தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 14, 2023

வேளாங்கண்ணி, வேதாந்தம் வேதமுத்து

ணக்கம் வேதமுத்தண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி செண்பகநாதா. நல்லா இருக்கேன் என்ன விசயம் ?
 
சில சந்தேகம் அதை கேட்டுப் போகலாம்னு வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
உங்களை ஏண்ணே வேதாந்தம் வேதமுத்துனு சொல்றாங்க ?
நீ இப்ப சந்தேகம் கேட்டு வந்தியே இப்படித்தான் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கூட சந்தேகம் கேட்டு வருவாங்க, அப்ப சித்தாந்தம், வேதாந்தம், சுகந்தம், காந்தம், சொந்தம், பந்தம் எல்லாம் பேசுவேன் அதனாலதான்டா இந்த பேரு...
 
பூரானை ஆம்பளைங்க அடிக்க கூடாதுனு சொல்றாங்களே ஏண்ணே ?
அதுடாத்தம்பி அந்தக் காலத்துல எவனோ பொண்டாட்டி மேலே கோபப்பட்டு அவளை கடிச்சு தொலையட்டுனு சொல்லி வச்சான் அது அப்படியே தொடர்ந்து வந்துருச்சு.
 
செவ்வாய்க் கொழுக்கட்டையை ஆம்பளைங்க திங்கக்கூடாதுனு சொல்றாங்களே எதுக்குண்ணே ?
எதைச் செய்தாலும் இந்த ஆம்படையான் நமக்கு இருக்கானு நினைக்காம மொத்தமா விளாவிடுறாங்களேனு அந்தக்காலத்து பொம்மனாட்டிக கூட்டம் போட்டு இருக்காங்க, அதுக்காக யோசிச்சு வச்சது இந்தக் கொழுக்கட்டை.
 
அப்படீனாக்கா... ஆம்பளைங்க எங்கள் பிளாக்கில் கூட்டம் போட்டு இப்படி ஏதாவது திங்கட்கிழமை திங்கிறதுக்கு தீர்மானம் கொண்டு வரலாமேணே... ?
அப்படி நினைக்கிற நேரத்துலதான் சைனாக்காரன் ஸ்நாக்ஸ்னு சொல்லி எதையோ கொண்டு வந்து பாதையை மாத்தி விட்டுட்டானே...
 
ஐயப்பன் கோயிலுக்கு பொம்பளைங்க போகக் கூடாதுனு சொல்றாங்களே ஏண்ணே ?
எல்லா இடத்துக்கு நம்மளோட வந்து தொந்தரவு பண்ணுறாளே அப்படீனு ஆம்பளைங்க போட்ட திட்டம்தான்டா இது.
 
எம்ஜிஆர் இப்பவரை சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருந்தா ஜோடியாக யாரைண்ணே போடுவாங்க ?
அசின், திரிஷா, கீர்த்தி சுரேஸ்.
 
சிவாஜி கணேசன் இன்னும் நடிச்சுக்கிட்டு இருந்தால் யாரை ஜோடியாக போடுவாங்க ?
நமீதா, மும்தாஜ், நிரோஷா
 
ஜெமினி கணேசன் இன்னும் நடிச்சா யாரை ஜோடியாக போடுவாங்க ?
ராதிகாவைத்தான்.
 
கமல்ஹாசன் த்ரீடி படத்துல நடிச்சா பொம்பளைங்க போககூடாதுனு சொல்றாங்களே ஏண்ணே ?
படக்குனு நமக்கும் முத்தம் கொடுத்துவாரோனு பயம்தான்டா...
 
ரஜினிகாந்த் வயதான வேடத்தில் நடிச்சா தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமாணே ?
ஒப்பனையாளருக்கு லாபம் கிடைக்கும் அவருக்கு வேலையே இல்லாமல் சம்பளம் வாங்குவாருடா...
 
சரிண்ணே நான் கிளம்புறேன், நிறைய தகவல் சொன்னதுக்கு நன்றிணே...
அப்படியே போற வழியில நம்ம ஜவான் டீக்கடையில் ரெண்டு வடையும் டீயும் சொல்லிட்டுப் போடா.
 
சரிண்ணே.
நல்ல மனசோட காசு கொடுடா... வடை வயித்துல தங்கணும்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
டீக்கு வழியில்லாதவனை ஜனாதிபதியும், பிரதமரும், முதல்வரும் தேடி வர்றாங்களோ ?

