தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 09, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

சாலையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த ஆருடரைக் கண்ட செந்துரட்டி இருகைகளாலும் வணங்கி நமச்காரம் ஐயன்மீர் தங்களது ஆசிகள் வேண்ட, கோடரி வேந்தன் நமச்காரம் என்று ஒரு கையில் இயம்பியதைக் கண்ட ஆருடர் செந்துரட்டியை கையை உயர்த்தி நீடூழி எம்பெருமான் ஐயன் துணை என்றும் கிட்டும் என்றுரைத்து கோடரி வேந்தனை ஒரு மாதிரி பார்த்து....
(உலகுக்கு முதன் முதலாக ஒரு கையில் நமச்காரம் வைக்கும் புதுமையை புகுத்தியது கோடரி வேந்தனே என்பதை வரலாறு பின்னால் எழுதிக் கொண்டது என்பது வேறு விடயம்)

இதென்ன... ஒரு கையில் நமச்காரம் செய்வது... யாரப்பா தாங்களிருவரும் ?
ஐயா நாங்களிருவரும் குருகுலம் நோக்கி யாத்திரை செல்கின்றோம் வழியில் தங்களைக் காணவே தங்களிடம் எங்களின் எதிர்கால விடயங்களைக் குறித்து வினவலாம் என்று கருதுகின்றோம்.
சிறார்களே தாங்களிருவரும் எந்த குருகுலத்தில் பயிலுகின்றீர்கள் ?
ஊமையனார் கோட்டை இராமாநுசர் குருகுலத்தில்...
அங்கு பயிலும் சிறார்களில் நீயுமா ?
ஐயா தங்களுக்கு ஐயம் வரக்காரணம் அறியலாமா ?

பெரியோருக்கு மரியாதை செய்யும் முறையே தவறாக இருக்கின்ற காரணத்தால் நம்பிக்கை இழந்து வினவினேன்.
ஐயா நேற்றிரவு கால் இடறி கீழே விழுந்து விட்டதால் எமது இடக்கை வேதனையளிக்கின்றது ஆகவே ஒரு கையில் நமச்காரம் செய்தோம்.
உமது விழியே உமது பொய்யுரையை விளக்கி விட்டது தம்பி தாங்கள் சொல்வீர் என்ன வேண்டும் தங்களுக்கு.... ?
செந்துரட்டி வாய் திறக்கும் முன்பே....
ஐயா இவர் எம்மோடு பயிலும் மாணக்கர் அவரால் பேச இயலாது  ஆகவே நாம் தங்களிடம் உரையாடுகின்றோம்.
இவருக்கு என்னவாயிற்று ?
இவருக்கு பல்லில் வேதனை பூச்சி இருந்ததால் மருத்துவரிடம் மருந்து வைத்து கட்டி விட்டுதான் திரும்பிக்கொண்டு இருக்கின்றோம்.

என்ன இந்த அகவையில் பற்களுக்குள் பூச்சியா ?  
ஆம் ஐயா ஆகவே இவர் உரையாட முடியவில்லை.
இப்பொழுது தங்களுக்கு என்ன வேண்டும் ?
இவருக்கு விவாகம் செய்ய காலம் கைகூடி விட்டதா ? என்பதை தாங்கள் தயை கூர்ந்து சொல்லல் நன்று.
உமது வினாக்கள் உமது அகவையை கடந்து இருக்கின்றதே.... குடும்பத்தில் பெரியவர்களை அழைத்து வாரும் யாம் ஆருடம் காண்போம்.
மன்னிக்கவும் ஐயா தாங்கள் ஞானி சிரீபூவு மாதிரியே தெய்வ கடாச்சமாக இருக்கிறீர்கள் தயை கூர்ந்து தங்களுக்கு பகரமாக தட்சிணையை பெற்றுக் கொண்டு இயம்புவீராக...

