தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 06, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

தொடக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங்கால மருமகளுக்கு என்றுரைக்கவும் எமது அன்னையாருக்கு மகிழ்ச்சி, எமது மனதுக்கும் இனம் புரியாத இன்பம் பெறுக்கெடுத்து ஓடியது.
ம்


நாளொளு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எங்கள் காதல் துளிர்த்து வளர்ந்தது யாம் எமது திண்ணையில்தான் துயில் கொள்வோம் அதிகாலையில் எழுந்து செங்கமலம் வாயிலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள் அப்படியே எங்கள் இல்லத்து வாசலிலும் யாமும் எழுந்து உட்கார்ந்து அவள் கோலம் போடும் அழகை ரசிப்போம் உடன் கவிதையும் எழுதுவோம் ஒருமுறை சுவடியை எடுத்து கவிதை தீட்டும் பொழுது எமது தந்தையார் கண்டு விட்டார் சட்டென சுவடியைப் பறித்து உள்ளே நுழைந்தவர் மாடத்து விளக்கொளியை ஏற்றி படித்து விட்டார்.
கவிதையில் என்ன எழுதினீர்கள் ?
காலையில் மாக்கோலமிடும் கோல மயிலே
நாம் பூ மாலையிடும் காலமெது கூவு குயிலே
அருமை செந்து தொடர்ந்துரையுரைப்பீரே..

மூன்று தினங்களாக ஒன்றும் இயம்பவில்லை நான்காம் தினம் வில்லு வண்டியை பூட்டியவர் புறப்படு எம்மோடு என்றார். எமது அன்னையார் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று கொடுத்த மூட்டையை வாங்கி கொண்டு வில்லு வண்டியில் ஏறினோம் அது ஊமையனார் கோட்டை இராமாநுசர் குருகுலத்தில் வந்து நின்றது தந்தையார் குருநாதரிடம் உரைத்து விட்டு சென்றார் தைப்பொங்கலுக்கும், கோயில் மஞ்சு விரட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வோம். என்று அதன் பிறகே தங்களது நட்பைப் பெறும் (துர்)பாக்கிய நிலையை பெற்றோம் கோடரியாரே....
சரி செந்து அதன் பிறகு தஞ்சம் புகுந்தோர் பட்டணம் செல்லும் பொழுது செங்கமலத்தை சந்தித்து காதலை வளர்க்க வில்லையா ?
இங்கு வந்த பிறகு முதல் பொங்கல் விழாவில் வழக்கம்போல மஞ்சு விரட்டில் மாட்டை அடக்கி கொம்பின் நுனியில் மாட்டி இருந்த தங்கச்சங்கிலி சவரனை எடுத்து வந்து எமது அன்னையிடம் கொடுத்தபோது சட்டென செங்கமலம் எமது அன்னையிடமிருந்து உரிமையுடன் பறித்து இது எமக்கே சொந்தம் என்று தமது கழுத்தில் அணிந்து கொண்டாள் எமது பெற்றோரும் நகைத்து விட்டு சென்று விட்டார்கள் அதன் பிறகு குடும்ப சம்மதத்தோடு எங்கள் காதல் அழுத்தமாக வளர்ந்தது காரணம் பிரிவின் சோகம்.
பிறகு விவாகம் செய்வதில் தாமதம் ஏன் ?

மறு வருடம் தஞ்சம் புகுந்தோர் பட்டணம் சென்ற பொழுது விதியின் விளையாட்டு ஒரு சினேகிதரால் வந்தது.
முன்பு யாரோவொரு கயவரால் என்றுரைத்தீர்களே... அவரா ?
ஆம் கோடரியாரே அவரே.....
எப்படி ?
அந்த சினேகிதர் நல்ல ஓவியர்.
அப்படியா ? மிக்க மகிழ்ச்சி யாமும் அதில் நாட்டமுள்ளவர் என்பது தாங்கள் அறிந்ததுதானே.... மேலும் உரைப்பீரே.

