தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 27, 2015

பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்

அன்பிற்கினிய வலையுலக நண்பர் – நண்பிகளுக்கு... என்னைவிட எத்தனையோ வயதில் மூத்த பதிவர்கள் உண்டு இந்த பதிவு எழுதியதற்க்கு எமது மன்னிப்புக் கோரலை முன்னிருத்துகிறேன் காரணம் இதில் தவறுகள் இருக்கலாம் ? ஒருக்கால் இருப்பின் பொருத்தருள்க... – கில்லர்ஜி

பதிவர் மாநாடு நடந்து முடிந்து விட்டது முதலில் இது நமது விழா என்ற வலையத்துக்குள் நம்மை நாமே நிறுத்துவோம் எந்தவொரு விழாவிலுமே நிறைகளும், குறைகளும் நிகழ்வது சகஜமே இது தனிப்பட்டவருடைய விழா அல்ல ! பொதுவிழா இதற்காக மாதக்கணக்கில் உறக்கம் களைத்து பலரும் உழைத்து இருக்கின்றார்கள் ஒருமுறை விழாவைப்பற்றிய எனது பதிவு எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது எனது கைப்பேசியில் பார்த்தேன் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்கள் பதிவுக்கு பாராட்டி நன்றி சொல்லி எழுதியிருந்தார்கள் எனது பல பதிவுகளுக்கும் வந்து இருக்கின்றார் ஆனால் ? எனக்கு இதில் மட்டும் ஆச்சர்யம் காரணம் என்ன தெரியுமா ? இந்திய நேரப்படி அதிகாலை 01.15 மணிக்கு இவர் தூங்குகின்றாரா ? சரி நமக்குத்தான் இன்று ஏதோ விழித்திருந்தததால் கருத்துரை எழுதி விட்டார் என்று நினைத்தேன் மற்றொருநாள் வேறொருவருடைய பதிவுக்கும் நன்றி சொல்லி எனக்கு முன்பே கருத்துரை போட்டு விட்டார் பிறகுதான் தினம் கவனிக்க தொடங்கினேன் இவர் மாநாட்டின் வேலைகளை பகலில் செய்வதால் நேரமின்றி இரவில் விழித்திருந்து எழுதுகிறார் என்பது எனக்கு விளங்கியது இவர் மட்டுமல்ல நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் விழித்திருந்து உடனுக்குடன் பதிவுகளை இணைத்து விடுகிறார் பேசுவதற்க்கு சாதாரணமாக தோன்றலாம் செய்து பார்ப்பது கடினம் மொத்தமாக புதுக்கோட்டை வலைப்பதிவர் குழு அனைவருமே விழித்திருந்து வேலை செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் யாரும் அறியாததல்ல ! அப்படி அறியவில்லையெனில் அவர் பதிவர் அல்ல ! ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா ? அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் என்பது உலகறிந்த விடயம் இது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும் இதில் நுளைந்து இனிமேல் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ? நிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வர வேண்டியதில்லையே நட்சத்திரங்கள்தான் தன்னை வெளிப்படுத்த நிலவை நெருங்கிப் போகின்றன இதுதானே யதார்த்தமான உண்மை இதுகூட தெரியவில்லை எனில் எப்படி ? எழுத்தாளராக வரவேண்டும் என்று வலையுகில் நுளைகின்றார்கள்.
இது நான் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்களை பெருமைப்படுத்தி எழுதுவோம் என்று எழுதவில்லை எனது யதார்த்தமான நடையில் வழக்கம் போல் எனது பாணியில் எழுதினேன் என்பது உங்களில் பலருக்கும் தெரியும்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது தனிப்பட்ட விழா அல்ல ! நம் விழா ஒருக்கால் தவறிருப்பின் அதற்க்கு நாமும் ஒரு துளி காரணம் என்று நினைப்போம் தவறுகளை மறந்து அடுத்த கட்டத்துக்கு போக அனைத்து பதிவர்களும் மீண்டும், மீண்டும் தவறுகளை சுட்டிக்காட்டி அதனால் உண்டாகும் வீண் மன சஞ்சலங்களை தவிர்ப்போம் ஆகவே நண்பர்களே அவரவர்கள் தங்களது யதார்த்தமான பதிவுகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுத துவங்குங்கள் கருத்து வேறுபாடுகளை களைவோம் சிறிது நேரத்தில் அடுத்த பதிவர் மாநாடு நடத்தக்கூடிய காலம் வந்து விடும் ஆகவே மறப்போம் தவறுகளை, நினைப்போம் அடுத்த நிகழ்வுகளை...
நான் இன்னும் எழுதுவேன் தற்போது எனது குடும்ப பிரட்சினை காரணமாக மனநிலை திருப்தி இல்லை என்னைவிட வயதில் மூத்த பதிவரோ, இளைய பதிவரோ எமது இந்தப்பதிவு தவறு என்று யாரும் நினைப்பீர்களானால் இப்பொழுதே மீண்டும் தங்களிடம் எனது மன்னிப்பை கோருகிறேன்.
மேலும் இந்தப்பதிவை பாராட்டியோ, திட்டியோ கருத்துரை இட்டாலும் இதற்க்கு நான் மறுமொழி தரமாட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கும் ஒரு 100 கிராம் மன்னிப்பு கோருகிறேன்
வலைப்பதிவர் ஒற்றுமை தொடரட்டும்
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
என்றும் நட்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