தட்சிணையாக என்ன தருவீர்கள் ?
எங்களிடம் அவலும், சீடையும் இருக்கின்றது.
நல்லது இன்றைய முதல் வருமானம் உமது பொன்னான கரங்களில் கிடைக்கின்றது எமக்கு வேண்டிய தட்சிணையை வையும்.
கோடரி வேந்தன் செந்துரட்டியின் தோளில் கிடந்த மூட்டையை பிரித்து இரண்டு கையளவு அவலும், இரண்டு சீடையையும் எடுத்து கைக்கும் பொழுதே ஒரு சீடையை எடுத்து வாய்க்குள் நுழைக்க ஏதும் வினவ இயலாமல் செந்துரட்டி திகைக்க....
ஐயா எங்கள் இருவருக்குமான தட்சிணை இதோ முதலில் எமது நெருங்கிய சினேகிதரான இவருக்கு பாருங்கள் ஐயாவிடம் கரம் நீட்டுங்கள் செந்து.
திருநாமம் என்னவோ ?
செந்துரட்டி.
யாருடையது ?
இவருடையதுதான் ஐயா இவருக்கு பல் வேதனை காரணத்தால் நாமே இயம்பிக் கொள்வோம்.
தனது கையிலிருந்த சிறிய குழல் போன்ற குச்சியை செந்துரட்டியின் உள்ளங்கையில் வைத்த ஆருடர் விழிகளை மூடி தியானித்து....

ஆத்தா அம்பகரத்தாளே அருந்தவச்செல்வன் செந்துரட்டியின் எதிர்கால நலபலன் சிறப்பு இயம்புவமைக்கு நல்லதொரு குறி சொல்வாயாக....
செந்தூரட்டி உமது ஆயுள் பலன் அற்புதமாக இருக்கின்றது கேது பத்தாம் இடத்திலிருந்து வைகாசித் திங்களில் இடப் பெயர்ச்சி கொள்வதால் வியாழ நோக்கம் பெறுக்கெடுக்கின்றது உமது குருகுலவாசம் நலமுடன் முடிந்து தாவணி போட்ட பருவமங்கை ஆவணியில் உமது கண்டாங்கி உடுத்திய பாவையாவாள் மேலும் உமது அடுத்த பிறவியில் சமுத்திரம் கடந்த பாகங்களுக்கு செல்லும் பாக்கியம் உண்டு இருப்பினும் உமக்கு சினேகத் தோசமும் உண்டு இந்த தோசம் உமது அடுத்த பிறவிவரை பூமாதேவிக்குள் தைலம் எடுக்கும் அபு என்று சொல்லப்படும் சமுத்திரத்திலும் இந்த சினேக தோசம் தொடர்ந்து உம்மை தாவி தாவி தொடரும் நீரும் உமது சினேகிதரும் செல்வந்தனாக வாழ்ந்திருப்பினும் உணவுக்கு காய்ந்த மாவு வறட்டிகளையே உண்ணும் நிலையே உண்டாகும்.

ஐயா இந்த சினேக தோசக்காரர் இப்பொழுது இவரைத் தொடர்கின்றதா ?
அதுவொரு அசை போட்டுக் கொண்டே தொடரும் சடம் தோராயமாக உம்மைக்கூட சொல்கிறது ரேகை சாத்திரம்.
ஐயா தங்களது திருநாமம் என்னவோ ?
எம்மை அறியாதோர் இந்த சுற்று வட்டாரம் பதினெட்டு பட்டியிலும் இல்லை ஆந்தைமடை ஆருடர் ஆண்டியப்பன் என்றால் அனைவரும் அறிவர்.


நல்லது ஐயா எமக்கு...
உமக்கு ரேகை காண வேண்டியதில்லை உமது விழிகளை வைத்தே இயம்பலாம் ஆகவே வேண்டாம் காணாமல் இருப்பதே நலம் எமது வாயால் இயம்புவதற்கு எமக்கே அச்சமாக இருக்கிறது உமது ரேகை பலன் எழுந்து செல்லும்.
செந்துரட்டி விழிகளால் எழச்சொல்லி எழுந்து ஆருடரின் காலை வணங்க....
நலம் பெறுக நல்லதே நடக்கும் சென்று வாருங்கள்.
கோடரி வேந்தன் ஆருடரை முறைத்துக் கொண்டு புறப்பட, மீண்டும் நடையைக் கட்டினர் செந்துரட்டியும், கோடரி வேந்தனும்.

