி, பெண்களின் பாசிட்டிவ் சைட் பத்தியும் நாம் பார்க்கலாமே அதே போன்று....ஆண்களின் நெகட்டிவ் சைட் (குடி மட்டுமில்லை..) பத்தியும் பார்க்கலாமே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களின் சதவீதம் கூடுகிறது இதைத்தான் நான் வழியுறுத்துகிறேன்.

   நீக்கு
 14. People often ask ‘What happens when a man files for divorce?’. The divorce laws in India do not restrict any person from filing first. However, divorce advocates usually do not advise the same to their male clients since the laws are more tilted towards females. the husband will have to prove reasons for divorce beyond any doubt and prove himself to be a victim to convince the court. In Indian society, it is a big deal to prove a man to be a victim of anything.

  அதனால் வக்கீல்களே தங்கள் க்ளையன்ட் ஆணாக இருந்தால் கேஸ் ஃபைல் செய்வதைத் தடுக்கிறாங்க....எனவே புள்ளி விவரங்களில் மீடியாவில், வெளியுலகிற்கு ஆண்கள் ஃபைல் செய்வதை விட பெண்கள் செய்வதுதான் தெரிய வரும்....

  நம் வீட்டில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எனக்கு புதிய விடயம் மிக்க நன்றி

   நீக்கு
 15. பெண்கள் தான் அதிகம் மணமுறிவு கேட்கிறார்கள் என்றால் , கணவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல் தான் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் தானே நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நிச்சயமாக இதற்கு காரணம் டாஸ்மாக்

   நீக்கு