அந்த சினேகிதர் எமது சுவடியில் ஒரு ஓவியம் தீட்டினார் மேலும் எமது நினைவாக இவை தங்களிடம் எப்பொழுதும் இருத்தல் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் அதை மறுவருடம் தஞ்சம் புகுந்தோர் பட்டணம் கோயில் திருவிழாவுக்கு சென்ற பொழுது எடுத்துக்கொண்டு சென்றோம் மறுநாள் எம்மிடம் எமக்காக என்ன கொண்டு வந்து இருக்கின்றீர்கள் எனக்கேட்டவள் உரிமையோடு எமது மூட்டையை பிரித்தவள் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ‘’ச்சீ’’ என்று சொன்னதுதான் எனது கண்மணி செங்கமலம் எம்மிடம் உரைத்த கடைசி வார்த்தை அதன் பிறகு ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன.
ஒன்பது வருடங்களா ? சரி இனியாவது செங்கமலத்தை விவாகம் செய்யலாமே ?


அது முடியாது கோடரியாரே...
ஏன் ?
செங்கமலமும், இந்த சமூகமும், எமது அன்னையும், தந்தையாரும், மட்டுமல்ல, செங்கமலத்தின் கணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
செங்கமலத்துக்கு விவாகம் முடிந்து விட்டதா ?

ஆம் கோடரி விவாகம் முடிந்து தீர்க்க சுமங்கலியாய் ஆறு செல்வங்களையும் பெற்று நலமுடன் பூம்புகாரில் வாழ்வதாக செவி வழிச்செய்தி.
தங்களை செங்கமலம் வெறுத்து விட்டதற்கு காரணம் என்னவோ ?
அந்த ஓவியம்தான் எமது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்து விட்டது கோடரியாரே....
செந்து, அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது ?

ஒரு ஆடவரும், பெண்டிரும் வெளியில் உரைத்திட முடியாத நிலையில் இருக்கும் காட்சியே காரணம் அதை தீட்டிக் கொடுத்த அந்த சினேகிதரால் எமது வாழ்வு திசை மாறிய பறவையாய் ஆகி விட்டது.
ஆடவரும், பெண்டிரும் வெளியில் உரைக்க முடியாதவாறு..... எமக்கும் விளங்குகின்றது காதல் வயப்பட்ட ஒரு பெண்டிரிடம் அந்த ஓவியத்தை காட்டியது தவறுதானே... சரி அந்த ஓவியத்தை யாம் காண இயலுமா ?
அதை மறுதினமே நெல் அவித்துக் கொண்டு இருந்த எமது அப்பத்தா நெருப்புக்கு இரையாக்கி விட்டு எம்மைக் காறி உமிழ்ந்து துப்பியது இன்னும் மறக்க இயலவில்லை எம்மால்.
சரி இந்த ஓவியம் தங்களது தந்தையாருக்கு தெரியாதுதானே...

செங்கமலம் அழுது கொண்டே அவளது இல்லம் செல்ல, தொடர்ந்த எமது அன்னையார் அவளிடம் விபரமறிந்து தந்தையாரிடம் முறையிட்டு விட்டார்.
தங்களது தந்தையார் அடிக்க வில்லையே... ?
எமது தந்தையார் எம்மை ஒருபோதும் அடித்ததில்லை கோடரியாரே...
தாங்கள் கொடுத்து வைத்தவர் எமது தந்தையார் எனில் இத்தருணத்தில் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு இருப்பார்.

யதார்த்தத்தில் தங்களைத்தான் இப்படி செய்ய வேண்டும்.
செந்து தாங்கள் உரைப்பது விளங்கவில்லையே...
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பார்களே அதுதான் கோடரியாரே.
ஆம் அந்த ஓவியக்கயவன் செய்த தவறால் தங்களது காதல் முறிவுக்கு வந்து விட்டது அறிந்து வேதனைப்படுகின்றேன் இப்பொழுதும் அந்தக் கயவனை சினேகிதர் என்கின்றீர்களே சரி யாமறியாத அந்தக் கயவன் யார் ?