செந்து ஆருடர் தங்களுக்கு சந்தோசமான முறையில்தானே இயம்பினார் பிறகு தங்களின் வதனம் வாடுவது ஏன் ?
கோடரி ஒரு விடயத்தை கவனம் கொண்டீர்களா ? அடுத்த பிறவியிலும் சினேகிததோசம் எம்மைத் தொடரும் என்றுரைத்தாரே அதை நினைந்து அச்சமடைகிறேன்.
அது யாராக இருக்ககூடும் செந்து ?
அவரின் ஆருடம்படி இப்பிறவியில் தாங்கள்தானே எமக்கு நெருங்கிய சினேகிதர் தாங்கள் அடுத்த பிறவியிலுமா ?
இது சந்தோசமான விடயம்தானே...
தாங்களுக்குத்தானே.... ?

செந்து ஆருடரும், வேதனையைக் கொடுத்தார் தாங்களுமா ?
கோடரியாரே ஆருடர் இயம்பிதால் விசமிக்காதீர்கள் அவர் பெரியவர் ஆருடம் சொல்பவர் அவர் மனம் நோகும்படி நடக்கலாமா ?
யாம் என்ன தவறிழைத்தோம் செந்து ?
அவர் நமது தாத்தாவைப் போன்றவர் அவரை வணங்கி வருவதால் பெரியவர்களின் ஆசிதான் கிடைக்குமே தவிர வேறொன்றுமில்லை.
விடுங்கள் செந்து தங்களுக்கு ஆவணியில் விவாகம் என்றுரைத்தது சந்தோசமே... எமக்கு ஆருடம் இயம்ப மாட்டார் என்று அறிந்திருந்தால் ஓர் சீடையை இழக்காமல் இருந்திருக்காலம்.
சரி கோடரியாரே உமது மூட்டையில் இருந்த அவல் எங்கே ? எமது பங்கிலிருந்து இருவருக்கும் தானம் செய்து விட்டீர்கள் ?

எமது முடிச்சுதான் முடிந்து விட்டதே... செந்து.
எம்முடன்தானே நடந்து வந்தீர்கள் அதற்குள் எப்படி ? வழியில் தவறி விழுந்து விட்டதா ?
இல்லை செந்து வரும் பொழுது உண்டு கொண்டுதான் வந்தோம்.
எப்பொழுது... யாம் காணவில்லையே ?
இடையில் வினாக் கேட்பதால் தாங்கள் சினம் கொண்டீர்கள் ஆகவே யாம் ம் மட்டுமே இயம்பிக் கொண்டு வந்தோமே அந்த தருணத்தில்தான்.
சீடையைக் கடித்த சப்தம்கூட கேட்கவில்லையே ?

அதை வாய்க்குள் ஊற வைத்துதான் கடித்தோம் ஆகவே தங்களுக்கு கேட்காமல் இருந்திருக்கலாம் செந்து நமக்கு கிடைத்த அவல், சீடை விடயங்களை மற்ற மாணக்கர்களிடம் இயம்பாதீர்கள்.
கோடரியாரே எதற்காக ?   

இன்றிரவு குருகுலம் சென்றதும் நாமிருவரும் உண்ணலாம்.
இல்லை கோடரியாரே குருநாதரும், நாட்டாமை மோகனரங்கம் அவர்களும் நெருங்கிய நட்புடையவர்கள் குருநாதர் வினவினால் நாம் நடந்ததைத்தான் விவரிக்க முடியும் நாளை அறிந்தால் ? நம் இருவருக்கும் சிரமம்.
நாட்டாமை நம்மை ஏளனமாக நகைத்தாரே ஆகவே ஒன்றும் கொடுக்கவில்லை என்றுரைப்பதில் தவறில்லையே.... ?
இல்லை கோடரி நாம் குருநாதரிடம் ஒப்படைத்து விடுவோம் அவர் திரும்பவும் நம்மிடம்தான் தருவார்.

