தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 20, 2018

தமிழனின் பண்பாடு

நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற முடிவுக்கு வந்தது ஒருக்கால் காணும் வாய்ப்பு கிடைத்தாலும் தவிர்ப்பேன் நான் தவிர்ப்பதால் இவரது புகழ் சரிந்து விடும் என்று மடத்தனமாக நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை நான் சந்திக்க நினைத்து நிகழாமல் போனது மறைந்த அக்னிப்பறவை திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள், துக்ளக் ஆசிரியர் திரு. சோ. அவர்கள், அதைப்போல் நான் சந்திக்க நினைக்கும் மனிதர்களில் ஒரு சிலர் உண்டு அவர்களில் முதலாமாவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. சகாயம் அவர்கள், பெங்களூருவில் இருக்கும் விந்தை மனிதர் திரு. சத்ய நாராயணா அவர்கள், (இவர் திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் உடன் பிறந்த சகோதரர் ஆவார்)

இந்தப்பதிவு நான் எழுதுவதற்கு காரணம் YouTube பில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒரு அமைப்பின் விழாவில் மாணவ-மாணவிகளுக்காக சுமார் 55 நிமிடங்கள் உரையாடியதை சமீபத்தில் கேட்டேன் அற்புதமாக பேசினார் இளைஞர்களுக்கு நல்லதொரு அறிவுரை என்றும் சொல்லலாம் மிகவும் ரசித்து கேட்டேன் எனக்கு பிடித்தவர் என்பதால் அவர்களது குறைகளை மறந்து விடும் எண்ணம் எனக்கு என்றுமே கிடையாது இதனுள் எனது தந்தையும், மகனும் அடக்கம். இதை அனைவரும் கடைப்பிடித்தால் தமிழகத்தில் ஒருவரும் அரசியல் தொண்டராக இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சரி அது கிடக்கட்டும் நாம் அரசியல் பேச வரவில்லை, நியாயத்தை நியாயமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் மனிதன் தெளிவான சிந்தனைக்குள் வந்து விடுவான் பிறகு தமிழகத்தில் எந்த ஒரு நடிகனுக்கும் ரசிகன் என்று சொல்லிக் கொண்டு அறியாமைவாதிகள் இருக்க மாட்டார்கள் பொழுது போக்குக்காக திரைப்படம் பார்த்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவான் சரி அது கிடக்கட்டும் நாம் திரைப்படத்தைப்பற்றி பேச வரவில்லை. அதாவது இவ்வளவு அழகாக, அற்புதமாக, பேட்டி கொடுப்பவரின் வார்த்தைகளிலிருந்தே கேள்விக்கணை தொடுக்கும் சாமர்த்தியசாலியான திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு பொது இடமான பரந்த மன்றத்தில், உலகே காணும், கேட்கும் இடத்தில் பெரியோர்களை மதித்து பேசும்தன்மை இன்னும் தெரியவில்லை என்பதே எமது கருத்து அதன் விளக்கம் இதோ...

ஆம் நண்பர்களே... அதாவது இவர் பேசும் பொழுது தனது வீட்டாரைப்பற்றி குறிப்பிடுகின்றார் அந்த வார்த்தைகள் //எங்க வீட்ல விட்டுட்டாங்கே// அதாவது இது யார் ? இவரது தந்தையும், தாயும்தானே பெற்றோர்களை இப்படித்தான் பேசுவதா ? சிலர் பேசும் பொழுது தனது சகோதரிகளை அவளுகள் என்பார்கள் தனது மூத்த சகோதரர்களைக்கூட அவன் என்று குறிப்பிட்டு பேசுவார்கள் இது சிலரது வளர்ப்புமுறை என்றும், அவர்களது வயதின் ஏற்றஇறக்கம் சிறிது என்றும் நாம் கணித்துக்கொள்வோம் அதே நேரத்தில் பெற்றோர்களை இப்படி தராதரமற்ற வார்த்தைகளை உபயோகித்து பேசுவது அநாகரீகம் இல்லையா ? சிலர் நினைக்கலாம் இது அவருடைய சொந்தப் பிரச்சனை இதில் பிறர் தலையிட உரிமை இல்லை என்று அதாவது பொது இடத்தில் பேசப்படும் வார்த்தைகள், பொது இடத்தில் எழுதப்படும் எழுத்துகள் நாகரீகமானதாக இருத்தல் அவசியம் இதில் தமிழனின் பண்பாடு அடங்கி இருக்கின்றது சரி அது அவரது பெற்றோர் விட்டு விடுவோம் ஆசிரியர்கள் யார் ? மாதா, பிதா, அடுத்து குரு அல்லவா ! அவர்களையும் இதே வகையில் சொல்லலாமா ? அதாவது ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் நடக்கும் சம்பாஷைகளை சொன்னவர் சில மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் அவன் எழுந்து கேட்பான் மீண்டும் சொல்லுங்கள் ஸார் என்று அதற்கு பாண்டே சொல்கிறார் அவனுகளுக்கு எப்படியிருக்கும் ? அதாவது இந்த பரந்த மன்றத்தில் அமர்ந்திருக்கும் நபர்களில் பெரும்பான்மையானவர்கள் பேராசிரியர்களே... அதாவது இவர் ‘’அவனுகளுக்கு’’ என்று குறிப்பிடுவது ஆசிரியர்களை. இது ஒரு பொது இடத்தில் பேசும் பேச்சா ? அழகாக தமிழ் உச்சரிப்பு செய்கின்றார் ஆனால் பேச்சில் அழகு இல்லையே....

