செவ்வாய், ஜனவரி 20, 2015

பேசு மனமே பேசுஅன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், மதுரை பதிவர் விழாவில் கலக்கலாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த எனது அன்புச்சகோதரி திருமதி. தமிழ்ச்செல்வியின் மகன் (K. விவேக்) தங்களில் பலருக்கும் தெரியுமென நினைக்கின்றேன் அவருடைய பிரதான தொழில் காணொளி தொகுப்பாளர் (Film Editor) முதன் முதலாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் படத்தின் பெயர்: ‘’பேசு மனமே பேசு’’ இதன் இயக்குனர் நண்பர் திரு. மா.வல்லவன் அவர்கள் 

இன்றைய சமூகத்திற்கு வேண்டிய நல்லதொரு விசயத்தை உள்ளடக்கிய இது குறும்படம் மட்டுமல்ல சிறு பாடமும்கூட 25 நிமிடம், 23 வினாடிகள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சரியாக 12 நிமிடம் 08 வினாடியில் ஒரு மனிதனின் உள்ளிருந்து வெளியே வந்து பேசும் மனசாட்சியாக நடித்திருக்கிறார் திரு. K. விவேக். 

இந்தக்காட்சிக்கான இடங்கள் மட்டுமல்ல இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளரும் மிகமிக அற்புதமான கோணங்களில் காட்சிகளை படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அவருக்கும் ஒரு சபாஷ் இந்தக் குறும்படத்தில் குழந்தை முதல் அனைவரும் சிறப்புடன் நடித்திருக்கிறார்கள் ஒரேயொரு சாராயக்கடை காட்சியில் தாதாவின் அல்லக்கைகளாக வரும் 
மூன்று நபர்களைத் தவிர

(உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மையானவன் நான் ஆகவே இதனையும் எழுதினேன்) 

தாங்களும் இதனைக்கண்டு தங்களது கருத்துக்களை பதியும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் இதன் YouTube இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன் இங்கு தெளிவாக காணமுடியும் நன்றி.மனசாட்சியாக வெளிவரும் ’’விவேக்’’ மட்டும் நடித்த YouTube காட்சியை காண கீழே சொடுக்குக..


இந்த குறும்படத்தில் வரும் அம்மாவும் மகளும் உண்மையிலேயே அம்மாவும் மகளும் என்பது குறிப்பிடக்தக்கது.


தங்களின் கருத்தை பதியலாமே 
YouTubeப்பிலும் கூட......

  ’’விவேக்’’ மட்டும் நடித்த காட்சி.


பதிவர் விழாவுக்கு வரும் பொழுது
எண்ணமும், செயல்பாடும் கில்லர்ஜி, ஒருங்கிணைப்பு விவேக்

தமிழ்வாணனின் கைப்பேசியிலிருந்து.....

அன்புடன் உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

82 கருத்துகள்:

 1. உள்ள(த்)தை பேசி விடு கிறேன் நண்பரே......

  பதிலளிநீக்கு
 2. அடடா....! உயர்ந்த சிகரங்களுக்கிடையே புகை மண்டிய, இயற்கை அழகு செறிந்த பின்னணிக் காட்சிகள் அற்புதம்! படப்பிடிப்பு பிரமிக்க வைக்கிறது. தேர்ந்த நடிகர்களுக்கு சவால் விடும் ‘மனசாட்சி’ விவேக்கின் நடிப்பு!

  என்னை மறந்து ரசித்தேன் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 3. மனசாட்சி சொன்னதை கடைப் பிடித்தால் ,விவேக்குக்கும் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு !
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும், வாக்கிற்க்கும் , நன்றி பகவான்ஜி.

   நீக்கு
 4. கண்டிப்பாய் வரவேற்கத்தக்க முயற்சி அண்ணா ! வசனங்கள் வாள் போல கூராய் மின்னுகிறது . கேமரா , கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது . பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவாக கண்டு, விரிவான விளக்கவுரை தந்தமைக்கு நன்றி நண்பரே....

   நீக்கு
 5. வாழ்த்துக்களைச் சொல்லுங்க அண்ணா தங்கள் மாப்பிள்ளைக்கு...
  குறும்படம் பார்க்க ஆரம்பிச்சாச்சு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமையை சொல்லி விடுகிறேன் நண்பரே...

   நீக்கு
 6. அருமைசகோ வித விதமா கலக்குங்க

  பதிலளிநீக்கு
 7. பேசு மனமே பேசு
  உண்மைதான் நண்பா!
  அனைவரது மனதையும் பேச செய்து விட்டீர்கள்!
  இந்த அழகிய you tube காணொளி மூலம்.
  குறும்பட நாயகன் திரைப் பட நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள்.
  இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  (அன்பு நண்பா உமது பேசு மனமே பேசு குறும்படம்
  எனது திரையரங்கில்(டேஷ் போர்டில்) வெளியாக வில்லை!
  படத்தைக் காண கரந்தையாரிடம் டிக்கெட் எடுத்து வந்து பார்த்து
  கருத்திட்டேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாதவன் நம்பியின் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் எமது நன்றி.

