தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 04, 2018

எழுத்தாளன்



வ்வொரு மனிதரும் தங்களது வாழ்க்கையை கடத்துவதற்கு ஏதோவொரு வேலையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சிலருக்கு புண்ணியமாகவும், சிலர் புரியாமல் பாவமாகவும் மாற்றிக் கொள்கின்றார்கள்

இதில் சில பேரின் வேலைகளுக்கு மூளை மிக முக்கியமாக இருக்கும் அவர்கள் அதன் மூலம் திறமையைக் காண்பித்து மென்மேலும் பதவி உயர்வு பெற்று மேலேறி விடுவார்கள் சிலருக்கு அவசியமே இல்லை இயந்திரம் போல் வழக்கமான வேலையை வழக்கமாக செய்து கொண்டு இருப்பார்கள் உதாரணம் நமது ஊரில் பார்த்து இருப்பீர்கள் மலத்தை அள்ளிக்கொண்டு இருந்தார்கள் இன்னும் அது முழுமையாக நின்று விடவில்லை என்பது வேதனையான விடயமே இவர்களெல்லாம் மூளையை உபயோகப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திட முடியுமா ? முடியாது காரணம் ஏற்றத்தாழ்வை வகுத்து வைத்த ஜாதீயக் கூட்டம்.

01. ராணுவவீரர்கள் இவர்கள் தனது குடும்பத்துக்காக வாழ்ந்தாலும் எந்த நொடியும் நமக்காகவும், நாட்டுக்காகவும் உயிரைவிட தயாராக இருப்பார்கள் இருந்தே ஆகவேண்டும் இது எழுதப்பட்ட சட்டம் மீற வழியே இல்லை என்னைப் பொருத்தவரை உலகிலேயே போற்றப்படக்கூடியவர்கள் அந்தந்த நாட்டு ராணுவவீரர்களே... ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் நன்றி மறந்த விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டத்தினர் அதிகம் ஆகவேதான் நிழல் பூச்சிகளுக்கு... தளபதி, புரட்சிவீரன், வீரத்தமிழன், கேப்டன், ஆக்ஷன் கிங் இப்படிப்பட்ட பட்டங்கள் உண்மையிலேயே ராணுவவீரர்களுக்கே கொடுக்கவேண்டும் நமக்குள்தான் ஐந்தறிவு ஜீவிகள் நிறைய கலந்து விட்டனர் அதுவும் மெஜாரிட்டியாய்....

02. விஞ்ஞானிகள் அந்த வேலையைப் பற்றி மட்டுமே சிந்தித்து உலக அளவில் சாதனை படைக்க முயற்சிப்பார்கள் இவர்களுக்கு மற்றவர்களைப்போல அரசியல்வாதியாகணும், சினிமாவில் நடிக்கணும், என்ற சிந்தனைகள் வருவது சாத்தியக்குறைவு அதற்காக இவருக்கு குடும்பம் இல்லை பொழுது போக்கு இல்லை என்றும் சொல்லி விடமுடியாது.

03. மருத்துவர்கள் தனது வேலையை புனிதமாக கருதி பலருக்கும் நன்மைகள் செய்யலாம் அல்லது நாம் செய்த வினைகளால் வீட்டை விற்று படிப்பதற்கு பணம் கட்டியதால் அதை வட்டியும் முதலுமாக விரைந்து எடுக்க குறுக்கு வழியில் கிட்னியை திருடி விற்று துரிதமாக பணக்காரன் ஆக வேண்டும் என்றும் எண்ணலாம்.

04. போலீஸ் அதிகாரிகள் தனது கடமையை சரியாக செய்யலாம் அதன் மூலம் பதவி உயர்வு பெறலாம் அல்லது அவரும்கூட வேறு வழியில் ஆளுங்கட்சிக்கு ஜிங்குஜாங் அடித்து முன்னேறலாம் இவர்களின் சிந்தனை எப்பொழுதுமே சந்தேக வட்டத்துக்குள்ளேயே இருக்கும் இது வாழ்நாள்வரை தொடரும் சிலர் வீட்டில் மனைவியைகூட நம்பமாட்டார்கள்.

