தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 20, 2019

மீண்டும் இனிய விழா
 தேவகோட்டையில்

வணக்கம் நட்பூக்களே... சற்றே நீண்ட இடைவளி நலம்தானே ?
இறையருளாலும், தங்களது ஆசீர்வாதத்தாலும் நலமுடன் எமது செல்வங்கள் தமிழ்வாணன் – பிரியங்கா திருமணம் பரமக்குடியில் நலமுடன் நிகழ்ந்தது. அலைபேசியிலும், கட்செவி வழியாகவும் வாழ்த்திய உள்ளங்களுக்கு எமது நன்றிகள் கோடி. எனது இரண்டாவது கடமையும் செவ்வனே முடிந்தது என்றே கருதுகிறேன்.
 பரமக்குடியில்
 மண்டப மேற்பார்வை

 அம்மாவுடன் செல்வங்கள்


திருமணத்துக்கு முன்பைவிட திருமண நிகழ்வுகளுக்கு பிறகே எனக்கு அதிகமான வேலைப்பளு இதன் காரணமாகவே நான் வலையுலகம் வரவில்லை பொருத்தருள்க... திருமணம் மிகச்சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது.

ஞானி ஸ்ரீ பூவுவின் ஆசி ஸ்வீட் எடுங்க..
நெல்லைத்தமிழருக்கு இனிப்பு பிடிக்குமா ?
 முறுக்கு நொறுக்க..

 குலதெய்வ கோயிலில்...
 பொங்கலிடல்...


திருமண புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறேன் இதெல்லாம் அலைபேசி வழியாக எடுத்தவை ஆகவே சிறப்பானதாக இருக்காது. தங்களது விடுபட்ட பதிவுகள் அனைத்தும் விரைவில் படித்து கருத்துரை இடுவேன். மீண்டும் நன்றி கூறி விடை பெறுவது உங்கள் கில்லர்ஜி. திருமண பட்டுகள் மட்டும்...
 மற்றவை இங்கு...
 குவைத் ஜி கேட்ட எனது அங்கவஸ்திரம்
 கோயமுத்தூரில்...
ஸ்ரீ தடியார் உடையவர் ஆலயம்

 உனது ஆசிகள் குழந்தைகளுக்கு கிடைக்கட்டும்.
 கடந்த ஆறு மாதங்களாக கடுமையான அலைச்சல்.
 கோவையில் தனிக்குடித்தனம்
வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்

காணொளி

எமது மற்ற குடும்ப பதிவுகள் காண கீழே சொடுக்கலாம்

90 கருத்துகள்:

 1. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி. மகனும் மருமகளும் ரொம்ப அழகாக, நல்ல ஜோடிப்பொருத்தமாக இருக்கிறார்கள். கல்யாணவீடென்றாலே.. அதுவும் ஊரில் நடைபெறும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், நீண்ட நாட்களும் எடுக்கும் கொண்டாட்டம்.

  மணமக்களை தேம்ஸ்ஸ் இல்ல இல்ல உங்க ஊரணிணிக் கரையில் வைத்தும் படமெடுத்திருக்கிறீங்க...:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா முதல் வாழ்த்து தங்களது கண்டு மகிழ்ச்சி.

   அந்த தேம்ஸ் நதி புகைப்படம் உங்களுக்காகவே வெளியிட்டேன்.

   நீக்கு
  2. கில்லர்ஜி எனக்கு ஆரம்பம் கேட்கப் பயமாக இருந்ததால் விட்டு விட்டேன், உண்மையில் இப்படி பெரிய நோட்டீஸ் போர்ட் ஊர்ச் சந்தியில் வைப்பினமோ? மணமக்களைப்போட்டு.. கோயம்புத்தூரில் எனப் போட்டிருக்கிறீங்க.. அங்கு திருமணம் நடைபெறவில்லையே?.. எங்களிடங்களில், ஹோல் வாசலில் மட்டுமே இருக்கும்.

   நீக்கு
  3. இந்த ப்ளக்ஸ் மகனின் கோவை நண்பர்கள் எங்கள் வீட்டருகில் வைத்தது இன்றுவரை அகற்றவில்லை.

   நீக்கு
 2. குட்மார்னிங் ..கில்லர்ஜி. திருமணத்தைச் சுருக்கமாக புகைப்படங்களில் கொடுத்து விட்டீர்கள். இல்லம், திருமண மண்டபம், திருமணம், தம்பதியர் என வரிசையாக கொடுத்து அசத்தி விட்டீர்கள். வேஷ்டி அங்கவஸ்திரத்தில் உங்களைப் பார்க்காதது பெரிய குறை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி திருமண படங்கள் இன்னும் வரவில்லை.
   மேலும் நான் பிஸியாக இருந்ததால் படமும் அதிகம் எடுக்கவில்லை.

