தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 17, 2015

என் நூல் அகம் 3

 
மதுரை பதிவர் விழாவில் பதிவுலகில் அன்புடன் ‘’வாத்தியார்’’ என்று அழைக்கப்படும் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ’’சரிதாயணம்’’ என்ற நூலை கொடுத்தார்கள் 80 குறிப்பிடத்தக்கது (வாத்தியார் மன்னிக்கவும் பதிவு பெரிதாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் வார்த்தைகளை சுருக்குகிறேன் ஆகவே என்பது என்பதை 80 என்று போட்டிருக்கிறேன் காரணம் எனக்கு வழவழனு எழுதுவது பிடிக்காது 80 நண்பர் திரு. துளசிதரன் அண்டு திருமதி. கீதா அவர்களுக்கு தெரியும் (உள் மனது - பேசாமல் என்பது அப்படீனே எழுதி இருக்கலாமோ... ரொம்ப நேரம் டைப்ப (Typing) வேண்டியதாகி போச்’’சே’’) 

செரி வெசயத்துக்கு வர்றேனுங்க.. இவுரப்பத்தி ன்நான் இன்னத்தே எழுதுறது ? வாத்தியப்பத்தி இஸ்க்கூலுபையனா ? அத்வும் ன்நானா ? இது ஓஓஓவர்ர்ர்ரு அப்பிடினு ஆஸ்திரேலியாக்கார்ரு நெனைச்சுட்டாரு.. போல, ஏன்னா ? என்க்கு கரையேறுது ச்சீ.. பொரையேருது அத்னாலே ன்நான் பட்ச்சி ரசிச்சதே ஒங்களோட பகிந்துகெறேன் அம்புட்டுத்தேன் அதாவதுங்கோ... ’’சரிதாயணம்’’ பொய்த்தகத்தே ய்யேந்தேன் வாங்குனோம்னு நினைச்சு நொந்து நூடூல்ஸ் ஆயிட்டேங்கோ... சம்பவம் இன்னா ? தெர்மா ? ’’சரிதாயணம்’’ பொய்த்தகம் மொலுக்கே வாத்தியாரு ‘’சரிதா’’வோட இடிக்கிற கூத்தை (?) இது அவுருக்கு சரிதா’’ன் என்க்கு ? பட்சிட்டு சிச்சு சிச்சு வயித்தெக் கலக்கி ஆசுப்பத்திரிக்கி போயி வயித்தியம் பாத்தினுக்கி மட்டும் எமராத்து தெரஹாம் 140/ ஆச்சுங்கோ, இது நம்மோட இனிய இந்திய ரூப்யாவுக்கு 2380/ ஆச்சுங்கோ, இத்வும் ன்நானு காருலே போயிவந்த பெத்துரோலு செலவுங்கோ, வைத்தியரு செலவு இல்லீங்கோ நானு ஜோலி செய்யிர ஆப்பீச்சுல இன்ஜூஞ்சு காரடு கொடுத்திகினாங்க, அத்னாலே வாத்தியாரு தப்பிச்சுகினாரு இல்லாட்டி அவுரு என்க்கு நெர்ய தரவேண்டிருக்கும்.. இது போதாதினு இவுரு பிண்டிங்காரவுங்களுக்கு பைசா கொடுகலினு நென்க்கிறேன் பாதி படிச்சி முட்சதும் மீதியே உல்டாவா பிண்டிங்கி அட்சுருகாங்க, இதுநாலே நானு காலை சொவத்துமேல வச்சிகினு தலையை கிழே வச்சிகினு பட்சேனுங்கோ... இத்ல மாத்துரோம் குட்டி குட்டியா பத்து கதை வுட்ருக்காருங்கோ... இந்தப்பதிவு கண்டுகினு வாத்தியாரு ஒட்னே என்க்கு 2380/ ரூப்யா மணியாடரு பண்ணங்கோ சொல்லிட்டேன் ந்நான் பட்சதை கீழே பாருங்கோன்னேன்...
 