05. வழக்கறிஞர்கள் இவர்களிடம் நாம் பொய் சொல்லக்கூடாது என்று அனைத்து வேதத்திலும் சொல்லப்பட்டு இருப்பது போல நம்மை ஆக்கி விட்டார்கள் ஆனால் ? இவர்கள் பொய் சொல்வார்கள், எப்படி பொய் சொல்வது ? என்று நமக்கு பாடம் நடத்துவார்கள் இந்த இடத்தில் மறைந்த நடிகவேள் திரு. எம்.ஆர்.ராதா அவர்களின் சொந்தக் கருத்தை முன் வைக்கின்றேன் இவர் அதிகம் படிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ.. முப்பது வருஷமா பொய்யும் புரட்டுமாக வாழ்ந்து வழக்கறிஞர் தொழில் செய்தவர் தனது திறமையால் நீதிபதியாக பதவி உதவி பெறுகிறார் மக்கள் சொல்கின்றார்கள் இவர் கடவுளுக்கு சமம் என்று என்னாங்கடா உலகம் இது ?

06. வியாபாரிகள் இவர் தனது பணத்தை மேலும் மேலும் தொழிலில் புரட்டி வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலேயே இருப்பார் தனது கடுமையான உழைப்பால் ஒருவேளை இவர் ஊரறிந்து இருந்து பிறகு நாடறிந்த வியாபாரியானால் ? தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நாட்டையே ஆளும் அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்கும் பணபலத்தால் சட்டங்கள் கொண்டு வருவார்கள் இவர்கள் கில்லர்ஜி போன்ற பாமரர்களின் கண்களுக்கு தெரியமாட்டார்கள்.

07. கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் சிறுவயதில் ஒரு ஈர்ப்பு சக்தியுடன் பார்த்துக்கொண்டே இருந்தவர்கள் அதே நினைவுகளுடன் படிப்பை மறந்து நாமும் ஒருநாள் அவரைப்போல வரவேண்டும், இவரைப்போல வரவேண்டும் என்று தானும் விளையாடத் தொடங்கி சிலர் பரவாயில்லையே நீ நல்லாவே விளையாடுறே.. முயற்சி பண்ணலாமே.. என்று தலைப்பாகட்டி விட இதுவே வேதவாக்காகி எப்படியோ நுழையும்வரை திறமைதான் பிறகுதான் இந்த மானிடருக்கு மானிட்டர் பழக்கமெல்லாம் வர பணம் ஒன்றே குறிக்கோளாகி விடுகிறது ஐந்தே நிமிடத்தில் விளம்பரப் படங்களில் நடித்தால் போதுமானது இவரொன்றும் நடிக்கவில்லை சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது என்பது வேறு விடயம் வந்து போகிறார் அதுவும் வேலை நேரத்திலேயே அந்த உடையுடன் கையில் மட்டையைப் பிடித்தபடி அது சமூகத்துக்கு நலன் உண்டா ? என்பதைப்பற்றி கவலையில்லை வந்து களைப்பு தீர இந்த சோடாவைக் குடியுங்கள் என்று மதுபானத்தை கையில் பிடித்தபடி சொல்வார் காரணம் பார்ப்பவர்கள் கேள்வி கேட்கப் போவதில்லையே இவர்கள் சொன்னால் வியாபாரம் பெறுகும் என்பது வியாபாரிகளின் கணக்கு காரணம் ரசிகர்களின் மோகம் அப்படி இந்த இடத்தில் பாக்கிஸ்தான் கிரிக்கெட்வீரர் திரு. இம்ரான்கான் அவர்களை நான் மனிதநேயமுள்ள மனிதனாக பார்க்கின்றேன் அவர் தனது சொந்தப்பணம் நூறு கோடி ரூபாயில் அவரது நாட்டில் புற்றுநோய் மருத்துவமனை கட்டிக்கொடுத்து இருக்கின்றார் இவரைப் போற்றலாமே மதம் மறந்து, ஜாதி மறந்து, இனம் மறந்து, மொழி மறந்து, நாடு மறந்து இந்த இடத்தில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களையும் நாம் நினைவு கூறவேண்டும் காரணம் இவரும் நூறு கோடி ரூபாயில் கட்டி இருக்கின்றார் அவரது சந்ததிகள் வாழ ஆடம்பர மாளிகை.

