தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 02, 2015

(புதுக்)கோட்டையை உலுக்குவோம் வாரீர்...

வாருங்கள்... ஒன்றாய் கூடுங்கள்...
வீரத்தமிழ் பாடி... வெற்றிப்படி ஏறி வாருங்கள்...

காலை வணக்கம் ஐயா
எல்லோருக்கும் காலை வணக்கம் நேற்று 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு குழந்தைகளை எல்லாம் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டுக்கு நீங்களே பாடுறது மாதிரி பாட்டு எழுதச் சொன்னேன் இல்லையா ? அதுல நம்ம 3-ம் வகுப்பு படிக்கிற தமிழ் முகில் எழுதியிருக்கிற பாட்டுதான் தேர்வாகி இருக்கு இந்தப்பாட்டை படிக்கப் போகிற மாணவ-மாணவிகளையும் தேர்வு செய்தாச்சு நான் பெயர் வாசிக்கிறேன் எந்திரிச்சு நில்லுங்க, 1. மதிவதனி 2. நளாயினி 3. இளஞ்சியன் 4. செங்குன்றன் இந்த 4 பேரும் இங்கேயே ஒருமுறை பாடிக்காண்பிங்க நீங்க விழாவுல நல்லாப்பாடினா... அமிதாப்பச்சன் கையெழுத்துப் போட்ட காட்ஃபரீஸ் முட்டாசி புதுக்கோட்டை விழாவுல கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா உங்களுக்கு பரிசு கொடுப்பாரு.. அதை பத்திரமா வைத்திருந்து அமிதாப்பச்சனோட கொள்ளுப்பேரனிடம் காண்பித்தால் அவர் உங்களை கல்யாண் ஜூவல்லர்ஸ் கூட்டிட்டுப்போய் 3 பவுனில் செயின் 1 வாங்கி உங்கள் கழுத்தில் அன்பளிப்பாக மாட்டி விடுவார் இன்னும் 25 வருசத்துல 3 பவுனோட மதிப்பு ஒரு லட்சத்து எண்பதாயிரம் வந்து விடும் அந்த நேரத்தில் உங்களது பேரன் பேத்திகளின் திருமணத்திற்க்கு உதவியாக இருக்கும் ஆகவே நல்லா பாடுறீங்களா ?
சரி ஐயா
நான்கு பேரும் வட்டமாக நில்லுங்க கொலை கொலையாம் முந்திரிக்கா பாட்டு போலவே பாடுங்க...

புதுக்கோட்டையில் திருவிழா
வலைப்பதிவர் அலையிலா
வாருங்களேன் பிள்ளைகளா

இணையத்தாலே ஒருவிழா
இணைந்திருப்போம் ஒருநிலா
இனிமையான பிள்ளைகளா

முயற்சிப்போம் முழுவிழா
முக்கனியில் ஒருபலா
முனைந்திடுவீர் பிள்ளைகளா

மகிழ்ச்சியான மனவிழா
மறுபடியும் வர உலா
மகிழ வாங்க பிள்ளைகளா

எழுதுவோர்க்கு இதுவிழா
எழுச்சியுடன்  கலக்கலா
எழுந்து வாங்க பிள்ளைகளா

புதுமைக்கொரு புதுவிழா
புதுக்கோட்டையை உலுக்கலா
புறப்படுங்கள் பிள்ளைகளா

புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடத்தும் மின் இலக்கிய போட்டிகள் 2015க்காக எழுதப்பட்டது (வகை 4) புதுக்கவிதை போட்டிக்கு நான் எழுதியிருக்கும் இந்தக் குழந்தைகள் கவிதையை என்னுடையது என்று உறுதி தருவதோடு போட்டிகள் முடியும் வரை வேறு தளங்களில் வெளியிட மாட்டேன் என்றும் உறுதி தருகிறேன்.

நான் போட்டிக்கு அனுப்பிய பிற படைப்புகளை காண கீழே சொடுக்குக...







2015 புதுக்கோட்டை பதிவர் விழாவுக்கு அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கும்.
 
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

73 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கவிஞரின் மகிழ்ச்சியை பகிர்ந்தமைக்கு நன்றிங்கோ...

      நீக்கு
  2. அண்ணா!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))

    பதிலளிநீக்கு
  3. தேவகோட்டையாரின் மனமெல்லாம் புதுக்கோட்டையிலே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே நண்பரே கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  4. தீபாவளிக் கொண்டாட்டம்!
    தம +1

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜி! கலக்கல் பாட்டு சூப்பர் ஜி!

    பதிலளிநீக்கு
  6. ஒரே பதிவில் எல்லா விஷயங்களையும் அள்ளி மிக்சர் போல சுவைபட சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  7. அருமை தோழர்
    நன்றிகள்
    தம +

    பதிலளிநீக்கு
  8. புதுக்கோடையை உலுக்குவோம், உங்களது வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது முனைவரே தமிழால் இணைவோம், தலை நிமிர்ந்து வாழ்வோம்.

      நீக்கு
  9. தலைப்பு + இணைப்பு - மின்னஞ்சலில் அனுப்பவும்...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  10. பாப்பா பாட்டு அருமை!..

    வெற்றிக்கனி பறிக்க நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கி ஜி மனதை குழந்தையாக்கி எழுதியதே பாப்பா பாட்டு

      நீக்கு
  11. திருவிழா புதுக்கோட்டையிலா?
    அல்லது தேவக்கோட்டையிலா?
    பதிவுகள் பவனி !
    அனைவரும் கவனி!
    கவனத்தில் கொண்டு வந்தமைக்கு வாழ்த்துகள்!
    சிவப்பு கம்பள ம் வரவேற்புகள்!
    குழலின்னிசையின் நன்றி நண்பா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க தேவகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு வெயில் படாமல் குதிரையில் வந்து போக வழி வச்சு இருக்கோம் நண்பா.

