You Want See Big size ?
Just Click One Time Photo Inside
நண்பரும்,
அவரின் மனைவியும்.
நடை நல்லாயிருக்கு என்ற தில்லை
அகத்தாருக்கு...
தம்பியுடன்,
நான்.
போயஸ்
கார்டன் அல்ல...
பெர்லின் சுவர்.
பெரிலின்
ஹோட்டலில்.
ஜெர்மனியை காண, ஆறு மாதத்திற்கு முன்பே முயற்சித்தேன் திட்டத்தில்
குழறுபடியும், செயல்பாட்டில் தவறுகளும் நிகழ்ந்ததால், தோல்வி என்னை
தழுவிக் கொண்டது, வெற்றி வாய்ப்பு நழுவி கொண்டது, நான் என்ன தவறு செய்து விட்டேன்,
எனது செலவில் ஜெர்மனியை காண ஆசைப்பட்டது தவறா ?
இந்த தோல்வியால், என் முகத்திற்கு முன்னால்
பல் இளித்து பேசியவர்கள், முதுகுக்கு பின்னால் சொல் இழித்து பேசியது, என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே... இருந்ததால், என் இதயம் வலித்துக் கொண்டே... இருந்தது, இருப்பினும் மனம் சலித்து விடவில்லை, ஆறு மாதம் கழித்து முயற்சித்தேன் என்கனவு
பலித்து விட்டது.
வரலாறு படித்தது பெயர்கூட ஞாபகம் உள்ளது, கஜினி முஹம்மது 16 முறை படையெடுத்து
தோற்றும் 17 வதுமுறை வெற்றி
பெறவில்லையா ?
இதனால் நான் மனம் தளர்ந்து விடவில்லை,
ஏனெனில் யாரோ ஒருவர் எனக்காகவே எழுதியதைப்போல் இருக்கும் கீழ்காணும் தத்துவம்
ஒன்று என் மனக்கண்ணில் அவ்வப்போது வந்துபோகும்.
எனினும் நான் ஜெர்மனி போவதை எனது நண்பனுக்கு தொலைபேசி மூலம்
அழைத்து சொன்னேன், அதற்கு அவன் சொன்ன பதில் கேட்டு, ஒரு கணம் என் கண்கள் கலங்கி
விட்டது, இப்படியும் ஒரு மனிதனா ? ஆம் என்
நிழலைப்போல் தொடந்து வரும் நண்பன் சொன்னது,
நல்லபடியா
போயிட்டு வா ! இந்த வகையிலாவது உனக்கு சந்தோஷம் கிடைக்கட்டும்,
வாழ்த்துக்கள்.
இப்படி சொல்வதற்கு எவ்வளவு உயந்த மனம் வேண்டும் இறைவன்
எனக்கு கூட இப்படியொரு மனதை கொடுக்கவில்லையே ! அவன்
நிழலுக்குகூட மரியாதை கொடுக்க தோன்றியது,
வெற்றி என்பது
சந்தோஷம் என்ற ஒன்றை மட்டுமே ! கொடுக்கும், ஆனால் தோல்வியோ, தோல்வியையும், அனுபவம் என்ற
மற்றொன்டையும் கொடுக்கும்
ஏன் வெற்றி அனுபவத்தை கொடுக்காதா ? எனக்கேட்கலாம், வெற்றி பெற்ற சந்தோஷத்தில்
அனுபவம் கண்ணை மறைத்து விடும்,
மறைந்திருந்த அகம்பாவம் கண்ணுக்குத் தெரியாமல், மனதை தொட்டு விடும்,
தோல்வியோ காரணத்தை ஆராய்ந்து தேடத்துவங்கி விடும்.
இனி எனது தொலைதூர பயணங்கள் முடிவதில்லை அதற்கு
இதுவொரு பிள்ளையார் சுழியே !
I'm going to Germany Help to me Reason….
