தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 11, 2020

மாடசாமியும், மடச்சாமியும்


ணக்கம் மாடசாமியண்ணே எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்கதான் தீர்த்து வைக்கணும்.
வாடாத்தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஒரு இடத்துக்கு புறப்படும்போது பூனை குறுக்கே போனால் போனகாரியம் விளங்காதாண்ணே ?
ஆமாடா தம்பி பெரியவர்கள் எல்லாவற்றையும் அனுபவப்பட்டுதான் சொல்லி வச்சு இருங்காங்க....


அப்படீனாக்கா இந்த விசயம் பூனைகளுக்கு தெரியுமாண்ணே ?
? ? ?

நாம பேசிக்கிட்டு இருக்கும்போது பல்லி உச்சுக் கொட்டினால் நல்லது நடக்கும்’’னு சொல்றது உண்மையாண்ணே ?
ஆமாடா தம்பி கண்டிப்பாக நடக்கும்

அப்படீனாக்கா இது பல்லிகளுக்கு தெரியுமாண்ணே ?
? ? ?

ஏண்ணே கடவுள் தாகமெடுத்து அணிலுக்கிட்டே போயி தண்ணி கேட்டதாகவும் அது தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொடுத்ததாக சொல்றாங்களே இது உண்மையாண்ணே ?
ஆமாடா தம்பி உண்மைதான் இதேபோல ஓணானிடமும் போய் கேட்டு இருக்காரு அதுக்கு ஓணான் மூத்திரத்தை பேய்ஞ்சு கொடுத்து இருக்கு இதுக்காகத்தான் நாம அணிலை அடிக்கிறது இல்லை ஓணானை மட்டும் அடிக்கிறோம்.
அப்படீனாக்கா இந்த விசயம் அணிலுக்கும், ஓணானுக்கும் தெரியுமாண்ணே ?
? ? ?

மூஞ்சுறுவை கண்டால் அடிக்ககூடாது வணங்கணும்’’னு சொல்றாங்களே ஏண்ணே ?
ஆமாடா தம்பி மூஞ்சுறு பிள்ளையாரோட வாகனம் அதனால அடிக்ககூடாது.

அப்படீனாக்கா சேவல்கூடத்தான் முருகன் கூடவே இருக்குது அதை மட்டும் அடிச்சு சூட்டான் போட்டு திங்கலாமாண்ணே ?
? ? ?

Chivas Regal சிவசம்போ-
மாடசாமியாண்ணே எதுக்குமே பதில் சொல்லலையே... மடச்சாமியோ. ?

காணொளி

74 கருத்துகள்:

 1. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான் என்பது உண்மையாண்ணே?

  ஆமாம்டா தம்பி

  அண்ணே அப்ப ஊரை ஏமாற்றுபவன் ஆட்சி செய்கிறானே

  ?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப பக்கத்துல சருகனிக்குகூட போக முடியாதே...

   நீக்கு
 2. அண்ணே காலடி மண், உப்பு, மிளகாய் கொண்டு திருஷ்டி சுற்றி நெருப்பில் போட்டால் திருஷ்டி கழியும் என்பது உண்மையாண்னே?

  ஆமாம்டா?

  அப்ப மோடி செய்யும் அற்பத ஆட்சியை கண்டு பல நாடுகள் திருஷ்டி போட்டு இருப்பதால் காலடி மண், உப்பு, மிளகாய் எடுத்து விமானம் மூலம் இந்தியாவை சுற்றி வந்து நெருப்பில் போட்டால் திருஷ்டி கழியுமாண்ணே?


  ?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீனாக்கா ஜூன் இரண்டாம் தேதி இந்தியாமீது விமானங்கள் பறக்கலாம்

   நீக்கு
 3. மடச்சாமி கேள்விகள் கேட்க, மாடச்சாமியால் பதில் சொல்ல முடியவில்லை!
  ஹாஹாஹா...

