தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 03, 2015

சங்ககிரி, சகுனி சடையாண்டி


இதன் முந்தைய பதிவை படிக்காத நண்பர்கள் இதோ E Dr.6 முகம் இதைத்தான் சொடுக்கி படித்து விட்டு இதைப் படித்தால் காரணங்கள் விளங்கும் நன்றி - கில்லர்ஜி

கும்புடுறேன் டாக்டர்...
நீங்க.. டாக்டர் திருமுகம் அனுப்பிய ஆள்தானே...
ஆமா டாக்டர்.
உட்காருங்க.. உங்க பெயர் என்ன ?
சடையாண்டி எல்லாரும் சகுனி சடையா’’னு கூப்புடுவாங்க.
சரி, நல்லாயிருக்கீங்களா ?
இதுவரைக்கும் பகவான்ஜி புண்ணியத்துல நல்லாத்தான் இருக்கேன்.
ஒரு சட்டை போட்டு வரக்கூடாதா ?
நான் சட்டை போட மாட்டேங்க...
ஏன் ?
சின்ன வயசுல தீவாளிக்கு எங்க அப்பாக்கிட்டே சட்டை வாங்கி கேட்டேன் அதுக்கு சாட்டையாலே அடிச்சுட்டாரு அதுனாலே சட்டையைக் கண்டாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கும்.
? ? ? சரி சொல்லுங்க, என்ன பிரச்சனை ?

நீங்கதான் சொல்லணும் டாக்டர்.
நான் என்ன சொல்லணும் ?
சொல்ல வேண்டியதைத்தான்.
என்ன சொல்ல வேண்டியதை ?
திருமுகம் ஐயா சொல்லி விட்டாங்க... போயி பார்த்துட்டு வா அப்படினு.
ட்ரீட்மெண்ட்டுக்குத்தானே ?
என்னது மெண்டலா... யாரைச் சொல்றீங்க ?
யோவ், அதாவது குணப்படுத்துவதற்க்கு..
ஓஹோ.. இங்கிலீசோ... சரி சொல்லுங்க.
என்னை என்ன சொல்லச் சொல்றே ? ஃபேஷண்ட் நீயா ? இல்லை நானா ?
வெஜய் டிவியில போடுறதை சொல்லுறியளோ... சரிதான்... பேசனா ? இந்த வாய் கொப்புளிக்கிறதுதானே அந்தா இருக்கு டாக்டர்.
யோவ் காட்டான் மாதிரி பேசுறே ஃபேஷண்ட் அதாவது ம்..ம்.. நோயாளி.
டாக்டர் நான் மழைக்குகூட பள்ளிக்கூடம் ஒதுங்குனது இல்லை எனக்கு இங்கிலீசு தெரியாதுங்க தமிழ்லதானா.. பேசுங்களேன்.
நான் தமிழ்லதான்யா பேசுறேன்..
இப்போ சொன்னீங்களே... நோ--எலி... அப்படினு எலி மட்டும் வெளங்கிடுச்சு.
(ஆஹா... கிறுக்கனிடம் மாட்டிக்கிட்டோமோ ?)

சரி இப்ப உனக்கு என்ன செய்யிது அதைச்சொல்லு.
எனக்கு ஒண்ணும் செய்யலை திருமுகம் ஐயாதான் போயிப்பார்த்துட்டு வா உனக்கு செலவுக்கு துட்டு கொடுப்பாரு அப்படினு சொன்னாங்க...
என்னது உனக்கு நான் பணம் கொடுப்பேனா... ஏன் ?
எனக்கும் அது சந்தேகமாத்தேன் இருந்துச்சு ஐயா சொன்னாருனு வந்தேன்.
சரி எல்லாம் டாக்டர் ஏற்கனவே சொல்லி இருக்கார் உனக்கு வயிற்றுவலி இப்போ எப்படியிருக்கு ?
எனக்கு வயித்துவலி அப்பப்போ வரும் திருமுகம் ஐயாதான் ஏதோ நறுநட்டி வேருனு எழுதிக்கொடுத்தாரு... அதை மனுசன் திங்க முடியுமா ? அதான் தூக்கி வீசிட்டேன்.
அப்போ வயிற்றுவலி வந்தால் என்னதான் செய்யிறே ?
முந்தாநாளு டாக்டருட்ட போனேன் அவருதான் நான் ஆஸ்பத்ரியை மூடிட்டேன் நீ டாக்டர் 7 மலை கிட்டேபோ’’னு சொன்னாரு அப்புறமா ராவுல எந்திரிச்சுப் போயி ராவா ரெண்டு ரவுண்டு விட்டேன், சரியாப் போயிடுச்சு.
? ? ?
என்ன டாக்டர் பேயறைஞ்சது மாதிரி முழிக்கிறீங்க ?
நீ தினம் குடிப்பியா ?
ராத்திரிக்கு மட்டுந்தேன் குடிப்பேன்.

