தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 08, 2015

தங்கச்சிமடம், தங்கச்சி தங்கலட்சுமி


முன்னுரை - நட்புகளே இந்தப்பதிவு ஒரு மாதிரிதான் எழுதியிருப்பேன் காரணம் அவசியமான விடயங்களே என் குடும்பத்து பெண் மக்களும் இதைப் படிக்கின்றார்கள் என்பதை நான் அறிந்தவனே.... மேலும் என்னைப்பற்றி தாங்களும் அறிந்தவர்கள் என்பதை நம்புகின்றேன் தவறெனில் மன்னிக்க. ஆனால்  அந்த மாதிரியில்லை என்பது குறிப்பிடத்தக்கது
நட்புடன் - கில்லர்ஜி

குடிகார கணவனிடம் தினம், தினம் அடியை வாங்கி வாழ்வை வெறுத்து கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ! கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள், இதிலிருந்து மாற்றமில்லையா ? உண்டு ஆம் ஒருபெண் நினைத்தால் எப்படிப்பட்ட ஆணையும் தன்வசப்படுத்தி, நல்லவனை கெட்டவனாக மாற்றமுடியும், கெட்டவனை நல்லவனாக ஆக்கவும் முடியும். ஏதோ ஒரு வழியில் உங்களது கணவன் கெட்டு விட்டான் அவனை அப்படியே விட்டு விடுவதா... யாருக்கு நஷ்டம் உங்களுக்கு மட்டுமா ? உங்கள் வாரிசுகளுக்கும்தானே ? இதிலிருந்து அவனை மீட்பது உங்கள் கடமையில்லையா ? அவனுக்கு, GOOD BYE சொல்லி விட்டு இன்னொருவருடனுன் வாழ்வைத் தொடர முடியாது, ஏனெனில் நாம் AMERICAவில் வாழவில்லை சங்கத்தமிழ் தந்த, தங்கத் தமிழ் நாட்டில் வாழ்கிறோம் என்பது நினைவு இருக்கட்டும்.

கணவன் குடித்து விட்டு வருகிறான், அவனிடம் சுயஉணர்வு இருக்கிறதா ? இல்லை சுயபுத்தியுடன் பேசுகிறானா...  இல்லை ஏன் ? மது உள்ளே போனால் மதி வெளியே போய் விடும் சரி, இவனை எப்படி மீட்பது ? குடித்து வரும் கணவன், வீட்டுக்கு போனவுடன் மனைவியிடம் அதிகாரமாய் பேசவேண்டும் என்ற எண்ணத்திலேயே தான் வருவான் 
(காரணம், மற்ற நேரத்தில் உங்களிடம் பேச அவனுக்கு திராணியிராது) 
வீட்டுக்குள் நுழைந்து பேச்சைத் தொடங்கியவுடன் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் இளக்காரமாய், குறிப்பாக அவனின் குடுப்பத்தாரை அவசியமின்றி இழுப்பீர்கள், உடனே அவனுக்கு ரோஷம் வந்து விடும்.
(அதுவரை, அவன் குடும்பத்தாருக்கு எதுவும் செய்திருக்க மாட்டான்  என்பது வேறு விசயம்) 
உடனே உங்கள் குடும்பத்தாரை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசுவான், பதிலுக்கு நீங்கள், பிறகு அவன் ஆக மொத்தம் உங்களை சேர்த்து வைத்த பாவத்திற்கு இரண்டு குடும்பமும் அவசியமின்றி அல்லோலப்படும், கடைசியாக வழக்கம்போல் உங்களுக்கு அடிகொடுக்க தொடங்கி விடுவான், அடியை வாங்கி மரத்துப்போன உங்களது உடம்பும் ஒரு வழியாக சமாதானப்பட்டு பிறகு இருவரும் ஆளுக்கொரு மூலையில், கிடந்து உறங்கி விடிந்தும் விடும், காலையில் எழுந்தவுடன் காபி போட பால் வாங்க வேண்டும், வேறு வழியின்றி கணவனிடம் காசு கேட்டாக வேண்டும், பிறகென்ன...  இரவு நடந்தது எதுவுமே, அவனுக்கு தெரியாது வழக்கம்போல் வேலைக்கு போய் விடுவான். பிறகு மறுபடியும் அதே!

இது என்ன வாழ்க்கை இதை மாற்ற வழிகள் உண்டா ? உண்டு.

