தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 21, 2015

காட்டுத்தீ


இந்தப் பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதோ E ஆடியோ கேஸட் D இதை சொடுக்கி படித்து விட்டு தொடர்க....

வீட்டுக்குள் இருந்த நான் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தேன் மக்கள் கூட்டம் கூட்டமாக அடுத்த தெருவை நோக்கிப் போய்க்கொண்டு இருக்க.. எனது செவிகளில் ஒலி... இதோ இப்படித்தான்...

டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்.... டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...

என்ன சத்தம் இந்தநேரம் உறியின் ஒலியா...? (உயிரின் அல்ல) போகும் மனிதரை நிறுத்திக் கேட்டேன் என்னாச்சு ? அட போடா உனக்குத் தெரியாதா ? நம்ம பொட்டு ஐயா போயிட்டாராம்... 
ஐயோ... நம்ம கேஸட்டு ? வேறு வழியின்றி சட்டையை மாட்டிக்கொண்டு அடுத்ததெரு நோக்கிப் போனேன் கூட்டம் கூட ஆரம்பித்து இருந்தது இலவுகார வீட்டின் உள்ளிருந்து ஒப்பாரிச் சத்தம் வந்தது பாடலாய்...

சீமையை ஆண்டவரே சீரழிஞ்சு போனீயலே...
ஸாரட்டுலே போவியலே... இப்படிச் சாஞ்சு போனீயலே...
கட்டுக்கட்டா பணம் சேர்த்த... கட்டழகு பொட்டகமே...
கட்டையிலே... போகும்போது பொட்டெடுக்க வச்சீயலே...
சாயங்காலம் நீ நடந்தா... சந்தனம் மணக்குமய்யா...
கோமயம் தான் மணக்க... கோட்டைக்கு போறீயலே....

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

தேவகோட்டையிலே... தேன் குடிச்சு வளந்தவரே...
தேருல போவியலே... இப்படி தெருவுல போறியலே...
கர்ண மகராசா... கலக்கி எடுத்தியலே...
காலறா வந்துதான்... கலங்கி போறீயலே...
மனைவி மரகதத்தை... மறந்த மாணிக்கமே...
மாமிசம் திம்பியலே மண்ணு திங்க போறியலே...

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

வட்டிக்கு விட்டியலே... வந்துருச்சா எல்லாமும்...
எழுதி வச்சியலா... எந்திச்சு சொல்லுங்களே....
மானங்கெட்ட பயலுக... மலையவே முழுங்கிடுவான்...
மன்னாதி மன்னரய்யா... மறைக்காம சொல்லுங்களே...
புருஷனை வளைச்சுப்போட்ட... சிருக்கிமவ வந்துட்டாளே..
புதுசா புடுங்க என்னயிருக்கு.... சொல்லேண்டி சக்களத்தி...

ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....
ஆ...ஹூம்... அஹும்... அஹூம்....

நான் யோசித்துக் கொண்டு நின்றேன் உள்ளே போய் கேஸட்டை கேட்போமா ? பக்கத்தில் திண்டு(கல்)மேல் உட்கார்ந்திருந்த இரண்டு பெருசுகள் பேசிக்கொண்டு இருந்தது நேத்து சாயங்காலம்கூட எம்பொஞ்சாதி வந்து பார்த்தப்போ நல்லாத்தான் இருந்துருக்காரு... என்னமோ பாட்டுப் போட்டாய்ங்களாம் கேட்டவரு பொட்டுனு போயிட்டாரு ஆஹா பாட்டுக் கேட்டாரா ?

அப்ப நம்ம கேஸட்டு ? பக்கத்தில் ஒருவன் ஊதினான் கீழே, கீழே பாருங்களேன்.