கொலையின் விலை
இதில், நமக்கு கொலை செய்யப்போகிறவர் இவரா ? என்ற ஆச்சர்யம் மேலிடுகிறது...
எனக்கொரு மகன் பிறப்பான்
இதில், குழந்தைகளிடம் நமது ஆசையை வலியக்க திணிப்பது தவறுதானே என வலியுறுத்துகிறார்... அவருக்கே உரித்தான பாணியில்.

கிளி கிலி கிழி
இதில் வாத்தியார் (திரு. பாலகணேஷ்) அவர்கள் எழுத்து துறைக்கு வரும் முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலை பார்த்திருக்கிறார் 80 விளங்கியது  ஆனால் ? ஒரு நல்ல கௌரவமான பதவியில் இருந்து கொண்டு ஒரு கொலையும் செய்திருக்கிறார் 80 தை, (இதை நான் சொல்லவில்லை கதையில் தன்னை இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக்கொண்டு அவர் வரும் பொழுது என் சிற்றறிவுக்கு எட்டியது இப்பிடித்தாங்கோ) நினைக்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது காரணம் எனது நண்பர் அருண் அவர்கள் முன்பு ஐஸ்கிரீம் கம்பெனியில் வேலை செய்தவர் தற்போது மற்றொரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அவர் மீது பழியைப்போட்டது..... ‘’ச்சே’’ நமக்கெல்லாம் வாத்தியாராக இருப்பவர் குற்றத்தை ஒத்துக்கொண்டு போலீஸில் சரணடையாமல் டெக்னிக்கா வேலையை ராஜினாமா செய்து விட்டு, மின்னல் வரிகள் என்ற பெயரில் வலைப்பூ சுற்றுகி... Sorry வலைப்பூ தொடங்கி இருப்பது... நன்னாத்தோனலே...

மன்னவன் வந்தானடி Sorry தப்பா டைப்பிட்டேன் கொன்னவன் வந்தானடி
இதில், சதையில் Sorry கதையில் உண்மையிலேயே இப்படி ஒரு திருப்பதி Sorry திருப்பம் வரும்னு யாருமே எதிர் பார்த்திருக்க முடியாது அருமை.

குழந்தை
இதில், நவீனமான இந்தக்காலத்தில் (ரவீணா டண் டண் மாதிரி) புதுமையான மருமகளை காணலாம்...

அமைதியின் பின்னே...
இதில், ஒரு மனமொத்த கௌரவமான தம்பதிகளின் வாழ்வைப்பார்த்து பெருமிதமாக இருந்தது... ஏன் ? பொறாமையாககூட காரணம் நமக்கும் இவரைப்போல (திருவாளர். செல்வம்) இப்படியொரு வாழ்வு கிடைத்தால் ? எவ்வளவு செழிப்பாக வாழலாம்.... 80தை எண்ணிப்பார்க்கின்றேன். (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, again ஒன்று, இரண்டு....)

கல்லுக்குள் ஈரம்
இதில், வரும் தாதா’’வை கண்டதும், எனக்கும் இவரைப் போலொரு மனதை தா ! தா ! என இறைவனிடம் கேட்கச்சொன்னது.....

நானும், ஒரு கொலைகாரனும்.
இதில், ஒரு மனசாட்சி உள்ள கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்... நான் இதை படித்துக்கொண்டு வரும்பொழுதே... அடுத்த கதைக்கு தாவி (?) விட்டேன் காரணம் எனக்கும் பயம்தான் இவண் என்னையும் போலீஸுல மாட்டி விட்டுறுவான் போல தெரிந்தது... ஏன்னா ? நமக்கு பெயரே சரியில்லைனு சிலபேர் சொல்றாங்க... (ஐயா, திரு. முத்து நிலவன் அவர்களே... உங்களை சொல்லலீங்கோ)
சங்கி – வெங்கி - பிங்கி

இதில், மங்கிகளை வைத்தும் ஒரு கதை.
 
