S’TOP*STAR’T
(May be Tomorrow)
மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது ஆரம்பமாவதும்..... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை.
சில திறமைசாலிகள் வெளியே
தெரியாமலேயே மறைந்து விடுகிறார்கள், சிலர் திறமை இல்லாமலேயே நிலைத்து(ம்) விடுகிறார்கள், உலகறியப்பட்டவர்கள் கிறுக்கியதும் கவிதை,
அறிமுகமில்லாதவன் கவிதை எழுதியாலும் கிறுக்கன்.
(இல்லாதவள்
கிழிந்ததைப் போட்டால் கிறுக்கச்சி, இருப்பவள் கிழித்துப் போட்டாலும் புதுமை
என்பதுபோல)
இந்த ஏற்றத்தாழ்வின் முரண்பாடு
எங்கே தொடங்குகிறது ? எல்லாம் ''விதி'' என இரண்டெழுத்தில் முடித்துக் கொள்ளும் விரிந்த மனம் இல்லாத மனிதனிடத்திலா ? இல்லை ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனிதன் எல்லோருமே முதலாளி என்ற நினைப்பில் உழைக்காத
சோம்பேறி ஆகி விடுவானென இறைவன் அமைத்த கோட்பாட்டிலா ? மனிதனுக்குள் வயிறு என்ற
சூழ்ட்சியை அமைத்து ''பசி'' என்ற ஒன்றை கொடுத்து உள்வாங்கி வெளியேற்றும்
சுழற்சியை அமைத்ததனால்தான் மனிதன் உழைக்க தொடங்கினான், இந்தத் தொடக்கம் சிந்தனையின்
விரிவாக்கத்தால் ஆசைகளும் விரிந்து பறவையை கண்டு அதனைப் போலவே பறக்கவும் ஆரம்பித்தான்,
தொடரத்தொடர விஞ்ஞானமும் வளர்ந்தது.
வெற்றியாளன் மேலும் தொடர்கிறான், தோல்வியாளன் சோர்ந்து போகிறான், சிலர்
விரக்தி கொள்கிறான், பலரது
வாழ்வில் மரணம் நெருங்கும்போது விலகி விடும் விலகும்போது நெருங்கித் தொடும், சிலரது
வாழ்வில் கிடைத்தது தொலைந்து விடும் சிலருக்கு தொலைந்ததுகூட கிடைத்து விடும்,
இதைப்போல பலர் படிக்க நினைப்பார் படிக்க வைக்க முடியாது, சிலர் படிக்க வைப்பர்
படிக்கத் தெரியாது, இதைப்போல சிலர் பிறருக்கு உதவ நினைப்பர் உதவ முடியாது, சிலருக்கு உதவ முடியும் ஆனால் உதவ மறுப்பர், சிலர் மறப்பர்.
முயற்சி
கொண்டால் வெற்றிநாள் முயற்சியின்மை வெட்டிநாள். முயன்றிடு நண்பா முயன்றிடு
நாளையல்ல ! இன்றே... இப்பொழுதே.... ஓடு,
ஓடு முடிவு தெரியும்வரை ஓடு, உனக்கு ஒருவிடிவு காலம் வரும்வரை ஓடு நண்பா...
மனிதன் முடிந்து விட்டதென நினைக்கும் போது
ஆரம்பமாவதும்.... ஆரம்பமாக போகிறதென நினைக்கும் போது முடிந்து போவதும்தான் வாழ்க்கை
காணொளி
வணக்கம்
பதிலளிநீக்குவாழ்க்கையின் உண்மை நினையை புரியவைத்திர்கள் ஒவ்வொரு வரிகளும் ஏதோ ஒன்றை சொல்லுகிறது போல உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குசிறந்த பகுப்பாய்வுப் பகிர்வு
பதிலளிநீக்குஎனது புதிய பதிவுகளைப் பார்வையிட
visit: http://ypvn.0hna.com/
தங்களின் கருத்துரைக்கு நன்றி ஐயா, இப்பொழுதே செல்கிறேன் தங்களது SITEக்கு.
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள சொற்றொடர்கள்.. சிந்திக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி ஐயா.
