தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 23, 2015

கும்பகோணம், குழப்பவாதி குணசேகரன்


ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார்கள், ஏதோ விதி ! கணவன் இறந்து விடுகிறான் உடனே மனைவியை தறுத்திணியம் புடிச்சவள், என்று சொல்கிறார்களே, அதேநேரம் மனைவி இறந்து விட்டால் கணவனை தறுத்திணியம் புடிச்சவன் என்று சொல்வதில்லையே எப்படி ? அப்படியானால், அவன் அதிஷ்டசாலியா ? இது, எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அதேபோல்...

4 பேர், பேசிக்கொண்டு இருக்கும்போது, பல்லி ச்சுச்சுச்....சூ என்று கத்தி விடுகிறது, உடனே நாம் பேசியது ப(ல்)லிக்கப் போகிறது, என்று சொல்கிறார்கள், அதேநேரம் நால்வரில் யாராவது ஒருவர் ஆச்...சூ என்று தும்மி விட்டால் ? தறுத்திணியம் புடிச்சவன் தும்மிட்டான் நடக்காது போலயே என்று சொல்கிறார்களே ஏன் ? 2 வார்த்தையுமே, ச்சூ தானே, ஒரு பல்லி மீது வைக்கும் நம்பிக்கை, ஆறறிவு (?) என்று சொல்கிறார்களே ! அந்த மனிதன் மீது வைப்பதில்லையே ஏன் ? இதுவும், எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அப்புறம்...

யாரிடமாவது, அவருடைய மகனை பாராட்டி பேசும்போது, உனக்கென்ன சிங்கத்தை பெத்து வச்சுயிருக்கே என்று சொன்னால் சந்தோஷப் படுகிறார்கள், அதே ஆள் உனக்கென்ன கழுதையை பெத்து வச்சுயிருக்கே என்று சொன்னால் அடிக்க வருகிறார்களே ஏன் ? சிங்கம், கழுதை இவை 2-மே, மிருக வகைதானே ! இத்தனைக்கும் கழுதையா இருந்தாலும் பரவாயில்லை, சிங்கமா இருந்தா POLICE கேஸாக்கூட வாய்ப்பு இருக்கு இதுவும்கூட, எனக்கு குழப்பமாகவே உள்ளது.
அப்… 

சாம்பசிவம்-
யோவ், நிறுத்துமய்யா ! இப்பவே எனக்கு தலையை சுத்துது.

நண்பர் கவிஞர் ரூபன் நடத்தும் கவிதைப் போட்டியில் கலந்து வெல்வீரே என அன்புடன் அழைக்கின்றேன் - கில்லர்ஜி

52 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி! எனக்கும் இது மாதிரி டவுட் இருக்கு ஜி! ஆனால்
  1*காலங்காலமாக பழக்கிய மடத்தனம்
  2*அறிவுயில்லாமல் அபசகுணம் என்று பழமையில் ஊறிய மிக மிக முட்டாள்தனம்
  3*சிங்கம்னா பலசாலியாம் கழுதைனா பொதி சுமக்குமாம் (நாய் வேசம் போட்டாலும் நல்லா போடனும்னு சொல்லுவாங்க! இது எனக்கு தெரிஞ்சது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்தரைக்கு நன்றி

   நீக்கு
 2. இதற்கெல்லாம் காரணம் நம் மக்களின் ( மூட) நம்பிக்கைதான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. "சகுணம் சற்குணப் பாண்டியனின்" சங்கதி தெரிந்து விட்டது நண்பா!
  நன்மை, தீமை
  நல்லது, கெட்டது,
  நான்கும் கலந்ததுதான் வாழ்க்கை!
  நன்றி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலந்து அடித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பா..

   நீக்கு
 4. உங்களுக்கு மட்டுமா எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குமா ? வருகைக்கு நன்றி நண்பரே..

   நீக்கு
 5. அப்புறம்....
  அப்புறம்...
  அய்யோ முடியலை...
  நான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னு சொன்னேன்...