01. This World Manager
02. U.A.E, Pension Authority & Etihad
Airways
03. Germany, Mr. Mohanraj Kalanjiam (from
Indian, Cbe)
04. Germany, BOSCH Company
05. Abu Dhabi, Miss. Asma Al Zaabi (from
U.A.E)
06. Abu Dhabi, Mr. Solairaj Murukesan (from
Indian, Pmk)
07. Abu Dhabi, Mr. Ahmed Jumma Abu marzok
(from Palestinian)
08. Abu Dhabi, Mr. Rabeek Raja (from
Indian, Mud)
09. Abu Dhabi, Mr. Velu Manikkam (from
Indian, Dvk)
10. Abu Dhabi, Mr. Udayar Karuppuraja (from
Indian, Rsm)
11. Abu Dhabi, Mr. Ronald Linsangan (from
Philippines)
And one more Special Thanks to Mr. Solairaj
Murukesan Paramakudi.
எனது
நன்றிக்குறிய இவர்களை சரியான முறையில், வரிசைபடுத்தி இருக்கிறேன் என
ஆத்மார்த்தமாய் நினைக்கிறேன்.
You Want See Big size ? Just Click One
Time Photo Inside.
பழ ஆடு.
சாண்ட்விச் சக்கையாகிறது...
ஜூவில், காண்டா மிருகத்தை கண்டபோது...
பழக்
கண்காட்சியில்...
போட்’’டில் போகாதபோது எடுத்தது.
விசித்திரமான தூண்கள்.
நண்பர்கள்...
பாம்பே ரெஸ்டாரண்ட்
வாடகைக்கு எடுத்த
பென்ஸ் கார்.
பென்ஸ் மியூசியம்
மேலும்
புகைப்படங்கள், காணொளி அடுத்த பதிவில்...
ஆகா.. அழகோவியமாகப் படங்கள்..
பதிலளிநீக்குதாங்கள் ஜெர்மனியின் அழகினை எல்லாம் கவர்ந்து வந்து விட்டீர்களோ!?..
அதென்ன!...
வலைச் சிங்கத்தைக் கண்டதும் - அந்த
வனச் சிங்கம் வாலைச்சுருட்டிக் கிடக்கின்றது!..
வாழ்க வளமுடன்!..
நண்பரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குஜேர்மன் சுற்றுலா
பதிலளிநீக்குகலகல் படங்கள்
பயண முயற்சி
தத்துவ விளக்கம்
சிறந்த பதிவு
தொடருங்கள்
நண்பரின் வருகைக்கு நன்றி படங்கள் மேலும் வரும் அன்பரே....
நீக்குவிழுவது எழுவதற்கே என்று தெரிந்துகொண்டவர் நீங்கள் பெர்லின் சுவரைஇடித்து விட்டதாகப் படித்ததெல்லாம்.....?எங்கிருந்தாலும் அடையாளம் காட்டும் கில்லர்ஜியின் தொப்பி.....! நினைத்து மகிழ ஒரு பயணம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஐயாவின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி பெர்லின் சுவரைப்பற்றி பார்ட் - 2 வில் எழுதுகிறேன் ஐயா நன்றி.
நீக்குஅனைத்துப் படங்களும் அருமை நண்பரே. அதுவும் அந்த விசித்திரமான தூண்கள் சூப்பர்.
பதிலளிநீக்குதோல்வி தானே வெற்றிக்கு படிக்கட்டு. அந்த வட்டத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன
வருக நண்பர் சரோஜ் நாராயணசாமி அவர்களே.... ஆம் அந்த தூண்கள் பூமியில்தான் இருக்கிறது ஆனால் நாம் சமமாக நிற்கவும் முடியாது பார்க்கவும் முடியாது புதுமையாக எழுப்பி இருக்கிறார்கள் சுமார் 50 தூண்கள் இருக்கலாம் அது மியூசியம் வருகைக்கு நன்றி.படங்கள் இன்னும் வரும்....
நீக்குஎதோ வானொலியில் பேசியதற்காக எதுக்கு சரோஜ் நாராயண சுவாமியை கேவலப்படுத்துகிறீர்கள்?
