தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 30, 2015

ரத்த ஆறு


ஆண் மூட்டைப்பூச்சி-
நீ அடுத்த ரூம்ல, CHILDREN ஏரியாவா போயிட்டு சீக்கிரமா வீடு வந்துசேரு, நான் வேட்டைக்கு போயிட்டு வர்றேன்.

பெண் மூட்டைப்பூச்சி-
கவனமா போயிட்டு வாங்க நீங்களாவது, எனக்கு நிலைக்கணும் என் ஜாதகத்துக்கு எட்டாம் இப்படித்தான், முந்தா நாளு யேன் நாலாவது புருஷன் சொல்லிட்டுப் போனாரு, வேட்டைய முடிச்சுட்டு வரும் போதே, பாவிப்பய வழியிலேயே, நசுக்கிட்டானே..

ஆண் மூட்டைப்பூச்சி-
என்ன செய்யுறது, இந்தப் மனுசப்பயல்களே இப்படித்தான் ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவாங்கே... ரத்தஆறு பூமியில ஓடும் அதெல்லாம் இவங்கெ கண்ணுக்கு தெரியாது நாம குடிக்கிற ஒரு சொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு, நசுக்கிடுவாங்கே.. இந்த லட்சணத்துல சொல்றாங்கே இவங்கெளுக்கு ஆறறிவாம். ஹூம் காலக்கிரகமடா கந்தசாமின்னு போகவேண்டியதான்.

சாம்பசிவம்-
ஐயா நீங்க எப்படி மூட்டை கடிச்சா, நசுக்க மாட்டியலா ?

KILLERGEE-
இல்லை யாம் விரலால் சுண்டி விட்டு விடுவோம் பிழைத்துப் போகட்டும் என்று.

சாம்பசிவம்-
அதாவது மத்தவனை கடிக்கட்டும்னு, கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறது போல... சுண்டி விடுவோம்ன்னு சொல்றியலே சுண்டும்போது, எதுலயாவது மோதி மூஞ்சி மொகரை பேந்து செத்துப் போயிட்டா என்ன செய்வீங்கன்னு கேட்டா ? மண்டக்கனம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவன் பேரே சரியில்லையே இவனை எங்கே கடிக்கப் போகுது ?)

42 கருத்துகள்:

 1. சமூகத்திற்கு நல்ல செய்தி, ஏன்?,,,,,,,,,. முட்டைப்பூச்சிகள் வாழ்க கில்லர் ஜீ என்று சொல்வது காது கேட்குதா? இல்ல அங்கும் முட்டைப்பூச்சிகள் சங்கமமா?.இவ்ளோ நல்லவராம் நம்ம ஜீ. வாழ்க முட்டைப்பூச்சி தொண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க மூட்டைப்பூச்சி கடி தாங்க முடியாமல் தூக்கம் வராதபோது யோசிச்சது.

   நீக்கு
 2. அதானே.. மூட்டைப் பூச்சிய சுண்டி விடறதோட நம்ம வேலை முடிஞ்சது!..
  அது மூஞ்சியப் பேத்துக்கறதும் முகரையப் பேத்துக்கறதும் அதோட தலையெழுத்து!.
  வாழ்க மூட்டைப் பூச்சியின் காவலர்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாழ்க மூட்டைப்பூச்சியின் காவலர்//
   பாராட்டுறீங்களா ? ஊமைக்குத்தா ? ஒண்ணுமே புரியே... உலகத்துலே...

   நீக்கு
  2. இல்லீங்க.. ஜீ.. மெய்யாலுமே பாராட்டுதான்!..

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 3. //சாம்பசிவம்: “இவன் பேரே சரியில்லையே. இவனை எங்கே மூட்டைப்பூச்சி கடிக்கப் போவுது”//

  தனிமையில் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தபோது, “ஐயோ என்னாச்சி உங்களுக்கு? இப்படித் தனியாக் கிடந்து சிரிக்கிறீங்களே!” என்று ஓடி வந்து விசாரித்தார் என் குடும்பத் தலைவி!

  நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே, தனியாக சிரிக்ககூடாது அது தப்பான செயல்.

   நீக்கு
 4. நல்லா யோசிக்கிறீங்க
  சொல்லிச் சென்ற விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கு நன்றி தொடர்ந்தால் நலம்.

   நீக்கு
 5. ஆஹா... நம் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டையைக் கொல்லக்கூடாதுன்னு ரத்த 6 -ல சொல்விட்டீங்களே அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 6. நீங்க சுண்டி விட்ட பின்பு மூட்டைப் பூச்சி பிழைத்ததா...? என பார்த்து இருக்கீங்களா....?