அதைப்போல் இவரது பேச்சு ஒரு இடத்தில் எனக்கு ச்சீ இதுவும் இந்த வகைதானா ? என்ற நிலைக்கு வந்தது அதாவது திரைப்படங்களில் எவ்வளவோ பாடலாசிரியர்கள் தங்களின் மூளைத்திறனால் பாடல்கள் எழுதி இருக்கின்றார்கள் அதை தமிழ் மொழியே தெரியாத ஒருசில நடிகர்கள் அந்தப்பாடலுக்கு வாயசைத்தார்கள் என்பதற்க்காக அவர்களது பெயரைச் சொல்லி அவர்கள் பாடல் என்று சொல்வது அறியாமையே அன்றி வேறென்ன ? இதைப்போல்தான் வசனங்களும் இப்பொழுது ‘’பஞ்ச் டயலாக்’’ என்று சொல்கின்றார்கள் அதாவது இந்த மூதேவிகளுக்கு அரசியல் ஆசையை விதைத்து விடுவது இந்த வகையான வசனங்களே அது பிற்காலத்தில் சிலருக்கு உதவியும் இருக்கின்றது அதேநேரம் இந்த வசனங்களையும், பாடல் வரிகளையும் எழுதிய பலரும் வெளியுலகம் தெரியாமல் மண்ணுக்குள் மறைந்து விட்டவர்களும் உண்டு. சரி விடயத்துக்கு வருவோம்.

தமிழனே இல்லாதவனை இவர் மூன்றுமுறை திரைப்பட வசனத்தைச் சொல்லி தலைவர் என்று சொன்னதும் ச்சீ இதுவும் இந்தக்கேசு என்று மனம் நொந்து விட்டேன் எவ்வளவு திறமைசாலி என்று நினைத்திருந்தோம் சராசரி மனிதனைப்போல இவரும் ஒரு நடிகனுக்கு ரசிகன் என்ற வட்டத்துக்குள் சிறைபட்டதால்தானே இந்த உலகறிந்த இடத்தில் அவனை இவர் தலைவன் என்று குறிப்பிட்டார். எல்லா மனிதர்களிடமும் ஏதாவது குறைகள் இருக்கத்தான் செய்யுமோ ?

சரி இனி இவர் நாம் சந்திக்க நினைக்கும் மனிதர்களிடத்திலிருந்து இறக்கபடுகின்றார் மீண்டும் சொல்கிறேன் நான் தவிர்ப்பதால் இவரது புகழ் சரிந்து விடும் என்று மடத்தனமாக நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை.

74 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)) கில்லர்ஜி புளொக் ஸ்டைலை மாத்திட்டாரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தொடர்ந்து வறுக்க, வருக...