  ஆனால், பதிவு ரொம்ப சின்னதா இருக்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   கெட்டவனுக்கு எட்டு என்பதுபோல் மாடசாமி அண்ணன் எட்டு கேள்விகளோடு கழண்டு கொண்டார் போல...

   நீக்கு
 4. தம்பி கருத்தாதான் கேள்விகள் கேட்டிருக்காப்புல...! மாடசாமி மட்டுமா, யாராலதான் பதில் சொல்ல முடியும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி யாராவது சொல்வாங்க... ஜி

   நீக்கு
  2. JKC ஐயா சொல்லிட்டாரே...!

   நீக்கு
  3. ஆம் வரிசை எண்படி சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
 5. அணில் விஷயம் கேள்விப் பட்டதே இல்லை. கடைசிக் கேள்வி நச்! எல்லாமே அருமை. உங்களுக்குனு தோணுது பாருங்க! பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் சிறு அகவை முதலே கேட்டு, கேட்டு நன்றியுணர்வை ஊட்டி வளர்த்த கதை.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  தம்பியின் அறிவு பூர்வமான கேள்விகள் சுவாரஸ்யமாக இருந்தது.
  பெயருக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்து உண்மைதான் போலும்.! ஒரு கேள்விக்கும் பதிலேதும் சொல்ல முடியாத கேள்விகள்தான். பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தம்பியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ரசித்து விட்டு மழுப்பி சென்றமைக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   ஹா. ஹா. ஹா. மழுப்பலாக மாடசாமியே இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மடசாமி முன் அமர்ந்திருக்கும் நானெல்லாம் எம் மாத்திரம்.( முதல் படம் அருமை.) படங்களும் பதிவும் ஒன்றையொன்று சார்ந்திருந்ததை ரசித்தேன்.

   தங்கள் வீட்டு விருந்தாளிக்கு கொடுக்கப்பட்ட நீராகாரம் அதற்கு மிகவும் சுவையானதாகத்தான் இருந்திருக்கும். அழகான படம்.

   காணொளி நன்றாக இருக்கிறது. குறிப்பிட காலை அவசரத்தில் விட்டுப் போனது. எந்த விஷயத்திலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் அடி பலமாகத்தான் விழும் என்பதையும் தம்பி இந்நேரம் கேள்விகளுக்கிடையே அண்ணனுக்கு உணர்த்தியிருப்பார் இல்லையா?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. ஆம் இந்த விருந்தாளி தினமும் வீட்டு வாசலுக்கு வந்து விடுவார்.

   சில நேரங்களில் விரட்டி விட்டாலும் நம்மை முகர்ந்து உரசும் நான் பலமுறை நினைப்பதுண்டு நமது மூதாதையர்களாக இருப்பார்களோ என்று இந்த நினைவுகள் வந்ததும் விரட்டுவதை விட்டு விடுவேன்.

   நீக்கு
  4. அவ்வ்வ் :) இப்படி ஆடு மாடு நாய்  பறவை பூனைன்னு பலதும் என்னை வந்து உரசும் .பல் வேறு ரூபத்தில் எங்க மூதாதையர் என்னை சுத்தி வராங்களோ 

   நீக்கு
  5. இருக்கலாம் சகோ

   நீக்கு
 7. அதிநுட்பமான கேள்விகள் கேட்டு அசத்திய ஓர் அறிவுஜீவியை மடச்சாமின்னு சொல்லிட்டீங்களே, இது அடுக்குமா கில்லர்ஜி?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   ஆழ்ந்து யோசித்து பாருங்கள் சிவசம்போ மடச்சாமியோ என்று சொன்னது பதில் சொல்லாத மாடசாமி அண்ணனை கேள்வி கேட்ட தம்பியை அல்ல!