நீக்குஹலோ உண்மையானவரே.... உண்மையிலேயே உங்கள் குரல் கணீர் என்றுதான் இருந்தது என்ற உண்மையை இங்கு பதிவு செய்கிறேன் இது உண்மையா ? இல்லை உண்மைக்கு எதிரானதா ? அப்படீங்கிற உண்மையான பதிலை தில்லை அகத்தார் வந்து சொல்வாங்க....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அழகு பார்த்தவுடன் நானும் சென்று வந்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி ரூபன்.
நீக்குஆஹா ! என்னையும் ஜெர்மனிக்கு போகவச்சிடுவிங்க போல இருக்கே ! உங்களோட போட்டோஸ் எல்லாம் பார்த்தா அடுத்த ப்ளைட்டே பிடிச்சி கிளம்பனும்னு தோணுது அண்ணே !!
பதிலளிநீக்குஅப்பறம் ஒரு சின்ன திருத்தம் . கஜினி முகமது 16 முறை படையெடுத்து தோல்வியெல்லாம் அடையல . அவன் முயற்சி பண்ணது சோமசுந்தர் ஆலயத்த தான் . ஆனா , ஒவ்வொரு முறை படையெடுக்கும்போதும் அவனுக்கு நினைச்சத விட அதிகமான பொருட்கள் வழியில இருந்த ஊர்கள்ல கெடச்சது . அதையெல்லாம் கொள்ளையடிச்சிட்டு ஊருக்கு போறது. நல்லா செலவு பன்றது , மறுபடியும் ஒரு ஊருக்கு வந்து கொள்ளையடிக்கறதுனு இந்த மாதிரியே இருந்தான் . கடைசியில தான் அதையெல்லாம் மறந்து நேரா அந்த கோவிலுக்கு , 100000 மக்கள கொன்னு , கொள்ளையடிச்சான் .
வாங்க நண்பா, ஜொர்மனிக்கு போங்க நண்பா,
நீக்குமுயற்சிக்கு உதாரணமாக எல்லோரும் சொல்றாகளேனு நானும் சொல்லிட்டேன் நமக்கு இந்த வரலாறு, புவியியல் எல்லாம் சரியாத்தெரியாது நண்பா, ரெண்டாவது எனக்கு கஜினி முகமதுவும் சரியாப் பழக்கம் இல்லாத காரணத்தால கூடுதல் விபரமும் பத்தலை, உண்மையிலேயே தாங்கள் சொல்லித்தான் எனக்கு இந்த விபரங்கள் தெரிந்து கொண்டேன் அதற்காக எனது நன்றிகள் காரணம் ஒரு பதிவு எழுத 'ஸூப்பர் க்ளு' கொடுத்துட்டீங்க...
சரி, கொன்றது ஒரு லட்சம் மக்களா ? அடப்பாவமே….
கஜினியோட மொத்தக்கொலைகள்ணு பார்த்தா 10 லட்சம் தாண்டும்னு வரலாற்றாசிரியர்கள் சொல்றாங்க அண்ணே ! அவரு ஒரு கொள்ளையர் தான் . மன்னர்லாம் கிடையாது . அவரோட முழுமுதற் குறிக்கோள் கொள்ளை மற்றும் கொலை தான் . முடிஞ்சா அவரோட வாழ்க்கை வரலாறு பத்தின கட்டுரைகள் படிச்சுப்பாருங்க . தமிழ்ல வந்தார்கள் வென்றார்கள் அப்படிங்ற புத்தகம் இதப்பத்தி அருமையா விவரிச்சிருக்கும் . ஆங்கிலத்துல எக்கச்சக்கமான வரலாற்று புத்தகங்கள் இருக்குணா !
நீக்குதம +
வணக்கம் நண்பரே கூடுதல் விளக்கவுரைக்கு மீண்டும் நன்றி அவர் மன்னர் இல்லை 80 மட்டும் நான் அறிந்த விசயமே...