அன்பின் வாத்தியார் அவர்களுக்கு.... எல்லாம் எழுதியவன் முக்கியமானதை எழுதவில்லையே.. எனநினைத்திருப்பீர்கள் தங்களை பாராட்டும், அகவையோ, பக்குவமோ எமக்கு போறா....
நான் இருக்கிறேன் அம்மா... இதை படித்ததும்...
..
என் கண்கள் கசிந்தது உண்மை அவ்வளவுதான் எழுத முடிகிறது, பெட்டிக்கடை ராஜூ அண்ணா தங்களிடம் பேசாமலிருந்த பொழுது நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. வாசகனை ஒரு எழுத்தாளன் தனது எழுத்தின் வசீகரத்தால் உணர்வுப்பூர்வமாய் கண் கலங்க வைத்து விட்டான் என்றால் (?) அந்தக்கண்ணீருக்கு விலை இவ்வுலகையே எடுத்துக்கொடுத்தாலும் 
இணையாகாது. வணங்குகிறேன் வாத்தியாரே.

 
இம்புட்டுதாங்கோ… வாத்தியைப்பத்தி வத்தி வைக்க... Sorry எழுத முடிஞ்சதுங்கோ... இதுக்கு மேலே வாத்தியாரைப்பற்றி எழுத வரலீங்கோ அத்னாலே ன்நான் இத்தோட வெடை பெறலாம்னு இருக்கோனுங்க, நன்றிங்கோ.

எனது மற்ற விமர்சனங்களை படிக்க கீழே இணைப்புகளை சொடுக்குக...
எமது அடுத்த விமர்சனம் திரு. கோவை ஆவியின் ’’ஆவிப்பா’’

அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

65 கருத்துகள்:

 1. சரிதான்.. வைத்திய செலவு வேறயா..
  எதுக்கும் முன்னெச்சரிக்கை செய்தது நல்லதா போச்சு!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ என்னாலே முடிஞ்சது நண்பரே.... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. In the days of reducing reading habits, the efforts you have taken is awesome.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே.... வாசிப்பு 80 எனக்கு சுவாசிப்பு போன்றது..

   நீக்கு
 3. இதைவிட ஒரு சிறந்த விமர்சனத்தை எங்கே தேடிக் காண்பேன் கில்லர்ஜி... நூலைப் பற்றி விவரிக்கையிலேயே என்னைச் சிரிக்கவும் லேசாக கண்கலங்கவும் வெச்சுட்டீங்க... மருத்துவச் செலவு நீங்க செஞ்சதுக்கு மாற்றா இந்தியா வர்றப்ப என் கையாலயே சமைச்சு ஒரு விருந்து தர்றேன். (அதனால வைத்தியச் செலவு ஏற்பட்டா நான் பொறுப்பில்லப்பா... ஹி... ஹி... ஹி...) அப்புறம்... முக்கியமாக் குறிப்பிட வேண்டியது - அமைதியின் பின்னே கதைக்கு நீங்க எழுதியிருக்கற வரிகளை பெண்கள் படிச்சா உதைதான் விழும்னு தோணுது. உஸாருய்யா உஸாரு... ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ ‘நான் இருக்கிறேன் அம்மா’ இரண்டும் எனக்கு ஸ்பெஷல் குழந்தைகள். அவற்றை நீங்களும் தாலாட்டினதுல கொள்ளை மகிழ்ச்சி. உங்களுக்கு பல லாரி லோட் அன்பும் நன்றியும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன வாத்தியாரே... விமர்சனம் நல்லா இருக்குனு சொல்ற நீங்களே... பெண்கள் படிச்சா உதை விழும்னு சொல்றீங்க எனக்கு பயமாகீது.

   நீக்கு
 4. தங்களின் மூலமாக எல்லா காதையையும் தெரிஞ்சுகிட்டேனுங்க... இனி நானும் கதை புடப்போறேனுங்க...அதாவது கதை எழுதப் போறேன் நண்பரே....!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதுங்கள் நண்பா, படிக்க நாங்க இருக்கிறோம்.

   நீக்கு
 5. வித்தியாசமான முறையில் விமர்சனம்...
  அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வித்தியாசமாக இருந்தால்தானே அது நமது பாணி.

