27.10.1986
வெட்டுட்டையாள் காளி துணை.
மோகனா எழுதுரேன் யேய்யா ஒனக்கு இப்பத்தான் நாபகம் வருதா ஒனக்கு புள்ல நாபகம்குட வரலயா மூனுமாச புள்லயா துக்கிட்டு வந்தென் போன வாரந்தேன் ஒரு வயசு முடிஞ்சிருச்சு எம் புள்லைக்கு பெரந்த நாளுக்கு ஒரு சட்டை எடுத்துக் குடுக்க தோனுச்சா ஒனக்கு முத்தமா குடுக்கிர முத்தம்நா நாண் வர்ரேன் மொத்தமா குடுக்க எம் புள்ல பெரந்த நாளுக்கூட பக்கத்து வீட்டு பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளைதான் சட்டை எடுத்து குடுத்தாரு வந்த எடத்துல யேன்ஆத்தாவையும் போயிலை வித்ததுக்கு கஞ்சா வித்தேன்னு சொல்லி போலிசுக்காரனுக கூட்டிட்டு போயிட்டானுக நானும் எம்புள்லயும் சோத்துக்கு என்ன செய்றது பக்கத்துவீட்டு பருவதம் அக்காதான் ஆறுவருசமா பக்கவாதம் வந்து படுத்த படுக்கையா கெடக்கே அதுதான் வீட்ல சோரு பொங்கிபோடு வீட்டப் பெருக்குன்னு சொல்லிடுச்சு வாடகை கொடுக்க முடியலே பருவதம் அக்கா புருசேன் மச்சக்காளை நல்லவரு அவருதான் எங்க வீடுதான் கடல்போல கெடக்கே ஒரு ஓரமா நீயும் ஒம்புள்லயும் இருந்துகங்கன்னு சொல்லிட்டாரு அந்த வீட்லதான் புள்லயா குட்டியா நானும் சரின்னுட்டேன் போன மாசம்கூட அவுங்க கல்யான நாலுன்னு எம்புள்லைக்கு சட்டை எடுத்து குடுத்தாரு அப்புடியே எனக்கும் ஒரு பட்டுப்பொடவை குடுத்தாரு பீரோவுல நகையெல்லாம் சும்மா கெடந்தா துருப்புடிச்சு போகும்னு ரெட்டவடம் செயினக்கூட போட்டுக்கன்னுட்டாரு அவரு ரொம்ப நல்லவரு எத்தனேவாட்டி கேட்டுப்பேன் ஒருகம்மலு வாங்கி குடுத்தியா நீ பத்து நாலுக்கு முன்னெ மதுரை மாட்டுதாவனி பஸ்டான்ட்ல பக்கத்து வீட்டு பவானி ஒங்கலப்பாத்து பேசுனாலாம் மோகனா கைப்புள்லய வச்சுகிட்டு கஸ்டப்படுறா இப்பகூட மூனு மாசம் முழுகாம இருக்கான்னு சொன்னாலாம் இதக்கேட்டு கூட எங்கல பாக்கனும்னு தோனலயா ஒன்னச் சொல்லி குத்தமில்லே ஒம்பொறப்பு அப்புடி உன்ஆத்தா கள்ள புருசன்கூட சேந்துகிட்டு உன்அப்பனை வெசம்வச்சு கொன்னதுக்குத்தானே ஆயுள் தன்டனையிலே கெடக்குரா உன் அக்காகூட சக்களத்திகள் சன்டைய வெளக்கப்போனவ அவளுகல தொரத்திட்டு தாலி கட்டாமயே தாசில்தாரோட வாளுரால்ல வெக்கங்கெட்ட வேசி சிருக்கி அவகூடப் பொரந்த நீ எப்பிடி இருப்பே நான் எதுக்கு யென்ஆத்தா வீட்டுக்கு வந்தேன் புள்லப் பெத்தவல்ல பச்ச ஒடம்புக்காரின்னு விட்டா வச்ச ஒந்தொந்தரவு தாங்கம ஆத்தா வீட்ல கொஞ்சநாலு இருப்பொமுன்னு வந்தா எங்கலை அம்போனு விட்டுட்டு நீ அந்த தூத்துக்குடிக்காரி தூ.......................ட்டு கெடகியா நான் வந்த ஒம்போது மாசத்துல அவலுக்கு அடுத்தது பத்து மாசமா ஏன்டா நாசமாப் போரவனெ இந்த லெச்சனத்துல அவலுக்கு பிரசவம் பாக்க நான் வரனுமா யேன்வயிரு பத்திகிட்டு எரியுதுடா இத்தனை நாளா ஒரு கடுதாசிகூட பொடாத நீ துபாய்க்கரன் 18 ந் தேதி வரவும் நான் ஒனக்கு 19 ந் தேதி வரனுமா அப்பன் இல்லாதவ ரென்டாவது வரைக்கும் படிச்சவதனெ அவலுக்கு ஒன்னும் தேரியாதுன்னு நெனைச்சிட்டியா சுப்ரிம்கோட்டு வரை போவென்டா யேந்தம்பி தாண்டவமுத்தி அடுத்தா வரம் பாலையங்கோட்டை இலேருந்து வந்துருவான் அவன் வரட்டும் நீ 19 ந் தேதி காலையிலே ரயில்வே டேசன்ல நிப்பியா அதே தேதி காலையியே ஒன்னை போலீஸ் டேசன்ல வச்சு ஒங்காலை ஒடிக்கலேயேன்ஆத்தா பவழவல்ளி யேன்அ அப்பன் அல்போன்சுக்கு முந்தி விரிக்கலைடா...