நீக்குஇப்பொழுது ஞாபகம் வருகிறது நண்பரே, பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு இதே அபுதாபியில்தான் //வந்தார்கள் வென்றார்கள்// என்ற நூலை ஒருவன் படித்துக்கொண்டிருந்தவன் அதைப்பற்றி பிரமாதமாக, பிரமாண்டமாக என்னிடம் பேசினான் இதில் எனக்கு உடன்பாடு இல்லை இருவருக்கும் கருத்து வேறுபாடாகி சண்டை வந்து விட்டது நூல் அவனுடையது என்பதால் முடிவில் எனக்கு படிக்கத்தர மறுத்தும் விட்டான் இப்பொழுது தாங்கள் சொல்வதைப் பார்க்கும்போது அதை தவற விட்டு விட்டேனே என்ற ஆதங்கமே வருகிறது பரவாயில்லை அதை வாங்க முயற்சிப்பேன் தகவலுக்கு நன்றி.
;-)
நீக்குஅழகிய படங்களுடன் பகிர்வு அருமை! அந்தந்த இடங்களை பற்றி சிறிது விவரித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கு நண்றி நண்பரே... பார்ட் 2 வில் கூடுதல் விபரங்கள் தருகிறேன்.
நீக்குஅழகிய படங்கள்... தாங்கள் ஜெர்மனி செல்ல உதவியவர்களுக்கு நன்றிகள் என ஒரு மலர்க்கொத்தாய் பகிர்வு...
பதிலளிநீக்குஅடுத்த பகிர்வுக்காய் வெயிட்டிங்...
ஆம் நண்பரே... ஒரு நன்றியுரையும் கூட விரைவில் வரும் அடுத்த பதிவைத் தருகிறேன்... வருகைக்கு நன்றி.
நீக்குஜெர்மனிக்கு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் நன்றி. பெர்லின் சுவரை இடித்து விட்டார்கள் அல்லவா? காண்டாமிருகம் நிஜம்தானா? [தடுப்பு சுவரே இல்லியே, எப்படி!! ] விசித்திரமான தூணில் உள்ள விசித்திரம் என்ன?
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி காண்டா மிருகம் உண்மைதான் அது சாதுவான மிருகம்தானே.... பயமில்லைய...
நீக்குபெர்வின் சுவரைப்பற்றி பார்ட் 2 வில் எழுதுகிறேன்
தூண்களைப்பற்றி.... மேலே நண்பர் திரு. சொக்கன் அவர்களுக்கு கொடுத்த பதிலைக்காணவும் நன்றி.
அருமையான கருத்துக்களுடன் பதிவு.
பதிலளிநீக்குபடிக்க மகிழ்வைத் தந்தது.
படங்களைப் பார்க்கும் போது மீண்டும் ஒரு முறை ஜெர்மனிக்குப் போக வேண்டும் என்ற ஆசை வருகிறது கில்லர் ஜி.
த.ம. 6
சகோவின் வருகைக்கு நன்றி தாங்கள் ஜெர்மனியில்தானே இருக்கிறீர்கள் ? தங்களின் தளம் திறக்க முடியவில்லையே.... ஏன் ?
நீக்குநான் பிரான்ஸில் வசிக்கிறேன் கில்லர் ஜி.
நீக்கு"ஜெர்மனியில் செந்தேன் நிலவே" தமிழ் சினிமா பாடலை
பதிலளிநீக்குநண்பரே உமக்கு டெடிகேட் செய்கிறேன்.
"ஜெர்மனியில் செந்தேன் நிலவே" தமிழ் சினிமா பாடலை
நண்பரே உமக்கு டெடிகேட் செய்கிறேன்
ஜெர்மனியின் செந்தேன் -- Germaniyin Sendhaen
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்
(ஜெர்மனியின்)
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தேன்
(சித்திரமே..)
பூஞ்சோலையே பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்
லா ல வா வா வா
குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா வா வா
எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் ப ப ப ப பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்
(ஜெர்மனியின்)
பேரின்பமே என்றாலென்ன அதை
நீ என்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா அதை
நீ என்னிடம் தந்தாலென்ன
லா ல லா வா வா
எனை அணைத்தே கதை சொல்ல
லா ல லா வா வா
அதைச் சொல்வேன் சுவையாக
வெகு நாளாக ஆசை ர ப ப ப பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
(சித்திரமே)
(ஜெர்மனியின்)
.
