தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 01, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (1)


ருத்ரோத்காரி வருடம் 1576 சுமார் 400 ஆண்டுகளுக்கும் முன்பு...

பாரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும் மாணாக்கர்கள் செந்துரட்டியும், கோடரி வேந்தனும் உழுவனூர் நாட்டாமை திருவாளர். மோகனரங்கம் அவர்களின் அரண்மனையின் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணங்களை அள்ளி சிறிதே தூரமுள்ள குப்பை மேட்டில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டு இருந்தனர் இன்னும் இரண்டு தொழுவங்களை சுத்தம் செய்தால் போதுமானது இவர்களின் தண்டனைகள் முடிவுக்கு வரும்.
கோடரி வேந்தரே... தங்களை சினேகிதராய் பெற்ற பாவத்துக்கு எம்மையும் இப்படி தண்டனைக்குள் உட்படுத்தி விட்டீரே நானென்ன தவறிழைத்தேன் ? உயிர் இழப்புக்கு ஆளாகி விடுவேனோ ? என்று அச்சமாக இருக்கின்றது.
செந்துரட்டி இப்படி எல்லாம் சொல்லல் தவறு பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை தாங்கள் அறியாதவரா ?  

இது ஏதோ புதிதாக தோன்றிய சித்தாந்தமாக தெரிகின்றதே...
ஆம் மானிடர்கள் இப்பொழுது இப்படித்தான் உரையாடிக் கொள்கின்றார்கள்.
அங்ஙனம் ஆயினும் எம்மையும் இதில் நுழைத்தது தவறில்லையா ?
செந்து தாங்கள் இப்படி பேசுவதுதான் தவறு அவ்வப்பொழுது நமது நட்பை களங்கப்படுத்துகின்றீரே யான் பெற்ற இன்பத்துக்குள் எமது சினேகிதரையும் சிறையிலடைக்க முயன்றது தவறா ?

தவறில்லைதான் கோடரியாரே இருப்பினும் தாங்கள் துன்பத்துக்குள் மட்டுமே எம்மை இணைத்து விடுவதுதான் மனதை காயப்படுத்துகின்றது இன்பத்துக்குள் என்று இணைத்தீர் ?
செந்து எதை வைத்து இப்படி பிரித்து பேசுகின்றீர்கள் ?
நேற்று முன்தினம் நள்ளிரவில் குருகுலத்தின் சமையலறைக்குள் நுழைந்த தாங்கள் மறுநாள் மாணக்கர்களுக்கு வைத்திருந்த அப்பம் இரண்டை எடுத்து வந்து இருட்டின் மறைவில் அமர்ந்து எமக்கு துளியளவுகூட கொடுக்காமல் உண்டு களித்தீர்களே... அது துரோகச் சுவடுகள் இல்லையா ?
இதை தவறாக புரிந்து விட்டீர்கள் சினேகிதரே... தாங்கள் நன்றாக துயில் கொண்டு இருந்தீர்கள் அந்த தருணத்தில் தங்களை தட்டி எழுப்பினால் மற்ற மாணக்கர்கள் விழிந்தெழுந்து குருநாதரிடம் சொல்லி விட்டால் நாம் இருவருக்கும் அல்லவா பிரம்படி கிடைக்கும் ஆகவே தங்களை அழைக்க வில்லை செந்து தாங்கள் இப்படி இயம்புவது எமது மனதுக்கு வேதனையைத் தருகின்றது.