இது படிப்பதற்கு, கொஞ்சம் சங்கோஜமாக இருக்கும் இருப்பினும் பரவாயில்லை, அவன் வந்தவுடன் சந்தோஷமாக வாங்க அத்தான் என வரவேற்பு சொல்லுங்கள், முதலில் அவனுக்கு, குழப்பமாக இருக்கும் அவன் குழம்பினால்  அதுதான் முதல் நெத்தியடி, பிறகு அவனை கட்டிப்பிடித்து, இது ஒன்றும் தவறில்லை ஏனென்றால் உங்கள் உடல், பொருள், ஆவி, எல்லாம் இந்த பாவிக்குதா... SORRY பதிக்குத்தானே !  

ய்யேன் அத்தான், 
(நாற்றம் வந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள், பெயரை சொல்லி அத்தான் எனச்சொல்லி விடாதீர்கள் ஏனென்றால் சிலநேரம் கணவனின் பெயர் சங்கிலியாய் இருக்கும் சங்கிலி அத்தான் என்று சொல்லி விட்டால் பிரட்சினை, ஏற்கனவே உங்களது சங்கிலி அடகு கடையில் இருக்கிறது) 

இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துக்கிறீங்க... உங்களுக்கு ஒண்ணுனா எனக்கு யார் இருக்கா ? 

(என்று உங்களுக்கே உரித்தான கண்ணீரை சிறிதளவு சிந்துங்கள் கண்ணீர் வராவிட்டால், கணவனுக்கு தெரியாமல் GLYCERIN வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், வசதியில்லாதவர்கள் வெங்காயத்தை உறித்து வைத்துக் கொள்ளுங்கள் இருப்பினும், உங்களுக்கு கண்ணீர், வரும் எத்தனை SERIAL பார்க்கிறீர்கள்) 

அவனுக்கு பொறி தட்டியது போல் ஆகிவிடும், பிறகு மறுநாள் அவன் நிதானமாக இருக்கும்போது அன்பாய், அரவணைப்பாய், கனிவாய், பணிவாய், மெழுகாய் பேசுங்கள் அவன் உருகி விடுவான், கஷ்டமாயினும் சிறிது காலம் இதை கடைப்பிடித்துப் பாருங்கள், நிச்சயம் வெற்றி உமதே !

சகோதரிகளே... நல்ல கணவனை கிறுக்கனாக்குவது, காற்றுள்ள பலூனை ஊசிகொண்டு குத்தவதற்கான நேரம்போதும். கிறுக்கனாய் திரிபவனை மனிதனாக்குவது, காற்றில்லாத பலூனை வாயால் ஊதி பறக்க விடுவதற்கான நேரம் வேண்டும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

வாழ்க ! வளமுடன்.
காணொளி

51 கருத்துகள்:

 1. நகைச்சுவை என்றெனக்குத் தோன்றவில்லை சகோதரரே!
  வாழ்வின் சுவை நன்கே மிளிரத் தந்த அருமையான
  உளநலப் பதிவு!..
  உளவியற்துறை வல்லுனரோ நீங்கள்?..

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே முதலில் வந்து கருத்துரை பதித்தமைக்கு மிக்க நன்றி உளவியல்துறை வல்லுனர் ஹாஹாஹா சகோ தாங்கள் நன்றாகவே காமெடி எழுதுகின்றீர்கள்.

   நீக்கு
 2. நண்பரே!
  ஊதுவார் ஊதினால்
  உப்பாத பலூனும் உப்பும்!
  குடும்ப நல நடுவர் பட்டம் தங்களுக்குத்தான் நண்பா!
  சிறப்பு!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாரீஸ் பாவலரே தருக நல் வார்த்தைகளை..

   நீக்கு
 3. இப்படி எல்லாம் சுலபமாகத் திருத்த மட்டும் முடிந்து விட்டால்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே நாட்டில் மது விலக்கு கேட்டு போராட வேண்டிய அவசியமே வராது 80ம் எமது கருத்து.

   நீக்கு
 4. காற்றில்லாத பலூனை ஊதுவதற்குத்தான்
  காலமும் பொறுமையும் வேண்டும்
  அருமை நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே சரிதானே வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. எவ்வளவு சீரியசான மேட்டராக இருந்தாலும் கில்லர்ஜியின் குறும்பு போகவில்லை. சங்கிலி அத்தானைத்தான் சொல்கிறேன்!
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே சங்கிலி அத்தான் சொல்லப்போக திருடன்னு நினைச்சு,, ஊருக்காரன் பூராம் திரண்டு வந்து மொத்திடுவாங்களே..