எப்போது அய்யா "பிரான்சு" வருவதாக வருவதாக உள்ளீர்கள்?
வாருங்கள் நண்பரே! வருகை தாருங்கள்!
அடுத்த சுற்றுலா பதிவு இதுவாக இருக்கட்டுமே!
நட்புடன்,
புதுவை வேலு
நண்பரே,,, இந்தப்பாடலை அடுத்த பார்ட் 2 வில் இணைத்திருக்கிறேன் கண்டிப்பாக காணவும் மேலும் 2014 ஆகஸ்ட மாத FANTASTIC FRANCE பதிவு காணவும் முழுமையான பாடலுக்கு நன்றி.
நீக்குசுருக்கமான, சுவையான ஒரு தொடக்க உரை. அடுத்தடுத்து நெஞ்சைக் கவரும் படங்கள்.
பதிலளிநீக்குஉலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வமும், அழகழகாய்ப் படம் எடுப்பதில் நிபுணத்துவமும், பதிவு இடுவதில் படு சுறுசுறுப்பும் கொண்ட நீங்கள் ஓர் அபூர்வ மனிதர் கில்லர்ஜி.
நண்பரின் வருகைக்கு நன்றி ஆம் நண்பரே சிறுவயதிலிருந்தே எனக்கு புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு அதையும் வித்தியாசமாக எடுப்பதில் கூடுதல் ஆர்வம்.
நீக்குஉங்கள் ஜெர்மனி கனவு நனவானதை பதிவுலகமே கொண்டாடுவதில் நானும் மகிழ்கிறேன் !
பதிலளிநீக்குத ம 5
எல்லாம் பகவான் செயல் ஜி.
நீக்குபகவான்ஜி வருகை தந்து மகிழ்ந்து வாக்களித்தமைக்கு நன்றி.
ஜெர்மனியில் போயஸ் கார்டனா ..என்று வாய் திறக்க முயன்றபோது இல்லை என்று மூட வைத்துவிட்டீர்கள் நண்பரே..... இதனால்தான் தங்களை உலகம் சுற்றும் கில்லர்ஜி என்று அழைத்தது செல்லும்.
பதிலளிநீக்குநண்பா, நீங்க இப்படியெல்லாம் கேட்பீங்கனு எனக்குத்தெரியும் அதனாலதான் நானே முந்திக்கிட்டேன்.
நீக்குஅழகாக ஓஸியிலேயே நாட்டை சுற்றி காட்டியமைக்கு மிக்க நன்றிகள்....
பதிலளிநீக்குஇன்னும் சுற்றலாம் நண்பா, வாங்க....
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅருமையான படங்கள்! அசத்தல் ட்ரிப் செய்துள்ளீர்கள்!
ஆமா எப்போ இங்கு வந்து போனீர்கள்?..!
ஸ்ருட்கார்ட், பேர்லின் இன்னும் வேறு எங்கெல்லாம் போனீர்கள்?
சொல்லியிருந்தால் வந்து கண்டிருப்போமே!..:)
அருமை! வாழ்த்துக்கள் சகோ!
சகோவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி 2012 அக்டோபரில் வந்தேன் ஸ்டூட்கார்டில் தங்கினேன் தங்களிடம் சொல்லலாமென்று நினைத்தேன் தொ(ல்)லைபேசி இலக்கம் கிடைக்கவில்லை அடுத்தமுறை வரும்போது....... கண்டிப்பாக சொல்கிறேன் 80தை தெரிவித்து கொள்(ல்)கிறேன்
நீக்குதோல்விகள் தானே வெற்றிக்கு வித்து ஒருமாதிரி கனவு நனவாகி விட்டது. சரி பக்கத்தில உள்ள இடங்களையும் பார்த்து விட்டு வாருங்கள் நாங்கள் வலையில் இருந்தே இடங்களை பார்த்து ரசிக்கிறோம். ok வா சுற்றுலாவை நன்றாக என்ஜாய் பண்ண என் வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஆம் சகோ எனது வாழ்வு முழுவதும் நான் தோல்விகளை கண்டு வந்திருந்தாலும் அதை ஏற்பதற்க்கு மட்டும் என் மனம் இடம் கொடுப்பதில்லை கடைசிவரை போராடுவேன் எனது வாழ்வில் தோற்று நான் மீண்டும் முயற்சிக்காத ஒரே விசயம் எனது திருமணம் மட்டுமே....