இப்படித்தான் எனக்கே சங்கு ஊதுவது போலிருந்தது நிற்போமா... இல்லை உள்ளே போய்க் கேட்போமா ? மெதுவாக உள்ளே போனேன் வீட்டின் மையத்தில் பொட்டு ஐயா நெற்றியில் சந்தனம், சாந்துப்பொட்டு வைத்து ஊதுபத்தி மணக்க கால் நீட்டிப் படுத்துக் கிடந்தார் நான் அவரைப் பார்க்காமல் சுற்றும் முற்றும் பார்த்தேன் பக்கத்தில் டேப் ரெக்கார்டர் இருக்கிறதா ? அதோ அலமாரியில் உள்ளே கிடப்பது நமது கேஸட்தான் முன்புறத்தில் எனது அழகான பெயரின் முதல் எழுத்து K சிவப்பு கலரில் எழுதி வைத்திருப்பேன் மெதுவாக எடுப்போமா ? யாராவது தவறாக நினைத்து விட்டால் ? இதனால் என்ன எனது கேஸட் என்று சொல்லுவோம் அந்தநேரம் ஒரு பெருசு பார்த்தவுங்க எல்லாம் வெளியே போங்கப்பா கில்லர்ஜி போப்பா போப்பா என்ன செய்யிறது உனக்கு தாத்தா கொடுத்து வச்சது அவ்வளவுதான்... நான் கேஸட் வாங்கவுல வந்தேன் எப்படிச் சொல்ல முடியும் ஒருவேளை சொன்னால்  சட்டீர்னு வச்சுட்டா ?

வீட்டுக்கு வந்து கேஸட் வாங்கியவனில் ஒருவன்ர் நின்றான்ர் 
அண்ணே... 
என்னடா
கேஸட்... 
என்னா கேஸட்...? போயிரு இல்லே... அதுக்குச் சொல்லலை கூட்டத்துல காணாமல் போயிடும் அதான்... 
எங்க அப்பாவை பாட்டுப்போட்டு கொன்னுபுட்டு கேஸட்டா கேட்கிறே... நான் டென்ஷன்ல இருக்கேன் போயிடு இல்லே.... இன்னைக்கு சனிக்கிழமை வேற, போடா.. போடா... போடா...

பல்லைக் கடித்துக் கொண்டு உறுமினான் சனிக்கிழமையா ? அதுக்கும் கேஸட்டுக்கும் சம்பந்தம் என்ன ? நான் மெதுவாக வெளியே வந்தேன் ஒருவன் கேட்டான் டேய் கில்லர்ஜி உன்னோட பாட்டைப் போட்டு பொட்டு ஐயாவை பட்டுனு தூக்கி விட்டுட்டியாம்... அடப்பாவிகளா ? ஒரு அப்பாவியை இப்படிச் சொல்றியலடா ? உங்க வாயில வண்ணப்புத்து வெக்கே இதுக்குத்தான்டா யாருக்குமே உதவக்கூடாது கீழே உட்கார்ந்து இருந்தேன். 

கூட்டத்தில ஒரு பெருசு சத்தமிட்டது ஏப்பா சீக்கிரம் சட்டு புட்டுனு வேலையாகட்டும் இன்னைக்கு சனிக்கிழமை வேற சனிப்பொணம் தனியாப் போகாது ஆஹா இதுக்குத்தான் அவன் சனிக்கிழமைனு சொன்னானா ? இதற்கு மேல் இருந்தால் சரியா வராது அவன் நம்மளைத்தான் குறி வச்சுருக்கான் நாசமாப் போங்கடா.. உங்க வாயில மண்ணு’’விழ கேஸட்டு போச்சு மனதுக்குள் திட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டேன் வீடு வருவதற்குள்... 
//கில்லர்ஜி பாட்டுப்பாடி பொட்டு ஐயாவைக் கொன்னுட்டானாம்// 
செய்தி தேவகோட்டை முழுவதும் காட்டுத் தீயாய் பரவியிருந்தது தினத்தந்தியில் மட்டும் வராமல் நண்பர் திரு. S.P. செந்தில் குமார் அவர்கள்தான் பார்த்துக் கொண்டார் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொல்கிறேன்.

