தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 12, 2015

கடவுளைக் கண்டேன் (1)


Apollo Hospital Operation Theater ஸ்டெக்சரில் படுத்துக் கிடக்கின்றேன் என்னைச் சுற்றி சுமார் 20 டாக்டர்களும், ஹெல்ஃப்புக்காக 30 நர்ஸுகளும் நிற்கின்றார்கள் ஒரு டாக்டர் எனக்கு ஏதோ சுவாசக்குழாயை எடுத்து பொருத்தி அனஸேசியா கொடுக்க முயல்வது தெரிய தூரத்தில் அங்கு வேலை செய்யும் வலைப்பதிவர் நண்பர் திரு. அரசன். சே அவர்கள் கண்ணாடியின் வழியே என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றார் எனது கண்கள் சுழன்று ஏதோ வெட்டவெளியில் மிதந்து போவது போல உணரும் பொழுதே எனக்கு புரிந்து விட்டது எத்தனை பி.டி.சாமி கதைகள் படித்திருக்கிறோம் எவ்வளவு விட்டாலாச்சார்யா படங்கள் பார்த்து இருக்கிறோம் ஆஹா நாம,

இறந்துட்டோம்....
டெத்து...
மர்ஹயா...
சனிபோயாடு...
மரிச்சு...
சத்ஒயிட்டே...
மவுத்து....
பத்தாய்...
மரில்லா...

நான் மிதப்பது போலவே நிற்க எதிரே ஏதோ ஒரு உருவம் தெரிகிறது ஆனால் தெரியவில்லை அசிரீரி குரல் மட்டும் கேட்கிறது Yes அதே சீர்காழி S. கோவிந்தராஜன் குரல் போலவே கணீரென்று இருந்தது உருவத்தில் இயக்குனர் A. P. நாகராஜன் போலவே இருந்தார்.

உமக்கு பூலோகத்தில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டு இருக்கின்றது நீர் அறிவாயா ?
ஆமா, கை விரலில் நெகச்சுத்தி அதற்காகத்தான் ஹோஸ்ப்பிட்டல் போனேன் டாக்டர்கள் ஆஃப்ரேஷன் செய்துக்கிட்டு இருந்தாங்களே நான் இங்கே எப்படி ?

இது மேலோகம் உமக்கு இன்னும் மரணம் நிச்சயம் செய்யப்படவில்லை இன்னும் ½ நாளிகையில் முடிவு எடுக்கப்படும்.
ஐயா சாமி என்னை விட்டுருங்க எனக்கு வலைப்பூவுல நிறைய பதிவுகள் ட்ராஃப்ட்ல கிடக்கிறது அதையெல்லாம் பூர்த்தி செய்யனும்.

உமக்கு ஏதாவது ஆசைகள் இருப்பின் சொல்வீர் அவை நியாயமாக இருந்தால் ? பரிசீலித்து உமது ஆயுளை நீடிப்பதா ? இல்லை முடிப்பதா ? என்று முடிவு செய்யப்படும்.
சாமி எனக்கு 10 ஆசைகள் இருக்கிறது அதையெல்லாம் கண்டு முடித்தவுடன் என்னை அழைத்துக் கொல்ளுங்கள்.

நல்லது வரிசையாக உமது ஆசைகளை இந்த மாமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