   தலைப்பை மாடசாமியா ? மடச்சாமியா ? என்று வைத்திருந்தால் தங்களுக்கு இக்குழப்பம் வந்து இருக்காது என்று நினைக்கிறேன்

   நீக்கு
  2. புரிந்துகொண்டேன். நன்றி.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 8. இப்படியான பல கேள்விகள் முன்பே எழுந்து உள்ளது... ஆனால் நம்ப வைக்கப்பட்டது வேறு...

  பதிலளிநீக்கு
 9. பதில்கள் 
  1. பூனைகளுக்குத் தெரியும். அதனால் தான் குறுக்க போகிறது.

   2. பல்லிகளுக்கும் தெரியும் அதனால் தான் உச் கொட்டுகிறது.
   
  ஆடுகூடத்தான் முருகனுடைய வாஹனம். அதை விட்டு விட்டீர்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பூனை நமது காரியத்தை கெடுக்க நினைக்கிறதா ?

   ஆடு முருகன் வாகனமா ? நான் ஏசு நாதரின் ஆள் என்று நினைத்து இருந்தேன்.

   நீக்கு
 10. கேள்விகள் கேட்க தொடங்கி விட்டீர்கள் விழிப்புணர்வு வருமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா வந்தால் வளம் பெறட்டும்.

   பூனைக்கு மணியை கட்டி வைக்கா விட்டாலும், காட்டியாவது வைப்போம்.

   நீக்கு
 11. இப்போதுள்ள நிலையில் வாயில்லாஜீவன்கள் மிகவும் பாவம். உங்க விருந்தாளி போஸ் கொடுக்கமறுத்துட்டாரா. நல்ல கேள்வி, பதில்கள்.பதிலே சொல்லமுடியல. 1வது படம் அருமை.ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றி. வாயில்லா ஜீவன்களும் நம்மைப் போன்ற உயிர்தானே பாவம்.

   நீக்கு
 12. உங்கள் பதிவைப் பார்த்ததும் நாம் குறுக்கே வருகிறோம் என நினைத்து பூனை ஒதுங்கிவிடும் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. கேள்விகள் தொடரட்டும். கேள்வி கேட்கக் கேட்க விடைகள் கிடைக்கும்! :)

  நல்லாத் தான் கேள்வி கேட்கறாரு! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 14. கில்லர்ஜி அண்ணா எடக்கு மடக்கா கேள்வி கேட்பாரு..

  ஆமாம்ண்ணே.

  இது எல்லாருக்கும் தெரியும். அவருக்கு தெரியுமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்.

   பதில் சொல்வது உங்கள் கடமை.

   நீக்கு
 15. கேள்விகள் நல்லா இருக்கிறது.

  காளை தன் தலைவரை(சிவனை) தேடி ஜவுளி கடைக்குள் வந்து விட்டதோ!
  வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு தொற்று ஏற்படாமல் இருக்க மஞ்சள் கலந்த கஞ்சியா?

  காணொளி சண்டையை வேடிக்கை பார், விலக்க நினைத்தால் அடிவிழும் என்கிறதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ படத்தில் இருப்பது வடநாட்டில் நிகழ்ந்த உண்மை சம்பவம்.

   விருந்தாளிக்கு அம்மா வழக்கம்போல் வைப்பதுதான்.

   காணொளியில் அந்த ஆளுக்கு அவசியமில்லாத வேலைதான்.

   நீக்கு
 16. கவுணடமணி, செந்திலை போல் கற்பனை செய்து கொண்டு படிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 17. ஹாஹா :) பூனை விஷயம் தேம்ஸ் கரைக்காரம்மாவுக்கு தெரியுமா:)  நாம் இப்படி ஒவ்வொரு சகுனம் பார்க்கிறமாதிரி அவையும் யோசிக்குமான்னு தோணுது ஒரேயொரு சந்தேகம் ? அணில் இளநீர் எப்படிங்க ? பழம் ஏதாச்சும்னா ஏற்கலாம் அதோட குட்டியூண்டு கையால் எப்படி இளநீ பறிக்க முடியும் ?  அனைத்தும் அருமை குறிப்பா வீட்டு விருந்தாளிக்கு உபசரித்தல் படம் சூப்பர் .பாவங்க இவை நம்மால் இடமின்றி அனாதையாக்கப்பட்டவை .நாம் தான் கவனிக்கணும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜேம்ஸ் ஓனரை கொஞ்ச காலமாக காணவில்லையே...