நீக்குசுற்றுலாச் செய்திகளும் படங்களும் அருமை நண்பரே
பதிலளிநீக்குதொடர்ந்து படங்களையும் செய்திகளையும் வெளியிடுங்கள்
நண்பரின் வருகைக்கும், ரசித்தமைக்கும், நன்றி விரைவில் வரு பார்ட் 2
நீக்குதம 10
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்கு// நிழலுக்கு கூட மரியாதை //
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்தது ஜி...
புதுமையான வார்த்தைகளை தங்களைப் போன்றவர்கள் பாராட்டும் போதுதான் இன்னும் புதுமையாக எழுத வேண்டுமென்ற ஆவல் கொள்கிறேன் ஜி நன்றி
நீக்குநல்ல பதிவு வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குவிமலன் ஸாரின் வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஉலகில் பார்க்கவேண்டிய நகரங்களில் ஒன்று ஜெர்மனி. பல முயற்சிக்குப் பின் தாங்கள் சென்றீர்கள் என்பதை நினைக்கும்போது உங்களின் மன வேதனையை உணரமுடிகிறது. இப்போது எங்களையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளீர்கள். இன்னும் மன நிறைவாக இருக்கும் என நினைக்கிறேன். அழகான புகைப்படங்கள். அருமையான இடங்கள். இவற்றுக்கெல்லாம் மேல் எங்களை ஈர்க்க வைக்கும் எழுத்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கும், ரசிப்பிற்க்கும், பாராட்டுகளுக்கும் மனமாரந்த நன்றிகள் ஆம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
நீக்குஜெண்டில்மேன் எப்ப ஜேர்மனியில் லாண்ட் ஆகினீங்க.ஆரம்ப எழுத்துக்கள் அசத்தல் சகோதரரே. சிரித்ததுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறீர்கள் எழுத்தில்.
பதிலளிநீக்குவிசித்திரமான தூண்களில் வித்தியாசமான போஸ். அழகான படங்கள். நன்றி பகிர்விற்கு.
எனது பதிவையும் பிரியப்பட்டு சகித்துக்கொண்டு ரசித்த பிரியசகி அவர்களுக்கு நன்றி 2012 ல் வந்தேன் எனது ‘’போஸ்’’ க்கும், ‘’பாஸ்’’ மார்க் கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குமுதல் படத்திலிருந்து, அனைத்துப் படங்களும் நாங்கள் ஜெர்மனி சென்று சுற்றிப் பார்க்கும் கனவையும் நனவாக்கி விட்டது. அந்த அளவுக்கு, தெளிவான அழகான
படங்கள் கண்களையும் மனதினையும் நிறைவு செய்து விட்டன.
பிரம்மாண்டமான தூண்களின் விபரங்கள் அதிசயக்க வைத்தன...
பழ ஆடு நிஜமான ஆட்டின் பிரதிபலிப்பு..
சாதுவான விலங்குகள் ஆச்சரியப் படுத்துகின்றன...
கடைசிப் படம் சிலை (தங்களுடன் நிற்பது )என்பதை நம்ப மனம் மறுக்கிறது..
வெற்றி, தோல்வியைப் பற்றி தாங்கள் ஆராய்ந்து அளித்த விமர்சனம், உண்மையிலேயே வெகுச் சிறப்பு.! மனதில் ஆழமாக பதிந்தது . நன்றி!