      நீக்கு
  12. அற்புதம் நண்பரே,
    இப்படியெல்லாம் சிந்திக்க உங்களால் மட்டுமே முடியும். குழந்தைகளை அருமையாக பாட வைத்திருக்கிறார்கள். அவர்களை ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் மூலம் குழந்தைகளை லட்சதிபதியாக்கிய உத்தி அழகு!
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை ஞாபகம் இருக்கின்றதா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. பதில்கள்
    1. நண்பர் நண்டு @ நொரண்டு அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

      நீக்கு
  14. பாட்டு சூப்பருங்க சகோ. சகோ கட்டுரைக்கு பதில் எழுதினேனே அடடா வெளியிட மறந்து சென்றுவிட்டேன் போல. இதோ மறுபடி அங்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நான் குழந்தையாக இருக்கறச்சே எழுதியது ஸூப்பராகத்தான் இருக்கும்.

      நீக்கு
  15. அண்ணா கலக்குங்க... இன்றும் இருக்கும் இன்னும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் எங்கே ? சரக்கு காலி இங்கே
      அடுத்த வருட பதிவர் விழா திருச்சியில் சந்திப்போம்

      நீக்கு
  16. வீரத்தமிழ்பாடிய..தாங்கள் வெற்றிப் படியேற வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா நீங்களும் வாங்க நண்பா.... புதுக்கோட்டைக்கு.....

      நீக்கு
  17. கலக்கல் அண்ணா ஜி. வெற்றிபெற வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவுகள் விடுபடுகின்றதே... நன்றி

      நீக்கு
  18. அன்புள்ள ஜி,

    பாட்டைக் கோட்டாலே சும்மா கோட்டையே அதுருதில்ல...!

    சேட்டைக் குழந்தைகளின் பாட்டில் அழைப்பு அருமை...!

    ‘மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே...!’

    நன்றி.
    த.ம. 13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே மீண்டும் மீன்கொடி பறக்கட்டும்.

      நீக்கு
    2. மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்...

      நீக்கு
  19. நீங்கள் கலந்து கொள்ளாத போட்டியே இல்லையா.? ஆர்வதுக்கும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நடக்கப்போகுது
    நவம்பர் 11ல்
    புதுக்கோட்டையில்
    வலைப்பதிவர் திருவிழா…

    நாட்டு மக்கள்
    வியப்பர்
    பதிவுலகில்
    இத்தனை
    இனிய நண்பர்களா…

    குழந்தைப் பாடல்
    கொண்டு அழைக்கும்
    நண்பர் உங்கள் பதிவு
    சுன்டி இழுக்கும் சுவைபலா…..

    எப்படி நம்ம 'ழாளாலா' நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே அளப்பலா இருக்கே நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. பாப்பா பாட்டா கவிஞரே,,
    அருமையாக இருக்கு சகோ,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பாப்பா பாட்டுதான் அதென்ன ? கவிஞரே பிடிக்கலையா ?
      பாப்பாவுக்கு சோக்லெட் கொடுக்காமல் போயிட்டீங்களே...

      நீக்கு
  22. நானும் ஆட்டைக்கு வாரேன்
    சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் கலந்து கொள்ளாத வலைப்பதிவர் மாநாடா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. புதுக்கோட்டை குலுங்கட்டும்
    அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  24. உலுக்குங்கள், கலக்குங்கள் பரிசு பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அசத்தல்!வழக்கம் போல!!

    பதிலளிநீக்கு

  26. புதுக்கோட்டைக்கு பதிவர் விழாவிற்கு படைத்துள்ள குழந்தைகள் கவிதை அருமை தேவக்கோட்டையாரே! வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  27. alakuth thamilaa ?!konjum thamilaa ?sirippuththamilaa ?kollar avarkale .

    porkollar .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தமிழும்தான் ஐயா வருகைக்கு நன்றி

      நீக்கு
  28. நான் மனக்கண்ணில் கண்டு ரசித்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  29. அருமை! அருமை!

    விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. பாட்டு பிரமாதம்......

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  31. வித்தியாசமானமுறையில் அறிவிப்பு சூப்பர்

    பதிலளிநீக்கு
  32. தமிழ் முகில் பாட்டைப் போலவே உங்கள் பாட்டும் பரிசுக்கு தேர்வாகட்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜியின் வாக்கு பலிக்கட்டும்...டும்...டும்..

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே,

    சற்று உடல் நலக் குறைவினால் வலைப்பக்கம் வருகை தர இயலவில்லை. தங்களின் விடுபட்ட பதிவனைத்தையும் படித்தேன். பதிவர் திருவிழா போட்டிக்கான கட்டுரைகள், கவிதைகள் என அனைத்தையும், தங்கள் பாணியில் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நிச்சயம் வெற்றிக்கனி தங்களுத்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சிறப்பான பல பரிசுகளை தங்கள் பதிவுகள் பெற்றுக் குவித்திடவும், வலைப்பதிவர் திருவிழா சிறப்பான முறையில் நடந்தேறிடவும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

    என் பதிவு + அழைப்பிதழை நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும். நன்றி.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமுடன் வந்து நீண்ட கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  34. வணக்கம்
    ஜி

    பதிவர் விழாவுக்கு தங்களின் கருத்தில் சொல்லி அழைத்த விதம் சிறப்பு...கவிதை பாடிய விதமும் சிறப்பு.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் நலம்தானே.... வருகைக்கு நன்றி

      நீக்கு