   அணில் கதைபோல் புரூடா கதை நிறைய இருக்கு சகோ

   நீக்கு
  2. நான் களம் குதிச்சிட்டேன்:)) எனக்கு கை படபடக்கிறது.. நாக்கு வெட வெடக்கிறது.. மாடசாமியாஇ மடச்சாமியை நினைச்சோ எனக் கேட்பீர்கள்.. இல்லை மாட சாமியை நினைச்சு:))..

   பூனை குறுக்கே போனால் பூனைகளுக்குத்தான் சகுனம் கூடாதாம்:)) அதாவது நாம் அவர்களுகு குறுக்கே போனதாகவும் மாத்தி ஓசிக்கலாமெல்லோ:)).. அதனால அவர்களுக்கு அன்று எலி கிடைக்காதாம் கர்ர்ர்ர்ர்:))..

   நீக்கு
  3. அப்படீனாக்கா... நம்மால் எலிகளுக்கு லாபம்தானே.... எப்பூடி ?

   நீக்கு
 18. காணொளி :))))))) அது நாலுகால் ரெண்டும் பேசி தீர்த்துக்க வேண்டிய இடத்தில ரெண்டுகால் நாட்டாமை எதுக்கு :)))))))))))

  பதிலளிநீக்கு
 19. மாட்டுக்கு பாதாம் பாயசமா வைத்திருக்கிறார்கள்? எங்க நெல்லைல, பீடிக்கடை முதலாளி, யானைக்கு வருடத்துக்கு ஒரு முறை கிலோ கிலோவாக அல்வா, உணவாகக் கொடுப்பார். அதைக் காப்பியடிச்சிருப்பாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ நண்பரே பாதாம் பாயாசம் கொடுப்பதே நான்தான்.

   எங்கள் வீட்டுக்கு தினமும் வரும் விருந்தாளி.

   நீக்கு
 20. பூனை குறுக்க போனால் - ஹா ஹா. இந்தப் பழமொழி அரபு தேசத்தில் இருந்தால், எவரும் நடமாட முடியாது. அவ்வளவு பூனைகள் அங்கே.

  நாங்கள்லாம் சின்ன வயசுல எக்சாமுக்கு வீட்டிலிருந்து கிளம்பும்போது, அம்மா குடு குடுவென ரோடிற்கு வந்து பார்ப்பாங்க..சகுனம் சரியா இருக்கான்னு. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே நானும் அபுதாபியில் அடிக்கடி கேட்டு இருக்கிறேன் சகுனம் பார்த்தால் யாருமே வேலைக்கு போகமுடியாது.

   நீக்கு
 21. இடைச்செருகல் கதைகளினால் (சின்னப் பசங்க சுவாரசியத்துக்காக ஏதாவது சொல்லியிருப்பாங்க) பெரியவனான பிறகு என்னடா இது..இப்படி புரூடா விட்டிருக்காங்களே என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹா ஹா.

  பொதுவா மூஞ்சூர், நம்ம உணவை அல்லது சமையல் அறையைத் துழாவுவதில்லை. எலி, எல்லாப் பாத்திரங்களிலும் புகுந்து விளையாடும். அதனால் சொல்லியிருப்பாங்களோ? (அட..உங்க பதிவைப் படித்து எனக்கும் கேள்விகள் வந்துடுதே)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே நானும் இந்த கதைகளை நம்பி நண்பர்களோடு சேர்ந்து ஓணானை பிடித்து மூக்குப்பொடியை கண்ணில் தூவி விட்டு அந்த பாவத்துக்கு ஆளாகி இருக்கிறேன்.

