தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 23, 2018

ஆ(ட்)சீர் வாதம் 1ட்பூக்களே... எனக்கு நீண்ட காலமாகவே மனதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது அது அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளும் திருமண விழாவில் சராசரி திருமண சடங்குகள் எப்படி நடக்குமோ ? அது அங்கு மாற்றி அமைக்கப்படுகின்றது அங்கு மேடை போட்டு இருக்கும் பேசுவதற்கு ஒலி பெருக்கி இருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை உண்மை மனதுடன் வாழ்த்துச் சொல்ல வந்திருக்கும் சொந்த பந்தங்கள் மூன்றாம் நிலைப்பாட்டில் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டு நிறுத்தப்படுவார்கள் சூழ்நிலையின் காரணமாக மணக்கோலத்தில் இருக்கும் மணமக்களை ஆசீர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி இருக்காது மறுநாள் வீட்டில் செய்யலாம் என்பது வேறு விடயம்.

குறிப்பாக தாலி கட்டப்படுவதற்கு முன்பு அதை அனைவரும் தொட்டு ஆசி வழங்குவது மரபு அதுகூட நிறுத்தப்பட்டு இருக்கும் காரணம் அதை எடுத்துக் கொடுக்கும் தலைவரோ, தலைவியோ திருமண இடத்துக்கு வரும் ஐந்து மணி நேரத்துக்கு முன்பே காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டு அவர்களின் கண்காணிப்பில் இருக்கும் உண்மைதானே இப்பொழுது எதில் எது இருக்கும் என்பது தெரியாத விடயமாகி விட்டது விஞ்ஞானம் வளராத காலத்தில் இருந்தே மாலைக்குள் பூ நாகம் இருக்கும் பொழுது இன்றைய காலத்தில் இப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதுதானே காவல் துறைகளுக்கு அழகு இல்லையேல் வந்து விடுமே இழுக்கு உறவினர்களுக்கு உணவு முறைகள்கூட மாறுபட்டிருக்கும் சிலர் இயல்பாகவே ரோசமானவர்களாக இருப்பார்கள் கோபத்தில் சாப்பிடாமல் செய்முறை மற்றும் மொய் செய்து விட்டு போய் விடுவார்கள் இவர்களுக்கு பத்திரிக்கை முறையாகவே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆனால் இவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்காது.

காரணம் கட்சித் தலைமை தொடங்கி மாவட்டம், வட்டம், ஒன்றியம், வார்டு என்று நீண்................ட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இரண்டடுக்கு, மூன்றடுக்கு நிறங்களில் இடம் பெற்று இருக்கும் இடமில்லாத காரணத்தால் உறவினர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்காது இவர்களை திருமணம் நடத்தும் மணமகனின் தந்தையோ, அல்லது மணமகளின் தந்தையோ திருமண விழாவன்று வரவேற்று இருக்க மாட்டார் காரணம் அவரின் பதட்டநிலை திருமணம் நல்ல விதமாக நடகின்றதோ இல்லையோ தலைமைக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடாமல் பாதுகாப்பாக விமான நிலையம் செல்லும்வரை இவரின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பார் அப்படி நடந்து விட்டால் ? ? ? நாளை இவரது அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியோடு தூக்கி வீசப்படுவார் அந்தோ பரிதாபம் சரி இனி விழா நிகழ்வுகளை காண்போமா ?

வந்திருக்கும் கட்சித் தலைமையாளர் சும்மா வேலை வெட்டியில்லாமல் வரவில்லை வருவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முதல் விமான முதல் வகுப்பு பிரயாணச்சீட்டு வரை மட்டுமல்ல கட்சி நிதி என்ற பெயரில் ஒரு பெரும் தொகை ஏற்கனவே கொடுக்கப்பட்டு அப்பொழுது புகைப்படமும் எடுக்கப்படும் அவர் கட்சிக்கு நிதி கொடுத்ததாக அறிவிக்கப்படும் ஆனால் அந்த தொகையின் உண்மை நிலை மட்டும் வெளியிடப்பட மாட்டாது காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இ.பி.கோ 748/5 பிரிவின்படி அதை வெளியிடுவது தேசிய குற்றம் ஆக்கப்பட்டுள்ளது.