இருப்பினும் மறுநாள் சமையல்காரர் இரண்டு அப்பம் குறைந்ததை கண்டு பிடித்து குருநாதரிடம் இயம்பி மாட்டிக் கொண்ட பிறகு நாம் இருவருமே உண்டதாக தாங்கள் உரைத்ததால்தானே இந்த சாணம் அள்ளும் தண்டனை இது மட்டும் தர்மமா ? அதற்கு அப்பம் களித்து விட்டு பிரம்படி கிடைத்து இருந்தாலும் யாம் விசமித்து இருக்க மாட்டோம்.
விடுங்கள் செந்து அதையே நினைவில் கொள்ளாதீர்கள் மறப்போம் மன்னிப்போம் என்று நமது குருநாதர் போதிப்பது இதற்காகத்தானே.... சரி யாம் இருளின் மறைவில் அப்பம் உண்டது தங்களுக்கு எப்படி.... ?
தாங்கள் நள்ளிரவில் ஒதுங்கும் இடத்தில் பதுங்கி இருளின் மறைவில் ஒரு திண்டின் மேல் அமர்ந்து உண்டு களித்தீர்களே அதன் அருகில்தானே யாம் சலம் கழித்துக் கொண்டு இருந்தோம்.
தங்களை யாம் கண்டிருந்தால் தங்களுக்கும் தந்திருப்போமே.

தாங்கள் கொடுத்திருந்தாலும் யாமும் அதை களித்திருக்க மாட்டோம்.
ஏன் சினேகிதரே.... ?
ஒதுங்கும் இடத்தில் உணவருந்தும் பழக்கம் எமக்கில்லை.
விடுங்கள் செந்து இதைப்பற்றி எல்லாம் நாம் விரிவாக விவரிப்பது நமது நட்பில் விரிசலைத் தரும்.

நல்லது எல்லா தொழுவங்களும் சுத்தமாகி விட்டது வாருங்கள் நாம் கணக்குப் பிள்ளையிடம் இயம்பி விட்டு குருகுலம் திரும்புவோம்.
சரி
இருவரும் அரண்மனையின் முன்புறம் வர முன் வராண்டாவின் முகப்பில் நாட்டாமை மோகனரங்கம் வெள்ளி மீசையை முறுக்கிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார் பக்கத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கணக்குப்பிள்ளை கணபதியாபிள்ளை.


ஐயன்மீர் எல்லாத் தொழுவங்களையும் சுத்தப்படுத்தி விட்டோம் நாங்கள் விடை பெறட்டுமா ?
நாட்டாமை கணைத்து விட்டு சிறார்களே... குருகுலத்தில் அடுத்து எப்பொழுது தவறிழைப்பீர்கள் ?
இல்லை ஐயன்மீர் இனிமேல் தவறிழைக்க மாட்டோம்.
தினம் அவ்வண்ணமே தவறிழையுங்கள் அப்பொழுதுதானே... எங்கள் தொழுவங்கள் இலவசமாக சுத்தமாகும் கெக் கெக் கெக் கே... 
எனச் சிரித்தார். (அன்று வடமொழிச் சொற்கள் தோன்றாத காலம்)
கூடவே கணக்குப்பிள்ளையும் கெக் கெக் கெக் கே... எனச் சிரித்தார்.

நல்லது கணக்குப் பிள்ளையாரே.. சிறார்களுக்கு ஏதும் உணவுப் பண்டங்கள் கொடுத்து விடுங்கள்
உத்தரவு இதோ....

உள்ளே சென்றவர் சிறிது நாழிகையில் இரண்டு துணி முடிச்சுகளுடன் வந்து ஆளுக்கு ஒன்று கொடுக்க, நாட்டாமை ஐயாவை வணங்கி விட்டு கோடரி வேந்தனும், செந்துரட்டியும் குருகுலத்தை நோக்கி நடந்தார்கள்.
கோடரியாரே நமது குருநாதர் எதற்காக ? நாட்டாமை மோகனரங்கத்தாரின் அரண்மனைக்கு செல்ல பணித்தார் ?
செந்து குருநாதர் சாதாரணப்பட்டவரா ? நாட்டாமை செல்வந்தர் அவரிமிருந்து பல சலுகைகள் பெறத்தான் இப்படி நம்மை தண்டனை என்ற பெயரில் அவரின் அரண்மனைக்கு அனுப்பி வைக்கின்றார்.

