அசைவு
அசைந்தது மரம்
அசைத்தது காற்று
அயர்ந்தது மனிதன்
தாய்
இரக்கப்பட்டதால்
வானம் அழுதது
பூமி சிரித்தது
பிறக்கபட்டதால்
சேய் அழுதது
தாய் சிரித்தாள்
கனம்
பறந்தது பறவை
மடியில் கனமில்லை
எதிர்புறம் விமானமும்
மடியில் கனத்தோடு
மருத்துவர்
சிறுநீரக அறுவை
சிகிச்சைக்கு தேதி
குறித்தார் மருத்துவர்
தேதியைக் கண்டு
நகைத்தான் எமன்
பூ
செடியில் பூ சிரித்தது
நாளை பிணத்தின்
மடியில் இருப்பதை
அறியாத அப்பாவியாய்
கூலி
கை வண்டி இழுத்தார்
பெற்ற கூலி சொற்பம்
இழுப்பது போல் நடித்தார்
நடிகர் கூலியோ லட்சம்
பயணம்
பயணி கிழியாத ரூபாயை
கொடுத்தார், பெற்றவர்
நல்ல பயணச்சீட்டை
கிழித்தே கொடுத்தார்
காதல்
நாயகன் சொன்னான்
நாயகியிடம் உன்னை
காதலிக்கிறேன் என்று, கேட்ட
வில்லன் சொன்னான் உன்
காதலை அழிக்கிறேன் என்று
சிறை
நெல் பிரசவித்தது அரிசியை
அரிசி உண்டா’’கி சோறாகியது
சோற்றை சிறையிலிட்டான்
சோறு மலமாகி தப்பித்தது
சாதனை
கிழித்தது தேதியின் தாள்
கழிந்தது ஆயுளின் ஒருநாள்
சாதனையாளருக்கு சரித்திரம்
வேதனையாளருக்கு தரித்திரம்
கரங்கள்
நிலத்துக்காரர்கள் சண்டையிட்டு
வேலி போட்டனர் பூமியின் மேலே
இருதரப்பு மரங்களின் வேர்களும்
கரம் கோர்த்தது பூமியின் கீழே
அமைச்சு
அசைந்தது எழுதுகோல்
அசைத்தது விரல்கள்
அமைந்தது இக்கவிதை
தேவகோட்டை கில்லர்ஜி
அனைத்தும் அருமை ஜி...
பதிலளிநீக்குதாய், கரங்கள் மிகவும் பிடித்தது...
அடிக்கடி விரல்கள் அசையட்டும்...
வாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தும் அருமை //பூ //மட்டும் ரொம்பவே மனசுக்கு வலிச்சுது
பதிலளிநீக்குவருக சகோ ரசித்தமைக்கு நன்றி
நீக்குபயணம், கூலி, மனதை தொட்டது. பூ மனம் வலித்தது. மொத்ததில் எல்லாமே மிக அருமை.
பதிலளிநீக்குவருக சகோ கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅனைத்தும் அருமை .... அதிலும் கூலி, சாதனை இரண்டும் அட்வான்ஸ் அருமை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
பதிலளிநீக்குகுறுங்கவிதை என்னும் பெயரில் இங்கு
பதிலளிநீக்குவெறுங்கவிதை கொடுக்காமல் அத்தனையும்
"நறுங்"கவிதைகளாக கொடுத்த உங்களுக்கு
பாராட்டுக்கள் நண்பரே !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
வருக நண்பரே கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குகரங்கள் மிகவும் ரசித்தேன்
வருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குஅருங் கவிதை பொழிந்திருக்கும்
பதிலளிநீக்குபெருங் கவியே வாழ்க...
கருங் குருவியாய்த் திரிந்து
தமிழ் அருவியாய்த் திகழும்
புகழ்க் கவியே வாழ்க...
நலங்கருதி வளங்கருதி
மனம் உருகி வார்க்கின்ற சொல்லும்
மணம் கொண்டு குணம் கொண்டு
தமிழார்ந்த நெஞ்சங்களை வெல்லும்...
அன்பின் ஜி
நீக்குதங்களது கவி வழி பாராட்டுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
நடுச் சாமத்திலேயே இந்தப் பதிவை வாசித்து விட்டேன்...