அவரைக் கயவர் என்றுரைக்காதீர்கள் கோடரியாரே...
சரி யாரது ?
கோடரியாரே உண்மையிலேயே தங்களுக்கு நினைவில் இல்லையா ?
எமக்கு அறியாததால்தானே செந்து வினவுகின்றேன் ?

க்கும் தங்களுக்கு எப்படி நினைவில் நிற்கும் ? மதிய உணவு அருந்தும் தருணத்தில் கரைத்துக் குடித்த இரண்டு கம்மங்கஞ்சி உருண்டையை உடன் மறந்து சமையல் ஐயாவிடம் ஒன்று என்று சொல்லும் மறதிக்கு சொந்தக்காரர் ஆயிற்றே.
யாம் கம்மங்கஞ்சி உருண்டையை மறந்ததற்கும், ஓவியத்துக்கும் ஏதும் பந்தம் உண்டோ செந்து ?  
கோடரியாரே அந்த ஓவியத்தை தீட்டிக் கொடுத்து இது எம்மிடம் ஞாபகச் சின்னமாக என்றும் வைத்துக் கொள்வதுதான் நமது நட்புக்கு களங்கம் உண்டாக்காமல் இருக்குமென்று எம்மிடம் அன்னத்தின் மீது ஆணையாக சத்தியம் பெற்றுக் கொண்டீர்களே நினைவில் இல்லையா ?
செந்து தாங்கள் இயம்பியதை கேட்டு மனம் வேதனிக்கின்றது யாம் தங்களது வாழ்வுக்கு இடையூராக இருந்து விட்டேனே.... வெட்கப்படுகின்றேன்.

மறந்து விடுங்கள் கோடரியாரே தாங்கள் பிறரின் வாழ்க்கைக்கு இடையூராக இருப்பது புதிதான விடயமா ? காலம் முழுவதும் அதைத்தானே செய்கின்றீர்கள் எல்லாம் மறந்திடலாம் ஆனால்... எமது தந்தையார் நமது குருநாதரிடம் உரைத்த வார்த்தைகள் இன்றும் எமது செவிகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
என்ன சொன்னார் ?

ஓவியத்தை கண்டதும் உடன் வில் வண்டியில் எம்மோடு புறப்பட்டவர் குருகுலம் வரும்வரை எம்மோடு எந்தவொரு உரையாடலும் இல்லை யாமும் வெட்கத்தால் சிரம் தாழ்த்தி இருந்தோம் குருநாதரிடம் ஒப்படைத்து இவனது கண்ணை மட்டும் விட்டு ஏது வேண்டுமாலும் செய்யுங்கள் குருகுலவாசம் நிறைவடையும்வரை யாம் அழைத்துச் செல்ல வரமாட்டோம் என்றுரைத்து விட்டு சென்று விட்டார் அதுதான் எமது மிகப்பெரிய வேதனையாக இருக்கின்றது கோடரி.
செந்துரட்டி தாங்கள் அதையே நினைந்து வருந்தாமல் விரைவில் விவாகத்துக்கான செயலில் இறங்க தங்களது தந்தையாருக்கு தகவல் அனுப்புங்கள்.

என்ன... விவாகத்தை நடத்தச் சொல்லி நாமே தந்தையிடம் வினவுவதா ? கோடரியாரே சுயமாகத்தான் இருக்கின்றீர்களா ? இதை சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? நம்மை இழிவாக ஏளனம் செய்ய மாட்டார்களா ?
செந்து உலகம் மாறும் விந்தைறியாமல் இயம்புகின்றீர் கேப்பைக்களி, கம்மஞ்சோறு மாறி இப்பொழுது நெல்ச்சோறு என்று ஏதோ புதுமையாக உணவருந்த தொடங்கி விட்டார்கள்.

அதற்காக.... எமது கண்மணியை மறந்து மற்றொரு பெண்டிரை விவாகம் செய்வதா ? அதையும் நாமே தந்தையிடம் வினவுவதா ?
செந்து காதல் என்பது இறைவனுக்கு படைக்கும் பொங்கச்சோறு போன்றது அதை இதமான சூட்டோடு உண்டால் அலாதியான இன்பம் ஆறிப்போனால் சுவை மாறிவிடும் தங்களது காதலும் அவ்வகையே...


