தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 24, 2014

வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்.

 
நண்பா, உன் மரணத்தை நினைத்து வேதனைப்படுவதா ?
உனது இழப்பால் வாடும் குடும்பத்தை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னை இந்த நிலையில் வளர்த்து விட்ட பெற்றோரை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னால் இந்த சமூகத்தின் பெயர் அவலப்படுவதை நினைத்து வேதனைப்படுவதா ?
கல்வெட்டுகளில் பெயர் பொறித்த தமிழனின் பெயர் உன்னால் அயல் தேசங்களில் பொரிக்கப்படுவதை நினைத்து வேதனைப்படுவதா ?
இதற்க்கு காரணமானவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லையே அதை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னைப்போன்றவர்களுக்கு இன்னும் இவர்களைப்பற்றி தெரியவில்லையே அதை நினைத்து வேதனைப்படுவதா ?
 
இந்த கேள்விகளெல்லாம் உன்னிடமல்ல உன்தலைக்குமேல் தொங்கிகொண்டிருக்கும் வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளுக்காகவும், இனியெனினும் எவனும் இந்தசெயல்களை செய்யக்கூடாது என்பதற்காகவும். இருப்பினும் உனது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் காரணம் நீ என்இன தமிழனடா....


32 கருத்துகள்:

 1. வேறென்ன செய்யமுடியும் ? நண்பரே.....

  பதிலளிநீக்கு
 2. நடிகனுக்காக முட்டாள்தனமாக உயிரைவிடும் இவனை எல்லாம் தமிழன் என்று பெருமைபடுத்தாதீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இவணை பெருமை படுத்தவில்லை நண்பரே... தமிழர்களை சிறுமை படுத்துகிறானே.... என்பதுதான் என்வேதனை.

   நீக்கு
 3. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரங்கல் இனி இந்த குடும்த்திற்க்கு பிரயோசனம் இல்லை ஆனால் ? அடுத்தொரு தமிழன் மறுபடியும் தங்களை இரங்கல் தெரிவிக்கவிடாமல் இருந்தால் ? எனக்கு சந்தோசமே...

   நீக்கு
 4. //உன்னைப் போன்றவர்களுக்கு இன்னும் இவர்களை பற்றி தெரியவில்லையே. //" .

  சுடும் உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு சுடாது நண்பரே... இருப்பினும் சுடவேண்டியவர்களுக்கு சுட்டால் நல்லது தான் வீட்டுக்கும், நாட்டுக்கும்.

   நீக்கு
 5. இரங்கல் கூட இப்படி அழகான கவித்துவத்தில் எழுத முடியுமா? வேதனையிலும் தங்கள் எழுத்து மிளிர்கின்றது!

  அவருக்கு என்ன சொல்லுவது இந்த முட்டள்தனமான முடிவிற்கு? கோபம்தான் வருகின்றது இது போன்ற இளைஞர்களை நினைக்கும் போது! ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? தாம் எதற்காகப் பிறந்திருக்கின்றோம்? யாருக்காக வாழ்கின்றோம்? பண்பட்ட மனதில்லாமல் வாழும் இது போன்ற இளைஞர்களை நினைக்கும் போது ஒரு புறம் கோபம், மறுபுறம் வேதனை....

  என்னயா இது நாம் எந்த உலகத்தில் வாழ்கின்றோம்? உயிர் என்ன அவ்வளவு மலிவாகிவிட்டதா?!! என்ன காரணமோ? சரி என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! மறத்தமிழன் கோழையாகிக் கொண்டிருக்கின்றானோ?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துரையின் கடைசி வார்த்தை உண்மையாகி விடுமோ ? என்பதுதான் எனது வேதனை. ஐயா, தங்களின் கருத்தரை எனக்கு ஒரு நல்லவிசயத்தை எழுதக்கூடிய ''கரு''வை கொடுத்துள்ளது அதறிக்கு மட்டும் எமது நன்றி.

   நீக்கு
 6. இந்த தற்கொலை சிந்தனைக்கு காரணம் சமூகம்தான்.

  பதிலளிநீக்கு
 7. இந்த தற்கொலைக்கு காரணம் சமூகம்னா ? முதல் குற்றவாளி நீங்களும், நானும்தான், நண்பரே... நாங்க சமூகத்தை திருத்தப்போறோம்னு சொல்லிக்கிட்டு கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யிறவனை தடுக்கப்போனால் ? அந்தப்பால் நமக்குத்தான் தெரியுமா ? இப்பச்சொல்லுங்க சமூகமா காரணம் ? இறைவன் தங்களுக்கும், எனக்கும் கொடுத்த அறிவைத்தானே ? அவனுக்கும் கொடுத்தான், என்ன, ஒண்ணு நம்மவிட்டு அசையுது அவனது அசையலை.

  பதிலளிநீக்கு
 8. இவர்களுக்கு, சினிமா நடிகர்களையும் நடிகைகளையும்தான் தெரியும். பொழுதுபோக்காகக்கூடப் பொது அறிவை வளர்க்கும் நூல்களைப் படிப்பதில்லை.

  இவர்களுடைய குடும்பச் சூழலும் இவர்களைத் திருந்த அனுமதிப்பதில்லை.

  இம்மாதிரியான சமூக அவலங்களை அரசுகளும் கண்டுகொள்வதில்லை. சீர்திருத்தும் அமைப்புகளும் நம் நாட்டில் மிக மிகக் குறைவு.