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

 1. நகைச்சுவை பதிவு நன்றாக இருக்கிறது.
  நல்லா யோசிக்கிறீர்கள்.
  கவுண்டமணி, செந்தில் பேசுவது போல நினைத்துப் பார்க்க வைக்கிறது.
  தம்பி நல்ல மனசோட வடை வாங்கிவிட்டு காசு கொடுத்தாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. நல்ல மனசோட காசு கொடுத்து இருப்பார் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 3. பூரானை ஆண்கள் அடிக்கக் கூடாதா?  அதென்ன செவ்வாய்க்கொழுக்கட்டை?  கேள்விப்படாத கொழுக்கட்டை?  அதை ஆண்கள் சாப்பிடக்கூடாதா?  இதெல்லாமே எனக்கு புதுசா இருக்கே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி ஆம் ஆண்களை தவிர்த்து விட்டு இரவு முழுவதும் பெண்கள் மட்டுமே வணங்கி சாமி கும்பிட்டு செய்து உண்ணும் கொழுக்கட்டை.

   செவ்வாய்க்கிழமை மட்டும்.

   நீக்கு
 4. கமல்ஹாசன் கமெண்ட் ரசித்தேன்! ஹா.. ஹா.. ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்தமைக்கு நன்றி ஜி

   நீக்கு
  2. ஸ்ரீராம் , அது ஒள்வையார் அம்மன் விரத கொழுகட்டை உப்பில்லா கொழுகட்டை பெண்கள் மட்டும் இரவு செய்வார்கள், மாசி, தை, ஆடி மாதம் செய்வார்கள்.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
  4. ஓ..   சரி அக்கா.  நான் கேள்விப்பட்டதுமில்லை, பார்த்ததுமில்லை.

   நீக்கு
  5. //நான் பார்த்ததுமில்லை//

   ஹா.. ஹா.. ஹா.. பார்க்க முடியாது ஜி

   நீக்கு
 5. ஆஹா... அருமை.... கடைசியில் வடை வயித்தில் தங்குச்சா இல்லை காசு கொடுக்காமல் கோயிட்டானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே...
   எப்படி கொடுத்தாலும் வடை வயிற்றில் தங்க போவதில்லை.

   நீக்கு
 6. முன்பெல்லாம் லிஸ்ட் போட்டு பல தளங்களுக்குச் செல்வேன். இப்போ தளங்கள் வரிசையே எங்க இருக்குன்னு தெரியலை. சுரேஷை நினைவுபடுத்திவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே...
   வரிசை தெரியவில்லையா ? அதனால்தான் கடந்த பதிவு ரம், ரம்மி, ரம்பா படிக்கவில்லையா ? மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 7. கில்லர்ஜி கடல் சுரேஷைப் பார்த்து தளம் போயும் கொஞ்ச நாளாச்சு இப்ப சமீபத்துல எதுவும் எழுதலை என்று நினைக்கிறேன்.

  ஔவையாரம்மன் கொழுக்கட்டை - ஹாஹாஹாஹா ஆமாம் பெண்கள் மட்டுமே அதுவும் இரவு செய்யும் பூசை. கேள்விப்பட்டதுண்டு ஆனால் அது என்ன என்பதெல்லாம் தெரியாது.

  அதென்ன பூரானை ஆம்பளைங்க அடிக்கக் கூடாதா? புதுசா இருக்குது!

  கமல் த்ரீடி படம் - ஹாஹாஹாஹா ரசித்தேன்.

  நல்ல காலம் எம்ஜி ஆர் சிவாஜிக்கு ஜோடி அனுஷையும், தமனையும் சொல்லலை!!! ஸ்‌ரீராம் அண்ட் நெல்லை இதை கவனிக்கலை போல!!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   ஸ்ரீராம்ஜி, நெல்லையாருக்கு பயந்துதான் அனுஷ்கா, தமன்னாவை ஜொள்'ளவில்லை.

   நீக்கு
 8. கமல் த்ரீடி முத்தம் -

  ரசித்தேன். அருமை..

  பதிலளிநீக்கு
 9. சித்தாந்தம் வேதாந்தம் இது கூட

  மின்காந்தம் ஞாவுகத்துக்கு வரலையா?..

  பதிலளிநீக்கு
 10. இதோ கூகுளை மீண்டும் தரவிறக்கம் செய்து நாங்களும் கருத்து போட வந்து விட்டோம் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி நண்பரே

   நீக்கு
 11. அற்புத சிந்தனைகளை நகைச்சுவை உணர்வினைத் தரும். அது உங்களுக்கு அதிகம் உள்ளது. சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 12. அற்புத சிந்தனைகளே...என வாசிக்க.

  பதிலளிநீக்கு
 13. ஹா....ஹா.......ரசித்தேன்.

  பதிலளிநீக்கு