42 கருத்துகள்:

 1. உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். எந்த ஒரு நிகழ்விலும் 100 சதவிகிதம் யாரையும் திருப்திப் படுத்த முடியாது. நிறை நாடி, குறை நாடி அதில் மிகை நாடி மிக்கக் கொளல்!

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஜி,

  தாங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை என்பதை ஆமோதிக்கிறேன்.

  சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
  சொல்லிய வண்ணம் செயல்.

  போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
  தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
  ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றாால்
  எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்!

  -என்ற கவியரசரின் வரிகளை மனதில் நிறுத்திச் செய்கின்ற செயலை செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

  குணம்நாடிக் குற்றமு நாடி அவற்றுள்
  மிகைநாடி மிக்க கொளல்.

  வலைப்பதிவர் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாசிறக்க கவிஞர் அய்யாவின் தலைமையில் உழைத்திட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

  இனி இதுபோன்று விழா எங்கு நடக்கும்? எண்ணிப் பார்க்றேன்...!

  விழக்குழுவிற்கு வாழ்த்தும் பாராட்டும்.

  நன்றி.
  த.ம.1

  பதிலளிநீக்கு
 3. நிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வரவேண்டியதில்லை..


  அடடா! அழககாச் சொன்னீா்கள் 100/100 உண்மை நண்பரே. மாநாட்டுக்குழுவின் அயராத உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. நண்பரே, குடும்பத்தி ஒரு விழா உற்றால் உறவினர்களை அழைத்து நடத்தினாலே , ஆயிரம் குறை கூறுவார்கள். அப்படிசெய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று குறை கூறி யே பிழைப்பு நடத்துவாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது குடும்ப விழா அன்று , அனைவருமே புதியவர்கள், நாம் பலருடைய எழுத்தைப் படித்திருப்போம். அதன் மூலம் அவரைப் பற்றிய ஒரு கருத்தை உள்ளத்தில் வளர்த்திருப்போம், ஆனால் நேரில் சந்தித்து பழகும்போதுதான் அவருடைய குணாதிசயங்களை அறிவதற்கான சந்தரப்பம் கிடைக்கும்.
  எனவே குறை கூறுகின்றவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை
  தொடர்ந்து பயணிப்போம்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
 5. உண்மையைச் சொல்லப் போனால், இதைப் பற்றி அந்த சமயம் ஒதுக்கி தூர தள்ளி விட்டு, (மறந்தும் விட்டு) மற்ற ஆக்கபூர்வமான வேளைகளில் செயல்பட்டோம் என்பது தான் உண்மை...

  நன்றி ஜி...

  பதிலளிநீக்கு
 6. உங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் ஜி! ஒரு விழாவை சிறப்பாக நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதிலும் புதுகை திருவிழா ஒரு மைல் கல். இனி வரும் சந்திப்புகள் இந்த இடத்தை அடைவதே ஒரு சாதனையாக இருக்கும் என்பதும் உண்மையே!
  த ம 7

  பதிலளிநீக்கு
 7. இந்தக் கையேடு கிடைத்த நாள் முதலாய்
  தினம் ஏதேனும் இரண்டு பதிவர்களுடன் பேசுகிறேன் தொலைபேசியில் அல்லது கைப்பேசியில்.
  புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மொழி பொழிகிறது.
  இந்த பதிவர்களின் வானத்திலோ
  அன்பு மொழி பொழிகிறது.