   நீக்கு
  2. எதுக்கு இப்போ கில்லர்ஜிக்கு டங்கு ஸ்லிப்பாகுது கர்:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. Sorry இது டங்கு ஸ்லிப் இல்லை ஃபிங்கர் ஸ்லிப்

   நீக்கு
 2. //நான் தவிர்ப்பதால் இவரது புகழ் சரிந்து விடும் என்று மடத்தனமாக நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை //

  ஹா ஹா ஹா இல்ல கில்லர்ஜி சொல்ல முடியாது சரிந்தாலும் சரியலாம்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை அப்படிச் சொன்னால் அது எனக்கு அகம்பாவம் என்பதை பிரதிபலித்து விடும்.

   நீக்கு
 3. //அவனுகளுக்கு எப்படியிருக்கும் ?//

  இது சில ஊர்ப் பேச்சு வழக்காக இருந்தாலும் எனக்கும் பிடிப்பதில்லை, ஏன் வயசு குறைந்தவர்களை மட்டும் சொல்லலாமோ அதுவும் தப்புத்தான், சபை நாகரீகம் என ஒன்று இருக்குதுதானே.. அத்தோடு வயசு குறைந்தோருக்கு மரியாதை கொடுக்கக்கூடாது என சட்டம் ஏதும் இருக்கோ? என்னைப் பொறுத்து.. வயசு குறைந்தவரோ கூடியவரோ..
  “மரியாதையைக் கொடுத்தால், மரியாதையை வாங்கலாம், மரியாதை குடுக்காமல், மரியாதையை எதிர்பார்ப்பது தப்பு”.

  இவரை முன்பு எனக்கும் கொஞ்சம் பிடிச்ச்சிருந்தது, பின்பு நானும் ஒரு பேட்டி பார்த்தேன், ஆனா அதில் மரியாதைக் குறைவாக அவர் பேசவில்லை, ஆனா தன்னை விட வயதில் மூத்த ஒருவரிடம் அவரிடம் கெளரவத்துக்கு குறைச்சல் வருவதுபோல, இவர் ஏதோ தான் பெரிய அறிவாளி போல கடகட எனக் கேள்விகள் கேட்டிருந்தார்.. அதாவது கூனிக்குறுமளவுக்கு கொஞ்சம் தாக்கமான கேள்விகள் அது எனக்குப் பிடிக்கவில்லை.

  தான் அப்படிக் கேள்வி கேட்டதால், தன்னை மக்கள் விரும்புவார்கள் என அவர் நினைச்சிருக்கலாம் ஆனா அது அவரையே வெறுக்குமளவுக்கு என்னை மாற்றி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையாக சொன்னீர்கள் வயது குறைவினரையும் மரியாதையாக அழைத்தல் அவசியமான உயர் குணங்களில் ஒன்று.

   இவரது கேள்விக்கென்ன பதில் நான் விரும்பி பார்ப்பேன் விரிவான கருத்துரைக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 4. நியாயமான வார்த்தைகள்..

  கீழோராயினும் தாழ உரை...ன்னு
  சொல்லி வெச்சாங்க...

  நம்ம ஊர் நீதி நூல்களைப் படிச்சு
  மனசில வெச்சிக்கிட்டாலும் போதும்...

  வேற அறிவுரை எதுவும் தேவையில்லை..

  இருந்தாலும் -
  நாம நம்ம சோலியப் பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 5. பேசும் போது சில சமயங்களில் வார்த்தைகள் நம் வசப்படாமல் பேசிவிடுகிறார்கள் அதற்காக அவர்களை மன்னிக்கலாம்.. ஆனால் ஒன்று எவருடையை பேச்சையும் எழுத்தையும் வைத்து எடைப் போடாக்கூடாது....அவர்கள் யாருக்கும் கெடுதல் பண்ணாமல் நல்லது ப்ண்ணிக் கொண்டிருந்தாலே போதும் என்பது என் கருத்து. பலர் சக்கரையாக பேசுவார்கள் எழுதுவார்கள் ஆனால் அவர்கள் மறைமுகமாக் எல்லா கெடுகேட்ட செயலையும் செய்து கொண்டிருப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே....
   உண்மை எல்ல மனிதர்களை அவரது பேச்சை வைத்து கணித்து விடமுடியாது.

   நீக்கு
 6. ரஜினிகாந்த் ஒரு மராட்டியர் வழி வந்தவர்களுக்கு பிறந்தவர். ரெங்கராஜ் பாண்டே பிஹாரைச் சேர்ந்த வட இந்திய பெற்றோருக்கு பிறந்தவர்.

