தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 12, 2014

கதை சொல்லவா ?


நான்,
கீதையைப்பற்றி போதிக்க வந்த அருணகிரி நாதரும் அல்ல !   
பைபிளை பற்றி சோதிக்க வந்த வேளாங்கண்ணி பாதரும் அல்ல !  
குர்ஆனைப்பற்றி வாதிக்க வந்த நாகூர் மார்க்க தூதரும் அல்ல !    
Just you’re Brother.

மனிதன் மதம் தந்த, கதை சொல்லவா ?
இல்லை,
மனிதனை மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானைக்கு மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானை மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் தந்த பலனால், மனிதன் பதம் பார்த்த, கதை சொல்லவா ?
இல்லை,
பதம் தந்த விளைவால் மனிதன் மதம் கோர்த்த, கதை சொல்லவா ? 
இல்லை,
மதம் வந்ததால் மனிதன் ரதம் இழுத்த, கதை சொல்லவா ? 
இல்லை,
ரதம் கூட மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் கொடுமையால் வாக்கு வாதம் வந்த, கதை சொல்லவா ?   
இல்லை,
வாதம் முற்றி பாதம் தொட்டு மன்னிப்பு கேட்ட கதை சொல்லவா ?   
இல்லை,
மன்னிப்பு கேட்கும் முறைக்கு நாதம் மீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
ஆதம் காலத்து மதம் தீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மக்கள் தொகையில் சதம் அடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
தாமதம் செய்து வந்த புதுமதம் செய்த, கதை சொல்லவா ?   
இல்லை,
சம்மதம் சொல்ல வந்தது எம்மதம் என்ற, கதை சொல்லவா ?   
இல்லை,
மதம் இல்லை என்று சொன்ன மானிட, கதை சொல்லவா ? 
இல்லை,
மலம் கழிக்கும் மானிடனேயே மதம் போற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
உலகுக்கு எம்மதம் தொண்டு ஆற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மனதை குழைத்து மதம் மாற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை, 
உணர்ந்து உருகி மதம் மாறிய, கதை சொல்லவா ?   
இல்லை,
சதாம் கொண்டு வந்த ஆரிய(ர்), கதை சொல்லவா ?   
இல்லை,
பேதம் இன்றி சாதம் ஊட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
நெஞ்சு பதைக்கின்ற மனதை வதைக்கின்ற, கதை சொல்லவா ? 
 
CHIVAS REGAL சிவசம்போ-
இவரு, கதை சொல்லவான்னு கேட்கிறாரா ? இல்லை கதை சொல்ல, வா ! ன்னு கூப்புடுறாரான்னு புரியலையே ? விளக்கம் கேட்டா நம்மளை டியூப்லைட்னு சொல்வாரு...

22 கருத்துகள்:

 1. கேட்பதற்கா ? சொல்வதற்கா ?

  பதிலளிநீக்கு
 2. வாவ்! அருமை நண்பரே! நெஞ்சு பதைக்கின்ற மனது வலிக்கின்ற கதைகள் அல்லாமல் இதமான, வருடும் கதைகளே போதும்! இவ்வுலகம் அமைதியிலும், அன்பிலும் திளைத்திடும் கதைகளே வேண்டும் இல்லையா நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நல்லகதை சொல்ல முயற்சிக்கிறேன் நண்பரே,,,,,,

   நீக்கு
 3. சீக்கிரம் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. கொஞ்சம் பொறுங்க,,,,,, பாஸூ அடுத்தவாரம் மோகனாவின் கதையை சொல்றேன்.  பதிலளிநீக்கு
 5. அன்புடையீர்..
  எனது தளத்திற்கு வருகை தந்து இனிய கருத்துரை வழங்கிய தங்களுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 6. தென்றலாக மனதை வருடும் கதை சொல்லுங்களேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக, சொல்வேன், அதன்மூலம் தங்களிள் மனதை கொள்ளை கொ(ல்)ள்வேன்.

   நீக்கு
 7. சொல்லவா சொல்லவான்னு கேக்குறமாதிரியே சொல்ல நெனச்சத சொல்லிபுட்டீங்களே தலைவா! நல்ல உத்திதான்!

  பதிலளிநீக்கு
 8. வெளியே போகும்போது,,,, வரவா''ன்னு, சொல்லிப்புட்டு போறதில்லையா ?

  பதிலளிநீக்கு
 9. முதன்முறையாகத் தங்களின் தளத்திற்கு வருகை தருகின்றேன் அன்பரே
  கதைகேட்கக் காத்திருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 10. முதல் வருகைக்கு எமது முதல் வணக்கம், அன்பரே,,, மோகனின் கதை சொல்லவா ? இல்லை மோகனாவின் கதை சொல்லவா ?

  பதிலளிநீக்கு

 11. எல்லா கதைகளையும் சொல்லுங்களேன்! கேட்டக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 12. சரி ஐயா தங்களுக்காக,,,,, ''மோகனின் மோகம், மோகனாவுடன்'' நாளைக்கே.

  பதிலளிநீக்கு
 13. கதை எதுவாகலாம்
  வாசகர் உள்ளம் நிறைவு தரும் கதையே வெற்றிபெறும்.

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான், ஐயா தங்களின் ஆலோசனைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. முதல் மூன்று வரிகள் வாவ் வாவ் வாவ் ..

  தொடரும் வரிகள் ஒரு ஆயிரம் வாலா அதிரடி சரவெடி...

  தொடர்க

  பதிலளிநீக்கு
 16. 1000 நன்றி, திரு. மது அவர்கள்.

  பதிலளிநீக்கு
 17. எல்லா கதையும் சொல்லங்க..தலைவரே.........

  பதிலளிநீக்கு
 18. எல்லா கதைகளையும் சொல்லுங்க தலைவரே. !..கதை கேட்டு ரெம்ப நாளச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லிக்கிட்டுதானே போறேன் நண்பா,,, நாலுநாளைக்கு ஒருதடவை நம்ம ஏரியாவுக்கு வாங்க.

   நீக்கு