  சற்றும் எதிர்பாராது சுப்பு தாத்தா பேசுகிறேன் என்று நான் சொல்லும்போது,
  அந்தப் பக்கத்திலிருந்து வரும் ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  பதிவர் மாநாடு புதிய பாலங்களைக் கட்டி இருக்கிறது.
  பழைய பாலங்களைப் புதுப்பித்து இருக்கிறது.

  அது சரி,
  கில்லர் ஜி. அது என்ன பூ?
  பூவிலே சிறந்தது மன்னிப்பூ ஆ !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. கட்டுன வீட்டுக்குப்பழுது சொல்ல ஆளா இல்லை?

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

  ஒரு கல்யாண ஏற்பாடுதான் இந்த மாநாட்டு சமாச்சாரங்கள். நடந்து முடியும்வரை தூக்கம் வந்துட்டாலும்...............

  பதிலளிநீக்கு
 9. நம்மால் முடியாத ஒன்றை ,யாராவது செய்தால் மூடிக் கொண்டு இருப்பதே நல்லது என நினைப்பவன் நான் :)

  பதிலளிநீக்கு
 10. ஆமாம் சகோ ஒவ்வொருவரின் ஆர்வமும் உழைப்பும் இன்னும் கண்களில் தெரிகிறது. எந்த விழாவிலும் நிறையும் உண்டு குறையும் உண்டு. ஆதலால் அதனை பெரிசு படுத்தாமல் அடுத்தென்ன என்று செயல்படுவோம்.

  பதிலளிநீக்கு
 11. குடும்ப பிரச்சனை தீர்ந்து விட்டதா நண்பரே? அவர்களோடு நேரம் செலவிட முடியாதது ஒருவேளை பிரச்சனையாக இருந்தால் கொஞ்சம் கணினித் திரையிலிருந்து விலகி அவர்களுக்கான நேரம் ஒதுக்கவும். எனது கூற்றில் தவறிருப்பின் 100 கிராம் அல்ல 1 கிலோ மண்ணிப்பை மனதார கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. யாரும் இதுவரை குறை சொன்னதாக
  நான் உணரவில்லை
  சிறு சிறு விடுதல்களைச் சொன்னார்கள்
  அது குறைகள் அல்ல.
  இன்னும் அடுத்து மிகச் சிறப்பாக நடத்த
  தங்கள் ஆலோசனைகளச் சொன்னார்கள்
  அது தவறு அல்ல
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 13. இதெல்லாம் வேற நடக்குதா?,,,,,

  நேரில் பார்க்காத உறவுகளை நேரில் சந்திக்க ஒரு பொது இடம் இப்படிதானே,,,,,

  இதில் தனியே குறைக்கூற என்ன இருக்கு, தங்கள் கருத்தே என்னுடையதும்.

  பதிலளிநீக்கு
 14. குடும்பப் பிரச்சனைகளுக்கிடையிலும்
  பதிவுலகப் பிரச்சனைக் குறித்து யோசிக்க
  நேரம் ஒதுக்க முடிகிறதென்றால்...

  கில்லர் ஜீ யின் மன விலாசமும்
  பதிவுலகின் சக்தியும் தெளிவாகப் புரிகிறது

  எல்லாம் நல்லவிதமாய் முடிய
  அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 15. அய்யோ....இந்த மாதம் இந்த வருடம் பதிவர் பலருக்கு( என்னையும் சேர்த்து) மனநிலை பிரச்சினையாக உள்ளதே.....????

  பதிலளிநீக்கு
 16. நிறைகுறைகளை சொல்பவர் சொல்லட்டும்! நம் விழா என்று நினைத்து உணர்ந்தால் இதற்கு இடமே இருக்காது என்பது என் கருத்து ஜி நண்பரே!!!

  பதிலளிநீக்கு
 17. ஆமாம் சகோதரரே!.. உளந்திறந்து எழுதிய பதிவு! அருமை!

  குறை நிறையெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது.
  போற்றுவோர் போற்றினும் தூற்றுவோர் தூற்றினும் ஆற்றும் கடமையை மறவாதே என்ற கூற்றிக்கமைய அடுத்த செயலை நோக்கி நடை போடல் சிறப்பு!