கேளொலி

நட்புகளே... மேலே பாடலைக் கேட்டீர்களா ? அதாவது அந்தக் கேஸட்டில் முதல் பாடல் 1952-ல் மிகப்பெரிய வெற்றி பெற்ற சியாமளா திரைப்படத்தின்... 
‘’ராஜன் மகராஜன் திருவேற்றியூர் மேவும் திருவாளர் தியாகராஜன்’’ 
என்ற பாடல் இரண்டாவது பாடல் 1943-ல் வெளியான சிவகவி படத்தின்... 
வதனமே சந்த்ர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ வதனமே’’ 
என்ற பாடலை இரண்டு முறை பதிந்து விட்டான் மியூசிக்கல்ஸ்காரன் ராஸ்கல்ஸ் அவனிடம் போய் சண்டை போடுவோம் என்று நினைத்தேன் சரி தொலையிறான் அடுத்த முறை கடைக்கு போக வேண்டுமே என்று நினைத்து விட்டு விட்டேன் அந்த இடத்தில்தான் விதியின் விளையாட்டு... ஆம் நண்பர்களே... எதற்கு ? இரண்டு முறை என நினைத்து ராஜன் மகராஜன் பாடல் முடிந்து வதனமே சந்த்ர பிம்பமோ பாடல் தொடங்கும் முன்பு ஒரு பாடலை அழித்து விட்டு அந்த இடத்தில் நாம் பாடுவோமே என்று நினைத்து டேப்-ரெக்கார்டரில் நான் பாடினேன் முதல் பாடலை ரசித்து கேட்டவர் இரண்டாவது நான் பாடியதை கேட்டதும் அவர் கடைசியாக...

இது யெம்கேட்டியில்லை... 
இது யெம்கேட்டியில்லை...  
இது யெம்கேட்டியில்லை... 

என்று நீதி மன்றத்தில் சொல்வது போல மூன்று முறை சொல்லி விட்டு பொட்டு ஐயா பொட்டு’’னு போயிட்டார். இதுக்குப்போயி என்னை... என்னை... எழுத விரலே நடுங்குது என்னை... கொலைகாரன் அப்படினு சொல்லிட்டாங்கே.... என்னை இப்படிப் படுத்துறாங்களே.... 

நண்பர்களே... நண்பிகளே... நீங்களே சொல்லுங்கள் இந்தப்பாழும் உலகை விட்டு பொட்டு ஐயாவுக்கு பட்டு’’னு விடுதலை வாங்கி கொடுத்த நான் நல்லவனா ? கெட்டவனா ?

CHIVAS REGAL சிவசம்போ-
கில்லர்ஜி சொன்னது போலயே கொஞ்ச நேரத்துல பொட்டு ஐயா வாயில மண்ணு விழுந்திருக்குமே.....

சிவாதாமஸ்அலி-
எல்லாம் சரி கேஸட்டு என்னாச்சு ?

சாம்பசிவம்-
கொஞ்சம் பொறுய்யா, 16-ஆம் நாள் காரியம் முடியட்டும் கில்லர்ஜி சொல்லுவாரு.... 

64 கருத்துகள்:

  1. கில்லர்ஜி உங்களது இந்த பதிவுகள் என்னுடைய ஆடியோ கேசட் மோகத்தில் நரசிங்கபுரத்தில் தேடி தேடி அலையாய் அலைந்த நாட்களை நியாபகப்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பர் கும்மாச்சி அவர்களே... நரசிங்கபுரம் என்றால் ? மதுரை யானைமலை ஒத்தக்கடையா ?

      நீக்கு
  2. அது.. வந்து!?..

    என்னய்யா!...

    அதான் பொட்டு ஐயாவே சொல்லிட்டாரே.. இது எம்கேடி.. இல்லேன்னு.. கில்லர்ஜியை விட்டுடுங்களேங்!...

    எலேய்.. இந்த ஆளைப் புடிச்சுக் கட்டுங்கலே!..

    ஏ.. சாமீய்.. சதாசிவோம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பார்தீங்கள்ல என்னை இந்தப்பாடு படுத்துறாங்களே... நீங்கதான் இந்தமுறை ஊருக்குப் போகும்போது கேட்டுச் சொல்லனும் அப்படியே கேஸட்டு கொடுத்தால் வாங்கிட்டு வந்துடுங்க..

