வெளிநாடுகளில்.... வேலை செய்பவர்கள் விடுமுறையில் ஊருக்கு
வருவார்கள், காலம் முழுவதும் தொலைபேசிகளில் பேசியே காலத்தை கழித்து வாழ்ந்து வந்த
இவர்களின் மனைவிமார்கள், அந்த இரண்டு அல்லது மூன்று மாதம் மட்டுமே பிறவிப்பயனை
அடைந்தது போல் வாழ்வார்கள் (உண்மையும்
அதுதானே) முகத்தில் ஒருவித சந்தோஷக்களை
தெரியும், கூடுதலாக இரண்டு செயின்கள், மோதிரம், கடிகாரம், சிலர் வலையலும் கூட,
ஒப்பனைகூட சற்றுக்கூடுதலாக இருக்கும், தனக்காக மட்டுமல்ல, தனது கணவனை
திருப்திபடுத்துவதற்காகவும், தனது தாய்-தந்தையரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், சாதாரண
நேரங்களில் அவள் அப்படி இருக்க முடியாது, காரணம் மற்ற நேரங்களில் (கணவன் வெளி நாட்டில்
இருக்கும்போது) அப்படியிருந்தால் சமூகம் நிறைய கற்பனைக் கதைகளை திறித்து, அவளின் வாழ்க்கையை
முறித்து அவர்களை பிரித்து விடும், அதிலொரு சந்தோஷம் இந்த சமூகத்திற்க்கு.... 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுமுறையில் வந்த கணவன், நண்பனிடம்
இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளில், கணவனும் மனைவியும் குழந்தையை தூக்கிக் கொண்டு
சினிமாவுக்கு புறப்படுவார்கள், அந்த நேரத்திற்காகவே... காத்திருந்ததைப் போல
எதிர்த்த வீட்டு வாசலில், பக்கத்து வீட்டு பார்வதியும், அடுத்த வீட்டு அலமேலுவும்
பார்த்துக் கொண்டு இருப்பார்கள், வண்டியில் ஏறும்போதே இவள், அவர்களை பார்த்து விடுவாள்,
அவர்களின் பார்வையே இவளுக்கு 1000 விசயங்களை
சொல்லும், நாம போனதும், இவளுகள் என்ன ? பேசுவாள்கள் என்று, கணவனிடம் திடீரென வேண்டாமென்றால் கோபப்படுவான்,
சந்தோஷமாக புறப்பட்டவள் இந்த சகுனிகளின் பார்வையால் அறை மனதாகி போவாள், பத்தடிகூட
போயிருக்க மாட்டார்கள், ஆரம்பிப்பாள் அடுத்த வீட்டு அலமேலு
ஹூம்
ரொம்பத்தான் அலுத்துக்கிறா, என்னமோ காணாததை கண்டது மாதிரி செயினு போட்ருக்காளாம்
செயினு, சிலுத்துக்கிட்டு போறா, பாத்தியா ?
(இவள், அவளிடம் ஆறு முறை காபிபொடி ஓசி வாங்கியவள், ஏழாவது முறை கேட்கும்போது, ''இல்லேக்கா இன்னும் யேன் வீட்டுக்காரர் பணம்
அனுப்பலை காபி முடிஞ்சு போச்சு'' என்று சொன்னதின் விளைவு)
உடனே பார்வதி, காணாத கழுதை கஞ்சிய கண்டுச்சாம் ஓயாம, ஓயாம ஊத்தி ஊத்தி
குடிச்சுச்சாம். என்னமோ நாமெல்லாம் நகையப் போடாதது, மா......திரி என்று இழுப்பாள்....