08. நடிகர்கள் இவர்களில் பெறும்பாலானோர் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் திடைப்படத்தில் நடிக்க வருகின்றார்கள் ஆண்பால் சோற்றுக்கு வழியில்லாமல் பசியும், பட்டினியுமாக தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு பூங்காக்களில் படுத்துக் கிடந்தவர்களும் உண்டு இதெல்லாம் இப்பொழுது கட்டவுட்டு பாலாபிஷேகம் செய்கின்றானே ? அரைவேக்காடு அவர்களுக்கு தெரியாது அப்போதைக்கு அவனுக்கு கஞ்சி கொடுக்க ஒருபய முன் வரமாட்டான் பேரும், புகழும் அடைந்து தனது சொந்தப் பிரச்சனை வரும் பொழுது நான் நாட்டை விட்டே போகிறேன் என்றால் தனது தந்தை கஷ்டப்பட்டு சம்பாரித்து வைத்து விட்டுப்போன வீட்டுப் பத்திரத்தை அனுப்ப தயாராக இருப்பான், திரைப்படங்களில் நாட்டை ஆளும் முதல்வரை டப்பிங் வாய்ஸில் எதிர் கேள்வி கேட்டதால் தலைவா நீ வா தமிழ்நாட்டை காப்பாற்ற என்று குரல் கொடுப்பான் பிழைக்க வந்த வேற்று மொழிக்காரனை இத்தோடு இவர்களின் வாரிசை நடிகனாக்கி விட்டு இவ்வளவு நாள் உள்ள மதிப்பை பயன் படுத்தி சில நொடிகளில் நடித்து பல கோடிகளை தட்டி விடுவார்கள் விளம்பரப் படங்களில்.

09. நடிகைகள் இவர்கள் நாமும் ஒருநாள் நட்சத்திரமாக வேண்டும் என்று வீட்டை விட்டு வருகின்றவர்கள் இவர்கள் முதன் முதலில் தென்படுவது யார் கண்களில் தெரியுமா ? கூட்டிக்கொடுக்கும் மாமாக்களிடம் ஆம் அவர்களின் கழுகுப் பார்வைகளிலில் இருந்து யாருமே தப்பியிருக்க முடியாது அவர்கள்தான் இவர்களை இயக்குனர்களிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்று பணக்கார, அதிகார காமக்கொடூரன்களிடம் கொண்டு போய் விட்டு விடுவார்கள் அவர்கள் இவர்களுக்கு அரங்கேற்ற நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்தி சக்கையாக்கி அதிகாரத்தை பயன் படுத்தி பயமுறுத்தி வெளியேற்றி விடுவார்கள் இப்பொழுதும் இவர்கள் வேறொரு கண்களில் சிக்குவார்கள் அந்தக்கண்களுக்கு சொந்தக்காரர்கள் யார் தெரியுமா ? இவர்களை புரோக்கர் என்றும் புரோக்கி என்றும் சொல்லலாம் இவர்களிடம் வெகுசுலபமாக காரியத்தை நடத்தி விடுவார்கள் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி கடைசியில் அங்கு கொண்டு போய் நீலப்படத்தில் வெகு சுலபமாக நடிக்க வைத்து விடுவார்கள் அதற்கு சில பழமொழிகள் இருக்கின்றது முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு ? என்று கேட்டு மொழியே அவசியமில்லாத அளவுக்கு உலகமே பார்க்கும் நீலப்படங்களில் பிறகுதான் இந்தப் பெண்களுக்கு புரியும் நாம் வீட்டை விட்டு வந்து சாக்கடையாகி விட்டது மரத்துப்போன உடம்பு மரத்துப் போகும் மருந்தை மனதுக்கும் கொடுக்கும் காரணம் கஞ்சி குடிக்க வேண்டுமே... பிறகும் இவர்கள் சிலர் கண்களில் தென்படுவார்கள் இவர்களை இடைத்தரகர்கள் என்று சொல்வோமா ? ஆம் இவர்கள் திரைப்பட இயக்குனர்களிடம் கொஞ்சம் பழக்கம் உள்ளவர்கள் எப்படியோ அவர்களை சந்தித்து ‘’கற்ற’’ திறமையை இயக்குனரிடம் காண்பிக்க அவர்களும் எப்படியோ நாயகியாக்கி விட முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் புதுமையை கையாண்ட நாயகியால் படம் ஸூப்பர் ஹிட் அடுத்தது என்ன ? வேலையத்த வெட்டி ஆஃபீஸர்கள் உடனே ரசிகர் மன்றம் வைப்பதற்க்கு நடிகையை நாட இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஆஷா உடன் வளர்ந்து வரும் தனக்கு இதுவே முதல் ஏணி என்று பணமும் கொடுத்து ‘’ஊக்கு’’ விற்பாள் உடன் பட்டி தொட்டிகளெல்லாம் அவளின் திருநாமத்தை சொல்லி நாமக்கட்டி முதல் வெளக்கமாறு, செருப்பு வரை வியாபாரம் செய்வார்கள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கவும் மறுபுறம் இந்த கற்புக்கரசிக்கு கோயில் கட்டவதற்கு ஒரு கூட்டம் இதிலொரு வேடிக்கை என்ன தெரியுமா ? இந்தக் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த ஐயர் வருவார்.