பதிலளிநீக்குநல்ல தத்துவம். கொஞ்சம் பத்தி பிரித்துப் போட்டால் படிக்க எளிதாக இருக்கும். :))))
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கு நன்றி அன்பரே... தங்களின் யோசனையை ஏற்கிறேன்.
நீக்குமுற்றுபுள்ளியோடு மேலும் சில புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே என்னும் எனக்கு பிடித்த திரையிசை பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:) அருமையா சொல்லிருகீங்க, ஆனா எதுக்கு இத்தனை கலர்ஸ்?
பதிலளிநீக்குhttp://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.html
கருத்துரைக்கு நன்றி சகோதரி, படிப்பவர்களுக்கு ஒருநிறுத்தம் கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைத்தேன், இருப்பினும் தங்களின் ஆலோசனைக்கும் நன்றி.
நீக்குஇன்றே ஓடு
பதிலளிநீக்குஇப்பொழுதே ஓடு
நிற்காமல ஓடு
முடிவு தெரியும் வரை ஓடு
வெற்றியின் தாரக மந்திரம்
அருமை நண்பரே அருமை
தவறாமல் காண்பதற்கும் நன்றி, திரு.கரந்தை ஐயா.
நீக்குமுயற்ச்சி தலைவிதியையே மாற்றிவிடும் என, ஊழையும் உப்பக்கம் காண்பர் என்னும் திருக்குறள் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநம்பிக்கையூட்டும் பதிவு.
தங்களின் முதல் வருகைக்கு நன்றி அன்பரே, எனது நம்பிக்கைக்காக எனநினைத்தேன், பிறருக்கும் நம்பிக்கையூட்டுவது சந்தோசமே.
பதிலளிநீக்குஎங்கிட்டு ஓடுவது?எப்படி ஓடுவது. இந்தச் சமூகம்தான் ஓட முடியும் என்பவர்களையும் ஓட முடியாதவர்களோடு சேர்த்து முடக்கி வைத்துள்ளதே..நண்பா!!!!
பதிலளிநீக்குநண்பா, நமது முயற்சியை 99 சதவீதம் சரியாக செய்தால் இறைவன் நமக்கு 1 சதவீதம் கண்டிப்பாக கொடுப்பான், அந்த 1 சதவீதம்தான் வெற்றியை முழுமைபடுத்தும் ஆனால் சமூகத்தில் பலரும் இறைவனிடம் எதிர்பார்ப்பது 99 சதவீதம் இதுதான் பிரட்சினைக்கு மூலகாரணம்.
பதிலளிநீக்குஒவ்வொரு வரிகளும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வரிகள்.
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே.....
பதிலளிநீக்குபசி என்பது மனிதனுக்கு மட்டுமல்ல நண்பரே..! ஏற்ற தாழ்வு தேவை என்று சிகிறீர்களா..?ஏற்ற தாழ்வு இறைவன் அமைத்த கோட்பாடா.?
பதிலளிநீக்குமனிதனின் ஏற்றத்தாழ்வுக்கு, இறைவனின் விதியமைப்பும், மனிதனின் பேராசைகளுமே மூலகாரணம் ஐயா இருப்பினும் இதன் தொடக்கம் வயிற்றுப்பசியின் மூலமே என்பதைத்தான் நான் வழியுருத்தியிருக்கிறேன் ஐயா, தங்களைப்போன்றவர்களின் கேள்விதான் என்னை இன்னும் ஆழமாக சிந்தித்து தவறின்றி எழுதவைக்கும் எனநம்புகிறேன்.... நன்றி
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குசிறப்பான வார்த்தைகள்! சிந்திக்க வைக்கும் வரிகள்!
வாழ்க்கைப் பயணத்தில் விதியின் துணையுடன் (அது துணையாக வருவதை ௬ட உணர்ந்தும், உணராமலும்) மனித உருவெடுத்த நாம் ஒவ்வொரு நாளும் வெற்றிப் பாதையை நோக்கி ஒடிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆயினும் முடிவு தெரியும் வரை,முயற்சியுடன் ஓடு! என நீங்கள சுட்டி காட்டியுள்ள தன்னம்பிக்கை வரிகளுக்கு பாராட்டுக்கள்! அருமையான பதிவு!