(இவள்,
அவளிடம் 7 முறை து.பருப்பு ஓசி வாங்கியவள் 8 வது முறை
கேட்கும்போது பழையதை கேட்டதால் பகைக்கப்பட்டவள்)
இந்த மாதிரியான
பெண்கள் (Only for Tamil
nadu) எல்லா ஊர்களிலும், எல்லா இடங்களிலும் உண்டு இவர்களுக்கு
பொழுது விடிந்தால் பொரணி பேசுவதுதான் வேலை, பெண்களே..... பெண் மனது பெண்ணுக்கே
தெரியும் என்கிறார்களே ஏன் நீங்களும் பெண்தானே ? இந்த வகையானவர்களின் கணவர்கள் வெளிநாட்டில்
இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கணவனை நினைத்து வருந்தி வாழ்கிறாள் அவன் நிரந்தரமாய்
திரும்பும் நாள்வரை.... கணவனும் வெளி நாட்டில் 15 வருடம் உழைத்து சம்பாரித்து நாட்டுக்கு நிரந்தரமாய் (வியாதிகளோடு)
திரும்பும்போது அந்த 15 வருடத்தில் குறைந்த பட்சம் 14 அல்லது
18 மாதம்
மட்டுமே கணவனுடன் வாழ்ந்திருப்பார்கள், அவ்வளவுதான் ஆனால் நீங்களோ.... அரைவயிறு
கஞ்சி குடித்தாலும், கணவனோடும், குழந்தைகளோடும் பந்துக்களின் திருமணத்திற்கு
செல்கிறீர்கள், கோயில் திருவிழாவுக்கு செல்கிறீர்கள், மாதம் ஒரு முறையாவது
சினிமாவுக்கு செல்கிறீர்கள், எலவு வீட்டுக்குகூட சென்று அன்றாடம்
வாழ்ந்திருக்கிறீர்கள், அவனது மரணகாலம் வரை... அல்லது உங்களது மரணகாலம் வரை...
ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு விதிவிலக்கு என்பது எழுதப்படாத விதி. (கணவனும்,
மனைவியும் நினைத்தால் மாற்றி எழுதலாம்) பொன் நகை நமது வாழ்வாதாரத்திற்கு தேவைதான்
இருப்பினும், பொன் நகையை விட, நமது
மனதுக்குள்ளிருந்து வெளியாகும் புன்னகையே பிறவிப்பயன்.
CHIVAS REGAL சிவசம்போ-
இப்படி நகை போடுறதாலதான் எம்பொண்டாட்டி என்னை, தூப்பாய் கழுவுனாலும்
பரவாயில்லைனு, துபாய் போகச் சொல்றா.
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குநமது நாட்டில் தங்கத்தின் மோகம் என்னமோ மிகவும் அதிகம்தான். வீடுகளில் உள்ள அனைத்து தங்கத்தையும் வெளியில் எடுத்தால் நாம்தான் பணக்கார நாடு. புன்னகை இருக்க பொன் நகை எதற்கு?
உண்மைதான்.
த.ம.1
வாருங்கள் மணவையாரே... சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி
நீக்குவேதனையான உண்மை. இப்போது கொஞ்சம் மாறியிருப்பார்கள் என்று நம்பலாம்.
பதிலளிநீக்குமாற்றம் முழுமை பெற்றால் நாடும், வீடும் நலமே நண்பரே..
நீக்குகாலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறிடாத விஷயம் இது..
பதிலளிநீக்குதங்களுக்கே உரிய நடை.. ராஜகம்பீரம்!
அன்பின் ஜி உண்மைதான் கருத்துக்கு நன்றி
நீக்குபடத்தில் இருப்பவர் மாதிரி நகைகள் அணிந்து கொண்டால் கண்படுமே பிறர் கண்படுமே என்று கணவனுக்குத் தெரியாதா? நிதர்சன உண்மைகளைக் கருத்தாக்கி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஆமாம் ஐயா தங்களின் விரிவாழ கருத்துரைக்கு நன்றி
நீக்குசேர்த்துவைத்ததை இப்படித்தானே வெளியே காட்டிக் கொள்ள வேண்டியதிருக்கிறது... அப்புறம் எதிர்வீட்டுகாரம்மாவின் வேறுமாதிரியாகவும் பேசுமில்ல “ஒன்னுமில்லாத சிரிக்கி” என்று....
பதிலளிநீக்குஆம் நண்பரே அப்படி வேறு இருக்கின்றதே..... உண்மையே....
நீக்குநல்லதொரு கருத்தையும் சொன்னீர்கள். சகோ ஏதோ என் கணினியில் கோளாறு +1 வரவில்லை. பிறகு வந்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவருக சகோ கருத்துரைக்கு நன்றி
நீக்குநல்ல மாற்றம் வரும் என நம்புவோம் ஜி...