01.  கைவண்டித் தொழிலாளி வண்டி கஷ்டப்பட்டு இழுத்துப் போவதை பார்த்த சாலையோரமாய் நடந்து போன மிகப்பெரிய திரைப்பட நடிகர் என்று சொல்லப்படும் வால்டர் வடுகநாத் வண்டியை கொஞ்சம் தள்ளி விட்டுப்போகிறார்.
02.  தமிழ் நாட்டு மந்திரியொருவர் சாலையோரம் உட்கார்ந்திருக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் தனது செருப்பை தைப்பதற்கு நிற்கின்றார்.
03.  பெரிய கிரிக்கெட் வீரர் என்று சொல்லப்படும் சங்கிலி பேரூந்து நிலையத்தில் பயணச்சீட்டு எடுப்பதற்க்கு வரிசையில் நிற்கிறார்.
04.  சட்டமன்ற வளாகத்தில் ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர் ஒருவர் தனக்கு ஓய்வூதியம் வருவது தாமதமாகிறது என்று முதல் அமைச்சருடன் வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கிறார்.
05.  இந்தியன் ஏர்வேய்ஸ் விமானத்தில் பயணியொருவர் சன்னலோர தனது இருக்கையில் பிரதமர் அமர்ந்ததற்காக இருக்கை மாறுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
06.  ரயில்வே நிலையத்தில் பயணியொருவரின் பெட்டியிலிருந்து தவறி விழுந்த பணப்பையை காவல்துறை அதிகாரியே ? எடுத்துக் கொடுக்கிறார்.
07.  பேரூந்தில் ஏறியவன் உட்கார்ந்திருந்த பெரியவரின் காலில் மிதித்து விட்டு மன்னிப்பு கேட்காமல் சென்ற குற்றத்திற்காக அவனை பெரியவரிடம் 1008 முறை மன்னிப்பு கேட்கும்படி நீதி மன்றத்தில் நீதிபதி தீர்ப்பில் உத்தரவிடுகிறார்.
08.  நாட்டில் குறைந்து வரும் குற்றங்களால் வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க காவல்துறை மற்றும் சட்டத்துறையை விட்டு இளைய தலைமுறையினர் வேறு துறைகளில் தேர்ந்தெடுத்து படிப்பை முடித்தவுடன், வேலையை பெறுமாறு தொலைக்காட்சியில் குடியரசுத்தலைவர் அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கிறார்.
09.  இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மதம், ஜாதி என்ற 2 வார்த்தைகளையும் நிரந்தமாக நீக்கம் செய்யப் படுவதாகவும், இந்த வார்த்தைகளை இனி உபயோகிக்கும் நபருக்கு 2 வாரகாலம் சிறை தண்டணை அனுபவிக்க வேண்டியது வரும் என்றும் இது பாரதியார் பிறந்த தினமான டிசம்பர் 11 முதல் அமுழுக்கு வரும் மசோதாவை பாராளுமன்றத்தில் சபாநாயகர் தாக்கல் செய்கிறார்.
10.  காய்கறி கடைக்காரர் தனக்கு வருமானவரியை குறைத்து எழுதிய காரணத்துக்காக வருமானவரி அதிகாரியை தகுதி இல்லாத இவரால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப் படுன்றும் அதனால் இவரை வேலையிலிருந்து நீக்குமாறு வழக்கு தொடுக்கிறார்.

இப்புட்டுத்தான் சாமி இப்படியொரு இந்தியாவை நான் பார்க்கனும் அப்புறமா என்னை உங்க இஷ்டப்படி சொர்க்கத்துல போடுங்க.
ஹூம் நீர் மிகப்பெரிய காரியவாதியாக இருக்கின்றீர் பகவான்ஜியின் நண்பரல்லவா... இன்னும் பலகோடி மாமாங்கம் ஆண்டுகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உயிர் வாழ நினைத்து இப்படியான, கொக்கிச் சிக்கலில் எம்மையும் கோர்த்து விட்டீர் எல்லாம் சாகாக்கலை நூலைப் படித்ததின் விளைவு நாம் இதை வேறு மாதிரியாக தீர்மானிக்கின்றோம் உமது வலைப்பூ நண்பர்கள் 10 நபர்களின் ஆசைகளை முன் வைக்கச் சொல்லி அதன் மூலம் அவர்களது 10 நண்பர்களின் ஆசைகளையும் முன் வைக்கச் சொல்வீராக அவைகளில் உமது ஆசைகள் சிறந்ததாக இருந்தால் ? மட்டுமே நாம் பரிசீலிப்போம் இல்லை என்றால் ? ? ?
நல்லது உத்தரவு சாமி இப்பவே எல்லோரையும் உசுப்பேற்றி விடுகிறேன்.