  இதில் தமிழர் யாரு? தமிழ்ப் பண்பாடு எதுக்கு வருது? எதுக்கு உங்களுக்கு இந்த தேவையில்லாத வேதனை?

  தமிழரல்லாத இவர்கள் இருவரையும் விட்டுவிடலாம்.

  அப்புறம் அந்த 17 பேர்களை யார் யார் தமிழர்னு விசாரிங்க. அவர்கள்தான் உண்மையான தமிழர்கள். அவர்கள் நன்நடத்தைதான் இன்றைய தமிழர் பண்பாடு! தமிழர் எல்லாரும் எதுக்கு இன்னும் உயிரோட இருக்கீங்கனு தெரியலை.

  அதையெல்லாம் விட்டு விட்டு ஒரு வடநாட்டவன் ஒரு மராத்திக்காரனை தலைவர்னு சொன்னா நீங்க ஏன் கவலைப்படுறீங்க???

  வேடிக்கையான ஆள்தான் நீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கு...
   இதில் மராட்டியரோ, கன்னடரோ ரஜினியை எதற்கு இழுக்கின்றீர்கள் ?
   பெங்களூருவில் வாழும் திரு. சத்யநாராயணன் அவர்கள் உலகம் அறியப்படாதவர் அவரை சட்டென அறிமுகப்படுத்த ரஜினியின் சகோதரர் என்ற உண்மையைச் சொன்னதைவிட வேறு எங்கு நான் ரஜினியை இழுத்தேன் ?

   கடந்த பதிவுகளுக்கு தாங்கள் ஏன் வரவில்லை ? அட்லீஸ்ட் இந்த தமிழ்நடை எனக்கு புரியவில்லை என்ற கருத்தையாவது முன் வைத்து சென்று இருக்கலாமே.... ?

   17 பேரின் கேடுகெட்ட ஜென்மங்களின் செயலுக்கும், இப்பதிவுக்கும் தொடர்பு என்ன ? (நான் அவர்களைப் பற்றிய பதிவு எழுதுவேன் நேரமின்மை காரணமாக தாமதம் என்பது வேறு விடயம்)

   ///அவர்கள் நன்நடத்தைதான் இன்றைய தமிழர் பண்பாடு, தமிழர் எல்லோரும் எதற்கு இன்னும் உயிரோட இருக்கீங்கனு தெரியலை///

   ‘’தமிழர்கள்’’
   இந்த வட்டத்துக்குள் பல வலைப்பதிவர்கள் இருக்கின்றார்கள், நானும் இருக்கிறேன், எனது பெற்றோரும் இருக்கின்றார்கள். உங்களது பெற்றோர்களும் இருக்கின்றார்களா ?

   ஏதோ சில வெறிநாய்கள் செய்த இழி செயலுக்காக தமிழர்கள் எல்லோரும் சாக வேண்டுமா ?

   அடுத்த பதிவுக்கும் தாங்கள் அவசியம் வருவீர்கள் இப்பதிவால்தான் அப்பதிவு என்று கருதவேண்டாம் பதிவுகள் ஆல்ரெடி ட்ராப்டில் உள்ளது ஆட்டோமேட்டிக்காக பப்ளிஷ் ஆகும்.

   நான் கடந்த இரண்டு மாதம் முதல் இன்னும் இரண்டு மாதம் வரை திருமண வேலைகள் காரணமாக வெளியூர்கள் அலைச்சல் வீட்டில் தங்கவில்லை. கணினியை திறக்கவும் இல்லை.
   பிறகு பதிவுகள் எப்படி வருகிறது ? என்று கேட்க வேண்டாம்.
   எனக்கு நல்லமூடு இருந்தால் அரை மணிநேரத்தில் ஐந்து பதிவுகளை எழுதி படமும் இணைத்து செட் செய்து வைத்து விடுவேன்.

   பிறகு எப்படி பிறரின் பதிவுகளுக்கு கருத்துரை இடுகின்றீர்கள் ? என்று கேட்க வேண்டாம், வழி செல்வழியே இதன் காரணமாகவே எனது கருத்துரை சிறியதாக வருகிறது (பிற பதிவர்கள் கவனிக்க)

   இன்று தங்களுக்காகவே கணினியை திறந்தேன் மேலும் இதற்கு தங்களது கருத்துரை வரலாம் ? ? ? வந்தால் மறுமொழி கொடுக்க இயலுமா ? என்று தெரியவில்லை காரணம் வெளியே புறப்பட்டு விட்டேன்.