   நீக்கு
 6. அன்புள்ள ஜி,

  ‘விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை... கெட்டுப் போனவர் விட்டுக் கொடுப்பதில்லை’ வாழ்க்கை வாழ்வதற்கே... வாழும் வரை போராடு... அன்பால் சாதிக்க முடியும்... உன்னால் முடியும்... உன்னால் முடியாதது என்று ஒன்று... எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதே... வாழ்க்கை வசப்படும்... என்ற சூட்சமத்தைச் சொன்னீர்கள்.

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை உலகில்..

   நீக்கு
 7. வணக்கம் ஜி! எங்க கிராமத்துல "அத்தானு சொல்லமாட்டாங்க! சும்மா பாய்ஞ்சு அடிதான்! கேவை சரளா வடிவேல. அடிக்கிற மாதிரியொல்லாம் சில பெண்கள் அடிக்கிறத நான் பார்த்திருக்கேன்! நல்ல பகிர்வு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா அதனால் ஒன்றும் பயனில்லை இவ்வகையை ஒரு மாதம் கடைப்பிடிக்கச் சொல்லுங்கள் அப்படி மாற்றமில்லையெனில் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளச்சொல்லி சவால் விடுங்கள்.

   நீக்கு
 8. அன்பால் எதனையும் சாதிக்க முடியும்!..

  மனதைத் தொடுகின்றது - பதிவு!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அன்பால் முடியாதது எதுவும் இல்லைதானே..

   நீக்கு
 9. சிந்திக்க,சிரிக்க வைத்த பதிவு. நகைச்சுவையாக ஒரு சீரியஸான விடயத்தை எழுதுவதில் உங்கள் வழி தனி வழி....
  கடைசியில் நல்லதொரு தத்துவம்...!!
  காணொளி பார்க்கையில் எனக்கு எங்க வீட்டில் வேலை செய்த அப்புதான்(நாங்க அவரை அப்படி அழைப்பது) ஞாபகம் வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ.. காணொளி கண்டமைக்கு நன்றி

   நீக்கு
 10. நல்ல பகிர்வுங்க சகோ. ஆனாலும் யாரும் திருந்தமாட்டாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் சகோ தங்களது கணிப்பு தவறானது இந்த வகைகளை யாரும் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள் 80தே எமது ஆணித்தரமான கருத்து ஒரு முறையேனும் முயன்று பார்க்கலாம் அன்பால் சாதிக்க முடியாதது இவ்வுலகில் எதுவுமே இல்லை சுதந்திரத்துக்காக போரில் பல உயிர்களை இழந்தாலும் முடிவில் காந்திஜியின் அன்பாலே சாதிக்க முடிந்தது 80தே கில்லர்ஜியின் கருத்து.

   இது எனக்கு இன்று பதிவுக்காக தோன்றிய எண்ணமல்ல நான் சிறுவயதில் பார்த்திருக்கின்றேன் எத்தனையோ குடிகார மட்டைகள் மனைவியை தெருவில் இழுத்துப்போட்டு அடிப்பதை அன்று எனக்கு தோன்றிய சிந்தனையின் விதையே இன்றைக்கு பதிவாகி செடியாகியது இது எனது அவசர சிந்தனையுமல்ல...

   முயன்று பார்க்கலாம் முடியாதபோது இருக்கவே இருக்கு கோடரி ஒரே போடு... இதுதான் நிஜ கில்லர்ஜி ஹி ஹி ஹி..

   நீக்கு
 11. தாங்கள் உளவியல் வித்தகரும்,,,,,,,,,ம்ம்
  அருமை சகோ,
  ஏனோ மனதில் வள்ளுவர் வந்து போகிறார்,,,,,,,,
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முனைவரே சந்தடி சாக்குல பாராட்டுவது போல் கிண்டல் ம்ம்... வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. நல்ல அறிவுரை. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. பெயரில்லா10/08/2015 11:26 AM

  முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் நன்றாக உள்ளது.
  முயற்சித்தப் பார்த்து வெற்றி பெறட்டும்.
  நன்று நன்று..சகோதரா.