கோடரி அப்படி சொல்லல் பாவம் நமது குருநாதர் அல்லவா !
நல்லது செந்து துணி முடிச்சில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் ?
இருவரும் சாலையில் இருந்த புளிய மரத்தடி நிழலில் அமர்ந்து துணி முடிச்சை அவிழ்த்து நோக்க உள்ளே அவலும், பத்து சீடை உருண்டையும் இருந்தது சிறிது உண்டு சுவை கண்டனர்.
நல்லது கோடரியாரே அவல் நல்ல மதுரமிட்டு சுவையுடன் செய்திருக்கின்றார்கள்.
ஆமாம் கடந்த திங்களில் எமது அன்னையார் தேவராய கோட்டத்திலிருந்து கொடுத்தனுப்பிய அவலின் சுவையைப் போன்றே இருக்கின்றது.

அப்படியா எப்பொழுது வந்தது எமக்கு தரவே இல்லையே... கோடரி ?
தங்களுக்கும் தந்தேனே மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இல்லை கோடரியாரே நாமிருவரும் எப்பொழுதும் இணைந்தே இருக்கின்றோம் தாங்கள் அவல் களித்து யாம் கண்டதுமில்லை.
அப்படியா ? அடுத்த முறை நிச்சயமாக தங்களுக்கும் தருவேன் செந்து.

தாங்கள்தான் நள்ளிரவில் உண்பவராயிற்றே யாம் துயில் கொண்ட பிறகு களித்திருப்பீர்கள்.
விடுங்கள் செந்து இதையெல்லாம் பெரிது படுத்துதல் நன்றல்லவே !
நல்லது கோடரியாரே நாம் சுவை கண்டது போதும் குருகுலத்தில் நமது மற்ற மாணாக்கர்களுக்கும் கொடுக்க வேண்டும் எடுத்து வைப்போம்.
மற்ற மாணக்கர்களுக்கு எதற்காக கொடுக்க வேண்டும் ? நாம்தானே மாட்டுத் தொழுவங்களை சுத்தமாக்கினோம்.

கோடரி இதை நாம் கூலியாக நினைத்தல் தவறாகும், நமக்கு கிடைத்ததை பகிர்ந்து களிப்பதே சாலச்சிறந்தது நடக்கத் தொடங்குவோம் இன்னும் பதினாறு மைல்கள் கடக்க வேண்டும்.
சினேகிதரே தஞ்சம் புகுந்தோர் பட்டணத்தில் ஒரு அழகியை காதல் கொண்டதாக இயம்பினீர்களே பிறகு அந்தக்காதல் யாரோவொரு கயவரால் துண்டித்துப் போனதாகவும் முன்பு ஓர் முறை உரைத்த ஞாபகம் அதனைப்பற்றி விரிவாக இயம்புங்களேன் அப்பொழுதுதான் நடப்பதற்கு சுலபமாக இருக்கும்.
கோடரியாரே எமது காதல் கண்மணி செங்கமலத்தைப்பற்றி எமது நெருங்கிய சினேகிதரான தங்களிடம் இயம்புவதில் தயக்கமில்லை எமக்கு ஆனால் நாளையே விடயங்களை சுவடியில் எழுதி குருகுலத்தின் தகவல் பலகையில் தொங்க விட்டு விடுவீர்களோ ? என்ற அச்சம் மேலோங்குகின்றது.
செந்து அதோ கடந்து செல்கின்றாரே ஒரு வழிப்போக்கர் அவரின் சிரத்தில் அடித்து சத்தியம் யாம் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டோம்.

கோடரியாரே... தங்களது சிரத்தில் சத்தியம் செய்யாமல் யாரோவொரு வழிப்போக்கரின் மீது சத்தியம் செய்வது பாவமில்லையா ? தாங்கள் பல தருணங்களில் சத்தியம் எமக்கு சர்க்கரைப் பொங்கல் என்று பலமுறை எம்மிடம் உரைத்திருக்கின்றீர்களே...
சினேகிதரே அந்த வழிப்போக்கரிடம் எமக்கு நட்பு இல்லை என்றுதானே ஐயம் கொண்டீர்கள் இதோ தாங்கள் எமது உயிர் சினேகிதரல்லவா ! தங்களின் சிரத்தில் சத்தியம் செய்தேன் எனில் ஐயம் தீருமா ?
வேண்டாம் கோடரியாரே யாம் தங்களிடம் எமது காதல் கதையை இயம்புகின்றோம்.
நல்லது செந்து உரையுங்கள்.