   நீக்கு
 6. வணக்கம்
  விமர்சனம் பட்டையை கிளப்புது... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.... த.ம6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் பட்டையை கிளப்புவதால்தானே படிக்க வந்தீங்க வாக்களித்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 7. மிக சிறப்பான நூல் அறிமுகம்! புத்தக கண்காட்சியில் வாத்தியார் துணையோடு டிங்கு புக் ஸ்டால் சென்று சரிதாயணம் வாங்கிவிட்டேன்! படிக்க வேண்டும் முடிந்தால் இன்றிரவே தொடங்கி விடுவேன்! கழுத்துவலி இருப்பதால் கணிணி பக்கமும் நிறைய நேரம் செலவிட முடியவில்லை! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கியது சரி நண்பரே கழுத்து வலியோடு, வயிற்று வலியும் வரணுங்கிறது விதி.

   நீக்கு
 8. நூல் விமர்சனம் வழக்கம்போல் தங்கள் பாணியில். ரசித்தேன். உங்களது பதிவைப் பார்ப்பவர்களுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும் என்பதே உண்மை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கு நன்றி படிக்கும் ஆவலைத் தூண்டினால் அது எமது எழுத்துக்கும் கிடைத்த அங்கீகாரமே....

   நீக்கு
 9. வாத்தியார் கையெழுத்துடன் நானும் வாங்கிய சரிதாயணத்தை மீண்டும் நினைவு படுத்தியது ,அவர் நடையை (எழுத்து நடையை சொன்னேன் ) நானும் ரசித்தேன் :)
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவனமாக கருத்து நடையை அளித்து வாக்களித்தமைக்கும், நன்றி பகவானே.

   நீக்கு
 10. சரிதாயணம் எங்கள் கையில். சிரிதாயணமாக சிரித்துக் கொண்டே ....எழுத நாள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அருமையான விமர்சனம் கில்லர்ஜி. உங்கள் ஸ்டைலில்....வாத்தியாரு அந்த சரிதாவோட அடிக்கற கூத்தை என்னனு சொல்லுறது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க நாள் பார்க்கிறீங்களா ? நம்ம சோலந்தூர் சோசியர் சோனைமுத்துவை போய்ப் பாருங்களேன். (எனக்கு கமிஷனாவது கிடைக்கும்)

   நீக்கு
 11. இன்னா விமர்சனம் இது....வ்யித்து வ்வலி வாற மாதிரி...சூப்ப்ருங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாம் பெற்ற கஷ்டம் இவ்வலையகமும் பெறட்டும்.

   நீக்கு
 12. மிகவும் புத்தகத்தை ரசித்துப்படித்திருக்கின்றீர்கள். அதன் தாக்கமோ என்னமோ நீங்களும் மிக நகைச்சுவையாக விமர்சனம் செய்து,ஆசிரியருக்கு பெருமை சேர்த்திருக்கிறீங்க. நீங்க விமர்சித்ததை வாசித்து, எனக்கு வயிற்றுவலி வந்துவிட்டதேஏஏஏ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி வயிற்றுவலிக்கு செலவு வந்தால் வாத்தியாரே பொருப்பு நான் அல்ல ! 80தை பதிவு செய்கிறேன் காரணம் எனது செலவுக்கு பகரமாக இந்தியா வரும்போது சாப்பாடு போடுகிறேன் என கூப்பாடு போடுகிறார் அதுவும் அவரே சமைத்து போடுகிறேன் என்று இங்குதான் எனக்கு சந்தேகமே.... இந்தியாவுக்கு வருவதில் பல காரணங்கள் உண்டு அதிலொன்றுதான் ‘’நல்லசோறு’’ வெளிநாட்டில் வாழும் பேச்சளர்கள் பலரும் ஒரு வகையான மாடி வீட்டு ஏழைகளே...