   குறிப்பு-
   மேலே நண்பர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் கொடுத்த கருத்துரையும், தங்களது கருத்துரையும் ஒரு சாராம்சமே ஆனால் சொல்லிய விதம் வேறு இதுதான் தமிழ் மொழியின் பெருமை அழகு.

   அவரும், நானும் பல நாடுகளுக்கு போய் வந்து இருக்கின்றோம். தாங்கள் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் போனீர்களா ? என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும அவரிடமிருந்த அந்த பண்புகளை நான் பலமுறை கண்டு வியந்து இருக்கின்றேன். நம் இருவரை விடவும் அவர் வயதிலும், அனுபவத்திலும் பழுத்தவர்.

   உங்களிடம் எமக்கு கோபமில்லை ஆனால் கருத்துப்போர் வரலாம்.
   வாழ்க நலம்

   நீக்கு
  2. ரங்கராஜ் பாண்டே தமிழறல்ல! புரிந்ததா? இல்லையா?

   ---------------------

   துரை செல்வராஜ் vs வருண் தேவையற்ற ஒப்பீடு. அவ்ளோதான் சொல்ல முடியும்- நாகரிகமாக! நன்றீ

   நீக்கு
  3. இங்கிருந்து பீஹாருக்கு வாழப்போனவர்கள் என்பது தெரிகிறது.

   இரண்டும் வார்த்தைகள் மாறிய கோணங்கள் வேறு மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 7. வலைப்பூ தளம் அமைப்பு மாத்தியிருக்கீங்க போல நல்லாருக்கு ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உபயம் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

   நீக்கு
 8. அ காபி பேஸ்ட் செய்யும் பொது விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்..

  அ டடே... கில்லர்ஜி... தளத்தின் தோற்றமே கவர்ச்சியாய் மாறி விட்டதே..
  என்று இருக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நன்றி கவர்ச்சி என்றால் அனுஷ்க்கா மாதிரியா ?

   நீக்கு
  2. அனுஷ்... கவர்ச்சி என்று சொல்வதைவிட அழகு!

   :)))

   நீக்கு
  3. இப்படியும் நினைக்கலாமோ.....?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஹா ஹா....எப்படியோ அனுஷ் கில்லர்ஜியின் தளத்திலும் வந்துவிட்டார்...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. இடையிலே லொக்கை எடுத்தார் கில்லர்ஜி இப்போ என்னாச்சோ திரும்ப மீண்டும் லொக் போட்டிட்டார் கொப்பி பண்ண முடியாதபடி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இருப்பினும் நான் கொப்பி பண்ணுவேனே:)..

   அனுஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ வெள்ளிக்கிழமையும் அதுவுமா என்னால தாங்க முடியல்ல ஸ்ரீராமின் றசணை:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
  6. வெள்ளிக்கிழமை அனுஷ்காவுக்கு ஆகாதோ... ?
   பூட்டு திண்டுகல்லில் போட்டது.

   நீக்கு
 9. சபை நாகரீகம், பொது வெளியில் பேசுவது, எழுதுவது என வரும் போது வார்த்தைப் பயன்பாடு என்பது மிக மிக முக்கியம் என்பதில் எந்தவித மாற்றுக்க் கருத்தும் இல்லை ஜி. அதனை நம்ம ஐயன் அழகாக ஒரு அதிகாரமே போட்டுட்டார்...மற்றபடி

  மற்றபடி எனக்கு இவரைப் பற்றி தெரியாது ஜி. இவர் பேச்சைக் கேட்டதும் இல்லை. முதல் முறையாக இன்றுதான் அவரது புகைப்படமும் உங்கள் பதிவின் வழியாகப் பார்க்கிறேன். அதனால் வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அழகாக விளக்கியமைக்கு நன்றி. இவரது கேள்வித்திறன் அபாரமானது தந்தி தொலைக்காட்சியில் பாருங்கள்.