பதிலளிநீக்குநம்புவோம் ஜி நம்பிக்கைதானே வாழ்க்கை
நீக்குவணக்கம் ஜி! இங்குதான் கத்தரிக்காய் விலையோறினா கவலைபடறதும் நகை விலை 100ஏறினா சந்தோசப் படற கலாச்சாரம் இருக்கு! அருமை ஜி!
பதிலளிநீக்குநேரமிருந்தா என் தளபக்கமும் வாங்க!!!
வருக நண்பரே இதோ வருகிறேன்...
நீக்குபொருளாதார நிர்பந்தங்களுக்காக கணவன் மனைவி பிரிந்து வாழ்வது கொடுமையிலும் கொடுமைதான் ! பொரணி பேச்சுக்களை புறம் தள்ளுங்கள் :)
பதிலளிநீக்குகொடுமைதான் ஜி பிறவிப்பயன் இல்லையெனில் வாழ்ந்து பயன் என்ன ?
நீக்குயதார்த்தமான விஷயத்தை
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகச் சொல்லிப்
போனவிதம் அருமை
முன்னுரைச் சொல்லிப் பின்
எழுதியதால் கூடுதலாக
புரிந்து கொள்ளமுடிந்தது
வாழ்த்துக்களுடன்...
வருக கவிஞரே கருத்துரைக்கு நன்றி
நீக்குஉழைக்கவும் பொருள் சேர்க்கவும்
பதிலளிநீக்குஏற்கனவே சேர்த்து வைத்தக் கடனை அடைக்கவும்
வெளி நாடு செல்பவர்களின் நிலைமை
வேதனைக்கு உரியதுதான் நண்பரே
தம +1
வருக நண்பரே பலபேருடைய நிலை இதுதான் கருத்துரைக்கு நன்றி
நீக்குபக்கத்துவீட்டு பார்வதியும்
பதிலளிநீக்குஅடுத்த வீட்டு அலமேலுவும்
எல்லாத் தெருவிலும் உண்டு போல?!!!
எந்த ஊரில் இல்லை நண்பரே... தாய்லாந்து என்றாலும் பேய் லந்து உண்டுதானே....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜீ
கூட்டி கழித்து பார்த்தால் நாமதான் பணகாரர்கள்.எப்டியிருந்தாழும்.நகைமீது ஆசைகுறைய வில்லை ஜீ...அற்புதமாக சொன்னீர்கள்.
வாங்க ரூபன் கருத்துரைக்கு நன்றி
நீக்குமிகவும் சிறப்பான பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குஉண்மைதான்... பொருளாதாரத்தேவையை வாழ்வின் அத்தனை சுக துக்கங்களையும் ஒதுக்கி வெளிநாட்டில் வாழ வைக்கிறது.
நமக்கு இங்கு நரகம் என்றால் குடும்பத்தாருக்கு அங்கு நரகம்...
இதை சுற்றம் உணருவதில்லை என்பதே உண்மை....
நல்லாச் சொல்லியிருக்கீங்க...
வருக நண்பரே தங்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாக உணர்ந்து பார்க்கும் வாழ்க்கைதானே..
நீக்குநன்றாக அலசி
பதிலளிநீக்குஆய்வு செய்திருக்கின்றீர்
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு
நண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகோப்பிப் பொடிக்காக கோபித்துக் கூறுவதும்
பதிலளிநீக்குகூப்பாடும்! குப்பையே கொட்டு!
யதார்த்தை அணுஅணுவாக ரசித்திருகிறீர்கள். உண்மை தான்.
புன்னகைக்கு விலை இல்லை. பொன்னகைக்கு த் தானே விலை.அதனால் வரும் வினைகளே. நன்றி பதிவுக்கு !
ஆம் சகோ அனுபவத்தையே எழுதினேன் இந்த அனுபவம் பலருக்கும் உண்டு வருகைக்கு நன்றி.
நீக்குபதிவு மிக அருமை சகோ.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ.
நீக்குநல்ல பகிர்வு நண்பரே!
பதிலளிநீக்குவெளிநாடுகளில் வேலைசெய்பவர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்போது புரணி பேசுபவர்கள் குறைந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
படத்தில் நிறைய நகைளோடு இருக்கும் பெண் யாரென்று தெரிகிறதா.? திருப்பதியில் லட்டு காண்ட்ராக்ட் எடுத்திருப்பவரின் மகள். திருமணத்தின்போது இவ்வளவு நகைகளை அணிந்திருந்தார்.