  பதிலளிநீக்கு
 14. அடி திருத்தாததை அன்பு திருத்தும் என்று சொல்கிறீர்! நல்லதுதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 15. ஐயா! பதிவின் தொடக்கத்தில் மன்னிப்புக் கேட்பது போல் ஏதோ எழுதியிருந்தீர்கள். ஆனால், அதைப் படித்த பின்பும் நீங்கள் அப்படித் தவறாக ஒன்றும் எழுதி விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் தொடர்ந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை. நீங்கள் முதலில் அப்படி ஒரு முன்னறிவிப்புக் கொடுக்க எந்த விதத் தேவையும் இல்லை. குடிகாரக் கணவனை அன்பால் திருத்து என்கிறீர்கள், அவ்வளவுதானே? இதில் தவறென்ன இருக்கிறது? அன்பு என்பது ஒவ்வோர் உறவிலும் ஒவ்வொரு விதம். கணவன் - மனைவி ஆகியோருக்கிடையில் அன்பு என்பதன் பொருள் இதுவும்தான். எனவே, இப்படியொரு யோசனையை நீங்கள் முன்வைத்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதற்குத் தொடர்பில்லாத வேறு ஒரு தவற்றை நீங்கள் பதிவில் செய்திருக்கிறீர்கள்.

  "குடிகாரக் கணவனாகவே இருப்பினும் அவனோடுதான் கடைசி வரை வாழ வேண்டும்; பிரிந்து போகக்கூடாது. ஏனெனில், நீங்கள் வாழ்வது சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில்" என்று கூறியிருக்கிறீர்களே, இஃது என்ன நியாயம்?

  தமிழ் மண்ணில் பிறந்தால் "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்" என்று எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு கடைசி வரை அவனோடே வாழ வேண்டுமா? இது என்ன தமிழ் மண்ணில் பிறந்ததற்கான தண்டனையா?

  உண்மையில், பண்டைத் தமிழ் மண்ணில், நீங்கள் குறிப்பிடும் சங்க காலத் தமிழ் நாகரிகத்தில் பெண்களுக்குப் பாலியல் விடுதலை எந்த அளவுக்கு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? கணவனைப் பிடிக்காவிட்டால் பிடித்த வேறு ஆணைக் கணவனாகத் தேர்ந்தெடுத்து வாழும் உரிமையைப் பெண்களுக்கும் தமிழ்ப் பண்பாடு வழங்கியிருந்தது என்பதை அறியாமல் தமிழின் பெயரால் பெண்களை நீங்கள் அடங்கிப் போகச் சொல்வது நியாயமா என்பதைச் சிந்தியுங்கள்!

  தமிழோ பிறவோ எந்தப் பண்பாட்டிலிருந்தாலும் பண்பாட்டின் பெயரால் எந்தக் கயமைத்தனத்தையும் பிற்போக்குத்தனத்தையும் அநீதியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! எந்தப் பண்பாட்டைச் சார்ந்ததாயிருந்தாலும் சரியாக இருந்தால் மட்டுந்தான் ஒரு விதயத்தை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும், தொடரவும் வேண்டும்!

  இது போக, இத்தகைய முயற்சிகளையெல்லாம் நம் பெண்கள் கையாண்டு பார்த்திருக்க மாட்டார்கள் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. குடியர்களைத் திருத்துவது என்பது இத்தகைய முயற்சிகளால் ஆகாது. நீங்கள் என்னதான் அவர்களுக்குக் காதல், அன்பு, பரிதாபம், காமம் என மற்ற எல்லா உணர்ச்சிகளையும் தூண்டினாலும் அந்த நேரத்துக்கு மட்டுப்பட்டுப் பின்னர், குறிப்பிட்ட நேரம் வந்ததும் மீண்டும் படமெடுத்து ஆடக்கூடிய நஞ்சரவம் குடிபோதை என்பது. அதைத் திருத்த நல்ல மருந்துகள் இருக்கின்றன. நல்ல பண்டுத (சிகிச்சை) முறைகள் இருக்கின்றன. கணவனைத் தலையிலடித்தாவது அப்படிப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் உகந்ததே தவிர, இப்படிப்பட்ட மாய்மாலங்கள் உதவாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே தொடக்கத்தில் எனது கருத்தை ஏற்று சொன்னீர்கள் அதற்க்காக எனது நன்றி.