தொடரும்...


இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

58 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. துரை அண்ணனுக்கு நித்திரைக் குளிசை குடுக்கப் போறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுட்த்ஹமுறை மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

      நீக்கு
    2. கொடுத்து விட்டீர்களோ... அதனால்தான் குவைத்ஜி மீண்டும் காணவில்லை.

      நீக்கு
  2. ஆஹா.. அடியேன் தான் செந்துரட்டியா!..

    பெறும்பேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடங்கி வைத்து மூட்டி விட்டதே... தாங்கள்தானே ஜி

      நீக்கு
  3. பதில்கள்
    1. நேக்கும் ஒண்ணும் புரிலை அதிரா..

      நீக்கு
    2. அதிரா & ஸ்ரீராம்ஜி
      எழுத்து புரியவில்லையா ? அல்லது நான் சொல்லிச் செல்லும் நடை புரியவில்லையா ?

      நீக்கு
  4. உரையாடலை ரசித்தேன். நானூறு ஆண்டு காலாத்துக்கு முந்திய வரலாறு தொடங்கி விட்டதா? ஏற்கெனவே வந்திருக்கும் போலவே... ஆயின் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று எங்ஙனம் உரைப்பீர்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி.
      இப்பதிவை நான் ஏற்கனவே எழுதி விட்டதாக எதை வைத்து சொல்கின்றீர்கள் ?

      ஏற்கனவே எழுதியது கோடரிவேந்தன் அது தனிப்பதிவு.

      இது கோடரிவேந்தனும், செந்துரட்டியும் பங்கு பெற்ற விடயங்களை சொல்லி வருகிறேன்.

      நீக்கு
  5. ஒண்ணும் புரியலை. எதுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டு மறுபடி வரேன். வடமொழி தமிழில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றனவே. ஆகவே கெகெகெ நு எல்லாம் சிரிச்சிருக்க மாட்டாங்க. ஹெஹெஹெஹெனு தான் சிரிச்சிருக்கணும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் புரியவில்லை என்றால் இந்த தொடக்கத்தில் எம்மிடம்தான் ஏதோ பிழைகள் இருக்கிறது.

      அடுத்தடுத்த பகுதிகள் மகிழ்ச்சியைத் தருமென்று நம்புகிறேன்.

      இதில் முழுக்க, முழுக்க தமிழ் எழுத்துகள் மட்டுமே வருவது போன்ற முயற்சி.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. கில்லர்ஜி... நடை நன்றாக வந்துள்ளது.

    கோடரிவேந்தர் ரொம்ப சுயநலவாதியா இருக்கிறாரே... அதனால்தான் செந்தூர்ர் தான்தான என்று துரை செல்வராஜு சார், துண்டைப் போட்டுட்டாரா?

    சந்தடிசாக்கில் தேவராய கோட்டை என்று சொந்த ஊரை நுழைக்காவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே..
      இப்பதிவை எழுத வைத்தது திரு.ஜியெம்பி ஐயா அவர்களும், திரு.குவைத்ஜி அவர்களும் தந்த கருத்துரையே காரணம்.

      எனது புதிய முயற்சியை ரசித்தமைக்கு நன்றி.

      நான் பதிவின் எந்த இடத்திலும் 'தேவகோட்டை' என்ற பெயரை இணைக்கவில்லை என்பதை இங்கு அறிவிக்கிறேன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான பழங்காலத்து சம்பவங்களுடன் கூடிய கதை. உரையாடல்களை ரசித்தேன். தண்டனைகளை நண்பருடன் சரிபங்காக ஏற்றுக்கொள்ளும் செந்துதுரட்டியை பாராட்டியே ஆகவேண்டும். தொடரட்டும். நட்புள்ளங்களின் தொடரை நானும் தொடர்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதில் செந்துரட்டி யார் என்பதையும், உழுவனூர் நாட்டாமை யார் என்பதையும் புரிந்து கொண்டீர்களா ?