   நீக்கு
  2. very thank u yathavan sir.. ennotaiya muyargikal thotarum..

   நீக்கு
 8. அருமையான முயற்சி......
  இதை பார்க்கும் போது secret book ஞாபகம் வருகிறது.
  வாழ்த்துக்கள் சொல்லுங்கள் விவேக்கிற்கு...

  தம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கு நன்றி விவேக்கிடம் சொல்லி விட்டேன். எட்டில் கொட்டியமைக்கு நன்றி.

   நீக்கு
 9. வணக்கம்
  கலகலப்பான நடிப்பு... தங்களின் சிந்தனை ஓட்டத்தில் உதித்த கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ரூபனின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நவரத்தின வாக்கிற்க்கும் நன்றி

   நீக்கு
 10. யாரு மருமகன் !! பின்ன எப்படி இருப்பார்! ரெண்டுபேர் வெவ்வேறு பீல்டில் கலங்குங்க! வாழ்த்துக்கள்! நான் போய் அந்த வீடியோவை பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க போய்ப்பாருங்க பாருங்க... நன்றி

   நீக்கு
 11. அற்புதமான கருத்து
  மிகச் சிறந்த தொழில் நுட்பம்
  விவேக்கின் நடிப்பு மிக மிக அருமை
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும் ரசித்து மனமார்ந்த வாழ்த்தியமைக்கும் நன்றி

   நீக்கு
 12. நண்பரே! நேற்று வீடியோ வரவே இல்லை. இதோ இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வருகின்றது....பார்த்துவிட்டு வருகின்றோம்.

  பதிலளிநீக்கு
 13. சபாஷ்...!

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜி...

  பதிலளிநீக்கு
 14. நல்ல முயற்சி. அதனைத் தாங்கள் பகிர்ந்தவிதம் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி

   நீக்கு
 15. முழு நீள குறும்படத்தையும் பார்த்து விடுகிறேன் கில்லர்ஜி..... படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் சார் அவர்களின் வருகைக்கு நன்றி படைப்பாளிகளுக்கு வாழ்த்தை சொல்லி விடுகிறேன்.

   நீக்கு
 16. விவேக்கிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். நல்லதொரு கருத்து. படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  விவேக் வெள்ளித்திரையிலும் ஜொலிப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன்னை, உண்மையானவன் என்று சொல்லிக்கொள்ளும் நண்பர் நம்மிடம் ‘’டாவடிக்காமல்’’ உண்மையாக கண்டு ரசித்து படைப்பாளிகளுக்களை வாழ்த்தியமைக்கும், விவேக்கிற்க்கு வியாழன் sorry வெள்ளித்திரையில் ஜொலிக்க வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 17. அட இதெல்லாம் வேற நடக்குதா சரி சரி போய் பார்த்துவிட்டு வருகிறேன்ok வா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நடக்ககூடாதா ? சரி போயி பார்த்திட்டு வாங்க...

   நீக்கு
 18. wow கில்லர்ஜீ அருமையான ஆழமான கருத்தை அழகாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள் .....! மேலும் வளர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டு ரசித்து அழகாக இனிய கருத்துரை தந்து வாழ்த்திய இனியா அவர்களுக்கு நன்றி.

   நீக்கு
 19. நன்றாக நடித்திருக்கிறார். மகிழ்வான நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்தியாரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 20. மெய்சிலிர்க்கின்றது!..
  நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெய்சிலிர்த்து பாராட்டிய நண்பருக்கு எமது நன்றி.

   நீக்கு
 21. நல்ல குறும்படம். நல்ல கருத்தை மனசாட்சி என்பதன் மூலம் எடுத்துச் சொன்ன விதம் அருமை. மனசாட்சியின் நடிப்பும், டயலாக் டெலிவரியும் சிறப்பாக இருக்கின்றது. ஃபோட்டோ க்ராஃபி, எடிட்டிங்க் பிஜிஎம் அருமை. ஒரெ ஒரு சிறிய கருத்து, மனசாட்சியின் வசனங்களுக்கும், முந்தைய காட்சிகளுக்கும் கொஞ்சம் ஒட்டாதது போல்.....மொத்தத்தில் அருமையான படம். வாழ்த்துக்கள் படக் குழுவினருக்கும் , இயக்குனருக்கும். பாராட்டுக்களும்.

  மிக நல்ல முயற்சி! இன்னும் நல்ல படங்கள் கொடுக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்பட இயக்குனர் வருகை தந்து தனது பாணியில் பார்ட் ட்டூ பார்ட்டாக பிரித்து நிறை குறைகளை தந்து விட்டு படக்குழுவினருக்கும், இயக்குனருக்கும், பாராட்டு மழை பொழிந்து, இன்னும் இதுபோல் நிறைய படங்கள் எடுக்க வாழ்த்தி விட்டு எமக்கு மட்டும் வாக்களிக்காமந் டீலாவில் விட்டுச்சென்றமைக்கும் ந....ன்.....றி....