  விழாவிற்காக ஊன் உறக்கம் மறந்து உழைத்த அத்தனை
  உறவுகளுக்கும் இநேரத்திலாவது எங்கள் வாழ்த்தினையும் நன்றியையும் கூறிக்கொள்வோம்!

  உங்களுக்கும் எல்லாம் நலமாக இருக்க என் வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 18. உங்களது மனம் திறந்த எழுத்தினால் நாங்கள் ஈர்க்கப்படுகிறோம். உள்ளதை உள்ளபடி கூறும் உங்களின் எழுத்துக்குப் பாராட்டுக்கள். வலைப்பதிவர் திருவிழாவிற்கு நம் நண்பர்கள் உழைத்த உழைப்பினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 19. அன்பின் ஜி..

  மனம் திறந்த பதிவு..
  அடுத்த நிலையை நோக்கி நடை போடவேண்டும்.. அதுவே சிறப்பு..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 20. கருத்துக்கள் பகிரும்போது மனம் திறந்து ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன் ரமணியின் முதல் பின்னூட்டத்துடன் உடன் படுகிறேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. 100% ரைட்டோ!!!! ஜி!

  தங்கள் மனப் பிரச்சனை விரைவில் சரியாக எங்கள் பிரார்த்தனைகள் ஜி!

  பதிலளிநீக்கு
 22. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை! எந்த ஒரு விழாவையும் குற்றம் குறையின்றி நடத்த இயலாது. எனவே சிறிய குறைகளை மறந்து, இந்த விழாவிற்காக இராப்பகலாக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 23. உண்மைதான் விழா சிறப்பாக நடக்க புதுக்கோட்டை நட்புக்கள் பலர் பட்ட களப்பணிகள் பாராட்ட வேண்டியவை நாம் அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம் ஒற்றுமையுடன்!

  பதிலளிநீக்கு
 24. இப்படி எல்லாம் வேறு குறை சொல்கிறார்களா??!! நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டீர்கள் சகோ. இங்கு வந்துதான் பிரபலம் அடையவேண்டும் என்ற நிலை திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கு இல்லை..அவர் ஏற்கனவே பிரபலம் தான்..எவ்வளவோ வேலைகள் இருக்க, இதை எடுத்துச் செய்தவர்களைக் குறை சொல்வது சரியல்ல. நானும் கவனித்திருக்கிறேன்,,அதிகாலை மூன்று மணிக்குக் கூட பின்னூட்டங்கள் வந்ததை.

  பதிலளிநீக்கு
 25. உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து புத்துணர்வு பெற வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 26. மிகச் சரியான பகிர்வு!
  நான் சந்திப்புக்குச் செல்லவில்லையே தவிர விழாகுழுவினரின் உழைப்பு எத்தகையது என்பதை உணர முடியும்!
  நன்று

  பதிலளிநீக்கு
 27. காலையில் வாசித்தேன் அண்ணா...
  ரொம்ப வருத்தமாக இருந்தது... இப்படியெல்லாம் பேசுவார்களா இவர்கள்... என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்துச் சுதந்திரமோ..?

  நானும் கொஞ்சம் எழுதியிருந்தேன்... அதை இன்னும் மெருகேற்றி இரவு பகிர்கிறேன் அண்ணா...

  பதிலளிநீக்கு
 28. வணக்கம்
  ஜி

  இறந்தகாலத்தை பற்றி பேசாமல் நிகழ்காலம் பற்றி பேசுவோம்...நன்றாக சொல்லியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஜி

   கையடக்க தொலைபேசியால் கருத்து கோட்ட படியால் தமிழ்மணம் போட வில்லை இப்போது வாக்கு போடுகிறேன் த.ம 20
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 29. பெயரில்லா10/28/2015 3:11 AM

  மனம் திறந்து எழுதிய பதிவிற்கு நன்றி சகோதரா.

  பதிலளிநீக்கு
 30. இதுவும் கடந்து போகும். எனவே யாரும் வருந்த வேண்டாம். அனைத்தையும் நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நிலவு ஏன் நடச்சத்திரங்களை நாட வேண்டும் என்பது அருமையான எடுத்துக் காட்டு. நன்றி சகோ !