   நீக்கு
 13. நான் போட்ட கம்மென்ட் காணாம போயிடுச்சே. அட்டகாசமான் நகைச்சுவை நடையில் விமர்சனம் சூப்பர் கில்லர்ஜி .
  சரிதா பற்றிய கதைகளுக்கு விமர்சனம் காணோமே பாஸ். உங்க பாணியில அசத்துங்க ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் பார’’தீ’’யின் சீடரே.... எதிரியே எனக்கு கருத்துரை இட்டாலும் எட்டு நாளுக்கு எலிக்கறி அடித்து விருந்து வைப்பவன் நான், தங்களது கருத்தை நான் என்ன ? செய்து விடப்போகிறேன் வரவில்லை நண்பரே...
   சரிதா’’வா ? சரிதா’’ன் நானே வயிற்றுவலி வந்துதானே... 2380/ ரூபாவுக்கு வாத்தியாருக்கிட்டே ‘’போர்’’ ‘’ஆடிக்கிட்டு’’ இருக்கேன் இதுல மறுபடியுமா ?

   நீக்கு
 14. புதுமையான விமர்சனம்
  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே....

   நீக்கு
 15. வித்தியாசமான மனச்சாட்சியின் சிந்தனையை ரசித்தேன் ஜி...

  அடுத்து கலக்குப்பா...?...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 16. கில்லர் அண்ணா,
  பாலா அண்ணாவின் கலகல புத்தகத்துக்கு உங்க விமர்சனம் லகலகலக :))))) சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது:))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரிச்சா, வயிறுதான் வலிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், அனுபவப்பட்டு இருக்கேன், முதல் முறையாக வாய் வலிக்கிறது இதுதான் சரித்திரத்துல முதல் முறை.

   நீக்கு
 17. சகோதரர் பாலகணேஷின் புத்தகங்களைத் தேடி வாங்கி வாசிக்க வைக்குமளவிற்கு உங்கள் ரசனையும் விமர்சனமும் மிகச் சிறப்பு சகோதரரே!

  சிரிக்கவைப்பதில் சகோ பாலகணேஷிற்கு தக்க ஜோடிதான் நீங்களும்!
  இருவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. தங்களின் வருகைக்கு நன்றி வாத்தியாரோடு என்னை இணை வைத்து தாங்கள் பாவத்தை சேர்த்துக்கொள்ளாதீர்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 19. இங்கே..ஒரு நாவல் எழுதின வாத்தியார........பிச்சு கொதறாங்க..... நண்பரே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகன் அப்படினு பேரு வச்சுக்கிட்டால் அப்படித்தான் நண்பா....

   நீக்கு
  2. பெருமாளை மறந்து விட்டீர்களே!
   பெருந்தகையே!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   நீக்கு
 20. அருமை.

  என்னிடம் புத்தகம் இருக்கு. இன்னும் வாசிக்கலை:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் தாங்கள் வராததால் பெயர் மாற்றி எழுதிய கோபமோ ? என்று நினைத்து ஏமாந்துட்டேன் அய்யோ, அய்யோ... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 21. நண்பரே...

  வழக்கம் போலவே உங்கள் பாணி வித்யாச விமர்சனம்.... என்னா பிரச்சனைன்னா... எல்லா நூலையும் வாங்க ஈபிள் டவரை அடமானம் வெச்சா கூட பத்தாது போலிருக்கேஜீ !!!

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, ஈபிள் டவரை அடமானம் வைக்கிறீங்களா ? யாரைக்கேட்டு இந்த முடிவுக்கு வந்தீங்க ? உடமைஸ்தன் அபுதாபியில இருக்கிறதாலே தெரியாதுனு நினைச்சீங்களா ?

   நீக்கு
 22. வலைப் பூவுலகின் வாத்தியார் பாலகணேஷ் அவர்களின்
  "சரிதாயணம்" நூல் விமர்சனம் மதிப்பெண் பெறுகிறது நூற்றுக்கு/ நூறு
  (100/100).
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 23. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்

  விமர்சனம் எல்லாம் பயங்கிரமாக இரூக்குதே, இனிமேல் விமர்சக வித்தகர்ன்னு தான் உங்களை சொல்லணும் போல. கலக்குங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, விமர்சக வித்தகரா ? இதெல்லாம் ட்டூ த்ரீ மச்.