அன்பு நண்பர்களே... நண்பிகளே... இது ஒரு தொடர் பதிவு தங்களின் மனதில் உள்ள ஆசைகள் சிந்திக்க வைப்பதாகவோ, சிரிக்க வைப்பதாகவோ, சுயநலமாகவோ, பொது நலமாகவோ, நியாயமாகவோ எப்படியோ ? அவைகளை முன் வைத்து தங்களது பத்து ண்பர்களையும் இதில் இணைத்து இதே தலைப்புடன் வரிசை எண் இணைத்து விடுங்கள் இதோ... எனது... கடவுளைக் கண்டேன் (1) இப்படித்தான்...

நான் வழக்கமாக சொல்வது போல என்னை மாதிரி இழுக்க வேண்டிய அவசியம் இல்லை நேரடியாக விடயத்துக்கு வந்து விடலாம் இருப்பினும் அது உங்கள் விருப்பம் என் மீது அன்பு வைத்திருப்பது உண்மையானால் அனைவரும் தங்களது ஆசைகளை முன் வைக்கவும் அப்பொழுதுதான் எனது விரலில் நடந்து கொண்டு இருக்கும் நெகச்சுத்தி Operation வெற்றிகரமாக முடியும் இல்லை எனில் விதியின் வழி...

இதற்கு நான் பரிந்துரைக்கும் எமது நண்பர்கள்.

01. இனிய நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.
02. இனியவர் திரு முனைவர். B. ஜம்புலிங்கம் அவர்கள்.
03. அன்பின் ஜி குவைத் திரு. துரை செல்வராஜூ அவர்கள்.
04. அன்புக்குறிய ஐயா திரு. முனைவர். பழனி கந்தசாமி அவர்கள்.
05. அன்பு ஜி திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
06. இனிய வில்லங்கத்தார் திரு. துளசிதரன் & திருமதி. கீதா அவர்கள்.
07. அன்பு நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்கள்.
08. இனிய கவிஞர். திருமதி. தேன்மதுரத்தமிழ் அவர்கள்.
09. இனிய கவிஞர். திருமதி. கீதா. எம் அவர்கள்.
10. இனிய நண்பர் திரு. சே. குமார் அவர்கள்.

மேற்கண்ட பத்து ண்பர்களையும் நான் பரிந்துரை செய்கின்றேன் நமது உள்ளத்து ஆசைகள் இந்த பரந்த பூமியில் பறந்து வரட்டும் புறப்படுங்கள்.

இன்றைய கனவுகள்... நாளைய நனவாக... பிறரும் தயாராகுங்கள் தங்களுக்கும் அழைப்பு வரும்.

என்றும் அன்புடன்
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

சாம்பசிவம்-
ஒரு நெகச்சுத்தியாலே... எத்தனை தலைகள் உருளப்போகுதோ...

சிவாதாமஸ்அலி-
என்னங்கய்யா, அபுதாபியில ஒரு எழுமிச்சம்பழம் கிடைக்கலையா ?

Chivas Regal சிவசம்போ-
? ? ?


நான் தொடங்கி வைத்த எனது முந்தைய தொடர் பதிவைக் காணாதவர்கள் சொடுக்கி பார்க்KALAM

காண் – ஒளி

96 கருத்துகள்:

 1. நல்ல வேளை,நான் பிழைத்துக் கொண்டேன் ,காரிய வாதி என்பதால் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரிடமாவது மாட்டிக்கொள்வீர்கள் ஜி

   நீக்கு
  2. யாரிடமும் இல்லை. என்னிடம்தான் வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார் கில்லர்ஜி. பார்த்துக்கொண்டேயிருங்கள். கிழி கிழி யென்று கிழித்து தோரணம் கட்டி விடுகிறேன்.

   நீக்கு
  3. வாங்க ஐயா மனசுல கிலியை உண்டு பண்ணுறீங்க....

   நீக்கு
 2. சரிதான் புது ஜோதியை தொடக்கி வைத்துவிட்டீர்கள், மேற்படி பத்து பேர்களை தவிர் இந்த ஜோதியில் எவ்வளவு பேர் ஐக்கியமாகப் போகிறார்களோ, பரவாயில்லை ஆசை நூறு வகை அதையும்தான் பார்ப்போமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆரம்பிச்சுட்டோம் ஏதாவது நடக்கட்டும்

   நீக்கு
 3. என்னது ஆசைகளா...? என்ன ஜி... எனக்கும் ஆசைக்கும் ரொம்ப தூரமாச்சே...! இருந்தாலும் முயற்சி செய்து ஆசைப்படுகிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பாட்டுக் கேசட்டுகளை தூசி தட்டி எடுத்து விடுங்க....