10. தாதாக்கள் இவர்கள் தனது கைத்தடிகளின் பலத்தால் ஊரையும், காவல்துறையையும் தனது கைக்குள் கொண்டு வந்து கொலை, கொள்ளையடித்து இப்படியே வாழ்கின்றார்கள் இவர்கள் தாதாவான பிறகு தனிமையில் இருக்க மாட்டார்கள் இயற்கையான மரணம் அல்லது என்கௌண்டர் ஆர்டர்வரை பக்கபலமாக அடியாட்களுடன் வாழ்ந்தாக வேண்டும் இது தவறென்று கடைசிவரை உணரும் நிலை இவர்களுக்கு வராது காரணம் இது வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றார்கள் மரணம்வரை இதிலொரு வேடிக்கை இவர்களில் சிலர் தெய்வத்தை வணங்குவார்கள்.

11. அரசியல்வாதிகள் இவர்களைப்பற்றி எழுதிலாம் ஆனால் பூக்கடையான எனது தளத்துக்கு மணம் தேடிவரும் தாங்கள் சாக்கடையாகி விட்டதே என்று ஓடிவிடுவீர்களோ ? என்று அஞ்சுகிறேன் ஆகவே வேண்டாமே...

12. எழுத்தாளர்கள் ஆம் இவ்வளவு தொழிலாளர்களை எழுதினேன் இவர்கள் எழுத்தாளர்கள்தானே அப்படிப் பார்த்தால் வலைப்பதிவர்களும் எழுத்தாளர்கள்தானே இந்தக் கூட்டத்துக்குள் கோவிந்தா போடும் கத்துக்குட்டி என்னையும் எ...ழு.....த்...தா...ள...ர்..... என்று சொல்லலாமா ? நட்பூக்களே... இவ்வளவு பேர்களைவிட இந்தத் தொழிலாளருக்கு சராசரி மனிதர்களை விட மூளை கொஞ்சம் கூடுதலாக வேண்டும் காரணம் முதலீடே மூளைதானே... இந்த மூளையானது அதாவது எழுத்தாளன் சகல மனிதர்களின் மனசை ஊடுறுவுகின்றான் ஆகவே அவனால் பல விடயங்களை கேட்டதை, பார்த்ததை, படித்ததை, உயிரோட்டமாக எழுத முடிகின்றது எழுத்துக்களால் புதிய சிந்தனைகளை தூண்டுகிறான், புரட்சியை தூண்டுகிறான், சிரிக்க வைக்கின்றான், கண்ணீர் வர வைக்கின்றான் காரணம் இவனின் மனம் விரிவான சிந்தனையுடையது குறுகிய மனப்போக்கை உடைத்தெறிந்து வெளி வந்தவன் மனதுல் எழும் சிந்தனைகளை ஆள வைப்பதால்தான் நம் முன்னோர்கள் நமக்கு எழுத்தாளன் என்று சொல்லி வைத்தார்களோ ?