எம்மிடம் இல்லையே இருவருக்கும் இதுதான் என்றுரைப்போமா ?
இல்லை கோடரி அதுவும் நாளை அறியக்கூடும் இதையே இரண்டாக பிரித்து கொடுப்போம் இதுவே நமக்கு சாதகமானது.
வேண்டாம் இதை தாங்கள் ஒப்படையுங்கள்.
தங்களுடையதை குருநாதர் வினவினால் ?

அதை யாம் சரியாக்கி கொள்வோம் தாங்கள் சிரத்தை மட்டும் சிறிதாக அசைத்தால் போதுமானது.
சிரத்தை அசைப்பதால் ஏதும் பிரச்சனைகள் வந்து விடாதே ? கோடரியாரே குருகுலம் வந்து விட்டது இந்நேரம் குருநாதர் துயில் கொண்டிருப்பார் ஆகவே நாளை பொழுது புலர்ந்ததும் அவரை சந்திக்கலாம்.

வாருங்கள் செந்து உணவிடம் சென்று களித்து விட்டு பிறகு கூடாரம் செல்வோம்.
நல்லது வாருங்கள்.

தொடரும்,..


இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

45 கருத்துகள்:

  1. ஆகா.. அருமை...

    ///உணவுக்குக் காய்ந்த மாவு வறட்டிகளையே..///

    இந்த கஷ்டம் எப்போது தீரும் என்று கேட்டிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரபு தேசங்களில் உண்ணும் குப்பூஸ் காய்ந்த வறட்டிதானே ஜி

      நீக்கு
    2. அரபு குபூஸ் காய்ந்த வறட்டிக்கும்
      ஏமாந்த அடிமைகள்
      அந்த நாட்டிலேயே உண்டு
      என்பதைக் கண்ணாரக் காணும்போது
      விதியின் கொடுமையை
      என்னென்று சொல்வது!...

      உணவை வீணாக்குவதில்
      அரபிகள் தான் முதலிடம்
      என்பது குறிப்பிடத்தக்கது....

      நீக்கு
    3. உணவை வீணாக்குவதில் உலகிலேயே முதலிடம் அரேபியர் என்பதே சாலச்சிறந்தது ஜி.

      அதேநேரம் சில சூடானியினரை பார்த்து இருக்கிறேன் ஜா(Z)த்தர் தின்னும்போது சிதறி விழும் எள்'ளை பொருக்கி தின்பார்கள்.

      நான் ஏன் இப்படி ? என்று கேட்டதற்கு...
      உணவை வீணாக்குவது அராம் என்று சொல்வார்கள்.

      நீக்கு
    4. ஜி...

      உண்மை சொன்னீர் - அதுவும்
      உறைக்கச் சொன்னீர்...

      ஆயினும்,
      எள்ளைப் பொறுக்கும்
      சூடானியரும் இருப்பது
      இன்னும் வறுமையிலே!....

      நீக்கு
    5. //இன்னும் வறுமையிலே//
      இதுவும் நிதர்சனமான உண்மை.

      நீக்கு
  2. ஐயன்மீர்..
    வெறும் வறட்டி எனில்,
    அது மாடு போட்ட சாணி.. உலர்ந்தது என்றாகும்...

    மாவு வறட்டி என்பதே சாலச் சிறந்தது என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ள இந்த நேரத்தில்....

    ஏய்!.. யாரப்பா அது?...
    நிம்மதியாக இருக்க விடுங்க.. சாமியளா!?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவு வறட்டி என்று மாற்றி விட்டேன் ஜி

      நீக்கு
  3. அடடே... நண்பர் வெங்கட் இடம்பெற்றிருக்கிறாரே....

    வெறும் வாயை மெல்லாமல் அவல் மென்று கொண்டே செல்கிறார்கக்ள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்ஜி அவர் பதினெட்டுப்பட்டியும் அறியப்படும் ஆருடர்.

      அவல்தான் ஒரு மூட்டை முடிந்து விட்டதே...