  பதிலளிநீக்கு
 6. கவிதைப்போட்டிக்கான அழைப்பினை ஏற்கிறோம். சம்பந்தமில்லாமல் எங்கள் ஊர் கும்பகோணத்தை ஏன் இழுத்தீர்கள் ஐயா? ஓசை நயத்திற்காகவா? அல்லது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே வழக்கம் போல மூன்றடுக்கு தலைப்புதான் இன்னும் ஒரு வருடத்துக்குள் தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களும் இடம் பெறும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. எந்த ரூபத்திலும் கஷ்டம் வந்து விடக் கூடாது என்ற மக்களின் மனோபாவம்தான் காரணம். ஒருவனிடம் அது இருக்கிறதா, இது இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். கோபப் படமாட்டான். பதில் சொல்லுவான். அவனிடம் “அறிவு இருக்கிறதா?” என்று கேட்டுப் பாருங்கள். என்ன பதில் வரும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே என்னை அடி வாங்க வைத்து விடலாம் என்று முடிவு கட்டி விட்டீர்களா ? ஹா ஹா ஹா

   நீக்கு
 8. இதுபோன்ற வாழ்வியல் குழப்பங்கள் நிறைய இருக்கின்றன நண்பரே
  தன் மீது நம்பிக்கை வைக்காமல், பல்லியின் மீதும் , வெறும் தும்மலின் மீதும் மனிதன் நம்பிக்கை வைக்கிறான்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே நிறைய விடயங்கள் உள்ளது சொல்லி வரும் பொழுதே சாம்பசிவம் தடுத்து விட்டாரே..

   நீக்கு
 9. உங்கள் சந்தேகம் எல்லாமே எனக்கும் உண்டு பாஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா உங்களுக்கும் உள்ளது கண்டு மகிழ்ச்சி நண்பரே...

   நீக்கு
 10. நீங்களும் குழப்பங்களுக்கு விடை சொல்ல வில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அது தெரிஞ்சா நான் ஏன் ? அபுதாபியில வேலை செய்யிறேன்...

   நீக்கு
 11. அன்புள்ள ஜி,

  ‘பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச் சொல்லிவிடுவோம் புவி மேல்...
  ‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா’
  -சொன்னானே புரட்சிக்கவி...யார் கேட்கிறார்கள்?

  பல்லி மீது நம்பிக்கை வைப்பவன் பள்ளியின் மீது நம்பிக்கை வைத்தால் இதெல்லாம் இருக்காது!

  சிங்கம் முழங்கும்... கழுதை கத்தும்... நாம் சொல்கிறோம். அதன் ஒலி அதற்கு...! நாம்தான் வேறுபடுத்திச் சொல்கிறோம். அதற்கு ஒன்றும் தெரியாதில்ல...!

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே பல்லி பள்ளி என்று சொல்லி ஸூப்பரான விடயங்களோடு கருத்துரை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. மூட நம்பிக்கையைப் பற்றிய விரிந்த பார்வை வேண்டும் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமதான் இன்னும் கண் முழிக்கவில்லையே நண்பா..

   நீக்கு
 13. வணக்கம்
  ஜி

  எனக்கும் குழப்பமாக உள்ளது... சில விடயங்களை அறிந்தேன் கவிதைப்போட்டிக்கான அழைப்பு நன்று. த.ம 10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபனே குழம்பிட்டீங்களா ? ஹா ஹா ஹா

   நீக்கு
 14. பாருங்கள்.. எல்லோருக்குள்ளும் இப்படியாகக் குழப்பங்கள் பல
  இருந்தும் அதை வெளியே கேட்டுத் தெளிவுபெற யாரும்
  முன்வரவில்லை சகோ!..
  உங்களின் வெளிப்படையான எண்ணங்களைப் பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களின் வெளிப்படையான பாராட்டுகளுக்கு நன்றி