   நீக்கு
  2. இந்த ஓட்டுப் போடற வழக்கமே போயிடுச்சா அதான்...சாரிப்பா...அல்லாம் போட்டாச்சு போட்டாச்சு...ஹஹஹ்

   நீக்கு
 22. நல்ல முயற்சி! தங்கள் மருமகனுக்கும் தங்களுக்கும்
  உளமார்ந்த வாழ்த்துக்கள்! குறும்படத்தைப் பார்க்கின்றேன்!

  பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 23. ஆகா! இது குறும் படம் அல்ல! அரும் படம்! பார்த்தவர் அனைவரையும் , கனவிலும் நினைவிலும் போச வைத்த படம்! தம்பி அவர்கள் அனைவருக்கும்
  என் உளங்கனிந்த வாழ்த்துகள்! உங்களுக்கும் உரியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா புலவர் ஐயாவின் வருகையும், பாராட்டும், வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி. நன்றியுடன் கில்லர்ஜி.

   நீக்கு
 24. அருமையான படைப்பு. இறுதியில் இயற்கைகாட்சி அழகாக இருக்கு.எல்லாரும் நன்றாக நடித்திருக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்தையும் பிரியப்பட்டு சகித்து ரசித்து வாழ்த்துக்கள் தந்த பிரியசகி அவர்களுக்கு நன்றி.

   நீக்கு
 25. அற்புதமான கருத்து. "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" விவேகானந்தரின் கருத்தை அழகாக சிந்தனையில் புகுத்திய விதம் சிறப்பு. சிறந்த தொழில் நுட்பம். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவேகானந்தரின் பொன்மொழியோடு இணைத்து வாழ்த்தி கலையை ரசித்த சசிகலா அவர்களுக்கு நன்றி.

   நீக்கு
 26. பகிர்வுக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 27. வாழ்த்துகள் அருமை ..அனைவரின் நடிப்பும் சூப்பர்..உங்க மருமகனா....நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது ....சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை தந்து அனைவரையும் வாழ்த்தியமைக்கு நன்றி .

   நீக்கு
 28. பாராட்டிற்கு உரிய முயற்சி
  விவேக் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதிக்க வாழ்த்துக்கள் நண்பரே
  கணிணி கோளாறு, அதனால் நேரத்திற்கு வருகை தர இயலவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்ரின் வருகைக்கு நன்றி தங்களது கணினி கோளாறு என்பது எனக்கும் தெரியும் நண்பரே...

   நீக்கு
 29. எங்களை எதையும் சொல்ல விடாம எல்லாவற்றையும் நீங்களே சொல்லீட்டீங்க.. அம்மா , குழந்தையின் நடிப்பிலிருந்து மனசாட்சி பேசும் அருமையான இடம் வரை அத்தனையும் அருமை.... விவேக் பற்றி நீங்கள் சொல்லாதஒன்று அவரின் குரலில் இருந்த கம்பீரம் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், விலாவாரியான கருத்துரைக்கும் நன்றி குரல் விவேக்கின் உடையது அல்ல... வேறு நபர்.

   நீக்கு
 30. பதில்கள்
  1. வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி நண்பா....

   நீக்கு
 31. என் வாழ்த்துக்களை விவேக்கிடம் சொல்லி விடுங்கள் கில்லர் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது உடனே சொல்லி விுகிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 32. குறும்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்கு நடித்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  நல்ல கருத்து.,நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். அடிமனமும், மேல்மனமும் ஒன்று சேர்ந்தால் தான் நினைப்பது நடக்கும் உணமை. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசமையை வலியுறுத்துகிறது. நன்மகனாக நடக்க சொல்லும் குறும்படம் அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 33. சிறந்த அறிமுகம்
  சிறந்த பகிர்வு
  தங்களின் கைவண்ணம்
  நாளுக்கு நாள் மெருகேறுகிறது
  பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி,
   இந்தியாவுக்கு வருகை தரும் தமிழரே தங்களை வரவேற்கிறேன்.

   நீக்கு

 34. நல்ல முயற்சி. துறை சார்ந்தவள் (நாடகத்துறை முனைவர்பட்டம்) என்பதில் பெருமிதம். பிரமிக்க வைக்கும் மலை பின்னனி. ஆனால் இவ்வளோ வியர்வையா? நடிப்பு,,,,,,,,,,,,, தங்களின் அறிமுகம் அருமை தொடரட்டும். வாழ்த்துகள்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி வியர்வை பயத்தின் காரணமாக இருக்கலாமே.....

   நீக்கு
 35. வணக்கம் சகோதரரே.!

  நல்ல கருத்துடன் ௬டிய குறும்படம். மிகத் திறம்பட நடித்திருக்கும் தங்கள் மருமகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெகு விரைவில் நன்கு முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...