க்கும் மிகவும் அழகாக இருக்கின்றது காதலைக் குறித்த தங்களது ஒப்பீடு கோடரியாரே தயை கூர்ந்து இதை பிறரிடம் உரைத்திடாதீர் நெல்லைக்காரர்கள் கேட்டால் கல்லை எடுத்து எறிந்து விடுவார்கள் தங்களுக்கு உண்பதன்றி வேறொன்றும் அறியாதா ?
மறந்து விடுங்கள் செந்து இந்த செங்கமலம் இல்லையெனில் வேறொரு தங்கமலம் பிறந்திருக்க கூடும்.
தங்க மலமா ? தாங்கள் கூறும் நாமமே தவறாகின்றதே...
அப்படி எண்ணாதீர் தங்-கமலம் அதாவது தங்க தாமரை இதுவும் மலரின் நாமம்தானே...

எப்பொழுதுமே தங்களின் சிந்தை உள்ளேற்றுவதிலும், அதை வெளியேற்றுவதிலுமே இருக்கின்றது.
செந்து அதோ அந்த மரத்தடியில் ஒருவர் தலைப்பாகையுடன் அமர்ந்திருப்பவர் ஆருடம் பார்ப்பவர் போலவே தெரிகின்றார் நமக்கு எப்பொழுது விவாகம் நடக்கும் என்பதை வினவலாம்.

இல்லை கோடரி நாம் சிறார்கள் விவாகத்தைப் பற்றி வினவினால் ஆருடர் நம்மை இழிவாக நினைக்க கூடும் வேண்டாம்.
தாங்கள் அமர்ந்திருந்தால் போதும் யாம் இயம்பிக் கொள்வோம் வாருங்கள்.

தொடரும்...

இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

43 கருத்துகள்:

  1. ஆர அமர -
    பிறகு வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி பதிவு 2 படிக்கவில்லையோ ஜி ?

      நீக்கு
    2. முந்தைய பதிவையும் வாசித்தேன்...
      பிறகு சொல்கிறேன்...

      நீக்கு
  2. ஓவியன் செய்த
    உருப்படாத் தனத்தால்

    காவியக் காதல் ஒன்று
    கரியாய்ப் போனதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி சகுனிகள் எல்லா காலங்களிலும் வாழ்கின்றனரே..

      நீக்கு
  3. துளசி: நன்றாகச் செல்கிறது கில்லர்ஜி. தொடர்கிறோம்.

    கீதா: அந்த தங்கமலம்! நாமமே சரியில்லையே னு செந்துரட்டி வருந்துகிறார் அந்த தங்கமலத்துக்கும் ஆப்பு வைச்சுறாம இருக்கணும் இந்த கோடரி. பாவம் செந்துரட்டி ரொம்பவே இன்னொசென்டா இருக்காரே!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இருவரின் கருத்துரைக்கும் நன்றி.
      எங்களுக்கு இதுதான் வேலையா ?

      நீக்கு
  4. ஓவியத்தால் வீணானதே இன்ப வாழ்வு! இதற்கெல்லாமா கோபித்துக் கொள்வார்கள்...! அடப்பாவமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அன்றைய நிலைப்பாடு இப்படித்தானே... அன்று முப்பது வயதுவரை உலகம் அறியாது.

      இன்று மூன்றே வயதில் 'அயலவ்வு' சொல்கிறதே...

      நீக்கு
  5. செங்கமலத்தை நோக்கி செந்துரட்டி எழுதிய இருவரிக் கவிதை நல்லாருக்கு கில்லர்ஜி.

    துளசி, கீதா

    கீதா: கூவு மயிலே என்பது கூறு மயிலே நு சொன்னா சரியா இருக்குமோ...?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினேகிதர் செந்துரட்டி 'கூவு குயிலே' என்றுதானே எழுதி இருக்கிறார் ?