அடுத்து மணமக்கள் சராசரி திருமணங்களில் காலையில் எப்படி தயாராவார்களோ அப்படி இயல்பு நிலையில் இருக்கவே முடியாது ஒவ்வொரு நொடியும் அவர் வந்து விடுவார், இவர் வந்து விடுவார் என்று சொல்லப்பட்டு இயந்திர பொம்மைகளைப்போல அவர்களை அதி காலையிலேயே தயாராக்கி நிறுத்தி வைப்பார்கள் அவர்களின் முகத்தில் சிரிப்புகள் செயற்கை ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு இருக்கும் தாலி கட்டும் நல்லநேரம் சோலந்தூர், சோஸியர் சோனைமுத்துவால் குறிக்கப்பட்டு கொடுத்திருந்தாலும் தலைமை சில நேரங்களில் வருவது தாமதமாகவும் கூடும் இருப்பினும் தாலியை கட்டி விடமுடியாது இதுவும்கூட வைதீக சாஸ்திரத்தில் இப்படி எழுதப்பட்டதே

பிறகு அவர் வந்ததும் பாவம் செய்தே வாழ்நாளை கடத்தி லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட, பழக்கப்படுத்திய கைகளால் ஆசி வழங்குவார் பிறகே சாஸ்திரங்கள் தலைமைக்காக மாற்றப்பட்டு அவரின் எதிரில் நின்று தாலி கட்டப்படும் அவரும் அட்ஷதை வீசுவார் உண்மையாக வாழ்த்தும் சொந்தபந்தங்கள், நண்பர்கள், அவர்கள் வீசும் அட்ஷதை மணமக்களை விட்டு சுமார் 23 ½ அடியில் உட்கார்ந்து திருமண விழாவை காணும் மாவட்டம், வட்டம், ஒன்றியம், வார்டு இவர்களின் தலையில் விழும் இதன் காரணமாகவே இவர்களின் வாழ்வு நெடுங்காலமாக வளம் பெறுகிறது என்று ஜோதிட சிந்தாமணி திரு. பளுதூக்கியார் அவர்கள் எழுதிய மானுட சாஸ்திர நூலில் குறிப்பு இருக்கின்றது இவர்கள் மீது அட்ஷதை விழுவதற்கு காரணம் என்ன தெரியுமா ? அட்ஷதையை வீசுபவர்கள் நிற்கும் தூரத்தின் அளவு சுமார் 258 ¾ அடி சரி நல்லபடியாக தாலி ஏறி விட்டது மணப்பெண்ணின் தாயார் மனம் மகிழ்வது உறுதி உண்மை. அடுத்த நிகழ்வுகளை காண்போமா ?.

தொடரும்...

47 கருத்துகள்:

 1. உண்மை. சில இடங்களில் அவர்கள் வீட்டு முறைப்படி முன்னரே திருமண காரியங்கள் செய்யப்பட்டு பின்னர் கட்சிக்காக காட்சிக்கு நிறுத்தப்படுவதும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. // மாவட்டம், வட்டம், ஒன்றியம் இவர்கள் தலையில் விழும் அட்சதை காரணமாகவே இவர்கள் வாழ்வு வளம் பெறுகிறது என்று....//

  ஹா... ஹா... ஹா.. இருக்குமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி மானுட சாஸ்திரத்தில் எழுதி இருக்கிறது. ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 3. மாவட்டம், வட்டம் எல்லாம் நெடுங்காலம் வாழ்வதற்கான காரணத்தை இன்றுதான் அறிந்து கொண்டேன் நண்பரே
  உண்மை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை அறிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 4. உண்மையான மணமக்களுக்கு சிரமம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்சிக்காரனுக்கு புள்ளையாக பிறந்து விட்டால் என்ன செய்வது ஜி ?

   நீக்கு
 5. காலக் கொடுமைகளில் இதுவும் ஒன்று..
  எதுவும் சொல்வதற்கில்லை..

  நீங்களோ நானோ - இப்படியான கோமாளிக் கூத்துகளைச் செய்யவில்லை..
  கூடிப் பெருக்கித் தள்ளிவிட்டுப் போக வெண்டியது தான் நல்லது...

  ஈரல் குலை ரொம்ப நாளைக்கு பிரச்னை இல்லாமல் வேலை செய்யும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நாம் ஏன் இப்படி செய்யப்போகிறோம்.