      நீக்கு
  3. பெருசு மண்டைப் போட்டதில் தப்பேயில்லே,எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ,பெருசோட ஆவி அபுதாபிக்கு வரப் போவுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அரபு நாட்டுக்குள்ளே அந்தப் பஞ்சாயத்து கிடையாது ஜி

      நீக்கு
  4. இனி ஆடியோ ரீலீஸ் நிகழ்ச்சி அபுதாபியில் மட்டுமே நடக்கும் போல் இருக்கிறது
    கில்லர்ஜியின் உபயத்தால்.
    ஏதேது பழைய பாடல்கள் கை வசம் கணக்கில்லாமல் இருப்பது போல் இருக்கிறது.
    சபாஷ்! புதிய உத்தி! தரட்டும் பதிவுக்கு சக்தி!
    நன்றி நண்பா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா சவுரியமா இருக்கியலா.... கேஸட்டு வேணும்னா சொல்லுங்கோ....

      நீக்கு
  5. யாரெல்லாம் இழுத்துக்கிட்டுக் கிடக்காறாங்களோ,அவங்களுக்கு உதவலாமே!
    நல்ல நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஐயா நீங்களும் இப்படிச் சொல்லிட்டீங்க.... அப்ப உதவுவது தவறா ?

      நீக்கு
  6. புதிய உத்தியும், தங்களது வழக்கமான பாணியும் எங்களை திக்குமுக்காட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. நீங்க ரொம்ப நல்லவருங்க.....
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை நல்லவர் என்று சொன்னமைக்கு நன்றி

      நீக்கு
  8. ஆஹா அருமை ஜி! நீங்க ரெம்ப நல்வர்தான்! நேர்ல நடக்கறப்போல இருக்கு! ஞாபகசக்தி அபாரம்! அடுத்து? 16நாள் காத்திருக்குனுமா????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா காரியம் முடியட்டும் அவசரப்படாதீங்க....

      நீக்கு
  9. ஒப்பாரிப் பாடல் நீங்களே இட்டுக்கட்டியதா. உங்களுக்கும் ஒரு சித்தர் விருது தரலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இது உங்களுக்கே நியாயமாக இருக்கின்றதா ? எத்தனையோ பாடல் எழுதினேன் அதுக்கெல்லாம் கொடுக்காமல் இப்படி ஒப்பாரிப் பாடலுக்கு கொடுக்கலாம்னு சொல்றீங்க..

      ஐயா இதன் முந்தைய பதிவு படித்தீர்களா ?

      நீக்கு
  10. நகைச்சுவையும் நடப்புச்சுவையும் சேர்த்து
    அருமையான பதிவுச்சுவை!..

    தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. அருமையான கேசட் பதிவு சகோ. உங்களுடைய இந்த பதிவை படிக்கும் போது பழைய நினைவுகள் வந்து விட்டது. சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களின் வருகைக்கு நன்றி தங்களுக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்

      நீக்கு
  12. "கி ல் ல ர் ஜி"
    -பெயர் காரணம் அறிந்து மிக்க மகிழ்ச்சி!

    (மைண்ட் வாய்ஸ்: "இனிமேல் கிள்ளர்ஜி பாட்டு பாடறதுக்கு வாயைத் திறந்தால்...
    டக்குனு எஸ்கேப் ஆயிடணும்!!!")

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா பதிவைப்போட்டு நாந்தேன் தேவையில்லாமல் மாட்டிக்கிட்டேனா ?

      நீக்கு
  13. மோட்சம் கிடைக்க வழி செய்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இப்படியும் சொல்லலாம்தானே... நன்றி

      நீக்கு
  14. இனிமே நானும் பாட்டு கேட்கப்போறேன் நண்பரே...முரசு தொலைக்காட்சியிலே பழைய பாட்டா போடுறாங்க.... கேட்டுறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாட்டு வேணும்னா சொல்லுங்க நண்பா...