   நீக்கு
  2. தட்டி விட்டேன் ஜி : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html

   நீக்கு
  3. வந்தேன் ஜி ரசித்தேன் நன்றி

   நீக்கு
 4. ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாங்கட்டி ஆளினும் கடல்மீதிலே என்று தாயுமானவரே பாடியிருக்கும்போது கடவுளிடம் கேட்க தங்களுக்கு 10 ஆசைகள் தானா? கடவுள் உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய பதிவுலக நண்பர்களின் ஆசைகளைவிட தங்களது ஆசைகள் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.

  என்னையும் இந்த தொடர்பதிவில் எழுத இணைத்துவிட்டீர்களா? எழுத முயற்சிக்கிறேன். சிறிது அவகாசம் கொடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாயுமானவரின் அழகான பாடலை முன் வைத்து நல்ல கருத்துரை தந்தீர்கள்
   வேண்டிய நேரம் எடுத்து தங்களது ஆசைகளை பதிய எமது வாழ்த்துகள்

   நீக்கு
 5. அடி ஆத்தி ..மாட்டிவிட்டீர்களே..இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு...முயற்சிக்கிறேன்...உகளுக்கு ஏன் அந்த நகச்சுத்திவரணும்....இனி ஆண்டவன் பாடு அதோகதிதான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கவிதையாலேயே அசத்துவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன் நகச்சுத்தி வரக்காரணம் கண்ணேறுதான்

   நீக்கு
  2. தொடர் 2 பார்க்கவும்.

   நீக்கு
  3. பார்த்தேன், படித்தேன் சகோ அடியாத்தி என்ன வேகம் நன்றி.

   நீக்கு
 6. உமது உள்ளத்து ஆசைகள் அனைத்தும் பரந்து விரிந்த இந்த புண்ணிய பூமியில்
  புயலாய் புறப்பட்டு வரட்டும் .
  கடலூரில் கரை கடந்த புயல்
  தூறல் விட்டாலும், தூ....... விடாது போல் இருக்கிறதே?
  தேவக்கோட்டையார் உமது ஆசைப் புயலின் வேகம் அதிகம்
  சீற்றத்தில் சிக்கி சின்னாமின்னம் ஆகாமல் இருக்க குழலின்னிசையை கடவுள் காத்தருள்வாராக!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா ஈபிள் டவரின் உயரத்தில் இருந்து கொண்டு தாங்கள் இப்படிச் சொல்லலாமா ?

   நீக்கு
 7. அது சரி..

  சாதாரண நகசுத்தி சிக்கிச்சைக்கு -
  20 டாக்ட்டர்களும் 30 நர்சுகளும் எதுக்கு!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஜி சாதாரணமாக சொல்லிட்டீங்க ? நாம... யாரு ?அப்போல்லோ ஹோஸ்ப்பிட்டலுக்கு போறவுங்க... வி.வி.ஐ.பி அவுங்க பின்னே எப்படி பில் போடுறது ? பில் வந்ததும் அனுப்பி வைக்கிறேன் பார்த்து விட்டு மயக்கமாகி விடாதீங்க...

   நீக்கு
 8. 7வது ஆசையில் பெரியவர் காலை மிதித்தால் ? நீதி மன்றமா? இங்கே பல கொலைக் கேசுகளுக்கே விடை தெரியாமல்...தண்டிக்கப்படவேண்டியவனே செத்துபோனதும் தான் தூசு தட்டப் படுகிறது..நல்லா ஆசை...( மீசையைப் போலவே ஆசையும் பெரீசா இருந்தா..? )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் ஃப்ரான்ஸ் போயிருந்த பொழுது கவனித்தேன் அங்கு ரயிலில் வயதானவர்களுக்குத்தான் முன்னுரிமை ஸீட் இல்லாவிட்டால் சிறியவர் எழுந்து இடம் கொடுக்க வேண்டும் இது அங்குள்ள சட்டமோ என்று தோன்றும் அந்த அளவுக்கு மனித நேயம் அங்கு கடைப்பிடிக்கப்படுவதை கண்டேன் ஆகவே அதை மையமாக வைத்து எழுதினேன் வருகைக்கு நன்றி.