   நீக்கு
 6. என் மகளின் திருமணத்தின்போது ஸ்ரீகோடியம்மன் கோயிலில் வைத்து
  நான் மாலை எடுத்து எனது மைத்துனரிடம் கொடுக்க - அவர் திருக்கயிலை வலம் வந்தவர் -
  அவர் மாப்பிள்ளையிடம் கொடுக்க மாலை மாற்றுதல் இனிதே நிறைவேறியது..

  இதை விட வேறு மங்கலம் வேண்டுமா!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைவிடச் சிறப்பாக திருமணம் செய்யமுடியுமா? எவ்வளவுக்கு எவ்வளவு திருமணங்கள் எளிமையாக, ஆத்மார்த்தமாக, படோடோபம் இல்லாமல் நடக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பு. இல்லை, பணம் கொட்டிக்கிடக்கிறது என்பவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு உடையும் உணவும் இன்னும் அதிகமாக அவர்களது குழந்தைகளின் திருமணத்திற்கு ஏதேனும் தரலாம். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

   நீக்கு
  2. அன்பின் ஜி
   சாஸ்திரங்களை மதிக்கும் பண்பு எல்லோருங்கும் இருப்பதில்லை.
   வாழ்க நலம்

   நெல்லைத்தமிழரின் வருகைக்கும், அழகிய கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 7. இப்பொழுது எல்லாமே கேளிக்கை நிகழ்வுகளாகி பயபக்தி குறைந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 8. ///அவர்களின் முகத்தில் சிரிப்புகள் செயற்கை ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டு இருக்கும் தாலி கட்டும் நல்லநேரம் சோலந்தூர், சோஸியர் சோனைமுத்துவால் குறிக்கப்பட்டு கொடுத்திருந்தாலும் ////

  அந்த சூசியரின் சே சே ஷோசியரின் நம்பரைக் கொஞ்சம் தர முடியுமோ?:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அவரு நம்ம குடும்ப சோஸியர்தான் இதோ நம்பர் நான் தந்ததாக வெளியே ஜொள்ளக்கூடாது...
   000987654321

   நீக்கு
  2. இதை அடிச்சால்.. எதிர்ப்பக்க்கம்.. ஹலோ உகண்டா பொலீஸ்ஸ்ரேசன் எனச் சொல்லுதே:) என்னை மாட்டிவிட ஜதி பண்ணுறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   நீக்கு
  3. போலீஸ் ஸ்டேஷனா... ச்சே நான் மிலிட்டரி கேம்ப்க்கு போயிருக்கும்னு நினைச்சேன்.

   நீக்கு
 9. திருமண விழாவில் நின்னுக்கிட்டு வெட்டுவேன். குத்துவேன், விளங்குவியா?! நாசமா போய்டுவேன்னு பேசுன ஆட்கள்லாம் உண்டு. இதுமாதிரி கட்சிக்காரங்களை பேச அனுமதிக்குறது அவாய்ட் பண்ணலாம். திருமணத்துல கலந்துக்கிட்டு, வாழ்த்து சொன்னா மட்டும் போதும்ன்னு விட்டுடனும். பேச விடக்கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அடுத்த பகுதியை நீங்களே தொடங்கி வைத்து விட்டீர்கள் நன்றி.

   நீக்கு
 10. அருமையா இருக்கு. அதுவும் அக்ஷதை விழும் தூரத்தைக் கணக்கிட்டுச் சொல்லி இருக்கீங்க என்பதை நினைத்தால் ஆச்சரியமாயும் இருக்கு. ஆனால் அதான் உண்மை என்பதை நினைத்தால்! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ எத்தனை வீட்டு திருமணங்களுக்கு போயிருக்கோம் அளவு தெரியாதா ?

   நீக்கு
 11. ஆட்சியாளர்களின் வருகையையும் வாழ்த்துகளையும் மட்டுமே வேண்டுபவருக்கு பிறரது ஆசிகள் அனாவசியம் இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உங்களது பெயரனின் திருமணம் இனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 12. பணச் செழிப்பை காட்டுவதற்கும் பெருமைக்கும் பெரிய தலைகளை அழைத்தால் தாங்கள் சொல்வது போலத்தான் இருக்கும் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே கஞ்சிக்கு செத்தவன் அழைக்க முடியுமா ?