   நீக்கு
 10. நான் ரங்கராஜ் பாண்டே பேட்டிகள் பார்ப்பதில்லை. ஆனால் அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில பார்த்திருக்கிறேன். ஆனால் பொதுவாக பிரபலங்களை - நாம் ரசிப்பவர்களை - தூர இருந்தே ரசிப்பது நல்லது. பொது முகம்தான் நமக்குத் தெரியும். சொந்த முகம் ஒன்று இருக்கிறதல்லவா? அவர்களின் பல முகங்களில் இந்த முகம் நம் ரசனைக்குரியது. அவ்வளவே!

  குணம்நாடி குற்றமும் நாடி அவற்றில்
  மிகைநாடி மிக்க கொளல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி உண்மையே யாரையுமே சட்டென ஒரு முடிவுக்கு கொண்டு வருவது கடினமே...

   நீக்கு
 11. அருமை
  சிந்திப்போம்

  பதிலளிநீக்கு
 12. சரியான மதிப்பீடு. மேடை நாகரிகம் என்பதை சிலர்தான் கடைபிடிக்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி அனுபவம் சிலரை நெறிபடுத்துகிறது, சிலரை தலைக்கனம் ஆக்குகின்றது

   நீக்கு
 13. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியும் ஸ்டெர்லைட் பற்றியும் திரு வைகொவிடம் பேட்டி எடுத்ததைப் பார்த்தேன் பேட்டி எடுக்கும் முன் நிறைய செய்திகளை சேகரிக்கிறார் என்பது தெரிகிறதுஅந்தப் பேட்டியில் இவரதுஒன் அப்மன் ஷிப் தெரிந்ததுஅவருக்கு என்ற கருத்துகளை தெரிவித்தார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இவரது ஞாபக சக்தி அபாரமானது, நான் விரும்பி இவரது நிகழ்ச்சிகளை பார்ப்பவன். வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 14. சிலரின் பழக்கவழக்கத்தை மாற்ற முடியாது...

  இன்றைக்கு "கேட்டது" கிடைத்து விட்டால், அவங்க தான் தலைவர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி தொட்டில் பழக்கம் கொடுத்து விட்டவர்களே... இன்று கேட்பவர்கள்தானே...

   நீக்கு
 15. சபை நாகரிகம் தெரியாதவர்களை சபையே நிராகரிக்கும் காலம் வரும் வலைத்தள அமைப்பு சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களது வாக்கு பொன்னாகட்டும். வருகைக்கும், தளஅமைப்பை பாராட்டியமைக்கும் நன்றி

   நீக்கு
 16. உங்கள் உணர்வுகளும் எண்ணங்களும் நியாமானவையே. வீட்டுக்குள் நாம் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். பொதுவெளியில் குறிப்பாக வெளியாட்களிடம் பேசும்போது மரியாதையான வார்த்தைகள் பயன்படுத்துவது முக்கியம்.

  சிறுவயதில் ஒருமுறை என் அம்மாவுடன் கடைத்தெருவிற்கு சென்றபோது, என் வகுப்புத்தோழன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவனிடம் "இதுதான் என் அம்மா" என்று பேச்சுவழக்கில் அறிமுகப்படுத்தினேன். அதற்கு என் அம்மா "இது என்று சொல்லக்கூடாது. இவர் என்று சொல்லவேண்டும்" என்று திருத்தினார். அன்று முதல் மற்றவரிடம் பேசும்போது பயன்படுதவேண்டிய சொற்கள் குறித்து மிகுந்த கவனமாக இருக்க கற்றுக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது அம்மா சொல்லிக் கொடுத்ததே இன்றும் வருகிறது இதுதான் தொட்டில் பழக்கம்.

   இது என்பது ஏதோவொரு உயிரினத்தை குறிப்பது போல் ஆகிவிடுகின்றதே... இன்று நான் நாகரீகமாக பேசுகின்றேன் என்றால் ? இதற்கு எனது தாய்-தந்தையே காரணம் இன்று நன்றி கூறிக்கொள்கிறேன்.

   நீக்கு
 17. தளம் வித்தியாசமா அருமையா இருக்கு..

  சில நேரம் மாற்றங்கள் புத்துணர்ச்சியை கொடுக்கும் அல்லவா அது போல்...

  நம்மை விட சிறியவர்களையும் மரியாதையாக தான் நடத்த வேண்டும் என்பது எனது ஆசையும்...

  அவரின் பேச்சு வழக்கு அப்படி இருந்தாலும் இவ்வளவு கற்றவர் இதையும் கற்கலாமே...மரியாதையாக மொழிதலை..