  ஆஹா...கரிசனம் .....நல்ல இருக்கு நல்லா இருக்கு

  தம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கலாம் ஒருவேளை மூஞ்சி மொகரை பேந்து இருந்தால் மனசுக்கு வருத்தமாக இருக்குமே இதனால் பார்ப்பதில்லை.

   நீக்கு
 7. ஜீவகாருண்ய அமைப்பின்முக்கிய உறுப்பினரா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஐயா சின்ன போஸ்டிங் கொடுத்துட்டீங்க....

   நீக்கு
 8. "என்ன செய்யறது, இந்த மனுசப் பயல்களே இப்படித்தான்,
  ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவானுங்க!
  ரத்த ஆறு பூமியில் ஓடும், அதெல்லாம் இவங்கெ கண்ணுக்குத் தெரியாது.
  நாம குடிக்கிற ஒரு சொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு? நசுக்கிடுவாங்கே,
  இவங்களெக்கு 6 அறிவாம்"
  காலக் கொடுமை அய்யா கில்லர்ஜி!

  சமுதாயத்தை சாடும் இந்த வசனத்திற்காகவே இந்தப் பதிவு பாராட்டை அள்ளி செல்கிறது நண்பா!

  அய்யா ஒரு சிறு கேள்வி?
  மூட்டையே தூக்காத பூச்சிக்கு ஏன் நண்பா "மூட்டை பூச்சின்னு" பேர் வந்தது?

  நட்புடன்,
  புதுவை வேலு

  (எனது இன்றைய பதிவு "இலவசம் இனி வேண்டாம்" காண வாரீர்! நன்றி!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே, கருத்துரைக்கு நன்றி, நாம் தூக்குவது மூட்டை பூச்சியின் முதுகு (மூடை) போல் இருப்பதால் அப்படி அழைக்கிறார்கள் 80 என் சிற்றறிவுக்கு 8கிறது நண்பா
   இலவசக்கதை கேட்டேன் நண்பா... அருமை.

   நீக்கு
 9. உண்மைதான் நண்பரே
  சாதி மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது
  மூட்டைப் பூச்சியின் வருத்தம் நியாயமானதுதான்
  அருமை நண்பரே நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ரத்த ஆறு தான் ஓடுகிறது இவர்களை திட்ட வேண்டுமென தோன்றிட்டு நான் திட்டினால் சண்டை வருமே... ஆகவே மூட்டைப்பூச்சியை விட்டு திட்டச்சொன்னேன்.

   நீக்கு
 10. ஒரு வேளை,கில்லர்ஜி என்பதை ,கில்பக்ஜி என்று நினைத்து கடிக்காமல் இருக்கிறதோ :)
  த ம ஹெவன் (எப்பூடி உங்க பாணியிலேயே என் வோட்டு )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பகவான்ஜி உங்களுக்கு மெள்ளுவதற்க்கு அவ(ள)ல் கிடைத்து விட்டதோ...
   ஸெவன் தான் ஹெவன் ஆனதோ....

   நீக்கு
 11. மூட்டைப்பூச்சி அங்கேயுமா........????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பிளைட்ல வந்ததுதான் நண்பா,,,

   நீக்கு
 12. ஹை ஜி மூட்டைப் பூச்சிக்குள்ளே சாதி க்குச் சண்டை போடும் மனுஷனோட சாதி இல்லா ரத்த ஆற்றை புகுத்தி அருமையா சொல்லிருக்கீங்க ஜி!!!!

  அது சரி உங்களை மூட்டைப் பூச்சி கடிக்காதோ?! வளக்கறீங்களோ? ம்ம்ம் கில்லர் ல நசுக்கிடுவாரோனு பயந்து உங்களக் கடிக்கல போல...ம்ம்ம்ம்

  சூப்பர் வித்தியாசமான சிந்தனைப் பதிவு நண்பரே!

  ம்ம்ம் இன்னிக்கு எங்க பதிவு கூட சாதிப் பதிவுதான் ஜி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க வருகைக்கு நன்றி மூட்டைகடி தாங்காமல்தான் ஓட்டுப்போடாமல் ஓடிட்டீங்களோ...