சாம்பசிவம்-
ச்சே என்னங்கடா இது... குடும்பமா என்ன ? மொள்ளமாரிப் பயலுக்கும், முடிச்சவிச்ச சிரிக்கிக்கும் கல்யாணம் செஞ்சுவச்சு இருக்காங்கே, பாவம்டா கதுபாய்க்காரன் உங்க சண்டையிலே அவன் தலைய உருட்டிடாதீங்க, எப்படிப் பார்த்தாலும் எல்லாக் குழந்தைக்கும், இன்ஷியல் M தான் வரும் போலயே...
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள் ஐயா!
நன்றி ஐயா.
நீக்குஆத்தாடி.. ஆத்தா... இதென்ன ரொம்ப கொடுமையால்ல இருக்கு!?..
பதிலளிநீக்குஆமால்ல......
நீக்கு"//எல்லாக்குழந்தைக்கும் இனிஷியல் "M" தான் வரும்போல //" - நல்லாவே ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க!!!!
பதிலளிநீக்குநீங்களும்தானே, ஸார் ஆராய்ந்திருக்கீங்க... ஒருவகையில் எனக்கு சந்தோசமே காரணம் நான் சொல்ல வருவது படிப்பவர்களுக்கு சரியாக போய்ச்சேருகிறது. நன்றி ஸார்.
பதிலளிநீக்குஅட,இப்படியும் ஒரு மோகினி ஆட்டம் இருக்குது. இந்த ஆட்டத்தை பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்குமே...........
பதிலளிநீக்குகொடுமையாக அல்லவா இருக்கிறது
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு கரந்தை ஸார்.
பதிலளிநீக்குவொய் திஸ் கொலை வெறி...
பதிலளிநீக்குஎப்படி இப்படி ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
எங்கள் ஊரில் உண்மையில் அப்பாவை கடைசிவரை மாமா என்று கூப்பிட்ட ஒரு நண்பர் நினைவிற்கு வருகிறார்.
http://www.malartharu.org/2014/05/100results-sslc.html
வணக்கம் கில்லர்ஜி
பதிலளிநீக்குஇப்படி ஒரு தாண்டவம் நினைச்சுக் கூட பார்க்க முடியல சாமி! புருசன் எட்டடி பாய்ந்தால் பொண்டாட்டி பதினாறு அடி தாண்டும் போலயே!! துபாய் காரன் பாடு எவனுக்கும் வர கூடாது. வித்தியாசமான சிந்தனை. நன்றி.
கடந்த கடுதாசிக்கு தங்களது கருத்துரை இதையொட்டி தானே இருந்தது நண்பரே..... வருகைக்கு நன்றி.
நீக்குஓரளவு உங்கள் முடிவை ஒட்டி கருத்தை போன பதிவிலேயே சொல்லி விட்டேன் போலிருக்கே !
பதிலளிநீக்குகில்லர்ஜி,பகவான்ஜி ..நம் இருவருக்கும் இடையில் சூட்சுமமான ஒற்றுமை ,இதைதான் அதிசயம் என்று சொன்னீர்களா ?
ஆமாம்ஜீ Thanksஜீ
நீக்குஅப்பா... கண்ணை கட்டுதுடா சாமி ! புருசனுக்கு தப்பாத பொண்டாட்டி ! ஆஹா... ஆஹா...
பதிலளிநீக்குஎத்தனைவாட்டி எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மொதலேருந்து ஆரம்பிச்சாலும் இனீசியல் மட்டும் Mல நிக்கறதும் வசதி (!) தானே ?!
போற போக்கை பார்த்தா " வாங்கஜீ ! வாங்கஜீ ! எல்லாரும் ஒன்னா டீம் ஒர்க் பண்ணலாம்ஜீ ! " கதையாகிடும் போல இருக்கே !
நேரம் கிடைப்பின் எனது வலைப்பூவினை படித்து உங்களின் கருத்துகளை பதியுங்கள்.
எனது புதிய பதிவு : முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post_28.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
பதிவை கவனமாக படித்தமைக்கு நன்றி நண்பரே... தங்களது (வலை)பூவை கண்டிப்பாக நுகர்வேன்.
பதிலளிநீக்குவித்தியாசமான நடையில் வித்தியாசமான ஒரு பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குமுதல் முறை வருகை தந்தமைக்கு நன்றி திரு. 'தளிர்' சுரேஸ் ஸார்.
பதிலளிநீக்குஇச்சமூகம் கொண்ட பல முகங்களில் இதுவும் ஒன்று/
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கு நன்றி, மீண்டும் வருக.... திரு. விமலன்
பதிலளிநீக்குபரிதாபத்துக்குரிய ஜீவன்கள்.
பதிலளிநீக்குநெகிழ வைக்கும் பதிவு.
மனம் ஒன்றி எழுதுகிறீர்கள் கில்லர்ஜி .
மனம் ஒன்றி படித்தமைக்கு நன்றி. உலகளந்த நம்பி.
நீக்கு