      தொடர்பவமைக்கு நன்றி சகோ

      நீக்கு
    2. புரிந்து கொண்டேன்.
      தாங்கள்தான் படங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்... கோடாரி எப்போதும் தங்கள் கைவசந்தானே..

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி சகோ

      நீக்கு
  8. நல்ல நடை. பதிவுக்கு வந்த கருத்தை வைத்து ஒரு தொடர்.... நன்று. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது அடுத்த பதிவில் புரிந்து விடும்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கதா பாத்திரங்கள் யார் என்பது புரிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  11. சுமார் நானூறு வருடங்களுக்கு முந்தைய நாட்டாமை மோகனரங்கத்தின் புகைப்படம் இப்போதைய என் இருபதுவயதுகளை நினைவு படுத்துகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இவர்தானே... அவர், அவர்தானே... இவர்.

      நீக்கு
  12. தெளிவான நடை இப்படி படித்து ஆண்டுகள் பல ஆயிற்று வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. சொல்லாடல் அருமை ஜி... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  14. சொற்களின் பயன்பாடு வித்தியாசமாகவும் அதே சமயத்தில் அருமையாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. கதையின் தொடக்கம் புரியும்படியாகத்தான் உள்ளது. குருகுலத்தில் அப்பம் திருடிய குற்றத்திற்காக, மோகனரங்கம் அரண்மனைத் தொழுவத்தைச் சுத்தம் செய்துவிட்டு மாணவர் இருவர் குருகுலம் திரும்பிக்கொண்டிருப்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உரையாடல் மனதைக் கவர்கிறது. தொடரின் அடுத்த பகுதி இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

    [என் தளத்தின் கருத்துப்பெட்டியில் சில மாற்றங்கள் செய்ய முயன்றதால் அது மீண்டும் முடங்கியது. சரி செய்திருக்கிறேன்.]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      பதிவை ரத்தின சுருக்கமாக நான்கே வரியில் சொல்லி விட்டீர்கள் நன்றி.

      இதையே புதிய முயற்சியாக நாற்பது வரிகளில் பழங்கால தமிழில் சொல்ல முயன்றேன் அவ்வளவுதான்.

      அடுத்த பகுதிகளில் விறுவிறுப்பாக்கி தங்களது ஆவலை பூர்த்தி செய்வேன்.

      கருத்துப்பெட்டியை திறந்து வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. அப்பம் திருடியதும், தண்டனை பெற்றதும் ஏன் என்பது தான் எனக்குப் புரியவில்லை.இந்தப் பதிவை இடக் காரணமும் புரியவில்லை. மற்றபடி தமிழில் ஒன்றும் பிரச்னை இல்லை.

      நீக்கு
    3. இது தொடரும் என்று போட்டு இருக்கிறேனே....

      அடுத்த பதிவுகளில் விடை அறிய வரலாம் மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  16. 400 ஆண்டுக்கு முந்தைய அப்பம் படம் இணைத்தால் நன்றாக இருக்கும்
    கெக் ,கெக் :) haahaa :)
    முழுக்க தமிழ் எழுத்துக்கள் நல்ல முயற்சி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இதுவே எமது எண்ணம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. கோடாரி வேந்தரே!!!... எனக்கு சிறு சந்...தேகம்..... பாவத்தின் சம்பளம் மரணமாக தெரியவில்லையே வேந்தரே.....ஒரே இரவில் என்னை தங்கள் பதவின் நீளத்தை விட பத்து மடங்கு வரிசையில் நிற்க வைத்து செய்த பாவத்துக்கு தண்டனையா.....க இல்லையே வேந்தரே.....