  நினைத்து வருத்தப்படுவதைத் தவிர நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லை.

  பயனுள்ள மிக நல்ல பதிவு கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 9. அரசு செய்யும் என எப்படி ஐயா எதிர்பார்ப்பது, இந்தமாதிரி பூச்சிகளை வைத்துதான் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வலைகளை பிண்ணுகிறார்கள்.
  தங்களின் ஆழ்ந்த கருத்துரைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 10. என்று தணியும் இந்த திரைப்பட மோகம் என எண்ணத் தோன்றுகிறது இது போன்ற தகவல்களை கேட்க நேரிடும்போது. ஒரு திரைப்பட நடிகருக்காக உயிரை விட்ட அந்த இளைஞனை நினைத்து பரிதாபப்படுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

  உங்கள் கவிதை மனதைத் தொட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது, வேதனையான விசயமாயினும்... தங்களின் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஐயா.

   நீக்கு
 11. நடிகர்கள் தாய் தந்தை பெருமையினை பாடல் பாடுவதோடு முடித்துக் கொள்கிறார்கள் ,அதை ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாய் ஏதும் செய்வதாக தெரியவில்லை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் பகவான்ஜீ தங்களது கருத்தும். சரியானதே...

   நீக்கு
 12. நானும் கூட என் மாணவர்களிடம் இவர்கள் பற்றி கூறுவேன். இவர்களை திருத்தவே முடியாதா சகோ:((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியாது சகோதரி...
   அன்று படிக்காதவர்கள் ''கல்''லுக்கு பாலாபிஷேகம் செய்ததை தவறென்றவர்கள்....
   இன்று படித்தவர்கள் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வதை தவறென்று சொல்லமுடியாது சொன்னால் ? இந்தப்பால் சொன்னவனுக்கே...

   நீக்கு
 13. இந்த இளைஞனால் சமூகத்தின் பெயர் களங்கப்படவில்லை நண்பரே ! இவனின் இந்த முடிவுக்கே நம் சமூகம் தான் காரணம் !

  சூப்பர் ஸ்டார்களையும், தலைகளையும், தளபதிகளையும் தனிமனித வழிப்படும் அடிமைகளாய் நம் இளைஞர்களை வளர்த்ததில் இந்த சமூகத்துக்கும், அதன் கலாச்சார தூண்களாய் சுய பிரகடனம் செய்து கொண்ட ஊடங்கங்களுக்கும் உங்களிடமிருக்கும் கேள்வி என்ன ?

  சம்பாதித்த கோடிகளை பதுக்கிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை உப்பரிகை தரிசணம் தந்து சில லட்சங்களை " சமூக சேவைக்கு " பிச்சை போட்டு, அந்த பிச்சையிலும் அரசியல் எதிர்காலத்தை அறுவடை செய்ய கனவு காணும் இவர்களை, நம்மை ரட்சிக்க வராது வந்த மாமணிகளாய் எண்ணி நாம் ஏமாறும் வரை...

  மன்னிக்கவும், இது போன்ற தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே நீங்கள் ஏமாற்றுபவனை அயோக்கியன் என்கிறீர்கள்... நான் ஏமாறுபவனை முட்டாள் என்கிறேன்.
   ஏமாற்றுபவன் அயோக்கியன், ஏமாறுபவன் அப்பாவி இது 1950
   ஏமாற்றுபவன் அறிவாளி, ஏமாறுபவன் முட்டாள் இது 2014
   மேலும் விளக்கம் - மேலே நண்பர் வலிப்போக்கனுக்கு கொடுத்துள்ளேன்.
   குறிப்பு-தங்களின் கோபமான கேள்வியை மனதார ரசிக்கிறேன், காரணம் நீர் தமிழன்.... என்னைப்போல...

   நீக்கு
 14. சிறார்களையும் இளைஞ்சர்களையும் இப்படி முடிவெடுக்க வைக்கும் அளவுக்கு சினிமாவின் தாக்கம் தமிழனிடம் அதிகமாகவே இருக்கிறது..
  ஊடகம் சினிமாவை மிக மோசமான நிலையில் இவர்களிடத்தில் கொண்டு சேக்கிறது...
  என்ன இருந்தாலும் சுய புத்தி வேணும்னு சொல்றீங்களா?
  இது நமக்கான சாபக்கேடு ......வேறு சொல்வதற்கில்லை

  பதிலளிநீக்கு
 15. நாம் ஏமாந்து விட்டு அவன் ஏமாற்றி விட்டான், என்பதை ஏற்றுக்கொள்வற்கில்லை நண்பரே....

  பதிலளிநீக்கு
 16. கில்லர் தலைப்பும்
  படைப்பும்
  செமை...
  வாழ்த்துக்கள்
  தலைப்பு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படலாம் ..
  www.malartharu.org

  பதிலளிநீக்கு
 17. வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள் - துயரமாகவும், கோபமாகவும் வருகிறது என்ன செய்ய..?
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. துயரப்படவேண்டிய அவசியமில்லை, சகோதரி.
  கோபத்தால் மட்டுமே மாற்றம் காணமுடியும்.
  இந்தமாதிரி விசயங்களை.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  தமிழன் என்பதால் இரக்கம் வருந்தனே நண்பா.. அதனால் ஆழ்ந்த அனுதாபங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. இனியும் ஒருதமிழன் நமக்கு இந்தநிலையை கொடுக்காதிருந்தால் சந்தோஷமே...

  பதிலளிநீக்கு