பதிலளிநீக்குதூக்கக் கலக்கம் தீராததால் ஒன்று செய்ய இயலவில்லை..
(சிவ சம்போ: ஓய்!.. இப்போ மட்டும் தூக்கம் கலைந்து விட்டதா?..
அடியேன்: இல்லீங்க ஜாமிகளே!...
சிவ சம்போ: அப்போ போய் தூங்கும்...)
வாங்க ஜி ஹா.. ஹா.. அதானே இதற்கெல்லாம் அவரு வரமாட்டாரோ...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு. கவிகள் அழகுடன் அருமையாகவும் உள்ளது. அனைத்தையும் ரசித்தேன். மருத்துவர், கூலி, சிறை, பயணம், கரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாய் ரசிக்க வைத்தது. அமைச்சு தங்களின் திறமையை பறைசாற்றுகிறது. கவிகளை இயற்றிய தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.
நீக்குகன்னாபின்னா என்று சிந்தனைகள் ஓடுகின்றன போலும்.. எல்லாமே ரசிக்கும்படி இருக்கின்றன. சில ரொம்ப அருமை.
பதிலளிநீக்குஹா.. ஹா.. கன்னாபின்னா என்று யோசித்து எழுதினால் கவிதையை ரசிக்கும்படி அமைக்க முடியாது ஜி.
நீக்குகண்ணனின் பின்னே போகும் ராதையை நினைத்து எழுதினால் கவிதை அருவியாய் கொட்டும்.
ஆஆஆஆஆஅ கில்லர்ஜியும் பாகுபலி பார்த்துவிட்டார் போலும் ஹா ஹா ஹா:)
நீக்குஎனக்கு கண்ணுல கண்டாலே ஆகாது.
நீக்குகவிதைகள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன கில்லர்ஜி. சில நறுக்கென்று! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குவாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!
நீக்குஅனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக அசைவு, தாய், கூலி, சாதனை. படிக்கும்போது தளிர் சுரேஷ் நினைவு வந்தது. இன்னமும் எழுதுகோல் கொண்டு பதிவு எழுதுகிறீர்களா? நான் கணினியில் தட்டச்சு செய்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா பதிவை ரசித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குஉண்மையில் நண்பர் திரு.'தளிர்'சுரேஸ் அவர்கள்மீது பொறாமை கொண்டே கவிதை எழுதினேன்.
என்னைப் பொருத்தவரை பொறாமை நல்லது (தொலைக்காட்சி விளம்பர பாணியில் படிக்கவும்)
எழுதுகோல், தட்டச்சு ஹி.. ஹி.. கவிதை என்பது பொய்யே.. பொய்யே...
சின்ன சின்ன கவிதை நல்ல முயற்சி. பாராட்டுகள் கில்லர்ஜியின் சிறப்பு அதுதான்.
பதிலளிநீக்குவருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குமருத்துவர், கூலி, பயணம், கரங்கள் ஆகியவை மனதைத் தொட்டன. ஹைகூவிற்கு நல்ல தமிழாக்கம் குறுங்கவி. அருமை அனைத்துமே.
பதிலளிநீக்குவருக சகோ பதிவை ரசித்து குறிப்பிட்டமைக்கு நன்றி.
நீக்குகடந்த பதிவு படிக்கவில்லை போலயே...
கூலி பற்றி எழுதியது உங்களைக்காட்டிக் கொடுக்கிறது
பதிலளிநீக்குஹா.. ஹா.. எப்படியாவது கண்டு பிடித்து விடுகிறீர்களே... ஐயா.
நீக்குமருத்துவர் பற்றி எழுதியது மருத்துவமே எள்ளி நகையாடவா
பதிலளிநீக்குஐயா இது கொரோனாவுக்கு பந்தம் இல்லாத மருத்துவகவி.
நீக்குகுறுங்கவி பேர் அருமை.
பதிலளிநீக்குகவிதை மிக அருமை.
கரங்கள் கவிதை மிக அருமை.
வருக சகோ கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குகுறுங்கவிஞரே
பதிலளிநீக்குதங்கள் கவிகள் அருமை
நண்பரின் வருகைக்கு நன்றி.