      நீக்கு
    2. ஆஆஆவ் அது வெங்கட் நா. தான் என நினைச்சேன் இருப்பினும் டவுட்டாக இருந்தது.. அப்போ கரீட்டூஊஊ:)..

      நீக்கு
  4. ஹாஹா... பதினெட்டு பட்டியும் அறியப்படும் ஆரூடர்! நல்ல வேலை தான் :)

    சிநேக தோசக்காரர் பலே ஆளாக இருக்கிறார். கொஞ்சம் ஜாககிரதையாகவே இருக்க வேண்டும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இரண்டு நபருக்குமான தட்சிணையை வாங்கி கொண்டு கோடரிவேந்தனுக்கு ஆருடம் சொல்லாமல் டிமிக்கி கொடுத்த உங்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

      நீக்கு
  5. ரசித்தேன், அதிலும் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தியவிதத்தில்.

    வாழ்க தமிழ்னு போட்டுட்டு, Killergee என்று ஆங்கிலத்தில் போட்டுவிட்டீர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை வரவேற்கிறேன்.

      இருப்பினும் நான் சொல்ல வருவது இந்த படத்தை அரேபியர் முதல், உகாண்டாவினர் வரை இணையத்தில் காணும் பொழுது இதை உருவாக்கியது Killergee தான் என்பது தெரியவேண்டும்.

      இதன் காரணமாகவே நான் புகைப்படங்களில் பெயரை ஆங்கிலத்தை தவிர பிற மொழிகளில் எழுதுவதில்லை.

      நீக்கு
    2. நினைத்தேன். வெங்கட்ஜியை ஓமானி குல்லாயுடன் படம் போடும்போதே நினைத்தேன்.....

      நீக்கு
  6. கோபம் இல்லையென்றால் ஒன்று சொல்கிறேன் அளவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக கோபம் இல்லை ஐயா. ஆனால் தொடங்கிய கதையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமே...
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. //ஆத்தா அம்பகரத்தாளே அருந்தவச்செல்வன் செந்துரட்டியின் எதிர்கால நலபலன் சிறப்பு இயம்புவமைக்கு நல்லதொரு குறி சொல்வாயாக..//

    ஆத்தாவிடம் குறி கேட்ட பின் , மீண்டும் ஆந்தைமடை ஆருடர் ஆண்டியயப்பனிடம் ஏன் போகவேண்டும்?

    சிலருக்கு சோதிடம், குறி, சோழி போட்டுப் பார்ப்பது என்று போய் கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சில சோதிடர்கள் சில தெய்வங்களை முன்னிலைப் படுத்தியே சோதிடம் சொல்கின்றனர்.

      எனக்கு தெரிந்த சோதிடர் அம்பகரத்தாள் என்று வணங்கியே சோதிடம் சொல்கிறார் அவரை மையமாக வைத்தே எழுதினேன்.

      மற்றபடி குறி பார்க்கவில்லை ஆருடம் பார்க்கும் பொழுது அவர் அம்பகரத்தாளிடம் வேண்டி சொல்கிறார்.

      நீக்கு
    2. அது, "அம்புயக் கரத்தாள்" என்பதின் சிதைவாக இருக்குமோ? தாமரை மலரைக் கையில் தாங்கியவள் (இன்னொரு பெயர் பங்கயக் கரத்தாள். இதுவும் அதே அர்த்தம். அதுதான் அம்பகரத்தாள் என்று பேச்சுவடிவமாக ஆகியிருக்கும்.

      கோடரிவேந்தர்தான் வந்து சொல்லணும்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். மேலும் விபரமறிய வெங்கட்ஜியை தொடர்பு கொள்ளவும்.

      இவர் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஜோதிடர் அடிக்கடி அம்பகரத்தாளே என்றே சொல்வார். மேலும் அம்பகரத்தாள் துணை என்றும் எழுதுவார்.

      அவரை நினைத்தே இந்த வாக்கியத்தை அமைத்தேன். மீள் வருகைக்கு நன்றி தமிழரே.