      நீக்கு
    2. கில்லர்ஜி ஓ ஸார் குயிலேனு வந்துருக்கணும் ஸாரி மயிலேனு வந்துருச்சு, ஹா ஹா ஹா ஹா...கூவு க்குப் பதில் கூறு என்று வந்திருக்கலாமோனு தோன்றியது ஜி...நான் தேம்ஸ்காரக போலகவிதாயினி/கம்ப பாரதி இல்லையே...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஐயோ இப்ப ஊரணிப்பா(ர்)ட்டி வந்துருவாங்களே....

      நீக்கு
  6. சிறார்களுக்குத் திருமணம்? அதுவும் காதலித்த பெண் திருமணம் ஆகி ஆறு குழந்தைகள் பெற்ற பின்னும் காதலித்தவர் சிறாரா? தலையே சுத்துது போங்க! இப்படி எல்லாம் தர்க்கபூர்வமாக ஜிந்திப்பதால் இது ஒண்ணும் மண்டையில் ஏறலை. அது சரி, கடைசியில் செந்தூர் கல்யாணம் பண்ணிக் கொண்டாரா இல்லையா? யாரை? அவர் நண்பர் ஏன் அப்படி ஒரு ஓவியத்தை வரைந்து கொடுக்கணும்? இதில் ஏதோ இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இதில் செந்துரட்டி சிறார் அல்ல! கோடரிதான் உலகம் அறியாத பச்சை மண்ணு ஆனால் கோக்குமாக்கு பேர்வழி.

      அவர் முன்பு விளையாட்டாக வரைந்த ஆபாச ஓவியத்தை செந்துரட்டிக்கு கொடுத்ததால் வந்தவினை செங்கமலம் செந்துரட்டியை வெறுத்து விட்டதால் வேறொருவருக்கு திருமணம் முடிந்து நலமுடன் பூம்புகாரில் வாழ்வதாக செந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.

      ஆனால் செங்கமலத்தை மறக்க இயலவில்லை மற்றபடி இன்னும் காதல் இல்லை. செந்து அவ்வளவு மோசமானவரும் இல்லை.

      பிறகு செந்துக்கு திருமணம் நிகழ்ந்ததா ? என்பது இனி தெரியவரும்.

      விளக்கம் கொடுத்து விட்டேன் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
    2. அந்த வீடும் திண்ணையும் மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள என் அப்பாவின் பூர்விக வீடு மாதிரியே இருக்கு. முன்னரே சொல்ல நினைத்துச் சொல்ல மறந்துட்டேன். :)

      நீக்கு
    3. ஆம் எமது தாத்தா கட்டியதும் இதைவிட பெரிய திண்ணை வீடு.

      இன்று இடித்து குலதெய்வ கோவிலாக கட்டி விட்டோம்.

      நீக்கு
  7. அடடா.,. ஒரு ஓவியம் காதலுக்கு பகையாகி விட்டதே.....

    கோலம் படம் - நன்றி!

    தலைப்பாகை அணிந்த ஆரூடம் பார்ப்பவர் வரப் போகிறாரா.... காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி காத்திருப்பதின் காரணம் யாம் அறிவோம் நன்றி.

      நீக்கு
  8. அருமையான காதல் தோற்கிறதே. இனி வரும் கமலமாவது செந்துவை
    மகிழ்விக்கட்டும். நல்ல உரை நடைக் கவிதை.
    தேவகோட்டையாரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. கடந்த இரு பகுதிகளைக் காட்டிலும் கதையில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.

    'கசமுசா' ஓவியம் வரைந்து செந்துவின் காவியக் காதலைக் கருக்கிச் சாம்பலாக்கிய கோடரியார், தங்கமலம் செங்கமலம்னு அவர் மனதில் வெங்காமத்தை[?] விதைத்து ஜோதிடர் முன் நிறுத்தியிருக்கிறார்.