நீக்குகவிதைகள் அருமை! அதுவும் அந்த 'பூ'மற்றும் பயணம் வரிகள் மிக அருமை. பாராட்டுகள்! கடைசி வரிகளுக்கு 'அமைச்சு' என தலைப்பு தந்ததன் காரணம் என்ன? 'படைப்பு' என்று இருந்திருக்கலாமோ?
பதிலளிநீக்குவருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குகடைசி
அசைந்தது
அசைத்தது
அமைந்தது என்ற வரிசையில்
அமைச்சு என்ற குறளின் வார்த்தையை இணைத்தேன்.
அன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குசிறு சிறு வரிகளில் மனதை அசைக்கிறது உங்கள் சொற்கள்.
கரங்கள் மிகப் பிடித்தது.
நல்லதொரு வாசிப்புக்கு வார்த்தைகள் கொடுத்த வள்ளல்.
நன்றி.
வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஅற்புதமான கவிதைகள் கில்லர்ஜி. பல முறை படித்தேன்.
பதிலளிநீக்குமருத்துவர் - அறுவை சிகிச்சையின் போது உயிர் நீத்த என் நட்புகள் கண்முன்னே வந்து போனார்கள். ;(
பூ - மீண்டும் அதே வலி. ;( தோட்டத்தில் அழகாக செடிகள் புத்து நிக்கும் சமயம் எல்லாம் தோன்றும் - அம்மாவின் சமாதிக்குப் போகலாம் இவற்றை அழகாகச் செண்டுகள் ஆக்கி என்று. ;(
கரங்கள் - அருமை.
வருக இமா தங்களது முதல் வருகையை இனியதாய் வரவேற்கிறேன்.
நீக்குகவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி.
குறுங்கவிகள்...மனதைக் கொள்ளைகொண்டுவிட்ட அருங்கவிகள்!
பதிலளிநீக்குகில்லர்ஜியின் கவியுள்ளம் சிறக்க என் வாழ்த்துகள்.
வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.
நீக்குகூலியைப்பற்றி எழுதிப்போனவரைக்
பதிலளிநீக்குகேலிசெய்யப் பார்க்கிறாரா ஜிஎம்பி !
வருக நண்பரே
நீக்குஹா.. ஹா.. கூத்தாடிகள் விசயத்தில் நானும், ஐயாவும் எப்பொழுதும் எதிரும் புதிரும்தான்.
..நிஜத்துக்கு சொற்பம்..நடிப்புக்கு லட்சம் அனுபவ உண்மை தலைவரே!...
பதிலளிநீக்குவருக நண்பரே நலமாக இருக்கிறீர்களா ? வருகைக்கு நன்றி.
நீக்குஎல்லா கவிதைகளும் அருமை,குறிப்பாக கூலியும், கனமும் சபாஷ் போட வைத்தன.
பதிலளிநீக்குவாங்க மேடம் ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅனைத்துமே அருமை,
பதிலளிநீக்குஆழமான அர்த்தங்கள்
அழகான வரிகளும் கூட...
வருக கவிஞரே மிக்க நன்றி.
நீக்குமிக மிக அற்புத வரிகள் பல வருடமா நான் எழுதி வந்தாலும் இப்போதே பலரின் பதிவுகள் படிக்க தெரிந்தது இவ்வளவு நாள் மற்ற அன்பர்கள் பதிவு தேட தெரியாது சிறப்பு
பதிலளிநீக்குவருக கவிதையை பாராட்டியமைக்கு நன்றி.
நீக்குபிறருடைய தளத்தில் ஃபாலோவர் சொடுக்கி இணைத்துக் கொண்டால் பதிவுகள் வெளியானதும் உங்களுடைய டேஷ்போர்டில் வரும். நானும்கூட உங்களது பதிவை இப்படித்தான் படிக்கிறேன்.
அனைத்தும் பிடித்தது.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி.
நீக்குவழக்கம் போல தங்கள் கவிதையும் அருமை நண்பரே.
பதிலளிநீக்குசெய்வினை செயப்பாட்டு வினைகளை கருத்தில் கொண்டு பார்த்தால்
பிறக்கப்பட்டதால் என்ற சொலனம் மொழியில் இல்லை என்றே தோன்றுகிறது. சரி பார்த்து சொல்லுங்கள்.
வருக நண்பரே
நீக்குஅழுகை, சிரிப்பு என்ற வகையில் கவிதையை அமைத்தேன்.
கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.