த ம 9 விழுவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
தெரியும் நண்பரே அதை வெளிப்படுத்த வேண்டாம் என்று நினைத்தேன் காரணம் வெங்கடாசலபதி எனது கண்ணைப் பறித்து விடுவாரோ என்று அஞ்சியே....
நீக்குதாங்கள் தைரியசாலிதான் ஆகவே லட்டு விடயத்தை புட்டு வைத்து விட்டீர்கள் வளரட்டும் அவர்களது குலம் நியாயமாக சம்பாரித்தவர்கள் அதனால்தான் இவ்வளவு கொஞ்சமாக நகை போட்டு இருக்கின்றார்கள்.
அது எப்படி சகோ, அப்படி சொல்லாம் ,
பதிலளிநீக்குச்சே இவ்வளவு சரியா சொன்னீங்க என்றுதான்,,,
உண்மை சகோ, நிலைமாறும் என்று நினைப்பது தான் மாறுகிறது.
நன்றி.
ஆம் சகோ மாற்றம் ஒன்றே மாறாதது.
நீக்குநடப்பைச் சரியாச் சொல்லிட்டீங்க ஜி
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குபுறணி பேசும் பெண்கள் தங்கள் இனத்தை தாங்களே தாழ்த்திக் கொள்கின்றார்கள்! சிறப்பான கருத்தை சொன்ன பதிவு! நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே சுரேஷ் அவர்களே தாங்கள் சொன்னதும் சரிதான்
நீக்கு
பதிலளிநீக்கு‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ என்ற திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.
ஆம் நண்பரே சரியான பாடலை சொன்னீர்கள்
நீக்குமிக மிக உண்மை நண்பரே! ஆனால், இப்போது கொஞ்சம் காலம் மாறி இருக்கின்றது எனலாம். ...மிக்க நன்றி: சீரியல்கள்! அதுவும் ஓய்வு ஒழிவு இல்லாமல் ...ஹஹஹஹ்
பதிலளிநீக்குஅப்படியான பெண்கள் பாவம்தான். அது சரி துவரம்பருப்பு க்டனாகவா? சத்தியமா யாரும் கொடுக்க மாட்டாங்க....சொத்தே எழுதிவைச்சா மாதிரியில்ல! கண்டிப்பா இதுக்கு நீங்கள் சொல்லும் பொரணி பேசப்படும்....அடுத்த வீட்டு அலமேலும்வும், பக்கத்துவீட்டுப் பத்மாவும், முன் வீட்டு முத்தம்மாவும், பின் வீட்டு பிச்சமாமவும் இப்போ நிலைமை இப்படி..தங்கம் கூட வேண்டாம், பருப்பும் வெங்காயம்..இவைதான் பிரச்சனை..
வாங்க சுற்றுலா முடிந்து விட்டதா ? து.பருப்பு விலை அப்படியாகிப்போச்சா.....?
நீக்குமதிப்பெண் போட நீண்ட நேரம் ஆகிறதே
பதிலளிநீக்குபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குஇப்படி பலரும் உண்டு. அடுத்தவர்களைப் பற்றி பொரணி பேசுவதே இவர்களுக்கு வேலை.....
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஉண்மை விளம்பின்னு உங்களுக்குப் பெயர் வைத்திடலாம்!
பதிலளிநீக்குஅருமை! மனதிலுள்ளவற்றை எழுத்துக்களாய்க் கொட்டிவிட்டிருக்கின்றீர்கள்!.. சிறப்பு!
வாழ்த்துக்கள்!
வருக கவிஞரே நான் எப்பொழுதுமே மனதில் பட்டதை உடன் எழுதி விடுபவன்
நீக்குகாலமும் காட்சியும் ஊரில் எப்போதும் ஒரே மாதிரித் தான் போலும்.
பதிலளிநீக்குஆமாம் சகோ மாறவே மாறாது.
நீக்குநகை மோகமும் புரணியும் ஓய்ந்தால் எவ்வளவோ முன்னேறலாமே.
பதிலளிநீக்குஇப்பொழுது கொஞ்சமே கொஞ்சம் மாற்றம் இருக்கிறது என்று நினைக்கிறேன் சகோ
மாற்றம் நல்லதே சகோ வரவேற்போம்.
நீக்கு