   நீக்கு
 15. குழப்பவாதி குணசேகரனால் ஏகபட்ட குழப்பங்கள் இங்கே உங்க பக்கத்தில்...
  எனக்கும் புரியவில்லை ,ஏன் விக்கல் வந்தால் "யாரோ நினைக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள். உண்மையாக யாராவது நினைத்தால் விக்கல் வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ யாரும் யாரையும் நினைப்பது சகஜமே ஆனால் ? அதை சாப்பிடும் தருணத்தில்தான் சொல்கின்றார்கள் குணசேகரன் போன்றவர்கள்

   நீக்கு
 16. நல்ல சந்தேகம். நம்மில் பலருக்கும் இருக்கும் சந்தேகம். ஆனால் விடை தான் கிடைக்கவே இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடைதான் கடல்லயே கிடைக்கவில்லையாமே ஜி

   நீக்கு
 17. இது மாதிரி குழப்பங்களுக்கு விடை புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும்தான். ஒரு முறை என் வீட்டில் நடந்த விசேஷத்தின் போது பால் கொட்டிவிட்டது. பால் கொட்டுவது கெட்ட சகுணம் இருந்தும் அருகில் இருந்த என் நண்பன் பால் கொட்டுவது நல்ல சகுணம் என்று சொன்னதும் அனைவரது முகத்திலும் ஒரே சிரிப்பு. அனைவரும் சென்றபின் என் நண்பன் சொன்னான் நான் சொன்னது பொய்தான் என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மாப்பிள்ளை சரியான காரணத்தை சொன்னமைக்கு நன்றி

   நீக்கு
 18. நல்லாத்தானே.. போய்க்கிட்டு இருந்தது!..
  சாம்பசிவம் குறுக்கால வந்தது - பெரும் குடைச்சல்?...

  பாதி சினிமாவில கரண்டு காலியாப் போனது மாதிரி இருக்குது!..
  மீண்டும் தொடரும்படி - கேட்டுக் கொள்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி நல்லா இருக்கீகளா ? ஏற்கனவே போட்டுப்போன கொக்கி இன்னும் தொடருது அடுத்துமா ?

   நீக்கு
 19. இதற்கெல்லாம் விடை காண முடியாத அளவில் மக்களின் நம்பிக்கை ஊறிப் போயிருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே மூட நம்பிக்கைதன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. எனக்கொரு குழப்பம் ...சிங்கம்னா போலீஸ் கேஸாக வாய்ப்புண்டா ,எப்படி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வீட்டில் சிங்கத்தை வளர்த்தால் போலீஸ் பிரட்சினை பண்ணுமே..

   நீக்கு
 21. கணவன் சாவிற்குப் பின்
  மனைவியை உடன்கட்டை ஏறவைத்த
  நம்மாளுங்க
  மனைவி சாவிற்குப் பின்
  கணவனை உடன்கட்டை ஏறவைக்காத செயல்
  ஏன்?
  இந்தச் சூழல்
  ஆண்களின் பக்கமா?
  பெண்களின் பக்கமா?
  தலைவரே பதில் தாருங்கள்!
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நிச்சயமாக ஆணாதிக்கத்தின் செயலே அன்றி வேறில்லை நண்பரே..

   நீக்கு
 22. சரியாதான் கேட்டிருக்கீங்க. எனக்கும் பதில் சொல்லத் தெரில சகோ . :) இதெல்லாம் பழக்க தோஷத்துல சொல்றோம்னு நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பழக்க வழக்கங்கள்தான் நம்மை இன்னும் இருட்டறையில் வைத்து உள்ளது வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 23. நல்லா இருக்கு சகோ, இன்னும் தொடருங்கள்,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே தொடர் கதை நிலுவையில் இருக்கின்றது சகோ...

   நீக்கு
 24. மூட நம்பிக்கைகள் எல்லா ஊர்களிலும் நாடுகளிலும் இருக்கின்றதே! ம்ம்ம் நம்மூரில் ரொம்ப மோசமோ ஜி..அது ஒழிந்தது என்றால் நாடு உருப்படும்...இவைதான் மக்களை உருப்படாமல் செய்கின்றன...என்ன செய்யலாம் ஜி?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியார் சொல்லாததா... நான் சொல்லி விடப்போகிறேன்

   நீக்கு