   நம்மோடு சேர்ந்தால் இப்படித்தான் ஆகவேண்டும்.

   நீக்கு
 22. கேள்விகள் கேட்பது எளிது .ஆனால் பதிலளிப்பது கடினம் என்பார்கள். அதை நிரூபித்துவிட்டார்கள். மடசாமியும் மாட சாமியும். மாடசாமி கேட்கவேண்டிய கேள்விகள் ஏராளம் உள்ளன. அதையெல்லாம் எப்போது கேட்கப்போகிறார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரை அடுத்த பதிவுக்கு அடித்தளமாகிறதே...

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 23. பதில் தெரியாத கேள்வி கதைகளை பரப்புவது யாரண்ணே? மட சாமியா?

  பதிலளிநீக்கு
 24. ரூம் போட்டு யோசிப்பீங்களோ? கேள்விகள் அருமை! பதில் சொல்லலாம்.. ஆனால் உங்கள் காணொளியை பார்த்த பிறகு பதில் சொல்லும் எண்ணம் போய் விடுகிறது. அண்ணனும், தம்பியும் உறவாடும் பொழுது/மோதிக்கொள்ளும் பொழுது நாம் குறுக்கே போனால் எங்களை தூக்கி அடித்து விட்டால்..?? எதற்கு வம்பு..? உங்களுக்கு பதில் கிடைத்ததும் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூம் போட்டு யோசிக்க முடியுமா ? காணொளி பயமுறுத்தி விட்டதா ? ஹா.. ஹா..

   நீக்கு
 25. ஹா..ஹா...கேள்விகள் ரசனை.

  பதிலளிநீக்கு
 26. ஆரையோ நேரடியாகத் திட்டாமல் தலைப்புப் போட்டுத்ட் ஹிட்டுறீங்க:)).. இது புதுத் தக்கினிக்கி:) போல:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரும், யாரையும் திட்டவில்லை.
   கடந்த பதிவு படிக்கவும்.

   நீக்கு
 27. இதையெல்லாம் மறந்து தான் ஒரு தலைமுறை ஆச்சே!...

  பதிலளிநீக்கு
 28. ஊரடங்கை உருப்படியாக்குறது நீங்க தான்!..
  இருந்தாலும் இதெல்லாம் அந்த ஊரடங்குக்குத் தெரியுமா அண்ணே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஹா.. ஹா.. எழுத வேண்டியது நமது கடமை அவ்வளவுதான்.

   நீக்கு
  2. சிந்தித்த மடச்சாமி, பதில் சொல்ல வந்த மாடச்சாமி
   எல்லாமே புத்திசாலிகள் தான்.
   விடைதான் கிடைக்கவில்லை.

   ஜவுளிக்கடை வந்த ரிஷபம் யாரைப் பார்க்கிறது. கடவுளையா ,தன் தோழனையா?
   கஞ்சி வைத்து பசுவைக்காக்கும் அறத்துக்கு வாழ்த்து.
   அடிவாங்கி குடி காளைக்கு இந்த அடி போதாதே.
   அன்பு வாழ்த்துகள் அன்பு தேவகோட்டைஜி.

   நீக்கு
  3. வாங்க அம்மா
   பதிவை ரசித்து கருத்துரை தநதமைக்கு நன்றி.

   நீக்கு
 29. சொல்லியதும் சொல்லியவிதமும் அருமை..வாழ்த்துகளுடன்.

  பதிலளிநீக்கு
 30. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்த கவிஞருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. பதில் சொல்லாதவர் தான் மடசாமியோ என்னவோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

   நீக்கு
 32. பதிவை ரசித்துப் படித்தேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவின் ரசிப்புக்கு நன்றி.

   நீக்கு