  பதிலளிநீக்கு
 31. சிறப்பு
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 32. மூத்த வலைப்பதிவர் G.M.B அவர்கள் தனது பின்னூட்டதில் சொன்ன “ரமணியின் முதல் பின்னூட்டத்துடன் உடன் படுகிறேன்” என்ற கருத்தினை நானும் இங்கு வழி மொழிகின்றேன்.

  பதிலளிநீக்கு
 33. மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்! குறைகளை மறப்போம்! ஒற்றுமையாய் அடுத்த நிகழ்வினை சந்திப்போம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 34. மீசை வைத்த குழந்தையே !!! மன்னிப்புகோரவேண்டியது
  தாங்கள் அல்ல..

  தங்களின் ரௌத்திரம் 'அழகு'

  பதிலளிநீக்கு
 35. "தன்னை முன்னிறுத்தவே முத்துநிலவன் ஐயா இந்த விழாவைப் பயன்படுத்தியிருக்கிறார்" என்று சொன்னவருக்கு
  பொல்லாங்கட்டையால பிடரில
  இரண்டு தட்டுத் தட்டவேணும் - அப்ப தான்
  எனது கோபம் ஆறும்!
  முத்துநிலவன் ஐயாவின் பணி உயர்ந்தது
  அதனை
  எவர் மட்டந்தட்டினாலும்
  என்னால் ஏற்கமுடியாது
  முடிந்தால்; புறம் கூறுவோர்
  புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வை விட
  அடுத்த
  வலைப்பதிவர் சந்திப்பைச் சிறப்பாகச் செய்து காட்டட்டும்!

  பதிலளிநீக்கு
 36. உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரட்டும்......

  பதிலளிநீக்கு
 37. தங்களை நான் அறிவேன் நண்பரே. தங்களின் கருத்தில் பிழையோ மிகையோ உள்நோக்கமோ இல்லை. தங்கள் உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலைப் பாருங்கள். நமக்கு நிறைய வேலையிருக்கிறது. பொறுப்பற்றவர்களுக்கு பதில் சொல்லி நேரவிரயம் வேண்டாமே? தங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுதுவோம், இயங்குவோம்.

  பதிலளிநீக்கு
 38. அருமையான பதிவு. புதுகை விழாக்குழுவினரின் ஓயாத உழைப்பும் திட்டமிடலும் அர்ப்பணிப்பும் எத்தனையோ மைல்களுக்கு அப்பாலிருந்தும் என்னால் உணரமுடிகிறது. அவர்களுடைய உழைப்புக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் அளவிலாத பொறுமைக்கும் தலைவணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 39. வீட்டில் ஒரு சின்ன விஷேசம் செய்வதாயின் என்ன பாடுபடுகிறோம். இப்பதிவர்திருவிழாவை நடாத்தி முடிக்க என்ன கஷ்டப்பட்டிருப்பாங்க. என்பது பலமைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது.மிக மிக சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.கவலைவேண்டாம் அண்ணா ஜி. சந்தோஷமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
 40. பொதுவாக எப்பொழுதுமே பொது நிகழ்வுகளைச் செய்பவர்களைப் பார்த்து எதிர்குரல் எழுப்ப ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள், நானும் சில பதிவுகளை வாசித்தேன். இப்போது குறை சொல்லி தன் வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட அப்போதே வாய்ப்பிருந்தும் ஏன் செய்ய வில்லை? அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு விழா முடிந்ததும் முன் வைப்பது சரியா? என சிந்திக்க வேண்டும். தனிநபர் மீதான குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் சொல்லிச் செல்வது வருங்கால வலைப்பதிவர்களின் கொண்டாட்டங்களுக்கு உசிதமானதல்ல. மிகச்சரியான பார்வையுடன் கட்டுரைய எழுதி இருக்கிறீர்கள் ஜி.....

  பதிலளிநீக்கு
 41. niraiyaana santhippu. இப்பொழுதான் படிக்க வலைத்தொடர்பு கிடைத்தது.
  அயரா உழைப்புக்குக் கிடைத்த அபூர்வ வெற்றி வலைப்பதிவர் புதுகை விழா .
  குறையொன்றும் இல்லை ,நிறைதான் கண்ணா இந்த விழா .
  விழா ஏற்பாட்டுக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  கில்லர்ஜி .அவர்களே நன்றி வணக்கம் .உங்கள் எழுத்தால் கவரப்பட்டவன்

  பதிலளிநீக்கு