   நீங்களும் ஆசைகளை தயார் செய்யுங்கள் யாரிடமாவது விரைவில் மாட்டுவீர்கள் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்

   நீக்கு
  2. மாட்டிக்கொண்டேன்..உங்கள் சாபத்திற்கு நன்றி...( நான் எழுதியவை நன்றா என்று ட்டீச்ச்சருக்கே மார்க் போடுங்க..பார்ப்போம்...பாஸாகுறேனான்னு...

   நீக்கு
  3. ஹாஹாஹா அது சாபமில்லை வாழ்த்து வந்தேன் படித்தேன் ஸூப்பர்.

   நீக்கு
 9. என்ன ஜி எங்களை இதில் மாட்டிவிட்டீர்கள். 3 தினங்களாவது ஆகுமே...இந்தியாவைச் சுத்திப் பார்த்து மற்றவர்கள் பதிவுகளை வாசிக்காமல் இருந்து எங்கள் பதிவைப் போடணுமே...ம்ம்ம்

  10 ஆசையா...முயற்சி செய்கின்றோம் ஆனால் 10 பேரை இழுப்பது என்று ரொம்ப....ம்ம் யோசிக்கின்றோம்...சரி கில்லர்ஜி சொல்லி இல்லைனா அப்புறம் கொடுவா மீசை இந்த வில்லங்கத்தாரைச் சும்மா விடுமா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க ஆசைப்படுவதற்க்கு இந்தியாவை எதற்க்கு சுற்றணும் கொடுவா மீசை ஞாபகம் இருக்கட்டும்... ம்ம்... அது

   நீக்கு
 10. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்...
  நகச்சுத்தி என்று சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள்...சுத்தி சுத்தி அடித்திருக்கிறது...ஆப்பரேசன் தொடங்கட்டும்....நோயாளிகள் காலியாகிவிடாமல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க நண்பரே தங்களுக்கும் இடம் உண்டு.

   நீக்கு
 11. ஆகா முதல் ஆளாக மாட்டிக் கொண்டேனே நண்பரே
  தங்களின் அன்பே அன்புதான் நண்பரே
  தங்களின் அன்புக் கட்டளையினை நிறைவேற்றுவதைவிட
  வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது
  முயற்சிக்கிறேன் நண்பரே
  ஓரிரண்டு நாட்கள் அவகாசம் மட்டும் வழங்குங்கள் நண்பரே
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே 2 நாட்கள் அவகாசம் கேட்பீர்கள் கடைசியில் பாரத்தால் இன்று இரவே வெளியிட்டு விடுவீர்கள் தங்களைப்பற்றி தெரிந்ததுதானே... சி்றந்த ஆசைகளைப் பதிய எமது வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 12. ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம் நண்பரே! அது போதாதென்று 10 பேரை வேறு மாட்டிவிட்டீர்கள். பார்ப்போம் ஆசைப் பட்டியல் எப்படி போகிறது என்று.
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எல்லாம் மக்களுக்கான பொதுநல ஆசைதானே... வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 13. நல்லவேளை நான் உங்கள் பட்டியலில் இல்லை. பிழைத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்று இரவுக்குள் யாரிடமாவது மாட்டிக்கொள்வீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. அன்பு ஜிக்கு 7. நூறு வயசு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயசு 700 நூறா ? இதெல்லாம் ஓவரு..... இல்லையா ? நண்பரே.... இருந்தாலும் அன்பாய் சிவமே சொல்லும் பொழுது நம்பித்தான் ஆகனும்

   நீக்கு
 15. எனக்கு ஆசையே இல்ல...சாமி.....எப்பவும் நான் தயார் முடிந்தால் என்னை துாபய்க்கு( தபாய் என்றால் சாவு என்றுபொருள்)அனுப்பி வைக்கவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தபாய் என்றால் சாவா ? இது எந்த மொழி நண்பரே...