   தாங்கள் சொல்வது சங்க காலத்தில் இருந்திருக்கலாம் ஆனால் தற்கால நடைமுறையில் இருப்பது போல் தெரியவில்லை இதே சமூகம்தான் இறந்த கணவனோடு உடன்கட்டை ஏறுவதையும் கட்டாயப்படுத்தி புகுத்தி வந்தது

   நா இவ்வகையில் திருத்த முடியும் 80தைத்தான் வலியுறுத்தினேன் மற்றபடி புதுமைப்பெண்கள் போல புரட்சி செய்யும் கருத்து புகுத்தவில்லை நண்பரே

   தங்களது கருத்துரை மூலம் சில தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 16. தங்களது பதிவு மூலம் சிலராவது திருந்த வழியுண்டு என நினைக்கிறேன். யதேச்சையாய் நீங்கள் பதிந்துள்ள விதமே பலரை மாற்றிவிட உதவும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 17. அப்போ்..நாட்டை ஆளும் கோமவள்ளி சாராயம் விற்கட்டும்... பெண்கள்தான் அவரவர் கணவர்மார்களை திருத்த வேண்டும் என்கிறீர்கள் அப்படித்தானே நண்பரே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இவ்வழியிலாவதுபார்ப்போமே...

   நீக்கு
 18. இப்படி எல்லாம் திருத்த முடியும் என்று சொல்லுகின்றீர்களா ஜி??!! ம்ம்ம்ம் நல்ல நேர்மறைக் கருத்து எனலாம் ஆனால் ஆனால்...நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை...விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் மட்டுமே இருப்பார்கள்..உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட இது போன்ற குடிகார கணவன்களைக் கையாளா மனைவிமார்களுக்கு ஒரு யோசனை சொல்லப்ப்டும்...
  கெற்றி பெற்றால்நல்லது

  பதிலளிநீக்கு
 19. வெற்றி பெற்றால் நல்லது என்று வர வேண்டியது கெற்றி என்று வந்துவிட்டது ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு முயற்சிதானே.... இதனால் 1ம் நஷ்டம் வரப்போவதில்லையே...

   நீக்கு
 20. கணவனை விட மனைவி அதிகம் குடிக்க ஆரம்பித்தால் கணவன் திருந்த வாய்ப்புண்டு :)

  பதிலளிநீக்கு
 21. 'புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே..... தங்கச்சி கண்ணே...' என்னும் பழைய பாடலை நினைவிற்கு கொண்டு வரும் நகைச்சுவையான கருத்துக்களோடு கூடிய நயமான அறிவுரை.

  அப்படியே குவார்ட்டர் கோவிந்தன், ஹாப் ஆறுமுகம். ஃபுல் புருஷோத்தமன்,கட்டிங் கந்தசாமி போன்ற நம்ம குடிகார மாமன், மச்சினன்களுக்கும் அறிவுரை சொல்லி ஒரு பதிவு போடு போடுன்னு போடுங்க நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகான தலைப்புகளை தந்து விட்டீர்களே... முயல்கிறேன் நன்றி

   நீக்கு
 22. /அவனுக்கு குட் பை சொல்லி விட்டு இன்னொருவனுடன் வாழ முடியாது ஏனெனில் நாம் அமெரிக்காவில் வாழவில்லை/ நம்மவர் அவர்களைவிட முன்னேறி விட்டார்கள் ஜி. அன்பாய் அரவணப்பாய் பேசுபவர்கள் இல்லாததாலேயே அவன் குடிக்கிறான் என்று பட்சி சொல்கிறது. ஜி, நீங்கள் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று கேள்விப்பட்டதில்லையா. இருந்தாலும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவான உண்மையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 23. விட்டுக் கொடுத்தால் ஒரு போதும் கெட்டுப் போவதில்லை அண்ணா...
  முயன்றால் முடியாதது இல்லை...
  வாழும் வாழ்க்கையில் எல்லாமே நம்மிடம்தான் இருக்கிறது... அதை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் சிக்கலே...
  நல்ல பகிர்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

   நீக்கு
 24. வணக்கம்
  ஜி
  எல்லோரும் உணரும் போது.. நிச்சயம் மாற்றம் வரும்.... நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஜி,.. த.ம17

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப்பதிவின் வழியில் யாராவது முயன்று பார்த்தால் நமக்கு மகிழ்ச்சிதான் நண்பரே...

   நீக்கு
 25. சிரிக்க முடியலை, ஏனெனில் இப்போது தமிழ்நாடே குடியினால் சீரழிந்து கொண்டிருக்கிறது. கணவன் குடிகாரன் ஆனதால் தன்னிரு குழந்தைகளையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்! நேற்றைய செய்திகளில்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோ நானும் படித்தேன் வேதனையான விடயமே

   நீக்கு