   நீக்கு
 24. தங்களின் விமர்சனத்தினைப் படிக்கப் படிக்க
  எந்த அளவிற்கு புத்தகத்திற்குள் ஆழமாய்
  பயணம் செய்திருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது
  நூல் அகம் தொடரட்டும் நண்பரே
  நன்றி
  தம 13

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எதையுமே மேலோட்டமாக பார்ப்பதில்லை நண்பரே, அதற்க்கு பார்க்காமல் இருக்கலாம் 80தே எமது கருத்து வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு

 25. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 26. கில்லர் நைனா சொம்மா அல்லா புக்கையும் படிச்சிகினு தூள் விமர்சனம் எய்திகீரே. டக்கரா கீது பா......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வா மாமு நீ கூட கும்முனு எய்திகிரேபா....

   நீக்கு
 27. என்னுடைய டாஸ்போர்டில் பதிவு வராததால்...காலதாமதம் சகோ...

  சிரிக்க சிரிக்க....படித்து மகிழ்ந்ததை....எங்களுக்கு சிரிப்புடன் பரிமாறி விட்டீர்கள்....
  சிசித்துக் கொண்டேகருத்திடிகிறேன். நல்ல விமர்சகர் ஆகிட்டீங்க....

  உங்கள் கதை தயாராகிவிட்டதா...? எழுதிக் கொண்டு இருக்கிறேன் என்றீர்களே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ டேஷ்போர்டில் வந்ததே.... சிரிப்பது மாதிரி இருந்தால் நல்லதுதானே... எனது கதை எழுதினேன்.... எழுதுகிறேன்... எழுதுவேன்...

   நீக்கு
 28. மொய்வைக்க மறந்து விட்டேனே என வந்தேன்.

  நான் வந்து பார்த்தபின் தான் சகோ நீங்கள் கருத்துரையில் தெரியப்படுத்தினீர்கள்.

  நன்றி. தம 14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாமா, நாமெல்லாம் தேவகோட்டைகாரவுங்க மொய் வைக்காமல் போறதுக்கு நாமென்ன ? பாலக்காட்டுக்காரவுங்களா ?

   நீக்கு
  2. நல்லா இருக்குங்க. அதென்ன பாலக்காட்டுக்காரங்கன்னா அம்புட்டு எளப்பமாப் போச்சு? (நம்மூருக்குப் பக்கத்து ஊராச்சே, கொஞ்சம் சப்போர்ட் பண்ணுவோம்)

   நீக்கு
  3. ஐயாவின் வருகைக்கு நன்றி சப்போர்ட் பண்ணிட்டு நம்மளை டீலாவுல விட்டீங்க போலயே....

   நீக்கு
 29. வாத்தியார் என்பதால் மெட்ராஸ் பாஷையில் விமர்சனமோ ? இதையும் ரசிக்கும்படியாகவே தந்திருப்பது பாராட்டுக்குரியது. இறுதியாக அன்பின் வாத்திக்கு என எழுதியதைப் பற்றி வாத்தி எதாவது சொல்லியிருப்பார் என நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதுதான் வாத்தியாருக்கு ஒரு மரியாதை 80.

   நீக்கு
 30. பணிச்சுமையால் தாமதமாயிடுச்சு சகோ, சரிதாயணம் உண்மயிலே சிரிதாயணம்தான் எனக்கு அந்த நூல படிச்சிட்டே வயித்துவலி வந்தது
  திரும்பவும் அதே நிலைதான் அருமைசகோ வித்யாசமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 31. சிறப்பான விமர்சனம் கில்லர்ஜி.... மிகவும் அருமை.....

  பதிலளிநீக்கு
 32. தங்களின் படைப்புகள் ஒவ்வென்றும் அருமை. புதிய தெளிவகள். அது சரி அது என்ன வாத்தி நீங்களுமா? புளி ரசம் அருமையாக இருக்கும். பெருமாளுக்கு உகந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி, புளி ரசம் படித்தமை கண்டு பரவசம் அடைந்தேன்

   நீக்கு