   நீக்கு
  2. துபாய்....நண்பரே..தவறுதலாகவிட்டது...எனது ஏரியா பந்தல் அமைப்பாளர்களின் மொழி நண்பரே... அந்த வீட்டுல ஒருவர் துபாய்க்கு போயிட்டாரு.. அங்கு பந்தல் போட்டுவிட்டு வந்தோம் என்பார்கள் நண்பரே

   நீக்கு
  3. விளக்கத்திற்க்கு நன்றி நண்பரே

   நீக்கு
 16. ஆஹா அடுத்த தொடர்பதிவா..... நடத்துங்க! நான் மாட்டிக்காதவரைக்கும் நல்லது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நாளைக்கு காலையில் பாருங்கள் தெரியும்.... ஹாஹாஹா

   நீக்கு
 17. இது நெகச்சுத்தியில்லை! நெசச் சுத்தி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஒரு வாசகமும் திருவாசகம்தான் ஐயா

   நீக்கு
 18. அன்பின் ஜி..

  இந்திர லோகத்தில் இருந்து மிரட்டல்..
  நம்முடைய பதிவை உடனடியாகக் கவனிக்கவும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தேன் ஜி அசத்தி விட்டீர்கள் நன்றி

   நீக்கு
  2. அன்பின் ஜி..
   எனது பதிவுக்கான எண் எது?..
   தெரிவித்தால் நல்லது..

   (ஆபரேஷன் நல்லபடியாக நடக்கும்!?.. இல்லையேல் - ரம்பா, மேனகா நாட்டியம் தான்!..)

   நீக்கு
  3. ஜி உங்களுடைய எண் 3 தான் ஆனால் சகோ தேன் மதுரத்தமிழ் அவர்கள் 3 போட்டு விட்டார்கள் தாங்களும் தலைப்பை ஏ.ஆர் ரகுமான் மாதிரி சின்ன சின்ன ஆசை என்று போட்டீர்கள் ஆகவே நான் எண் சொல்லாமல் இருந்து விட்டேன் உண்மையிலேயே பெரிய ஆசைகளே தங்களுடையது

   நீக்கு
 19. ஆஹா!இப்படிச் சுத்திவிட்டு விட்டீர்களே..
  உங்க ஆசைகள் சிரிக்கவைத்தன சகோ..நீங்க பிழைக்கனுமே , அதனால உங்க ஆசைகள் சிறப்பாக இருக்கும்படியாகவே நான் ஆசைப்படவேண்டும் ..ஹ்ம்ம்ம்
  த.ம. +1
  (நேற்று பதிவர்களின் சுறுசுறுப்பு பற்றி நீங்கள் குறிப்பிட்டபோதே இப்படித்தான் வரப்போகிறது என்று யூகித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ என்மீது அன்பு வைத்து கடவுளிடம் நல்ல ஆசைகளை விண்ணப்பமாய் கொடுங்கள் நேற்றே கணித்து விட்டீர்களா ? ஹாஹாஹா

   நீக்கு
 20. http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ சென்று வந்தேன் மிகவும் அருமையான ஆசைகள் வாழ்த்துகள்

   நீக்கு
 21. Operation என்னவாகப் போகுதோ என்று சிந்திப்பதற்குள் 10 பேரை சிக்கலில் மாட்டிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்
  ஜி
  தூங்கி கிடந்த சிங்கங்களை உச்சாகப்படுத்தி எழுப்பி விட்டீர்கள்... இனி நமது வலையுலகம்.. கலகலப்பாக இருக்கும்... ஜி... தொடர் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நானும் தொடருகிறேன். த.ம 13
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் இப்போது புரிந்ததா ? பதிவுலகம் சுறுசுறுப்பு வேண்டும் என்று சொன்னது....