மொத்தத்தில் ஜெர்மன் பயணம் உற்சாகமாக இருந்தது.அடுத்த பார்ட்டையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். தங்கள் இனிமையான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரியின் வருகைக்கும் நீண்ட விஸ்தாரமான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் வெற்றி-தோல்வி பற்றி எனது அனுபவத்தைதான் எழுதினேன் பிறருக்கு வேறு படலாம் பார்ட் 2 விரைவில் வரும் நன்றி.
நீக்குஅனுபவம் பலவிதம் உங்களுக்கு.. ஒளிப்படங்கள் அற்புதமாக வந்திருக்கிறது..
பதிலளிநீக்குநன்றி மறப்பது நன்றன்று என சும்மாவா சொல்லிருக்காங்க...
ஆம் நண்பரே இது நன்றி கூறலும் என்றும் எடுத்துக்கொள்ளலாம் நண்பரின் வருகைக்கும், பாராட்டிற்க்கும் நன்றி.
நீக்குகிழக்கும் மேற்கும் சேர்ந்து பெர்லின் சுவரை இடித்துவிட்டதாக செய்தி.... ஆனால் படத்தில் பெர்லின் சுவர் அச்சு குலையாமல் இருக்கிறதே.....????
பதிலளிநீக்குநண்பரே பார்ட் 2 வில் அனைத்து விளக்கமும் தருகிறேன்
நீக்குஜெர்மனியில் கில்லர் ஜி!
பதிலளிநீக்குநீங்க ஜெர்மனி சுவரை உடைத்து இரு ஜெர்மனிக்களையும் சேர்த்து உறவாட வைத்து பஞ்சாயத்து பண்ணத்தானே போனீங்க?! சொல்லுங்க உண்மைய....
அங்க போயிட்டு மார்தட்டி நான் அதுக்குத்தானே வந்தேன் நானும் சிங்கம் டா! ஷேர்! ஷேர் கா பத்தர்! அப்படினு வீர வசனம் பேசி அந்தச் சிங்கத்துக்கு பக்கத்துல நின்னு ஃபோட்டோ வேறயா.....
அருமையான ஃபோட்டோக்கள்! எல்லாமே அழகு. உங்க ந்டை சூப்பர்தாங்க. நடையா இது நடையா....
தடங்கல் வந்த போது அசராது 18 தடவ கஜனி போர் தொடுத்தது போல எப்படியோ போயிட்டு வந்துட்டீங்க....சூஊஊஊஊஊஊப்பர்!!
நான் எதற்க்கு ஜெர்மனி போனேன் என்று ஓரளவு சொல்லிட்டீங்க.... இருந்தாலும் பார்ட் 2 வில் எல்லா விபரங்களும் சொல்றேன் போட்டோவை ரசித்து விட்டு இதுதான் சாக்கு என்று வாக்கு அளிக்காமல் போனதற்க்கும் நன்றி.
நீக்குபெரியப்பு.....எப்படி...? ஜெர்மனிக்கு........பாஸ்போர்ட்...இல்லாமல்....???
பதிலளிநீக்குகடத்தி கொண்டு போகும்போது பாஸ்போர்ட் எதற்க்கு ?
நீக்குநண்பர் கில்லர்ஜீக்கு,
பதிலளிநீக்குபதிவுலகில் சிங்க நடை போடும் நீவீர் ஜெர்மனியில் பூனை நடை(cat walk ) போடுவது பார்க்க அழகு.
நான் பார்த்த ஜெர்மனியும் நீங்கள் காட்டிய ஜெர்மனியும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கின்றது.
மேலும் காட்சிகளை காண காத்திருக்கிறேன்.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட காலத்தில் காதலிக்கு எழுதினானாம் ஒருவன்(??),"பெர்லின் சுவரே இடிந்து போனது நம் இருவருக்கும் இடையில் உன் அப்பன் எம்மாத்ரம்?"
நட்புடன்.
கோ.
வருக நண்பரே, என்னை சிங்கமென்றும், பூனையென்றும் சொல்லி ஆறறிவிலிருந்து.... ஐந்தறிவுக்கு தள்ளிய தங்களின் சூட்சுமம் புரிந்து விட்டது நண்பரே...