தேவகோட்டை கில்லர்ஜி

54 கருத்துகள்:

  1. பட்டியலில் எழுத்தாளர்களையும் சேர்த்திருப்பது சிறப்பு! புற்றுநோய் மருத்துவமனை கட்டிய ஒரே காரணத்துக்காக இம்ரானை நல்லவர் என்று சொல்லி இருக்கிறீர்கள். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி உழைத்த பணம் 100 கோடியை பொதுமக்களுக்காக இழப்பதற்கு எவ்வளவு உயர்த மனம் வேண்டும்.

      நீக்கு
    2. கசக்கும் வேப்பம்பூவில் துளி தேன் இருப்பது போல!

      நீக்கு
    3. உண்மையான வார்த்தை சகோ

      நீக்கு
  2. அனைவரை பற்றியும் அழகாய் சொன்னீர்கள் .ஒரு சில சமூக சேவகர்களையும் சேர்த்திருக்கலாமோ ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் எழுதி விடுவோம்...

      நீக்கு
  3. அற்புதமான அலசல்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அரசியல்வாதிகள் பற்றி எழுத வேண்டாம் என்று
    சுருக்கமாக இரண்டு வரிகளில் முழுமையாக
    எழுதி விட்டீர்களே யுவராணர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்டோ வீட்டிற்க்கு வரும் என்ற காரணமாக இருக்கலாம்

      நீக்கு
    2. பிழைக்கப்போன இடத்தில் கடைசிவரை அரேபியனுக்கே பயப்படாமல் வாழ்ந்தவன் நான் சொந்த நாட்டிலா பயம் வரப்போகிறது.

      இருந்தாலும் ஐயா உங்களது வயதைவிட உயர்ந்தது உங்களது மனம் என்பதை பலமுறை நிரூபித்து விடுகின்றீர்கள்.

      வாழ்க நலம்!
      வருகைக்கும் நன்றி.

      நீக்கு
    3. அஜய்....
      நான் அரசியல் எழுதவில்லையே...

      நீக்கு
  5. //'இவர்களெல்லாம் மூளையை உபயோகப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திட முடியுமா?'//

    நிச்சயம் முடியும் கில்லர்ஜி. படிப்பு, ஒரு தலைமுறையை சுலபமாக மாற்றும். மீனவர், சாதாரணமானவர்களின் வாரிசுகள் படிப்பினால் மட்டும் பெரிய இடங்களில் (வேலைகளில்) இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் இந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்தான் என்று சொல்லியிருக்கிறார். படிப்பும், முனைப்பும் நம் வாழ்க்கையை மட்டுமல்ல நம் வாரிசுகளின் தலையெழுத்தை மாற்றும். என்ன, முதல் தலைமுறை, படிப்பினால் முன்னேறும்போது மற்றவர்களின் இழிசொல்லை, அவமானப்படுத்துவதைக் கடந்து மிகுந்த கஷ்டப்பட்டுதான் முன்னேறணும்.

    எழுத்தாளர்களும் புலவர்களும் சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள். அவர்கள் பொதுவாக வறுமையில்தான் வாழ்வார்கள். ஆனால் அவர்களால்தான் சமூகத்தின் எண்ணவோட்டம் மாறும். அவர்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே விரிவாக விளக்கம் ஙொடுத்தீர்கள் நன்றி

      நீக்கு
  6. வலைப்பதிவர்களும் எழுத்தாளர்களா? அப்படின்னா நானும் எழுத்தாளன் ஹீஹிஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நீங்களும் அரசியல் மற்றும் எழுத்தாளரே...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நல்ல தெளிவான அலசல் பதிவு. புதிய சிந்தனை முயற்சியுடன் எழுதும் தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எழுத்தை ஆண்டு கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர் நீங்கள்.. ஏன் சந்தேகம்? தங்களால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும். ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துகள்.