   நீக்கு
 23. நானுமா..?
  பத்து ஆசையும் நல்லாத்தான் இருக்கு...
  எல்லாரும் கலக்குறாங்க...
  பார்க்கிறேன்... நாளை முயற்சிக்கிறேன்...
  ஆனா என்னத்தை எழுதுறதுன்னு தெரியலை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்ன எழுதுவீர்கள் என்பது நாளை தெரிந்து விடும்

   நீக்கு
 24. பெயரில்லா11/13/2015 1:59 PM

  தங்கள் பதிவு வாசித்தேன் இதன் கருத்துகள் வாசிக்கவில்லை.
  (வழமையாக கருத்துகளும் வாசிப்பேன்)

  பதிலளிநீக்கு
 25. அருமையான தொடர்
  தொடக்கியாச்சா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நம்மால் முடிந்தது இவ்வளவே...

   நீக்கு
 26. நகசுத்திக்கு ஆப்ரேசன் அது இதுன்னு அலப்பறையான்னு பதிவை படிக்க வந்தேன். தூங்கிட்டிருந்த பதிவுலகை சுறுசுறுப்பாக்க்னதுக்காக மன்னிச்சு விட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். வாழ்க நகசுத்தி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க வாழ்க... நகச்சுத்தி.... ம்ம் மனுஷன் விரலில் வேதனையோடு இருக்கும் பொழுது கிண்டலு..... ம்ம்

   நீக்கு
 27. உங்கள் ஆசைகளை பார்த்து கடவுளே ஒரு நிமிசம் அசந்து போயிருப்பாரு!எது நடந்தாலும் அரசியல் வாதி திருந்துவாருன்னு தோணலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே என்றாவது திருந்துவார்கள் என்று நம்புவோமே... நாளைய நமது சந்ததிகளுக்காக...

   நீக்கு
 28. பத்து பத்து பேர்களாகவா? கட்டுபடியாகுமா சாமி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லோருக்கும் கடவுள்தானே பொருப்பாளி

   நீக்கு
 29. ஒருநாள், சத்யராஜ் - கவண்டமணி இருவரையும் வரச் சொல்லி அவர்கள் கைகளால் உமக்கு 'லொள்ளு மன்னர்' எனப் பட்டம் கொடுக்கச் சொல்ல வேண்டும் ஐயா!

  அடடா! நீர் நடிகர்கள் கையால் தரும் அங்கீகாரத்தை ஏற்க மாட்டீரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘’லொள்ளு மன்னர்’’ பட்டம் தங்களைப் போன்ற என்னையறிந்த வலைப்பதிவர்கள் தந்தால் மகிழ்ச்சிதான் ஆனால் எவனோ தேசத்துக்கு துரோகம் செய்யும் கூட்டத்தில் உள்ளவர்களைக் கொண்டு கொடுக்கச் சொன்ன தங்களை ஒபாமாவிடமே பஞ்சாயத்துக்கு நிறுத்த வேண்டும் என்று கோபப்பட்டேன்
   ஆனால் முடிவில் தாங்கள் சொன்ன வரிகள் எனது முடிவை மாற்றி விட்டது சரி நண்பருக்கு நம்மைப்பற்றி தெரிந்திருக்கின்றது...

   நீக்கு
 30. வணக்கம் அங்கிள்...உங்களால்...நான் மகாப்பெரிய ஆசைகளை எழுத முடிந்தது. நன்றி கொஞ்சம் அங்கிட்டு வந்து பாருங்க.http://sakthiinnisai.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தேன் சக்தி உயரிய ஆசைகள் உமக்கு நனவாகட்டும்

   நீக்கு
 31. கடந்த சில நாள்களாக தொடர்ந்து களப்பணி, பிற பணிகள். ஆதலால் கடவுளைக் காண முடியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் கண்டுவிடுவேன். தாமதமானதற்கான காரணத்தையும் அவரிடம் கூறுவேன். பின்னர் உங்களைச் சந்திப்பேன். அதுவரை நீங்களும், கடவுளும் பொறுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அது சரியய்யா, எப்படி உங்களால் மட்டும் இவ்வாறாக ஒரு தலைப்பினைத் தேர்ந்தெடுக்க முடிகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும் விளக்கவுரைக்கும் நன்றி பதிவுக்கு விடயம் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தலைப்பும் முக்கியமே என்பது பல காலங்களுக்கு முன்பே புரிந்து கொண்டேன் - கில்லர்ஜி