  இன்னும் உங்கள் மற்ற பதிவுகளை படிக்கவில்லை ....விரைவில் வருகிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் மாற்றம் மனதுக்கும் இதமானதே...
   தங்களது வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி

   நீக்கு
 18. எனக்கு ஒருஅதிகாரி இருந்தார் தமிழில் பேசும்போது பண்பான வார்த்தைகளயே உபயோகிப்பார் ஆனால் ஆங்கிலத்துக்கு வந்துவிட்டால் பண்பாவது ஒன்றாவது எல்லாம் வளர்ப்பு முறையோ என்று தோன்றும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வளர்ப்பு முறையே அன்றி வேறில்லை ஐயா. மேலும் ஆங்கிலத்தில் அவரை செம்மை படுத்த அன்று ஆளில்லாமல் இருந்திருக்கலாம், பெற்றோர்களுக்கு ஆங்கிலம் தெரியாமலும் இருந்திக்கலாம். மீள் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 19. இப்போல்லாம் இப்படித் தான் பேசறாங்க! என்ன செய்ய முடியும்! நல்லவேளையா ரங்கராஜ் பாண்டே அளிக்கும் நிகழ்ச்சிகள் ஒன்றைக் கூட நான் பார்த்ததில்லை. முகநூல் வழியாகவும், வாட்சப்பில் பகிரும் செய்திகள் மூலமும் அறிமுகம். அப்போவும் தேடிப் போய்ப் பார்க்கத் தோணலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இப்பொழுதும் சொல்கிறேன் இவர் அபாரமான நினைவாற்றல் உள்ளவர்.

   தற்போது சற்று கர்வம் கூடிவிட்டது. ஒருமுறை பெரியாரை குற்றம் சுமற்றி கி.வீரமணியை கேள்வி கேட்க அவர் பயங்கரமாக கோபப்படவும், சற்றே அடங்கினார்.

   நீக்கு
 20. வலம் இடமாயும், இடம் வலமாயும் மாறினதோடு ரொம்பப் பெரிய பக்கமாவும் தெரியுதே! நல்லா இருக்கு. பழகக் கொஞ்ச நாட்கள் ஆகலாம்.

  பதிலளிநீக்கு
 21. என் கணவர் கல்லூரியில் ஆசிரியர் தொழில் செய்யும் போது தன் மாணவ , மாணவிகளை பேர் சொல்லி மரியாதையாக தான் பேசுவார்கள். அவர்கள் 21 வயதில் வேலைக்கு போனவர்கள் அவர்கள் மாணவர்கள் அவர்களைவிட பெரியவர்களும் இருந்தார்கள், சிறியவர்களும் இருந்தார்கள் .
  பணி ஓய்வு பெரும் போது மாணவ, மாணவிகள் அதை சொல்லி தான் பாராட்டு தெரிவித்தார்கள்.

  இப்போதும் எல்லோரையும் மரியாதையாகதான் அழைப்பார்கள்.

  நாம் குற்றங்களை காண வேண்டாம், நிறைவுகளை பகிர்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அழகிய பழக்கம் இதெல்லாம் வளர்ப்பின் அடிப்படையில் வருவது.

   பொதுநலமான விடயம் என்பதால் இக்குறையை நான் வெளியிட்டேன்.

   நீக்கு
 22. அன்பின் ஜி..

  இப்போது தான் கணினி வழியாக வருகின்றேன்...

  அழகாக இருக்கின்றது.. ஆனாலும் தளம் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது...
  வலது ஓரம் சரியாகத் தெரியவில்லை... கொஞ்சம் சுருக்கினால் நல்லது என்பது எனது கருத்து..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி எழுத்தை அகலமாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை ஆகவே அவசியமில்லாததை நீக்கச் சொன்னேன்.
   வடிவமைப்பு நண்பர் டி.டி.அவர்கள்தான் பார்க்கிறேன் நன்றி ஜி.

   நீக்கு
 23. படித்தேன் நண்பரே,அவரின் வழக்கப் பேச்சு அதுதான் போலிருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தொட்டில் பழக்கம் போலும்...

   நீக்கு
  2. ஹ ஹா தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளவர் பற்றி அறியேன். தொலைக்காட்சி இப்போது அவ்வளவாக பார்ப்பதில்லை. ஆனால் பெரியவர்கள் என்றில்லை, சின்னவர்களுக்கும் உரிய முறையில் மரியாதை தந்தால், நமக்கும் ஒரளவு திருப்பிக் கிடைக்கும். அதுவும் பொது இடத்தில் மரியாதையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை மரியாதை கொடுத்து பேசுவது வளர்ப்பின் தன்மை.

   வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 25. தளம் அழகா இருக்கே ..மாற்றி அமைச்சிங்களா ..நைஸ் .

  என் பிளாக்கில் நான் ஏதும் செய்யாமலே எழுத்து அளவு திடீர்னு குட்டியாகிடுச்சி

  ரங்கராஜ் பாண்டே ..பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது. யூ டியூபில் பார்த்து மீண்டும் வரேன் .லிங்க் கொடுத்திருந்த எனக்கு வசதியா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இந்த தளம் மாற்றியமைத்து முதல் கருத்துரையே உங்களுடையதுதான். அதிவது கடந்த பதிவில் கடைசி கருத்துரை.

   எழுத்து சிறியதாவதற்கு காரணம் இடையில் திருத்தம் செய்து இருப்பீர்கள்.

   வோர்டில் டைப்பி உறுதியான பிறகு கோப்பி பேஸ்ட் செய்தால் ஒரேபோல் இருக்கும்.

   அதன் இணைப்பை எடுக்க மறந்து விட்டேன் கண்டிப்பாக தேடித்தருகிறேன். வருகைக்கு நன்றி

   நீக்கு
 26. கில்லர்ஜி... எல்லோரையும் மரியாதையாகப் பேசவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. செய்யும் வேலையை வைத்து ஒருவரை விளிப்பது தவறு.

  இந்த 'தமிழன்' என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. தெலுங்கு பேசும் தமிழர்கள் பலர், 'நீ, வா' என்றுதான் சொல்லுவார்கள் (ஆனால் தமிழில் நீங்க, வாங்க என்று இருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை). என்னுடைய உறவினர்களில் சிலர், சென்னைத் தமிழில் பேசுவது எனக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கும் (சென்னைத் தமிழில் மரியாதை குறைவு).

  ஒரு இடுகை, 'தமிழர்களின் பண்பாடு' என்று நீங்கள் கருதுபவற்றை வைத்து எழுதுங்கள். அப்போதுதான் தெரியும், இந்தப் பண்பாடு 90% பேரிடத்தில் கிடையாது என்று... ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே நீங்களே சொல்லி விட்டீர்கள் 90 சதவீதம் இல்லையென இதுவே உண்மை இருப்பினும் எழுதுகிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 27. நூலைப்போல் சேலை என்பது போல..வாயைப்போல்(வார்த்தை) சில மனிதர்கள்.

  பதிலளிநீக்கு
 28. ரங்கராஜ் பாண்டே கேள்விக்கென்ன பதில் எனும் நேர்காணல் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். அவருடன் தங்கள் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள். வலைத்தளம் புதியபொலிவுடன்... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தளத்தை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 29. ரங்கராஜ் பாண்டே .. .. யாரு இவர்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தந்தி தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் சகோ.

   நீக்கு
 30. திரு ரங்கராஜ் பாண்டே யின் சொல்லாடல் குறித்து எனக்கும் சில கருத்து உண்டு. ஆனாலும் அவர் பேட்டிக்காக செம்மையான முறையில் தயார் செய்து வரும் பாங்கு எனக்கு பிடிக்கும். நமக்கு பிடிக்காததை விட்டுவிடுவோம். பிடித்ததை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவரது கேள்வித்திறனை ரசிப்பவன் நான்.

   நீக்கு
 31. ம்ம்ம்ம்... என்ன சொல்ல. தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் படித்த பலரே இப்படித்தான் பேசுகிறார்கள். இவர் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர் - ஆனாலும் தவறு எனத் தெரிந்து பேசுகிறாரா தெரியாமல் பேசுகிறாரா என்பது புரியவில்லை.

  நான் பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதையும் பார்ப்பதே இல்லை. குறிப்பாக அரசியல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி இது தவறு என்பதே தெரியாத வளர்ப்பு முறைதான்.

   நீக்கு