    தி. ஜானகி ராமனை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர்தான் நண்பரே
    தங்களின் எழுத்துத் திறமை போற்றுதலுக்கு உரியது

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொருத்தரைப் பற்றியும் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டு எழுதியுள்ளீர்கள்... முடிவில் சந்தேகமே வேண்டாம் ஜி...!

    பதிலளிநீக்கு
  10. விரிவான அலசல் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. மனதில் எழும் சிந்தனைகளை ஆளவைப்பதால் எழுத்தாளன் //

    அருமை.
    நீங்கள் நல்ல எழுத்தாளர்தான் அதில் என்ன சந்தேகம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. நல்ல அலசல். தி.ஜானகிராமன் படத்தைப் பார்த்ததும் அவரைப் பற்றிய பதிவோனு நினைச்சேன். என்றாலும் நன்கு அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்! நீங்கள் நல்லதொரு எழுத்தாளர் தான். சந்தேகம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் என்னை எழுத்தாளர் என்றது மகிழ்ச்சியான விடயமே...

      நீக்கு
  13. எல்லாரைப் பத்தியும் விலாவாரியா எழுதியிருக்கீங்க ...ok. தினம் தினம் பொங்கிப் போட்டு புள்ளைகள வளர்த்து ஆளாக்கி புருஷனை கவனிச்சுக்கிற ஒரு முக்கியமான குரூப்பை மறந்துட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அது வாழ்க்கைக்குள் பிணைக்கப்பட்ட ஆண்-பெண் இருக்கும் உள்ளது. பொங்கிப்போடுவதற்கு உழைத்துப்போடும் குரூப்பையும் சொல்லவேண்டுமே...

      நீக்கு
  14. அவரவர்களுக்கு செய்யும் தொழிலே தெய்வமென்று தோன்று கிறது

    பதிலளிநீக்கு
  15. பட்டியலில் இடம் பெற்றவர்கள் தான் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் தாழ்வதற்கும் காரணமானவர்கள்.இவர்களின் தராதரத்தை வெகு நுட்பமாக அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.

    விழிப்பூட்டும் பதிவு.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் பாராட்டுகளுக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  16. திரும்பவும் படித்துப்பார்த்தேன் கில்லர்ஜி. நேர்மையற்ற வழியில் சம்பாதிப்பவர்களைத்தான் நாம் குறை சொல்லவேண்டும். நேர்மையான முறையில் சம்பாதிப்பவர்களைப் பற்றி நாம் குறை சொல்லக்கூடாது. அப்படி அளவுக்கதிகமாகச் சம்பாதிப்பவர்கள், பிறருக்கு உதவி செய்தால் அவர்களது உதார குணத்தைக் காட்டுகிறது. அப்படி பிறருக்கு உதவி செய்யவில்லை என்றால் அதில் நாம் குறை காண இயலாது.

    அரசியலில்தான் கக்கன் அவர்கள், ஜீவா, நல்லக்கண்ணு, ஏன் மற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு பெரிய சொத்தோ, அரசியலை உபயோகப்படுத்திச் சம்பாதித்த பணமோ கிடையாது.

    நடிகர்களில்தான், சிவகுமார்/சூர்யா-மற்றவர்கள் படிப்புக்கு உதவி செய்வது, விஜயகாந்த் போன்றோரும் இருக்கின்றனர். அவர்கள் நேர்மையாகத்தான் சம்பாதிக்கின்றனர். என்ன ஒண்ணு, குறைந்த உழைப்பில் அவர்களது வரவு அதிகம். (தொலைக்காட்சியில் வேலைபார்ப்பவர்களும்தான்)

    டெண்டுல்கர் அவரது திறமையினால் சம்பாதித்தார். அவர், 'குடி' சம்பந்தமான அல்லது கெடுதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை. அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என்பதற்காக, எனக்கு ஏன் 5 கோடி கொடுக்கக்கூடாது என்று கேட்கமுடியுமா?