   நீக்கு
 32. ஆஹா ஆரம்பம் நல்லாதான் இருக்கு,,,,, நடக்கட்டும் நடக்கட்டும்,
  வாழ்த்துக்கள் சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விடுபட்ட அனைத்து பதிவுகளையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி

   நீக்கு
 33. நன்றி கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
 34. இத்தனை கனவையும் நான் நனவாக்கி தந்தால் தான் நீ என்கூட வரவே எனில் நீ இந்த பூலோகத்திலேயே ஆயிரம் ஆண்டு வாழ வரம் தந்துட்டு போயிட்டே இருக்கேன்பா.. என்னை விட்டிரு என கடவுள் ஓடியே ஒடி போயிரணும்னு அடுத்து யாரேனும் கனவு காணுங்கள்.

  முக்கியமா கில்லர்ஜி சாருக்கு ஆயிரம் ஆண்டு பூவுலக வாசம் வாழும் வரம் வேண்டும் எனும் கனவு பலிக்கட்டும். பதிவுல
  கும் செழிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஷா அவர்களின் முதல் வருகையை எமது தளம் சிவப்பு கம்பளம் விரித்து நன்றியுடன் வரவேற்கிறது....

   நீக்கு
 35. அன்புள்ள ஜி,

  யாருக்கு(ம்) கிடைக்காதது... கொடுத்த வைத்தவர் .... !
  த.ம.17

  பதிலளிநீக்கு
 36. சகோ நலம்தானே? என்னைப்போன்றோர் ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒருதரம்வருவதால்யாரவது தொடுப்புல போட்டு
  கொண்டுவரட்டும் ஒன்னு எழுதனும் அல்லது வலைப்பூவே தொடங்கி
  இருக்கக்கூடாது என்பதர்க்காகவா?எனது ஆசைகளுக்கும் அழைப்பு
  வந்துள்ளதுநேற்றுதான் நேரில் பார்க்கும்பொழுது அரிந்தேன். எனது10
  ஆசைகளையும் நாளைக்கூறுகிறேன் எனது வலைப்பூவில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலமே சகோ.. ஹாஹாஹா சரியாக புரிந்து கொண்டீர்கள்... ஆவலுடன் பதிவைக்காண நாளை வருகிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 37. வலையுலகில் ஆசையை தூண்டிவிட்டு எதற்கும் ஆசைப்படாத என்னையும் ஆசையைப்பற்றி எழுத வைத்து இருக்கிறீர்கள் கில்லர்ஜி, உங்களை நேரில் பார்த்தால் முதலில் உங்கள் மீசையை எடுத்துவிடுவது என் ஆசை அதற்கும் நேரம் வராமலா போகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லோரையும் ஆசைப்பட வைக்க வேண்டும் என்பதே என் ஆசை.

   நீக்கு
 38. உங்களது தமிழ் வலைப்பூ இணைத்திட http://tamil-bloglist.blogspot.in/ வாருங்கள் மிக எளிமையானது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்து இணைத்து விட்டேன் நண்பரே அழைப்பிற்க்கு நன்றி - கில்லர்ஜி

   நீக்கு
 39. கொஞ்சநாட்களாக ஏதோ சுறுசுறுப்பில்லாமல்(இங்கு நவம்பர்,டிசம்பர் மாதத்தை மந்தமான மாதம் என்பர்) இருந்த பதிவுலகம் இப்போ நல்ல சுறுசுறுப்பா(க்கிவிட்டீங்க)கிவிட்டது.
  ம்..ம்ம் ஆசைகள் நிறைவேறினால் நல்லதுதான் அண்ணா ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமானலும் வருகை தந்தமைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 40. Nice article, good information and write about more articles about it.
  Keep it up
  success tips in tamil

  பதிலளிநீக்கு
 41. Hi, I find this post really nice... Thanks for the info, Sir. I'll save it for sharing with others.
  How To Reverse The Irregular Menstrual Cycle And Pain Naturally

  பதிலளிநீக்கு
 42. Hi, I find this post really nice... Thanks for the info, Sir. I'll save it for sharing with others.
  Must Read:
  How to stop drinking naturally

  பதிலளிநீக்கு