   நீக்கு
  2. அதாவது கில்லர்ஜியின் செல்பியைக் கேட்கிறார் ஸ்ரீராம்:))

   நீக்கு
  3. செல்ஃபி எடுக்கும் நிலையிலா இருந்தேன்.

   நீக்கு
 3. மணமக்களுக்கு வாழ்த்துகள். தமிழ்வாணன் - ப்ரியங்கா தம்பதியர் வாழ்வில் எல்லா நலனும் பெற்று சீருடனும் சிறப்புடனும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. தேர்ந்தெடுத்து இணைத்திருக்கும் படங்கள் யாவும் சிறப்பு. இனிதான அலைச்சலும், மகிழ்வான களைப்பும் நிறைவு செய்து மெதுவாக வாருங்கள் ..ஜி. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது கண்டு மகிழ்ச்சி.

  வரும் இடுகைகளில் யார் யார் என படங்களின் கீழ் எழுதுங்கள். உங்கள் மகள், மருமகனை என்னால் கண்டுபிடிக்க முடியலை.

  உங்களுடைய பெரும் பொறுப்பு தீர்ந்தது. இனி வாரிசுகள் பொறுப்பை மெதுவாக எடுத்துக்கொள்ளணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே எல்லா படங்களிலும் மணமக்களே இருக்கின்றனர்.
   மேலிருந்து கீழ் 18-வது புகைப்படத்தில் மருமகனும், மகளும் இருக்கின்றனர். அடுத்த ப்ளக்ஸ் போர்டிலும் உள்ளனர்.

   மற்றபடி மணமகள் கூடவே இருப்பது மகள் மட்டுமே... நன்றி தமிழரே.

   நீக்கு
  2. ஆஆஆஆஆ நான் கண்டு பிடிச்சிட்டனே பச்சை சாறியில் இருப்பது மகள்..

   நீக்கு
 6. திருமண நிகழ்வுகள் பற்றிய படங்களுக்கு வாழ்த்துகள் கில்லர்ஜி. உங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டீர்கள். அது ஏன் தனிக்குடித்தனம்? பெண், மாப்பிள்ளையுடன் இருக்க முடியாது என்றாலும் பிள்ளை, மருமகளுடன் ஒரே ஊரிலாவது இருக்கலாம். ஆனால் இது உங்கள் வசதியைப் பொறுத்தது. எல்லாப் படங்களும் அலைபேசியில் எடுத்தாலும் சிறப்பாகவே வந்திருக்கின்றன. காணொளியைப் பின்னர் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மகன் கோவை விமான நிலையத்தில் பிரைவேட் ஆபீஸில் வேலை செய்கிறான்.

   எனக்கு கோயமுத்தூர் கிராமத்தைவிட, தேவகோட்டை சிட்டியே பிடித்தமானது.

   அந்த வீடு அவர்களுக்காகவே வாங்கியதுதானே... வாழட்டும் வளமுடன்.

   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. தேவகோட்டை சிற்றி???:).. ஓ மை கட்வுளே.. இன்னும் என்னை ஏன் தேம்ஸ்ல குதிக்க விடாமல் வைத்திருக்கிறாய் வைரவாஆஆஆஆஆ:).. முடியல்ல:)

   நீக்கு
  3. புதுத்தம்பதிகள் தனிக்குடித்தனம் போய் கொஞ்சக்காலம் வாழ்வை என்சோய் பண்ண்ணுவதில்.. கீசாக்காவுக்குப் பொறாமை கர்ர்:)) பொல்லாத மாமியாராக இருப்பா போல கீசாக்கா:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு உங்கட ஊரணியில வீசிடுங்கோ கில்லர்ஜி:).

   நீக்கு
  4. ஓ... குதிக்கலாமே... தடுப்பவர்களை தடுப்பேன்.

   நீக்கு
  5. நான் படிச்சு கிழிச்சுட்டேன். கீ.சா.மேடம் படிச்சாங்களா என்பது தெரியாது.

   நீக்கு
  6. கவலை வேண்டாம் இந்த மாதிரி போஸ்ட் மென் வேலைசெய்யதானே நானா இருக்கேன் :)
   எனக்கு சம்பளம்வராததால் உடனே கீசாக்காவுக்கு இந்த கருத்து அனுப்பப்படுகின்றது

   நீக்கு
  7. ஆஹா நல்ல கோர்வை ஸூப்பர்.

   நீக்கு
  8. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த அதிரடிக்குக் கூட்டுக்குடும்பம்னாலே பிடிக்காது போல! பாவம் கில்லர்ஜி, இத்தனை வருடங்கள் தனியா இருந்திருக்காரே, இப்போவானும் மகன், மருமகளோடு சேர்ந்து இருக்கட்டும்னு சொன்னால் போட்டுக்கொடுக்கிறாங்க பாருங்க! :))))))

   நீக்கு
  9. அது சரி கில்லர்ஜி, கல்யாண ஜவுளி எங்களுக்கெல்லாம் எடுக்கலையா? அதிரடி, ஏஞ்சல் அதைக் கேட்காமல் இரண்டு பேரும் என்ன செய்யறீங்க? :))))))

   நீக்கு
  10. என்றுமே நான் கூட்டுக்குடும்பத்தை ஆதரிப்பவனே... அதில் பலன்கள் பல வகை உண்டு.

   நீக்கு
  11. கோவை போத்திஸ், ஸ்ரீகணபதி சில்க்ஸ் மற்றும் எமனேஸ்வரம் பத்மாவதி பட்டு சில்க்ஸ் எந்த கட்டைப்பை வேண்டுமோ... பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
  12. காணொளியை இப்போத் தான் பார்க்க முடிந்தது. யாருக்கோ உணவைப் பொட்டலம் கட்டுகிறார் உங்க உறவுப் பெண்மணி ஒருத்தர். உங்களைக் காணவில்லை. குரல் உங்களுடையதோ?

   நீக்கு
  13. நான் காணொளி எடுக்கிறேன்.

   காவி வேட்டி உடுத்தி இருப்பவர் சித்தப்பா கோவிலைக் கட்டியவர்.

   ஞானி ஸ்ரீபூவுவின் பதினாறு மக்களில் மிச்சமான கடைசி மகன்.

   இட்லியை வீட்டில் செய்து கொண்டு வராமல் கடையில் வாங்கி வந்ததற்காக சத்தம் போடுகிறார்.

   நீக்கு
  14. ஆஆஆஆஆ கில்லர்ஜி கல்யாணப் போஸ்ட் போட்டிருக்கிறார் ஓடுங்கோ என என் செக்குக்குச் சொன்னது டப்பாப் போச்சே:) கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  15. கூட்டுக் குடும்பம் நல்லதுதான் கீசாக்கா ஆனா கில்லர்ஜிக்கு இப்போ மகன் மருமகளுடன் கூட்டுக் குடும்பம் அமைப்பதை விட ... அவரின் வாழ்க்கைக்கு ஒரு கூட்டுக் குடும்பம் அமைப்பதே சிறப்பு என்பது என் கருத்து.. தவறெனில் மன்னிச்சுக்கோங்கோ..

   கீசாக்கா ஜவுளிக்கு முன்பே, இன்விடேசன் கார்ட்டில எங்கட பெயர் இல்லை என ஆரம்பிச்சேன் ஜண்டையை:)).....

   நீக்கு
  16. ஏன்.... வீட்டுக்கு மருமகனும், மருமகளும் வந்த பிறகா ???

   நீக்கு
 7. மனமக்களுக்கு வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 8. கோவையில் தனிக்குடித்தனம் அவங்களுக்கா? அதுவும் நல்லதுதான். தேவைனா ஆலோசனை சொல்லலாம். நல்லா இருக்கட்டும்.

  ஸ்வீட்டும் காரமும் எனக்கும் துரை செல்வராஜு சாருக்குமே பத்தாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தமிழரே...

   நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பலகார அண்டாவை படமெடுத்து போடச்சொல்கின்றீர்களோ...

   குவைத்ஜியை இழுப்பது பக்கத்து இலைக்கு பாயாசம் போடச்சொல்வது போலிருக்கிறதே...

   நீக்கு

 9. மணமக்களுக்கு வாழ்த்துகளும் தந்தையும் தாயுமாக இருந்து கல்யாணத்தை சிறப்பாக நடத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள் கூடிய விரைவில் பேரன் பேத்திகளுடன் நீங்கள் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் பார்க்கலாம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மதுரைத்தமிழரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு...
   தங்களது வாக்கு நிறைவேறட்டும்.

   நீக்கு
 10. மிகவும் மகிழ்ச்சி ஜி... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. உங்களது மகனும் மருமகளும் எல்லா சௌபாக்யங்களையும் இறைவன் அருளால் இனிதே பெற்று, நீடூழி வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 12. மிக மிக மகிழ்ச்சி ..படங்கள் எல்லாம் மிக அற்புதமாக உள்ளன அண்ணா..

  அம்மாவுடன் மணமக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிக மிக அழகு ...

  இங்குள்ள கல்யாண படங்களை காணும் போது திருமணத்திற்கே சென்று வந்த நிறைவு ...

  என்றும் எங்கும் மகிழ்ச்சி செழித்து பரவட்டும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரையும், வாழ்த்துகளும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 13. மணமக்களுக்கு வாழ்த்துகள்! எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள வேண்டுகிறேன்.

  கல்யாண வேலை மற்றும் அலைச்சலில் இருந்த தாங்கள், வலையுலகத்திற்கு வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 14. அம்மா, அத்தை ஆசீர்வாதங்களுடன் மணமக்கள் இனிதே இல்லறவாழ்வினை ஆரம்பிக்க நல்வாழ்த்துக்கள். அழகா இருக்காங்க உங்க ம(ரும)கள் அண்ணா ஜீ. எல்லா படங்களும் அழகு. சிறப்பாக திருமணம் நடைபெற்றமை பதிவின் மூலம் தெரிகிறது. மகிழ்ச்சி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. வனிதாவின் புகைப்படத்தை இடநினைத்தேன் பிறகு வேண்டாமென விட்டு விட்டேன். நினைவு படுத்தி விட்டீர்கள். மீண்டும் நன்றி

   நீக்கு
 15. மகனின் திருமணம்சிறப்பாக நடந்தேறியது கேட்டு மகிழ்ச்சி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது வாழ்த்துகள் குழந்தைகளுக்கு கிடைப்பதே பெருமை.

   நீக்கு
 16. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!
  உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்த பெருமைக்கும் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  நெல்லை தமிழனுக்கு மட்டும்தான் இனிப்போ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வாழ்த்தியமைக்கு நன்றி.

   நெ.த. அவர்களுக்கு பிடிக்குமா ? என்றுதானே கேட்டேன். அதிரசத்தை தட்டோடு எடுத்துக் கொள்ளுங்கள் சகோ.

   நீக்கு
 18. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 19. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .எல்லா படங்களும் அழகு .மணமக்கள் இப்போதைய மற்றும் சில மாதம் முன்பு மணமான உங்கள் மகள் மருமகன் .இரண்டு ஜோடிகளும் நல்ல பொருத்தம் ..
  உள்ளார்ந்த சந்தோசம் அந்த பிள்ளைங்க முகத்தில் தெரியுது .இறைவன் ஆசீர்வாதங்கள் அவர்கள் இரு ஜோடிகளுக்கும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மையான வார்த்தை எனது சம்மதத்தைவிட அவர்களது சம்மதம் அழுத்தமானது, ஆழமானது இதுவே எனது மகிழ்ச்சி.

   தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  தங்கள் இல்லத் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மணமக்கள் புகைப்படங்கள் மிகவும் அழகு. தங்கள் மகனும், மருமகளும் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ மனமாற வாழ்த்துகிறேன். ஒரு தந்தையின் கடமையை சிறப்பாக ஆற்றிய உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். புகைப்படங்களை பார்த்ததும். தங்கள் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சந்தோஷம் கிடைத்தது. எங்களையும் தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து திருமண படங்களையும், திருமணத்திற்கு செய்த பலகாரங்களையும் பகிர்ந்தளித்த தங்கள் அன்புக்கு மிக மிக நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும், பதிவைக்குறித்த தங்களது கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 21. மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 22. திருமணம் குறித்த, சுவையான தகவல்களும் அழகான புகைப்படங்களும் மகிழ்ச்சியளித்தன.

  தம்பதியர் தமிழ்வாணனும் பிரியங்காவும் நீண்ட ஆயுளுடன், மனம் ஒன்றி வாழ்வாங்கு வாழ்ந்திட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ந்தேன்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 23. வாழ்க மணமக்கள்... பல்லாண்டு பல்லாண்டு பல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழும் வகைக்கு வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 24. கடைசிப் பந்தி ஆகி விட்டது...

  அது எல்லாம் சரிதான்...

  தாம்பூலம் எங்கே ஸ்வாமிகளே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாம்பூலப்பையும் உண்டு ஜி படம் போட மறந்து விட்டேன்.

   நீக்கு
 25. அன்பு தேவ கோட்டைஜி ,வாழ்க மணமக்கள். அழகான பொருத்தமான ஜோடி. அவர்கள் அம்மாவின் படத்தையும் போட்டு
  கல்யாணத்தில் கலந்து கொள்ள வைத்துவிட்டீர்கள்.
  அருமை அருமை அத்தனை படங்களும் அருமை.
  மகளும் மருமகனு திருமணத்தைக் கூட இருந்து நடத்திவைத்த அழகு கண்முன்னே இருக்கிறது.
  கையோடு குலதெய்வத்துக்கும் பொங்கல் வைத்தாச்சு.
  அனைவரின் ஆசிகளும் எங்கள் ஆசிகளோடு சேர்ந்து குழந்தைகள் சிறப்பாக இருப்பார்கள்.