   நீக்கு
 13. "காலக்கிரகமடா கந்தசாமி"
  போற போக்கில என்னை ஏன் சார் வம்புக்கு இழுக்கறீங்க? நான்தான் இந்த வம்பெல்லாம் வேண்டாமுன்னு கமென்ட் பாக்சையே மூடி வச்சிருக்கேனே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா தயவு செய்து தப்பாக நினைச்சிடாதீங்க உங்களுக்கே தரியும் இது எல்லோரும் உபயோகப்படுத்தும் பழஞ்சொல் நான் அடிக்கடி உபயோகப்படுத்துவேன், மேலும் 2010 ல் யாருமே படிக்காத நான் போட்ட பதிவு இது
   நான் நிறைய பதிவுகளில் இந்த வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்
   மேலும் //கந்தசாமி// என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை பதிவு எழுதி வைத்துள்ளேன் தலைப்பு பொருத்தமானதுதான் 80 தாங்கள் படித்துப் பார்க்கும்போது புரியும். நன்றி

   நீக்கு
 14. இன்னும் சில வரிகளை உங்கள் பாணியில் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நான் என்ன செய்வது ரெண்டு மூட்டைப்பூச்சிகள் வேட்டைக்கு போகிற அவசரத்தில் பேசியதை ஒட்டுக்கேட்டேன் இழ்வளவுதான் அடுத்த முறை கூடுதலாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 15. ரத்த 6 - சரியாகச் சொல்லி இருக்கீங்க ஜி.

  மூட்டைப் பூச்சி மேல் இருக்கும் பாசம் பிரமிக்க வைக்கிறது! :)

  த.ம. நவரத்தினம் - உங்கள் பாணியிலே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட் சார் மூட்டைப்பூச்சி பாதமே பிரமிக்க வைக்கிறதா ? அடுத்து //கொசு// மீது நான் வைத்திருக்கும் பாசம் தெரிந்தால் ? என்ன ? செய்வீர்கள் வருகைக்கும், நவரத்தினத்தை ஜொலிக்க விட்டமைக்கும் நன்றி.

   நீக்கு
 16. ஒரு கன்னத்தில அடிச்சா.... மறுகன்னத்த காட்டுன்னு அப்பவே ஒருத்தரு சொல்லி வச்சாரு... அத இப்ப இவரு நடை முறை படுத்துறாரு.. ஒரு பக்கம் கடிச்சா... அடுத்தப் பக்கம் கடின்னு..என்னே பறந்த ....உள்ளம்.

  பதிலளிநீக்கு
 17. நகைச்சுவையாய் இருந்தாலும் உள்ளே கருத்தும் இருக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... நன்றி வாக்கிற்க்கும், கருத்துரைக்கும்.

   நீக்கு
 18. வணக்கம் சகோதரரே.!

  தங்கள் பதிவுகள் அனைத்தும் படித்து கொண்டு வருகிறேன். கருத்துரைதான் இடவில்லை.! மன்னிக்கவும்.! சற்று உடல்நல குறைவு. தங்களின் ரத்த 6 பதிவு நன்று. இரக்க குணம் மிக அதிகமாக இருப்பவர்களுக்குத்தான் இப்படித்தான் (கொல்லாமல் அதை தட்டிவிட்டு மறுபடியும் ரத்த தானம்அளிக்கும் யோஜனை) யோசிக்கத் தோணும்.அதை நகைச்சுவையுடனும், சமுதாய பார்வையுடனும். தாங்கள் பகிர்ந்த முறை அருமை.

  இங்கும் ஓசி பிரயாணத்தில், உறவுகளோடு வந்த அந்த ஜீவன் எங்கள் பிராணனை ஒருகை பார்த்து விட்டது.நானும் என் பழைய பதிவில்,( உழைப்பாளர் தினம்) இந்த மாதிரி ஒரு ஜீவனைப்பற்றி எழுதியிருக்கிறேன். நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் தொடர் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி
   இறைவன் படைப்பில் அதுவும் வாழ்ந்து விட்டு போகட்டுமே...

   நீக்கு
 19. அந்த பொம்பளை மூட்டை பூச்சிக்கு பசிக்காதா? ஆண் மட்டும் தான் கடிக்குமா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் பக்கத்துல சில்ட்ரென் ரூமுக்கு போகுதே நண்பா... அது தூரத்துக்கு போக முடியாது காரணம் நிறை மாதமாம்.

   நீக்கு
 20. வயிறு நிறஞ்சாலும் மூட்டப்பூச்சி..கடிச்சி கிட்டே இருந்துச்சாாாா...தலைவரே....???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா பாஸூ சொன்னா புரிஞ்சுக்கிறது இல்லை

   நீக்கு