    ஜோதிடப்புரட்டு செந்துவின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடப்போகிறதோ என்ற கவலையில், கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    தொடருங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே பதிவை எனது போக்கின் வழியே மிகத்தெளிவான புரிதலோடு தொடர்ந்து வருவது கண்டு மிக்க நன்றியோடு, மகிழ்ச்சியும்.

      நீக்கு
  10. //காலையில் மாக்கோலமிடும் கோல மயிலே
    நாம் பூ மாலையிடும் காலமெது கூவு குயிலே//

    நன்றாக இருக்கிறது.

    //கோடரியாரே அந்த ஓவியத்தை தீட்டிக் கொடுத்து இது எம்மிடம் ஞாபகச் சின்னமாக என்றும் வைத்துக் கொள்வதுதான் நமது நட்புக்கு களங்கம் உண்டாக்காமல் இருக்குமென்று எம்மிடம் அன்னத்தின் மீது ஆணையாக சத்தியம் பெற்றுக் கொண்டீர்களே நினைவில் இல்லையா ?//

    கோடாரியார் அந்த ஓவியத்தை ஏன் கொடுக்க வேண்டும்? நட்புக்கு களங்கம் வராமல் இருக்குமா?
    இது என்ன கதை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

      கோடரி விளையாட்டுப்பிள்ளை தனது ஓவியத்தை முன்னொரு நாள் கொடுத்து இருக்கிறார்.

      அதை தற்செயலாக செங்கலம் பார்த்து விட்டதால் காதல் முறிவு ஏற்பட்டு திருமணமும் வேறொருவருடன் நிகழ்ந்து விட்டது.

      மற்றபடி செந்துரட்டியின் வாழ்வைக் கெடுக்கும் எண்ணம் கோடரிவேந்தனுக்கு கிடையாது. வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. கோடரி என்ற பெயர் உள்ளதாலேயே (காதலை) வெட்டிவிட்டாரோ கோடரி வேந்தன்? ஆனால் அவரை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. அந்த படத்தை செந்துரட்டி தான் கொண்டு சென்ற மூட்டையில் எல்லோரும் பார்க்கும்படி வைத்ததும் தவறு தானே. கோடரி வேந்தன் செந்துரட்டிக்கு திருமணம் நடக்க எவ்வாறு உதவ இருக்கிறார் என அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கோடரி கொடுத்த ஓவியம் யதார்த்த நிகழ்வு. அதன் காரணமே திருமணம் தடைபெற்றது.

      காத்திருப்புக்கு நன்றி.

      நீக்கு
  12. செங்கமலத்துக்காக எழுதிய கவிதை அருமை. ஓவியம் பற்றிய சந்தேகம் இருந்தது. கோமதி அக்கா கேட்டு , உங்க பதிலை வாசித்து அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஐயமிருந்தால் கேள்விகள் கேட்கலாம் அதை தீர்ப்பது எனது கடமையே...

      நீக்கு
  13. இந்த இடுகை ரசிக்கும்படி இருந்தது.

    "காலையில் மாக்கோலமிடும் கோல மயில்" - கவிதை அருமையா வந்திருக்கு.

    "காதல் என்பது இறைவனுக்குப் படைக்கும் பொங்கல்" - அருமையா எழுதியிருக்கீங்க.

    இடுகையில் விரவி இருக்கும் நகைச்சுவை மிகவும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பதிவை மிகவும் ரசித்தது கண்டு கற்கண்டு பொங்கல் போலவே மகிழ்ச்சி.

      நீக்கு
  14. 90 கள் வரை நாம் கேட்டு றசித்த வானொலி நாடகத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்.
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  15. செங்கமலத்தின் கணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.....படித்துவிட்டு நினைத்து நினைத்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  16. அருமையான கருப்பொருள்
    சுவையாகச் சொல்கிறீர்கள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. ஓவியம் ஓவியத்திற்கு தடையானதோ நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கவிஞரே அதுதான் நடந்தது. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. காதல் பற்றிய விளக்கம் அருமை ஜி... அடுத்த பதிவுக்கு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு