தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 23, 2018

நீ வாழ பிறரைக்கெடு


வணக்கம் நட்பூக்களே... சமீபத்தில் ஐயா திரு. டிராபிக் ராமசாமி அவர்கள் யூட்டியூபில் பேசியதைக் கேட்டேன் அதில் அவர் சொன்னது சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஒருமுறை சென்று இருந்தேன் அங்கு கடமையை செய், பலனை எதிர் பார் என்று ரஜினிகாந்த் எழுதி வைத்து இருக்கின்றார். என்றும் இவரால் எப்படி மக்களுக்கு நன்மையை செய்ய முடியும் ? என்று கேட்டு, அதன் பிறகு அந்த மண்டபத்துக்கு நான் செல்வதில்லை என்றும் சொல்லி இருந்தார்.

நான்கூட ஏதோ கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று எழுதி வைத்ததை யாரோ க்காதே என்பதை அழித்து வைத்து விட்டார்கள் போல என்றே நினைத்தேன். அப்படியானால் நீ வாழ பிறரைக் கெடுக்காதே என்பதில் க்காதே இதை நீக்கி விட்டு நீ வாழ பிறரைக்கெடு என்று எடுத்துக் கொள்ளலாமா ? என்று என்னிடம் யாரும் கேட்ககூடாது.

மேலே பார்த்தீர்களா ? மேலும் இது புகைப்படமும் அல்ல காணொளியை நிறுத்தி வைத்து உங்களுக்காக படமெடுத்தேன் இதில் எமது சித்து வேலைகளை செய்யவும் இல்லை. இது அழித்து வைக்கவில்லை அவரது வாசகமே இதுதான் என்பது உண்மையாகி விட்டது. எந்த வேதத்திலாவது இப்படி சொல்லப்பட்டு இருக்கின்றதா ? எது எப்படியோ ரஜினியின் தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். ஆம் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று சொல்லி விட்டு தமிழ் நாட்டில் பாதுகாப்பாக வாழமுடியும் என்ற அசாத்தியமான நம்பிக்கை. இதே வார்த்தையை எந்த தமிழனாவது கர்நாடகத்தில் இப்படி சொல்லி விட்டு உயிருடன் வந்து விடமுடியுமா ?

தமிழக போராட்ட மக்களை சமூக விரோதிகள் என்று சொல்லி விட்டு கர்நாடகத்தில் தனது காலா படத்தை வெளியிடுவதற்காக, கன்னட மொழியில் சகோதரர்களே நான் எந்த தவறும் செய்யவில்லை மன்னிச்சுக்கங்க என்ற ரஜினிக்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க தன்மானம் இடம் தரவில்லை. காரணம் என்ன ? தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவான் என்பதை ரஜினியும் அறிந்து கொண்டதே....

தூத்துக்குடி சம்பவத்தால் ரஜினிகாந்துக்கும், பிக்பாஸ் தொகுப்பாளர் நிகழ்ச்சியால் கமல்ஹாசனுக்கும் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சறுக்கலைத் தரும் என்பது நிச்சயம். இருப்பினும் தமிழர்கள் மறதி குணம் உள்ளவர்கள் என்பதையும் இங்கு நினைவு கூர்கிறேன்.

அயல் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு உள்ள உணர்வுகூட தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு இல்லையே.... மற்ற ஊர்களை விட்டுத் தள்ளுங்கள். இதோ தூத்துக்குடியில் வாழும் மக்களாவது காலாவை புறக்கணித்து இருக்க வேண்டாமா ?

கடைசி நேர இணைப்பு தோழர் திரு. S. Raman Vellore அவர்களின் இப்பதிவை படியுங்கள். http://ramaniecuvellore.blogspot.com/2018/07/blog-post_35.html

48 கருத்துகள்:

 1. கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் எதார்த்ததை அப்படி எழுதி இருக்கிறார் என்று சொல்லாம்.

  அப்புறம் ரஜினி கமலுக்கு அரசியலில் சருக்கு என்று சொல்லி இருக்கீங்க அவர்கள் அரசியலில் எங்கே ஏறி இருக்குகிறார்கள் ஏறினால்தானே இற்ங்குவதற்கு.... அவர்கள் அரசியல் சாக்கடையில் குதித்து இருக்கிறார்கள் நீந்த தெரிந்தால் நாறிப் போய் கரை சேருவார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே குதித்து சந்தனத்தோடு வெளியேறினால் சரிதான்.

   நீக்கு
 2. ஆவ்வ்வ்வ்வ் நல்லவேளை மீ ட 1ச்ட்டூ இல்லை இன்று .. ரஜனி அங்கிள்.. நீங்க எங்கிருக்கீங்க?:)) ஹா ஹா ஹா ஹையோ கில்லர்ஜி விரட்டுறார்ர்ர்ர்... ஓடியே தப்பிடுவோம்ம்ம்..:).

  http://www.likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினி அங்கிள் காப்பாற்றுவாரா ? என்னை போட்டுக் கொடு்த்துடாதீங்க...

   நீக்கு
 3. இருங்க வரேன் சாப்பிட்டுக்கிட்டு அதைப் பத்தி வம்படிச்சுட்டு இருக்கேன்..வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க வம்படியையும் எழுதுங்க...

   நீக்கு
 4. தலைப்பு நல்லாவே இருக்கு.

  இந்தக் கால நடைமுறையாகி விட்டது இது.

  ரஜனி அரசியலுக்கு வருவதற்கு முன்னாலேயே இது மாதிரி பதிவுகள் அவருக்கு நல்ல விளம்பரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பை பாராட்டியமைக்கு நன்றி நான்தான் விளம்பரப்படுத்தணுமா ?

   நீக்கு
 5. கில்லர்ஜி... பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்ய தமிழ்நாட்டில் 100 பேர் இருந்தாலே அதிகம். நாம செய்யற எந்தக் காரியமும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துத்தான் இருக்கு. அதுனால ரஜினி அவர் ரசிகர்களை கடமையைச் செய்யுங்க, பலனை எதிர்பார்த்தாலும் பரவாயில்லைனு சொல்றார். அதுல என்ன தப்பு?

  ரொம்ப ஒழுக்கமானவங்க, நல்லவங்க மட்டும்தான் அரசியலுக்கு வரணும்னா, அப்படி யார் அரசியலில் இருக்காங்க? 3 லட்சம் பேர் இருக்கற தொகுதியில் டிராபிக் ராமசாமி போன்றவர்களுக்கே 1000 வாக்குகள்தான் வருது தமிழ்நாட்டுல. அப்புறம் எப்படி அரசியல்ல நல்லவங்க வருவாங்க?

  மக்கள்ல 0.5% பேர் நல்லவங்களா இருந்தாலே அதிகம். அது 60% ஆகும்போதுதான் நல்ல தலைவர்கள் கிடைப்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தமிழரே 90 சதவீதம் அல்ல 99 சதவீதமே சொல்லுங்கள். ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் நல்ல உள்ளம் படைத்த தியாகி இன்று குடும்ப உறவுகளையே இழந்து தனிமையில் நிற்கிறார் இது யாருக்காக ? மக்கள் உணரவே மறுக்கின்றார்கள்.

   நீக்கு
 6. சினிமா நடிகர்கள் சொல்வதை எல்லாம் தீவிரமாக நினைக்காமல் இருந்தாலே போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஆளால் அதுதானே இன்று வேதவாக்கா இருக்கின்றது.

   நீக்கு
 7. இது தப்பான அணுகுமுறை இல்லையா. அரசியல் ஒரு சாக்கடை இறங்க மாட்டேன் என்றவர்
  நல்ல மனிதருக்கு இதுதான் அடையாளமா.

  இன்னோரு அரசியல் வாதி.வராமல் இருந்தால் நல்லது.
  நான் கோடரி வேந்தனையும் செந்துவையும் எதிர்பார்த்து வந்தேன் தேவகோட்டையாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா அரசியல்வாதிகள் நாளும், பொழும் பெருகி விட்டார்கள்.

   கோடரிவேந்தன் எட்டாம் முடிவு பகுதி வெளியாகி விட்டதே...

   நீக்கு
 8. இதெல்லாத்தையும் ஒதுக்கிப் போட்டுட்டு நடங்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இனி இப்படித்தான் போகணும்...

   நீக்கு
 9. நம் மறதி குணம் அதிகம் தான்.. ஆனால், இப்போது விழிப்புணர்வு விழித்துள்ளது... அது மேலும் தொடர்ந்தால், மக்கள் தகுந்த பதில் தருவார்கள் என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழப்புணர்வு வந்தால் நாடும், வீடம் நலம் பெறும் ஜி வரட்டும் தங்களது அரசியல் பதிவு.

   நீக்கு
 10. நாம் முக்கியத்துவம் கொடுத்து பெரிதாக்க வேண்டாம். விட்டுவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரையை ஏற்கிறேன் நன்றி.

   நீக்கு
 11. வழக்கமாக ரஜினி மட்டுமே மேடையில் அமர்கிறார். பல ஆண்டுகள் கடமையைச் சிறப்பாகச் செய்த ரசிகர் மன்றத் தலைவர்களுக்குக்கூட அந்தப் பாக்கியம்[கடமைக்கான பலன்] கிடைப்பதில்லையே! பலனை எதிர்பார் என்று சொல்லும் இவர்தான் அதைத் தடுக்கவும் செய்கிறார்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அருமையான விளக்கம் சொன்னீர்கள் இதை உணர்வார் இல்லையே தமிழகத்தில்.

   நீக்கு
 12. கடமையை செய்யாமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள்.
  கடமையை செய்த பின் பலனை எதிர்பார் என்று சொல்கிறாரோ!
  ஓரு செடி வளர வேண்டும் என்றால் அந்த செடிக்கு பாதுகாப்பு வேலி, தண்ணீர், சூரிய ஒளி, மற்றும் கவினிப்பு இத்தனையும் கொடுத்தால் தான் நன்கு வளரும்.
  ஒன்றுமே செய்யாமல் எப்படி செடியிலிருந்து பலனை எதிர்பார்க்க முடியும்?
  இது அவருக்கு புரிந்தால் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இவர்களெல்லாம் வந்தவுடன் முதல்வர் பதவியில் அமரவேண்டும் என்ற பேராசைதான். நல்லகருத்தை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. இமயமலை பகவத் கீதையில் அப்படித்தான் சொல்லியிருப்பதாக அவர் சொன்னால்
  உங்களால் மறுக்க முடியுமா கில்லர்ஜி..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நான் இப்படி கேள்வி வரும் என்பது எமது லிஸ்ட்லயே இல்லையே...

   நீக்கு
 14. அவர் ஏதோ சொல்லிவிட்டுப் போகட்டும் கில்லர்ஜி...நீங்க சொல்லியோ யார் சொல்லியும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. பலன் எதிர்பாராமல் செய்வது என்பதைக் கடைபிடிப்பது என்பது அத்தனை எளிதல்ல. இதுக்கெல்லாம் நாம் ரொம்ப திங்க் பண்ண வேண்டாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் எழுதுவதும் ஒன்றும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. நமக்குள் பேசிக்கொள்வதைத் தவிர...

  சரி சரி நீங்க சொல்வது காதுல கேக்குது...நான் எந்த பலனும் எதிர்பார்க்கலை...எழுதி வைப்போம்...புகுந்தால் நல்லது இல்லைனாலும் ஓகே...என்றுதானே ஜி?!! ஹா ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முடிவை நீங்களே சொல்லி விட்டீர்கள், ஊதுவதை ஊதி வைப்போம் கேட்டால் நிறுத்தி வைப்போம்.

   இல்லையேல் ஊதியே செவிச்சவ்வை கிழிய வைப்போம்.

   நீக்கு
 15. பலனை எதிர்பாராமல் செய் என்னும் கிட்டத்தட்ட பொருளில் அத்தியாயம் 2-ல் சுலோகம் 47 சொல்கிறது” வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய்,வினைப்பயனில் ஒரு பொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவன் ஆய்விடாதே, வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே கீதையை தமிழில் எழுதி இருந்தென் கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதே என்று எங்கும்படிக்கவில்லைஇப்படி கீதையில் கூறாததை கூறுவதாகப்பலரும் எடுத்தாளக் காண்கிறேன் எல்லோரும் கீதையில்சொல்லி இருப்பதுபோல் நடக்க ஆரம்பித்து விட்டால் இது ஒரு வேளை கொலை பூமியாக மாறலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

   நீக்கு
 16. சாதாரண மக்களால் பலன் எதிர்பார்க்காமல் கடமையை செய்வது என்பது முடியாத காரியம் என்றே நினைக்கிறேன். அப்படி யாரேனும் இருப்பராயின் அவர்களை மகான்கள் வரிசையில் வைக்கவேண்டும்.

  போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததாலேயே கலவரம் நிகழ்ந்தது என்று ரஜினி பேசியதாக நினைவு. போராடியவர்களை அவர் அப்படி சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காமராஜர் போன்றவர்களைத்தான் சொல்லமுடியும். கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 17. தங்களின் இந்த பதிவின் இறுதி வரியில் உள்ள வினாவில் உள்ள ஆதங்கம் நாம் மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என சொல்லாமல் சொல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே சூட்டோடு சூடாக மறந்து விட்டார்களே... இனி தேர்தல் வரும்போது நினைவு இருக்குமா ?

   நீக்கு
 18. தமிழனின் அசாத்திய பொறுமைக்குணமே அவனுக்கு எதிரியாகிட்டுது. கமல் எப்படியோ ஆனால் ரஜினி பக்கா சுயநலவாதி என்பது என் கருத்து. அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனா, அரசியலுக்கும், பொது வாழ்க்கைக்கும் அவர் சரிப்பட்டு வரமாட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது பொறுமை குணம்போல் தெரியவில்லை. எருமை மாட்டில் மழை பெய்தது போலாகி விட்டது.

   நீக்கு
 19. நண்பரே:

  கீதை, குர் ஆன், பைபில் எல்லாம் அப்படியே ஃபாலோ செய்து வாழ்பவர்கள் (இங்கே பின்னூட்டமிட்டவர்கள், முக்கியமாக நீங்கள்) கையைத் தூக்குங்கள்.

  கடந்த 1 வருடமாக உங்க வாழ்க்கையில் இந்நூல்கள பாலோ செய்தீங்களா??

  வேலைக்கு போய்விட்டு, மாதச் சம்பளம் வர்லைனா மதுரைத்தமிழன் அடுத்த மாதமும் வேலைக்கு போவாரா? அவர் வீட்டு பில் எல்லாம் எப்படி கட்டுவார்? சும்மா பதிவெழுதுவதுபோல் ஒளறீத்தள்ளக் கூடாதுனு அவருக்கு புரிவதில்லை.


  நண்பரே: நீங்க பதிவெழுதுவது கடமை. அதில் பின்னூட்டம் எதிர்பார்ப்பது பலனை எதிர்பார்ப்பது.

  ஒவ்வொரு மாதமும் எனக்கு பே செக் வரனும். இல்லைனா நாம் எப்படி என் பில் கட்டுவேன், சாப்பிடுவேன்/?? கீதையை குப்பையில் போடுங்க. என் வாழ்வுக்கு உதவாது அது.

  உங்க நெஞ்சில் கை வைத்து செல்லுங்க, நல்ல பின்னூட்டம் வரனும்னு எதிர் பார்க்க மாட்டீங்களா? மாதம் சம்பளம் வர்னும்னு எதிர்பார்க்க மாட்டீங்களா?

  நீங்களா விதண்டாவாத டைட்டில் ஒன்ன கொடுத்துக்கிட்டு.. ஏங்க சும்மா போட்டுக்கிட்டு,,

  I do my work sincerely, I do expect a pay-check every month.

  Seems like too many LIARS here talking NONSENSE!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கு இந்த நூல்களை நான் மதிப்பவன் மட்டுமே காரணம் சமூகத்தோடு சில விடயங்களில் ஒத்து வாழ்ந்தாக வேண்டும். மற்றபடி எனக்கு அவசியமில்லாதது.

   நான் இறைவணக்கம் செய்வதில்லை ஆனால் ஓர் சக்தி உண்டு என்பதை நம்புகிறேன்.

   மனசாட்சிக்கு பயந்து இதுவரை நேர்மையாக வாழ்ந்தது 100% உண்மை.

   உழைப்புக்கு ஊதியம் எதிர்பார்ப்பது அவசியமானது.

   கடமை என்பது பொதுநலத்துக்காக நாட்டைக் காப்பது இராணுவவீரர்களாக இருந்து சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு...

   நான் பதிவுக்கு கருத்துரையை எதிர்பார்ப்பது உண்மையே... ஆனால் எனக்கு சாதகமானது மட்டுமே என்று நினைத்ததில்லை. அப்படியானால் எதிர் பதத்தையும் நான் வெளியிடத்தானே செய்கிறேன்.

   சம்பளம் என்பது செய்த வேலைக்கு கூலி. கூலி இல்லையென்றால் வேலை அவசியமேயில்லை.

   வருகைக்கு நன்றி.
   (செல் வழி உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாடா)

   நீக்கு
 20. மார்க்கெட்டிற்காக வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள் மக்கள்தான் பெரிசா எடுத்துக்கிறாங்க தங்கள் கருத்து நியாயமானது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ரத்தினச் சுருக்கமாக சொல்லிய விதம் அழகு.

   நீக்கு
 21. அரசியலிலும் நடிப்பு - நடிகர்களை நம்பி எதையும் செய்யத் தயாராக இருக்கும் ரசிகர்கள்....

  வேறென்ன சொல்ல. பல வருடங்களாக நடிகர்களைத் தானே முதல்வர் இருக்கையில் அமர்த்துகிறோம் நம் மாநிலத்தில்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நடிகர்கள் நாடாள வேண்டுமென்பது தமிழகத்தில் எழுதப்படாத சட்டம்.

   நீக்கு
 22. சரியான ஆப்பு என்பது இதுதானோ...? நடிகர்கள் நாடாள வந்த கதை ஒன்று கதை உள்ளது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆப்பு மக்கள் வைக்கவேண்டும் நண்பரே

   நீக்கு
 23. ரஜினிகாந்தை மக்கள் ரசித்தார்கள்,
  இப்போது பலரும் தூஷிக்கிறார்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிதர்சனமான உண்மையை சொன்னீர்கள் நண்பரே...

   நீக்கு