      நீக்கு
  8. அடுக்கடுக்காய்ப் பொய் பேசும் கோடரியாரிடம் அகப்பட்டுக்கொண்ட செந்துரட்டிக்கு ஆவணியில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும்.....

    நடுநிசியில் அப்பம் சாப்பிடுவது, ஜோதிடரின் முன்னால் சீடையைக் கமுக்கமாய்த் தின்பது போன்ற கோடரியாரின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, எல்லாம் நல்லதாகவே முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான புரிதலோடு கருத்து சொன்னமைக்கு நன்றி.

      தங்களது வேண்டுதல் போலவே ஆத்தாள் அம்பகரத்தாள் நடத்தி வைக்கட்டும்.

      நீக்கு
  9. "பயணத்" தலைவரை இணைத்தது சூப்பர்...!

    பதிலளிநீக்கு
  10. சோதிடர் சொன்ன படி,
    அக்குறும்பு சினேகம் தொடர வாழ்வு இனிக்கட்டும்.

    வெங்கட் தான் அந்த சோதிடரா,. ஆஹா.
    அப்போ நல்லதே நடக்கட்டும்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா வெங்கட்ஜிதான் சோதிடர் நலமே விளையும்.

      நீக்கு
  11. நடை நன்றாக உள்ளது.
    வயதையும் அகவை என்று அழகு தமிழில் எழுதும் நீங்கள் வைத்தியரையும் மருத்துவர் என் மாற்றுமாய் வேண்டுகோள் வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாற்றி விடுகிறேன் நன்றி.

      நீக்கு
  12. அழகு தமிழில் அழகான பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள் பாராட்டுகள். இது போன்று யாரும் தற்போது எழுதுவதில்லை. தமிழாசிரியருக்கு முயற்சி செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தமிழாசிரியரா ? இதெல்லாம் டூட்டூ மச் மச்.
      சமூகம் சிரியோ சிரின்னு சிரிக்கும்.

      நீக்கு
  13. சத்தியமா எனக்கு அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை:).. போனதடவையோடு முடிந்துவிட்டதாக்கும் என இருந்தேன் தொடருதே கர்ர்:))..

    நகைச்சுவை நன்றாக இருக்கு ஆனா கோர்வைப்படுத்த முடியவில்லை என்னால..

    //ஒரு கையில் நமச்காரம் செய்தோம்.//
    ஒரு கையினால் செய்தமையால அது நமச்:) ஆக்குதுபோல:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி.

      முடிவை கொண்டு வரவேண்டுமே... என்ன செய்வது ?

      நீக்கு
  14. @Killerji, ஜோசியரைப் பார்த்ததும் சிப்பு சிப்பாய் வந்தது. ஞானியும் இதில் இடம் பெற்று விட்டார். இன்னும் யாரெல்லாம் வரப் போறாங்கனு பார்க்கக் காத்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பன் நல்ல விதமாகத்தான் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
  15. கோடரிவேந்தன் செந்தூரட்டிக்கு சோதிடம் பார்ப்பது 'பக்கத்து இலைக்கு பாயசம்' என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. கோடரிவேந்தன் அடுத்து குருகுலத்தில் என்ன செய்யப்போகிறாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல பழமொழியை நினைவு படுத்தினீர்கள் நன்றி.

      நீக்கு
  16. பாவம் வெங்கட்ஜி! அவருக்கும் ஆருடத்திற்கும் வெகுதூரம் அவரைப் போய் ஆருடம் சொல்பவர் ஆக்கிட்டீங்களே கில்லர்ஜி! ஹா ஹா ஹா

    அது சரி கோவே செதுடி யை தலையாட்டி பொம்மையாக்குகிறாரே...ஏற்கனவே அவர் கோவேயிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்....இன்னும் என்ன வில்லங்கம் செய்யப் போறாரோ இந்த கோ வே!! ஹா ஹா ஹா


    இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி தலைப்பாகையை மாட்டிக்கொண்டு சரியான தருணத்தில்
      ஆருடர் போலவே எதற்கு போஸ் கொடுத்தார் ?

      நீக்கு