  மனம் நிறை மகிழ்ச்சி. சிறிது ஓய்வெடுத்துப் பதிவு செய்யுங்கள். திருமணம் முடித்த பெருமை
  முகத்தில் தெரிகிறது.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகள் குழந்தைகளுக்கு கிடைப்பது பெருமையே...

   தங்களது விரிவான கருத்துரை மகிழ்ச்சியை தருகிறது மிக்க நன்றி அம்மா.

   நீக்கு
 26. மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் எண்ணம்போல அனைத்தும் சிறப்பாக நடந்ததறிந்து மகிழ்ச்சி. உங்களின் இப்பதிவு வெளியிடப்பட்ட நாளன்றுதான் அண்மையில் திருமணமான என் இளைய மகனும், மருமகளும் மூன்று அழைப்புகளும் நிறைவு பெற்று சென்னை சென்றார்கள். கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்கும் நல்ல அலைச்சல், பணிகள். இனி பதிவுகளைப் படித்து, கருத்து கூற ஆரம்பிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   தங்கள் வீட்டு மணமக்களுக்கு மீண்டும் எமது வாழ்த்துகள்.

   தங்களது பதிவுகளையும் விரைவில் படிப்பேன்.

   நீக்கு
 27. மகன் , மருமகளுக்கு வாழ்த்துக்கள்.
  நாங்களும் திருமணம் முடிந்தவுடன் குலதெய்வம் கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.
  அழகான படங்கள், காணொளி .
  வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. காணொளி கண்டமைக்கும் நன்றி.

   நீக்கு
 28. பலகாரங்கள் அருமை.
  அலைச்சல் முகத்தில் தெரிந்தாலும், கடமைகளை சரிவர செய்து விட்ட திருப்த்தியும், மகிழ்ச்சியும் முகத்தில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ என்னுள் திருப்தியாக கடமையை செய்ததாகவே நினைக்கிறேன்.

   நீக்கு
 29. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
  மனமக்களுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை காண்பதற்காக மீண்டும் மீண்டும் அனைத்து புகைப்படங்களையும் நிறுத்தி நிதானமாக பார்த்தேன். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டிர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   வாழ்த்துகளுக்கு நன்றி.

   முறையான ஆல்பம், படங்கள் இன்னும் வரவில்லை நண்பரே வந்தவுடன் பதிவேன்.

   நீக்கு
 30. பல வளங்களும் மகிழ்வும் என்றும் சூழ்ந்திருக்க மணமக்கள் என்றென்றும் ஆனந்தமாக வாழ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 31. ￰திருமண படங்களை ￰கண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.அவர்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். சுபநிகழ்ச்சி அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வழி பட வேண்டுமென உணர்த்திய உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது பிராத்தனைகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 32. கில்லர்ஜி உங்கள் ம்கன் தமிழ்வாணன் அவர்களின் திருமணம் நன்றாக இனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துகள்! மருமகளுக்கும் வாழ்த்துகள்! பல்லாண்டு இனிமையான இல்லறம் படைத்து மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகள்! படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

  துளசிதரன்

  மருமகள் (மறு)மகளாக உங்கள் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்ததற்கு வாழ்த்துகள் ஜி. இருவரும் எப்போதும் மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  அது சரி மாப்பிள்ளை தமிழ்வாணன் ஒல்லியாகிவிட்டாரே!! முன்பை விட மெலிந்திருப்பது போலத் தெரிகிறது.

  உங்கள் மீசை மட்டும் தான் மெலியலை!!! ஹா ஹா ஹா ஹா நீங்க மெலிஞ்சுருக்கீங்க அலைச்சலினால்...

  படங்கள் எல்லாம் அழகு உங்க வீடு சூப்பர்!!

  காணொளியும் கண்டேன்...குடும்பக் கோயிலிலோ?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலக்காட்டாரின் வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

   தங்களது பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   மீசைக்கு வழக்கம்போலவே உணவும், உரமும் கிடைப்பதால் செழிப்பு.

   தமிழ்வாணனுக்கு இனி. நல்ல உணவு கிடைக்கும்.

   ஆம் எங்கள் குலதெய்வ கோயில்தான் (உத்திரகோசமங்கையிலிருந்து எட்டு கிலோ மீட்டர் இதம்பாடல்)

   நீக்கு