? ? ? சரி முதல்ல உனக்கு எக்ஸ்ரே.. அதாவது ஃபோட்டோ எடுத்துப் பார்க்கணும்.
வீட்ல இருக்குதுங்களே.. கல்யாணத்தப்போ நானும், எம்பொஞ்சாதி பானுமதியும் தேவகோட்டை மதினியா வீட்டுக்கு போகையிலே எடுத்தது.
யோவ் உன்னோட பெரிய ரோதனையாப் போச்சே இது வேற எக்ஸ்ரே அதாவது உடம்பு முழுக்க எடுத்துப் பார்கணும்.
சரி..
முதலில் அந்தக் கௌண்டரில் போய் பில் பே பண்ணிட்டு வா !
கவுண்டரா ? நான் அந்த ஆளுக இல்லீங்க.. நாங்க... மல்லாங்கி ஜாதிக்காரங்க...
அய்யோ.... அங்கே போயி பணத்தைக் கட்டிட்டு வாய்யா.
எங்கிட்டே பணம் இல்லீங்களே... திருமுகம் ஐயா சொன்னாரு ஒனக்கு பணம் கொடுப்பாங்க’’னு நீங்க எங்கிட்டே கேக்குறீங்க ?
டாக்டர் உன்னை குடிக்காமல் இருக்க குணப்படுத்த சொன்னாரு... சரி உனக்கு பிள்ளைங்க எத்தனை ?
மூத்தது மக மதுரையில கட்டிக் கொடுத்துட்டேன் ரெண்டாவது மயேன்.
சரி நாளைக்கு உனது மகனைக் கூட்டிக்கொண்டு வா !
மயேன் எதுக்கு ? டாக்டர் அவங்கிட்டே பணம் கொடுக்காதீங்க... பயவுள்ள எல்லாத்தையும் அதுவே குடிச்சு தீத்துடும் எனக்கு தரமாட்டான் முந்தாநாளு வீட்டுக் கூரையிலே சொருகி வச்ச குவாட்டருல கொஞ்சூண்டு இருந்துச்சு நான் எடுத்து குடிச்சுப்புட்டேன் பயபுள்ள வயித்துலயே ஏறி மிதிச்சு வாந்தி எடுக்க வச்சுடுச்சு. எம்பொஞ்சாதி பானுமதி அவளும் சேந்துகிட்டு மிதிக்கிறா.
’’ஸிஸ்டர்ஸ்......’’
(கட்டிடமே அதிர டாக்டர் கத்தியதைக் கண்டு அனைத்து சிஸ்டர்சும் ஆஜர்)

எஸ் டாக்டர் ?
‘’அய்யோ’’ எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கே முதலில் கௌண்டரில்1000 ரூபாய் வாங்கி இந்த ஆளுக்கு கொடுத்து பேக் பண்ணுங்க.
ஓகே டாக்டர் யோவ் எந்திரிய்யா இங்கே வா !
(சடையாண்டியும், சிஸ்டர்சும் வெளியே வர)
டாக்டரை என்னய்யா, செஞ்சே ?
நான் ஒண்ணும் செய்யலீங்க, டாக்டரை கொணப்படுத்ததேன் வந்தேன்.
டாக்டரை குணப்படுத்த வந்தியா ? அக்கௌண்டண்ட் இம்மீடியட்டா இவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க டாக்டர் ஆர்டர் இந்தாய்யா என்னோட ரூபாய் இருபது உடனே வெளியே போ இல்லைனா, என்னோட வேலைக்கு ஆ10 வந்துரும்.

(1020 ரூபாயை பெற்றுக்கொண்டு வெளியே வந்து டாஸ்மாக்கை நோக்கி நடந்த சகுனி சடையாண்டிக்கு டாக்டர் ஏன் ? கத்தினார் என்பது மட்டும் கடைசிவரை விளங்கவே இல்லை சரி நாளைக்கு வந்து விபரம் கேட்போம் என நினைத்துக் கொண்டு நடந்தான்)


சாம்பசிவம்-
எனக்கு விளங்கிடுச்சு இவரும் டாக்டர் 6 முகத்தை பார்க்கணும்.

சிவாதாமஸ்அலி-
எல்லாம் சரி  Dr. 6 முகம் முகத்தை மட்டும் இதுவரை பார்க்கலையே...

Chivas Regal சிவசம்போ-
அவரு ஒரு முகமா இருந்தால் பார்க்கலாம் அதான் 6 முகமாச்சே...

55 கருத்துகள்:

 1. ஹா... ஹா... கலக்கிட்டீங்க...
  சூப்பரு...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஜி! உங்ககிட்ட 6முகமும் 7மலையும் படாதபாடு படறாங்க!
  நோ -எலி! தன்னால சிப்பு சிப்பா வர்து! ரசனை! கலக்குங்க ஜி!

  பதிலளிநீக்கு
 3. 6 முகமென்றால் 6ம் வெவ்வேறு முகமாகவுல்ல இருக்கும்... எப்படி 6முகத்தை ஒரு முகமா..பார்க்கிறது...????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புராணப்படங்களில் பார்த்து இருப்பீங்களே... நண்பா அதே மா3தான்

   நீக்கு
 4. அந்த 1,000 ரூப கொடுக்கற டாக்டர் அட்ரஸ்ஸ சொல்லுங்க நண்பரே, கில்லர்ஜி அனுப்பினத சொல்லி பணம் வாங்கிக்கிறேன்.
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறித்துக்கொள்ளுங்கள் நண்பரே...

   Dr. 6 முகம்
   15/2 கோவிந்தா பவனம்
   முட்டுக்கெட்டான் தெரு
   ஐயோப்பாண்டி நகர்
   சங்ககிரி

   நீக்கு
 5. கதை மாந்தர் எல்லோரும் ஒரு மா3 ஆனவர்களாய் இருக்கிறார்களே அட நானும் ஒரு மாதிரி எழுதுகிறேனே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க ஐயா என் வழியில் வந்துட்டீங்களே....

   நீக்கு
 6. இந்த சடையாண்டி இன்னும் எத்தனை டாக்டர்களை ‘குணப்படுத்த’ இருக்கிறாரோ ! காத்திருக்கிறேன் விவரம் அறிய!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் ? நண்பரே இன்னும் எத்தனை எபிஸோட்தான் போடுவது ?

   நீக்கு
 7. சங்கு சடையாண்டி இப்படி இருப்பதில் தவறேயில்லை ,என் புண்ணியத்தில் இருப்பவராச்சே !அவரிடம் என் பங்கு காணிக்கையை வாங்கிக் கொண்டேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரு உங்களோட ஆளா ? ஜி அதான் கமிஷன் கிடைச்சுருக்கு...

   நீக்கு
 8. நாளைக்கும் 1000 ம் போகபோகுது,,,,
  அருமை சகோ,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியே போனால்.. டாக்டரு தொழிலை விட்டுவாரே...

   நீக்கு
 9. ஹா..... ஹா..... ஹா.....

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. அருமை
  அருமை
  ரசித்தேன்
  சிரித்தேன் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 11. நண்பா!
  டாக்டர் ஏன் கத்தினார் என்ற விடயம் எனக்கு தெரிந்து விட்டது!
  நோ எலி!
  நோ மணி!

  கத்தல் காத்துல கலந்து போய் புதுக்கோட்டைக்கு சேர்ந்திருக்கும்
  நண்பா!
  எஸ் எலி
  எஸ் மணி!
  ஆஹா! நாங்களும் நகைச்சுவையாய் சொல்லுவோல் இல்ல!!!!
  தமாஷ் எப்படி இருக்கு?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஸூப்பர் எஸ்ஸெலி
   இவரை ஃப்ரான்ஸுக்கு அனுப்பி வைக்கட்டுமா ?

   நீக்கு
 12. அன்புள்ள ஜி,

  காலம் மாறிப்போச்சு... டாக்டரு பீஸ் வாங்கினது மாறிடுச்சு... சம்பாதிச்சத கொடுக்கட்டும்... சகுனிய இங்கிட்டு அனுப்பி வையுங்க...!

  த.ம. பத்து போட்டாச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே இவரின் முகவரி மேலே நண்பர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே.

  நல்ல நகைச்சுவை.! இதன் முந்தைய பகுதிகளையும் படித்தேன். இயல்பாக சொல்லிச் சென்ற விதம் கண்டு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. ஆனாலும், மிகவும் ரசித்தேன். வயிற்றுப் புண்ணை குணப்படுத்தற மா3 ஒரு நல்ல டாக்டரை ௬டிய விரைவில் நீங்கள் அறிமுகபடுத்த வேண்டியது நல்லது என நினைக்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலம்தானே... விடுபட்ட பதிவுகளையும் படித்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி மேலும் எனக்கு தெரிந்த டாக்டர்கள் எல்லாம் வில்லங்கம் விஸ்வநாதன் மா3தான் இருப்பார்கள் ஆகவே தாங்கள் வேறு யாரிடமாவது விசாரிப்பதே நலம்.