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோதரி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரர்
பதிலளிநீக்குமிக நேர்த்தியான கட்டுரை. இடையில் கவிதையும் கூட. நல்ல ஆழமான கருத்துக்கள் தாங்கிய பதிவு.
----------
ஒவ்வொரு வரிகளும் சீராக அமையவில்லையே ஏன் சகோதரர்? அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிகள் தொடங்குகிறதே! கவனிக்கவும்
நன்றி நண்பரே... தங்களின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றே நான் இதை எழுதி வெகுநாட்களாகி விட்டது நேற்றுதான் கவனித்தேன் எனது கவனக்குறைவே காரணம் இனியெனினும் வராதிருக்க முயற்சிப்பேன்.
பதிலளிநீக்குபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற பழைய பாடல் தங்களின் பதிவைப் படித்ததும் நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குசரியான பாடல்தான் சொன்னீர்கள் ஐயா, ஆனால் ? இதில் நான் எந்தநிலை அதுதான் எனக்கு குழப்பம்.
பதிலளிநீக்குவாழ்க்கையில் பலர் மிருகத் தனமாக ஓடிக்கொண்டே இருப்பதை சிம்பாலிக்காக சொன்னது படம்..
பதிலளிநீக்குஅருமை தோழர்
தொடர்க
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே....
நீக்குஅருமையான கவிதைக் கட்டுரை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.
நீக்குமிக அருமையான,தத்துவ தன்னம்பிக்கை பதிவு !
பதிலளிநீக்கு" நடப்பவருக்கு நாடெல்லாம் சொந்தம், படுப்பவருக்கு பாயும் பகை ! " என என் அம்மா அடிக்கடி கூறுவார்கள் ! அந்த சொல்லாடலின் நினை வருகிறது !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களது அம்மாவின் வார்த்தைக்குள் 1000 அர்த்தங்கள் உலாகின்றது பொக்கிசமான வாங்கியங்கள்... தங்களின் வாழ்த்தைவிட 100 மடங்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது... நன்றி அம்மாவுக்கு.
நீக்குமிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஓடுவோம்...கடமையைச் செய்து முடிக்க ஓடிக்கொண்டே இருப்போம். வெற்றி நம்மை எதிர்கொள்ளும்.
பாராட்டுக்குரிய பதிவு கில்லர்ஜி.
பாராட்டுக்கு நன்றி ஐயா.
நீக்குநின்ற கால் மூதேவி ,நடந்த கால் ஸ்ரீ தேவி என்பார்கள் ...ஸ்ரீ தேவியை விரும்பாதவர்களும் உண்டா?
பதிலளிநீக்குஉங்கள் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் கில்லர்ஜி!
நான் கேட்காத புதுமையான மொழியாக இருக்கிறதே.... தங்களது கருத்து எமக்கு புத்துணச்சியாக இருக்கிறது ஜீ.
நீக்குமுடிவு என எண்ணும்போது அது ஆரம்பமாக இருக்கலாம், ஆரம்பம் என நினைக்கும்போது அது முடிவாக இருக்கலாம் என்ற கருத்தை கொண்ட முடிவாரம்பம் என்ற பொருத்தமான தலைப்பை வைத்ததற்கு பாராட்டுக்கள். அருமையான கருத்தை முன் வைத்தமைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஐயா நான் தலைப்பு வைக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்பவன்.
பதிலளிநீக்குபளிச் பளிச் பளிச் அதாங்க "உண்மை"! நல்ல ஒரு பதிவு! உயிர் உள்ளவரை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி என்பதே கிடையாது கில்லர் ஜி! எதையோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்! அப்படிப்பட்ட ஒரு ஓடுதல் நல்லதை நோக்கி இருந்தால்....முற்றிப் புள்ளி என்பதே கிடையாது! தடங்கள் வந்தாலும் வெற்றிதான்!
பதிலளிநீக்குதலைப்பும் அருமை!
மனம் திறந்த பாராட்டுக்கு, மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
பதிலளிநீக்குசபாஷ் ஓட்டம், தொடும் நாட்டம் நீடிக்கும், வெற்றி கிடைக்கும்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி சகோதரி.
பதிலளிநீக்கு