நீக்குபார்ட் 2 விரைவில் வரும்
பெர்லின் சுவரைப்பற்றி இன்னும் எழுதுகிறேன்
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
அழகான படங்கள் . 'ஜெர்மனியின் செந்தேன் மழையே' என்ற பாடல் நினைவுக்கு வந்தது சகோ. தாங்கள் பதிவிட்டது எனக்கு தெரியவில்லை . ஆதலால் தாமதம் மன்னிக்கவும்.
பதிலளிநீக்குவருக சகோ அடுத்த பார்ட்டில் அந்தப் பாடலும் வரும் தங்களின் டேஷ்போர்டில் எனது பதிவு வந்து இருக்குமே......
நீக்குஜெர்மனி மேல் எனக்கு ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு ஏனெனில் எனது மகன் அங்குதான் Aachen இல் தானியங்கி பொறியியலில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். புகைப்படங்கள் அருமை. அதைவிட அருமை அதற்கு கொடுத்துள்ள விளக்கங்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிரு சோலைராஜ் முருகேசன் Pmk என்றதும் நான் நம்மூர் பாமக வைப்பற்றி சொல்லுகிறீர்கள் என நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அது பரமக்குடிக்கு நீங்கள் சூட்டிய செல்லப்பெயர் என்று. காத்திருக்கிறேன் காணொளியையும் மற்ற புகைப்படங்களையும் காண.
நண்பரின் வருகையும், கருத்துரையும் கண்டேன் தங்களின் மகன் அங்கு படித்தது அறிந்து சந்தோஷமே...
நீக்குநம்மூரில் சொல்லும் வார்த்தையைத்தான் பயன் படுத்தினேன்
CBE கோயமுத்தூர்
PMK பரமக்குடி
MDU மதுரை
DVK தேவகோட்டை
RSM ராஜசிங்க மங்களம்
இதுதான் நண்பரே.. என்னைக்கொண்டு போய் சாக்கடையில் தள்ளி விட்டீர்களே.. அதற்க்கு கோடரியை எடுத்து என்மீது ஒருபோடு போட்டிருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன்.
பார்ட் 2 விரைவில் வரும் நண்பரே.. நன்றி.
சகோவின் மகிழ்ச்சியில் நாங்களும் மகிழ்ந்தோம் அடுத்தபதிவை
பதிலளிநீக்குகாணஆவலுடன் நானும்.
நன்றி சகோ பார்ட் 2 விரைவில் வரும்....
நீக்குஜெர்மினியில்..காக்கா------ அட..நம்மூரு காக்கா..மாதிரியே இருக்கு....???
பதிலளிநீக்குஆமா அப்பா நம்மூருக்காரராம்.
நீக்குஇனிமையான ஜெர்மனியை கண்டோம் உங்கள் புகைப்படங்கள் வாயிலாக....
பதிலளிநீக்குமுயன்றால் முடியாதது இல்லை...என்று காட்டி விட்டீர்கள் சகோ.
அனைத்தையும் படிக்கட்டுக்களாய் கடந்து செல்கிறீர்கள்....அடுத்த பதிவிற்கு ஆவலாய்...நன்றி
விரைவில் வருகிறது பார்ட் - 2
நீக்குவருகைக்கு நன்றி
தம - +1
பதிலளிநீக்குநன்றி சகோதரி.
நீக்குநல்ல பயணம் ... வாழ்த்துகள்
பதிலளிநீக்குபயணங்கள் தொடரட்டும் ................
ஐயா தருமி அவர்களின் வகுகைக்கு நன்றி.
நீக்குதொடர்புக்கு...........
பதிலளிநீக்குஇன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வர முடிந்தது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
பதிலளிநீக்குஇன்று தான் முதலாவது வாசித்தேன்-
பதிலளிநீக்குமற்றவையும் வாசிப்பேன்
படங்கள் நன்று.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கு நன்றி மேடம்.
நீக்கு