    பதிலளிநீக்கு
  18. நான் நீங்கள் பதிவிட்டதும் வந்து படித்தேன் ஆனால் புரியவில்லை என்ன கருத்து சொல்லுவதென்றும் தெரியவில்லை மீண்டும் இப்போது வந்து பார்த்த பொழுதுதான் பலருக்கும் புரியவில்லை என்று... மூளையை சுளுக்க வைச்சிட்டீங்களே சாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு... பலருக்கும் அல்ல! சிலருக்கே. மேலே நண்பர் திரு.பசி பரமசிவம் அவர்கள் பதிவின் சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அதையும் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

      ஒன்று மட்டும் எனக்கு தெளிவாகிறது பதிவில் குழப்பமில்லை தமிழில்தான் குழப்பம். அடுத்து தெளிவாக விளங்கும்படி எழுதுகிறேன். வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  19. ஆஹா. ஆரம்பித்துவிட்டீங்க தொடரை. முழுவதும் தமிழ் சொற்களில். அருமையாக இருக்கு. எனக்கு புரிந்தது. மற்றைய தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி

      நீக்கு
  20. கில்லர்ஜி புரியவில்லையே ஜி. ஒரு வேளை அடுத்த பதிவு படித்தால் புரியுமோ...

    துளசிதரன், கீதா

    கீதா: அது சரி ஜி 400 வருஷத்துக்கு முன்னரே பெல்ட் பேன்ட் எல்லாம் இருந்துச்சோ ஹிஹிஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே நண்பர் திரு.பசி பரமசிவம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

      அது பேண்ட் இல்லை பைஜாமா மாதிரி தொள, தொள வேட்டிதான்.

      நீக்கு
  21. மீண்டும் வாசித்தேன் கில்லர்ஜி. வாசித்து துளசிக்கும் சொல்லிட்டேன். புரிந்தது. அப்பம் திருடியதற்காக நாட்டாமையிடம் மாட்டிக் கொண்ட கோடரி...செந்துரட்டிக்கும் ஆப்பு வைத்து பனிஷ்மென்ட்...ஓகே..செந்துரட்டி பாவம்!! எத்தனை நல்லவர்...எல்லாம் சரிதான் புரிந்த்து.. ஆனால் என்னவோ என்னவோ..ஏதொ ஏதோ.... கோடரி வேந்தன் முன்னரே கேட்ட நினைவும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலுக்கு நன்றி.
      ஏற்கனவே வந்த பதிவு தனிப்பாதை.

      இந்த தொடர் வேறுவகை. கீழே இணைப்பு இருக்கிறது.

      நீக்கு
  22. அப்பமும்,சீடையும் அக்காலத்திலேயே தோன்றிவிட்டதா?)))கோடாரிவேந்தே அந்தக்காதல்க்கதை சொல்லுங்க கேட்போம்.)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக வந்து விட்டது நண்பரே இன்னும் பல பலகாரங்கள்.
      காதல் கதையறிய நாளையே வருக...

      நீக்கு
  23. நடை அருமையாக இருக்கிறது..தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  24. ஆரம்பமே ஆவலைத்தூண்டுகிறது.வாழ்த்துகள்!உரையாடல்கள் தூய தமிழில் அருமையாக வந்திருக்கிற்து. 400 ஆண்டுகளுக்கு முன் கால் சராய் ஊற்றுஎழுதுகோல் உண்டா என நான் கேட்க நினைத்ததை கீதா அவர்கள் கேட்டுவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே...

      அன்று வரைந்து வைத்த சித்திரங்களை கரையான் அரித்து விட்டது. ஆகவே நிகழ்காலத்தில் நாங்கள் அபுதாபியில் சந்தித்து எடுத்த நிழல் படங்களை வெளியிட்டேன் நண்பரே...

      (சமாளித்து விட்டேன் கெக்.. கெக்.. கே..)

      நீக்கு
  25. சுவாரஸ்யமான உரையாடலுடன் நல்ல கதை சொல்ல வந்தது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கதை அல்ல!
      எமது சொந்த வாழ்க்கை வரலாறு.

      நீக்கு
  26. மாறு பட்ட நடை நண்பரே.
    ஆமாம் செந்துறட்டி. பொருள் என்ன ஐய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கோடரி வேந்தனைப்போல் செந்துரட்டியும் ஒரு பெயர்தான்.

      நீக்கு