    உங்கள் ஆதங்கம், சம்பாதி, நேர்மையாக சம்பாதி, முடிந்த அளவு ஏழைகளுக்கு உதவக்கூடாதா, அளவுக்கு அதிகமான பணம் இருக்கிறதே, வைத்துவிட்டுத்தானே செல்லப்போகிறாய், என்றே புரிந்துகொள்கிறேன். அந்த ஆதங்கம் நியாயமானது.

    நேர்மையற்ற முறையில் சம்பாதிப்பவர்களைத் திட்டுவது, நியாயமானதுதான். ஹா ஹா ஹா. தாதாக்கள் போன்ற நேர்மையற்றவர்களை இந்தக் கும்பலோடு சேர்த்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக மீண்டும் அலசியதில் மகிழ்ச்சி.

      பணம் இருப்பவரிடம் மனம் இல்லாததும், மனம் இருப்பவரிடம் பணம் இல்லாததும் இறைவன் செயலே...

      பணமிருப்பவர் உணவின்றி வாழும் மனிதர்களை சற்றேனும் நினைத்தால் போதுமானது... என்பதே எனது கருத்து, ஆதங்கமும்கூட

      நினையாமைக்கு காரணம் இவர்களுக்கு பசியின் கொடுமை அறியாதவர்கள்.

      பெரும்பாலுமே பரம்பரை, பரம்பரையாக செல்வந்தராக இருப்பவர்களுக்கு பசியின் கொடுமை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

      நான் செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தாலும் ஏழ்மையை கண்டு, இறையருளால் கடந்தவனும்கூட.. அதேநேரம் பட்டினியாய் கிடக்கும் நிலையை தொடவில்லை.

      ஆனால் உலகையறிந்த நாள்முதல் ஏழைகளைப்பற்றி சிந்திப்பவன்.

      என்னைவிட கீழான ஏழைகளிடம் எனது பகட்டை காட்டமாட்டேன் காரணம் அவர்களது பெருமூச்சை நான் விரும்பவில்லை.

      என்னைவிட மேலான செல்வந்தனிடமும் எனது பகட்டை காட்டமாட்டேன். காரணம் அவர்கள் என்னை மதிக்காமல் இருக்ககூடும் ஆகமொத்தம் என்னிடம் வெட்டிப்பந்தா கிடையாது உள்ளநிலையை, உண்மையை விளக்கி விடுவேன்.

      இதோ எனது சம்பந்தியாக வரப்போகின்றவர்களிடமும்.

      ஒரு சம்பவம் சொல்கிறேன்...
      எம்ஜிஆர் ஏழைகள் பட்டினியாக இருக்ககூடாது என்று சொல்லி இருக்கின்றார். இவர் இளமையில் பசியை உணர்ந்தவர் ஆகவேதான் சத்துணவை செம்மை படுத்தினார். இறுதிவரை விருந்தோம்பல் கொடுத்தார்.

      சிவாஜி இவரும் இளமையில் பசியை உணர்ந்தவர். ஆனால் ஏழைகளுக்கு எதையும் செய்யவில்லை. இதற்கு இவர் சொன்ன காரணம். அன்று நான் பட்டினியாய் கிடந்தபோது எனக்கு எவன் கொடுத்தான் ?

      பார்த்தீர்களா ? வாழ்க்கைத்தரம் இருவருக்கும் ஒன்றே... சிந்தனையின் கோணங்கள் வேறு.

      முடிவில் கிடைத்தது எம்ஜிஆர் முதல்வர் ஆனார்.

      சிவாஜி திருவையாற்றில்
      திரு. ராஜசேகரன் அவர்களிடம் தோற்றார்.

      புண்ணியங்களுக்கு பலனும், பாவங்களுக்கு தண்டனையும் கொடுக்க இறைவன் மறப்பதில்லை.