   நீக்கு
 14. தொடராக ஆக்கிவிட்டீர்கள் போலுள்ளது. நகைச்சுவைத் தொடர் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே கீழே வந்து இருக்கின்றாரே அன்பின் ஜி குவைத் மன்னர் அவர்தான் என்னை இப்படியாக்கி விட்டார் நான் என்னதான் செய்யட்டும்.

   நீக்கு
 15. அது சரி!..

  விவரம் கேக்க நாளைக்கு வேற வரணும்... ஆ!?..

  டாக்ட்டர்!!!.. என்னோட ஒட்டகம் அபுதாபி பக்கமா கில்லர்ஜிய பாக்கப் போவுது!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஒட்டகம் தனியாகவா வருது... அரபிக்காரன் கண்ணுல பட்டால் பிரியாணியாகிடுமே...

   நீக்கு
 16. கதையை விட வசனம் அருமை!

  பதிலளிநீக்கு
 17. ஹஹஹஹஹ் முதல்ல அந்த மருத்துவர் யார்னு சொல்லுங்கப்பா....1000 ரூபா தரேன்னு சொல்லுற மருத்துவர்....அவர் ஆறுமுகம்னா அப்ப 6 ஆயிரம் ரூபா கிடைக்கும்ல ...அதான்....முகத்தக் காமிக்க மாட்டேன்றாரு...ஒரு முகத்த மட்டும்தான் இங்க காமிச்சுருக்காரு...அஹஹ்ஹ டாக்டர் ஏன் கத்தினாரு? அந்தச் சடையாண்டி இன்னுரு முகத்தைக் காமிக்க வைச்சுட்டா இன்னுரு 1000 ரூபால்ல கொடுக்க வேண்டி வரும்...அதான்.....அந்த ஆறுமுகம் கொடுவாக்கார மீசை உள்ள ஆளுனு கேள்விப்பட்டோம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அவரு முகவரி மேலே நண்பர் S.P. செந்தில் குமார் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறேன் நம்மளை மா3 மீசை வச்சிருந்தால் சடையாண்டியை மீசையாளே குத்தியிருப்பாரே... டாக்டர்

   நீக்கு
 18. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை, இது அரிது....

  நீங்கள் விரைவில் சினிமாவில் கலக்குவிர்கள் கண்டிப்பப்ப நான் உங்க அசிஸ்ட்டேண்ட்

  பதிலளிநீக்கு
 19. சடையாண்டிக்கிட்ட டாக்டர் பாவம் மாட்டிட்டு முழிக்கிறாரே.... இருந்தாலும் படிக்கும் நமக்கு எத்தனை சிரிப்பு....

  ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 20. அருமை சகோதரரே!

  எத்தனை மனச்சுமை இருந்தாலும் இப்படி
  உங்கள் நகைச்சுவைப் பதிவுகள்
  நம்மை வேறு உலகுக்குக் கொண்டு போய்விடுகிறது
  என்றால் மிகையில்லை. ரசித்தேன்!

  தாமத வருகைக்கு வருந்துகிறேன் சகோ!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 21. தம பொறுத்தளவு தலைஎழுத்து ஜி....

  பதிலளிநீக்கு
 22. நாளைக்கும் வருவாரா? டாக்டர நினைச்சா எங்களுக்கு பாவமா இருக்கு.ஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்... பாவமா இருக்கு செய்த விணையை அனுபவிச்சே தீரணும்

   நீக்கு
 23. இந்த 6முகத்தையும், 7மலையையும் அமைதியா கொஞ்சநாள் விடுங்க அண்ணா ஜி. அப்போ சுகமாகிடும்.நான் டாக்டர் 5முகத்தானை பார்க்க போகோனும்போல. சூப்பரா அசத்துறீங்க.
  (ingku எங்க பாமிலி டாக்டர் பேரூ விக்னா viikknah)
  உங்க பதிவு டாஷ்போர்ட்ல் மறைந்துபோறது.அதுதான் லேட். என்றாலும் விடாது கருப்பு..... அண்ணா ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க பேமிலி டாக்டர் பே.. முழி முழிக்கிறாரோ....

   நீக்கு
 24. வணக்கம்
  ஜி

  சிரித்து மகிழ்ந்தேன்.. நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன் சிரித்து மகிழ்ந்தமைக்கு...

   நீக்கு
 25. பாவம் டாக்டர், தயாரா இருந்தும் ...இப்படி ஆயுடுச்சே

  பதிலளிநீக்கு
 26. அம்மாடி முடியல்ல

  பதிலளிநீக்கு