   நீக்கு
 13. அரசியல் நடப்பப்பா!..
  நன்று.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நலமா ? தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. எத்தனை அட்டூழியங்கள் நிறைவேறுகின்றன.,அரசியல் திருமணங்களில். இவர்கள் சாஸ்திரப்படி ஒரு நாள் செய்துவிட்டு, அரசியல் திருமணம் மறு நாள் வைக்கலாம். அழகாக அட்சதை தூவி இருக்கிறீர்கள் தேவகோட்டை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா அருமையான கருத்தை முன்வைத்தீர்கள். வருகைக்கு நன்றிமா.

   நீக்கு
 15. சோ கூறியது நினைவிற்கு வந்தது. அரசியல் கட்சித்தலைவர்கள் திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போது அந்த மேடைக்குத் தொடர்பில்லாத எதிர்க்கட்சிகளைப் பற்றி குறையாகவும், அமங்கலமாகவும் பேசியதைக் குறிப்பிட்டு, திருமண மேடையில் அவ்வாறு பேசுவது பொருத்தமில்லாததாக இருக்கும் என்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நான் அடுத்து சொல்லவரும் விடயத்தை திரு.சோ அவர்கள் முன்கூட்டியே சொல்லி விட்டார் போலயே...

   முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. பெற்றோரையும் பெரியோரையும் விட அரசியல்வாதிகளே முக்கியம் என்பதினால் இவை யாவும் ஏற்படுகின்றன என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் நலம்தானே... தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. பட்டுக்கோட்டையில் ஒரு கல்யாணவீட்டில் அட்சதையை சிறு பொட்டலமாய் கொடுத்தார்கள் ஒரு குங்குமசிமிழில் வைத்து .
  மண்மக்கள் உங்களிடம் ஆசி பெற வருவார்கள் அப்போது அவர்கள் தலையில் தூவி ஆசி அளியுங்கள் என்று
  நல்ல யோசனை என்று வாழ்த்தி வந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது நான் இதுவரை கேள்விப்படாத நல்ல விசயமாக இருக்கிறதே... வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
  2. என் அண்ணன் மகள் கல்யாணத்தில் சின்ன அழகான சிமிழில் அக்ஷதை கொடுக்கப்பட்டது. மணமக்கள் ஒவ்வொருவரிடமும் வந்து அக்ஷதை பெற்றுக்கொண்டனர்.

   நீக்கு
  3. அப்படியானால் அட்சதையை தூவிவிட்டு சிமிழ் அவர்களே எடுத்துக் கொள்வார்களோ...?

   நீக்கு
  4. சிமிழ் எங்களிடம் இருக்கு. படம் எடுத்துப் பகிர்கிறேன். :)

   நீக்கு
  5. நல்லது என்னால் சில நினைவுகள் மீட்டெடுத்து பதிவாவதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 18. தங்கள் ஆதங்கம் புரிகிறது

  பதிலளிநீக்கு
 19. இப்படி நடத்துவது தான் தமிழர் திருமணம் தலைவர் தலைமை உரையில் சொல்லிவிட்டு செல்வது தானே வாடிக்கை. திருமணத்தில் தான் எத்தனை வகை: சுயமரியாதை திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம், பகுத்தறிவு திருமணம், தமிழர் திருமணம், தாலியில்லா திருமணம், வைதீக திருமணம் என்று பல வகை உண்டு. தலைவர் நடத்தி வைப்பது இவை எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி ஒரு அரசியல் கலந்த திருமணமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 20. துளசிதரன் : கில்லர்ஜி இது தமிழ்நாட்டில் மற்றும் ஆந்திராவில் அதிகம் என்று தோன்றுகிறது. கேரளத்துல இந்த அளவு கிடையாது.

  கீதா: செம ஜி! எனக்கும் இப்ப்டித் தோன்றியதுண்டு. அதுவும் வாழ்த்த வரும் அந்த விஐபி வாழ்த்தவே மாட்டார் அவர் கட்சி மற்றும் பல வேண்டாதவற்றைப் பேசிவிட்டு போனால் போகிறது என்று எடுபிடி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுக்க அதைப் பார்த்து மணமகன் மணமகள் பெயரைச் சொல்லி சும்மா ஒப்புக்கேனும் வாழ்த்துவார் அவ்வளவே. நான் பார்த்திருக்கிறேன் இது போன்ற கல்யாணங்களை. நிறைய இடங்கள் சிரிக்க வைத்துவிட்டது. குறிப்பா அட்சதை மேட்டர்!!!

  அடுத்ததுக்குப் போறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இது கேரளத்தில் குறைவே...
   பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

   நீக்கு