      நீக்கு
    2. கில்லர்ஜி... இன்னொரு சம்பவம். ஏவிஎம் இல் காலனிகள் கட்டியபோது, அந்தத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, ஒருவர் எம்.ஜி.ஆரிடம் 200 ரூபாய் இந்த நோட்டில் எழுதுங்க, அதை வைத்து மற்றவர்களிடமும் கொஞ்சம் கொஞ்சமாக உதவிகள் பெற்றுவிடுவேன் என்று சொன்னாராம். உடனே எம்ஜிஆர், எவ்வளவு வசூல் பண்ணலாம் என்று நினைத்திருக்கிறீர்கள் என்று கேட்க 8-10 ஆயிரம் வசூல் பண்ணலாம் என்று சொன்னாராம். நோட்டை வாங்கி, எம்ஜியார் 10,000 என்று எழுதி முழுப்பணத்தையும் கொடுத்தாராம். அசந்துவிட்ட அந்த நபர், சிவாஜியிடம் போனாராம். (இருவரின் நண்பர் இவர்). விஷயத்தைச் சொன்னதும், எம்.ஜி. ஆர் 10,000 எழுதியிருக்கிறார் என்றபோது, அவர் எழுதுவார், அதுக்காக என்னிடம் பணம் கேட்காதே என்று சொல்லிவிட்டாராம். இதைச் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். இருவரும் இருவேறு சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர்கள். சிவாஜி அவர்கள் சுமார் 1 1/2 கோடி பெருமானமுள்ள சொத்துக்களை/பணத்தை அரசியலில் வீணடித்தவர் என்பது உங்களுக்குத் தெரியும்.

      நீக்கு
    3. எனக்கு இது புதிய தகவல் நண்பரே... எனக்கு சில நேரங்களில் தோன்றும் எண்ணம் இவரை "கர்ணன்" திரைப்படத்தில் நடிக்க வைத்தது தவறோ ?

      நீக்கு
  17. ஆழ்ந்த சிந்தனையும், நன்னோக்குமே இவ்வாறான பதிவுகளை நீங்கள் எழுத முக்கிய காரணங்களாக அமைகின்றன. எழுதிய விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  18. சகல துறைகளையும் அழகாக அலசி இருக்கிறீர்கள்.
    உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு.

    இவர்கள் திருமணத்துக்கும் மற்றவைகளுக்கும் அள்ளித் தெளிக்கும்
    பணம், 5 பர்செண்டாவது ஏழைகளுக்குப் போகலாம்.
    எழுத்தை ஆள்பவர்கள்
    வகையில் நீங்களும் வருகிறீர்கள்.

    நேர்மையும் ,உழைப்பும் சேர்ந்தால்
    நல்லன நடக்கும்.
    வாழ்க வளமுடன்.
    உங்கள் வீட்டு நல் நிகழ்வுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  19. அனைத்தும் உண்மை.. அதிலென்ன சந்....தேகம் தாங்கள் எழுத்தாளர்தான்........

    பதிலளிநீக்கு
  20. இப்படியெல்லாம் வரைவதற்கு
    தங்களுக்கு நிகர் தாங்களே...

    வாழ்க.. வளர்க தங்களது திறமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. சுவையான தொகுப்பு. ஒவ்வொருவரையும் பற்றி நீங்கள் வைத்திருக்கும் பஞ்ச் சூ..ஊ..ஊ..ப..ர்.! குறிப்பாக வழக்கறிஞர்கள், நடிகைகள், தாதாக்கள், கிரிக்கெட் வீரர்கள் பற்றி சொல்லியிருப்பது அசத்தல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி மேடம்.

      நீக்கு
  22. எழுத்தாளர் தி.ஜானகிராமனை நினைவுகூர்ந்தமைக்கு ஏதாவது சிறப்பு காரணம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவே காரணம் இன்று வரவேண்டிய பதிவை கலைஞர் மரணத்தால் நாளை மாற்றி வைத்தேன்.

      நீக்கு
  23. நல்ல தொகுப்பு. ஆசிரியர்கள் வேண்டாமா? அரசியல்வாதிகள் தாதாக்கள் இரண்டும் வேறு வேறா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர்கள் தெய்வத்தைவிட உயர்ந்தவர்கள் என்பது உலகம் அறிந்த விடயம்தானே நண்பரே...

      அரசியல்வாதிகள்-தாதாக்கள் ஸூப்பர் உண்மை.

      நீக்கு