      நீக்கு
  15. வணக்கம்
    ஜி
    சப்பதத்ததை கேட்டதும் நம்ம ஊரில் வெடியோசை ஞாபகந்தான் நினைவுக்கு வந்து.ஜி நகைச்சுவை துளிகளுடன் நல்ல கருத்தையும் விதைத்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    த.ம13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதைத்ததை விதைத்தேன் என்று பாராட்டிய கவிஞர் ரூபனுக்கு நன்றி

      நீக்கு
  16. அருமை அருமை நண்பரே, இப்படி பதிவு எழுத உங்களால் மட்டுமே முடியும். உங்களுக்கு இப்படி ஒரு பெயர்வரக் காரணமான சம்பவத்தை ஊரறிய சொல்லிவிட்டீர்கள்.

    பத்திரிகையில் செய்தி வராமல் பார்த்துக் கொண்டால் வடக்குபுறத்து தென்னந்தோப்பை எழுதிவைப்பதாக சொன்னீர்களே! ஞாபகம் இருக்கா..!
    த ம 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இந்தப்பதிவு எழுதியது தவறு என்று தோன்றுகிறது அவசியமில்லாமல் உளறி விட்டேனோ...
      அன்று நாம இரண்டு பேரும் பேசிக்கொண்ட இடம் டாஸ்மாக் இல்லையே.... 1913 ல் நடந்த சம்பவம் கூட ஞாபகம் இருக்கின்றது.... இது ஏனோ இல்லை நண்பரே...

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே.

    பெரியவர் பொட்டுன்னு போன மாதிரி உங்க கேஸட்டும் போய் விட்டதே.! சரி! ஒரு 16 நாள் கழித்து திரும்பவும் கிடைத்தால் (கேஸட்) சந்தோஷந்தான்.! உங்கள் பாடலை கேட்ட பிறகாவது பொட்டு ஐயாவை அழைத்துப் போக வந்திருந்த எமன் அவரை பட்டென விட்டு விட்டு சென்றிருக்கலாம். தாங்களும் அவதூறிலிருந்து தப்பித்திருப்பீர்கள். என்ன செய்வது.! எமனுக்கு ரசனையென்பது கொஞ்சமேனும் இல்லை போலும்.!

    நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள். எழுத்துக்கும், பாட்டுக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வார்த்தை 6தல் அளிக்கின்றது 16 ஆம் நாள் கழித்து போய்ப் பார்ப்போம் கிடைக்கலாம் தங்களின் கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  18. 2பதிவையும் ஒருசேர வாசித்து சிரித்ததில் வயிற்று நோவு.
    பாடல் சூப்பரா எழுதியிருக்கிறீங்க. நன்மைக்கு காலமில்லை.
    ஆஹா பெயர்க்காரணம் இதுவோ.........!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலைக் குறித்து எழுதியது மகிழ்ச்சி சகோ பெயரைக் கிண்டல் செய்யாதீங்க, தெய்வ குற்றமாகி விடும்.

      நீக்கு
  19. ரசித்துச் சிரித்தேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  20. இது எம்கேடி இல்லை... என மூன்று முறை சொல்லி பொட்டு ஐயா பொட்டுன்னு போயிட்டார்.... ஹாஹா... அதுக்கப்புறம் அந்த காசெட்டுக்கு செம டிமாண்டாமே.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஜி நீங்களும் அந்த ஆளுக மா3 பேசுறீங்க.... ?
      இவ்வளவுதானா ? நம்ம பயக்க வயக்கம்

      நீக்கு
  21. ‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்த’ கதை போல, உங்கள் ஒலி நாடாவில் பாட்டு கேட்டபோது வயதானவர் இயற்கை எய்திவிட்டார். அதற்காக உங்களை குறை சொல்வது அநியாயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி சாட்சிக்கு தாங்கள் ஒருவர் போதும் உச்ச நீதி மன்றம் சென்றாவது வழக்கு தொடுத்து மீண்டும் ஒலி நாடாவைப் பெறுவேன்

      நீக்கு
  22. ஒப்பாரிப் பாட்டு ஒப்பில்லாப் பாட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  23. அன்புள்ள ஜி,

    பெரிய காரியம் பண்ணிட்டீங்க... கொலை ஒன்னுன்னு தப்பாச் சொல்லிட்டீங்க... கொலை ரெண்டு...!

    த.ம.17

    பதிலளிநீக்கு
  24. எங்க ஊருபக்கம் ஒரு டாக்டரு இருந்தார்! இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கற கேஸ்களுக்கு அவர் ஒரு ஊசி போட்டால் போதும் ஊதிவிடுவார்கள்! அந்த ஞாபகம்தான் வந்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் டார்டருனு சொல்ல வர்றீங்களா ? நண்பரே...

      நீக்கு
  25. இதற்கு அடுத்த பதிவு படித்திருக்கிறேன்... இதை எப்படி விட்டேன்....
    மதியம் தாங்கள் அனுப்பிய லிங்கின் வழியாக படித்தேன்...
    ஒப்பாரிப் பாட்டு அருமை....
    நல்ல பகிர்வு... ரசித்தேன்...

    பாடகரின் குரல் நல்லாயிருக்கு... திரையில் முயற்சிக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரையில் முயற்சித்தால் பலபேருடைய வாழ்க்கை திசை மாறிவிடும் நண்பரே

      நீக்கு
  26. பாட்டு சூப்பருங்க சகோ. மிகவும் எதிர்பார்த்திருந்த பதிவு ..ஆனாலும் நீங்கள் தகவல் சொன்ன பிறகே வர முடிந்தது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எந்தப்பாட்டு ஒப்பாரிதானே...

      நீக்கு
  27. அந்த கேசட்டு கிடைத்தால் நல்லது,,,,,,,,,
    காத்திருக்கிறோம். 16 வரை.

    பதிலளிநீக்கு
  28. யப்பா சில வீடுகள்ல உயிரு ஊசலாடுதான் உங்களைக் கூப்பிடச் சொல்லுதாக....இல்லைனா அந்த காசெட் வேணுமாமில்ல...உங்க ஃப்ரென்ட்டுதானே எப்படியாச்சும் வாங்கித்தாங்க...அந்த மீசைக்காரர்கிட்டனு ஒரே தொந்தரவுப்பா இங்க....ஹும் நாங்க சொல்லிப்புட்டோம் அவரு அபுதாபில இருக்காருனு...உடனே டிக்கெட் போடுன்னு சொல்லுதாக...அடப்பாவி மனுஷங்களா ஒரு உயிரப் போக வைக்கை இப்படியுமானு...உங்ககிட்ட காசெட் கேக்க சொல்லிப்புட்டு இங்க கிரிமேஷனுக்கு வேற புக் பண்ணிட்டாங்க..நீண்ட க்யுன்னுட்டு...அப்ப இங்கிட்டு க்யூ நீண்டதுக்குக் காரணம் நீங்கதானா...

    நல்ல வேல அப்பு...நல்லாருங்க ஹஹஹஹ்/..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நாங்க நம்பியவர்களை கை விடமாட்டோம்ல...

      நீக்கு
  29. உங்ககிட்ட நிறைய கேசட்டு இருந்திருக்குமே, சரியா இத ஏன் எடுத்து கொடுத்தீக? :-)
    ஒப்பாரிப் பாடல் நல்லா பாடியிருக்கீகளே.. கேசட்டயும் கொடுத்துபிட்டுப் பாட்டு வேற பாடுறியளோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சகோ என்னோட நேரம் கேஸட்டைக் கொடுத்து விட்டேன் நான் பாடுனா நீயென்ன யேசுதாசா ? அப்படினு கேட்குறாங்கே... என்ன செய்யிறது ? கலிகாலம்

      நீக்கு
  30. அப்போ உங்களைப் பாடக் கூப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும்....சரி பய்ன்படுத்திக்கிறேன்...கொஞ்சம் கட்டு சட்னியும் இட்லியும் சொல்லிட்டுப் போங்க,http://swthiumkavithaium.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சகோ நீங்களும் இப்படிச்சொல்றீங்க.... உண்மையிலேயே நான் ரொம்ப னழ்ளவெண்

      நீக்கு
  31. கில்லர் ஜி உங்கள் பாடல் கேட்டு அவர் போயிருந்தால் அது உங்களுக்கு புண்ணியமாப் போகும் ஒரு ஆத்மாவை வழியனுப்பிய புண்ணியம் உங்களைச் சேரும் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் கவிஞரே... நன்றி

      நீக்கு