தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 22, 2015

பொன்னமராவதி, பொறுக்கி பொன்னுச்சாமி.


பொன்னுச்சாமி, இவனது அப்பா அழகர்சாமி ABUDHABI, ADNOC இவரது ரத்தத்தை உறிஞ்சு கொ(ல்ல)ள்ள பதிலுக்கு இவர் பணத்தை உறிஞ்சு INDIA அனுப்ப, இவனுக்கு வேலையே ஊர் சுற்றுவது, பெண்களிடம் லட்டர் கொடுப்பது, அவர்கள் இவன் முகத்தில் காறித்துப்புவது, கன்னத்தில் அறைவிடுவது லட்டரைக் கிழித்து எறிவது, பிறகு கிழித்தெறிந்த லட்டர்களை எல்லாம் பொறுமையாக உட்கார்ந்து பொறுக்கி எடுத்து விடுவது, இதனால் இவனை பொறுக்கி பொன்னுச்சாமி என்றே சொல்வார்கள், இதெல்லாம் சகஜமாகி விட்டது.

ஒருநாள் கலாவுக்கு, லவ்லட்டர் கொடுத்தான் அவள் வாங்கி கொள்ளவும் இவனும் சந்தோஷமாக பதில் எழுதிக்கொண்டு வருவாள் என மரத்தடியில் நின்றிருந்தான், இவனிடம் எப்பொழுதுமே லவ்லட்டர் ஸ்டாக் இருக்கும் ஜெனரலாக யாருக்கும் கொடுக்ககூடிய வகையில் கவிதை நடையில் எழுதி வைத்திருப்பான் அப்பொழுது அழகான ஒருத்தி தனியாக வந்து கொண்டு இருந்தாள், இவன் சட்டென ஒரு லட்டரை எடுத்து கொடுத்தான் அவள் வாங்கி நின்று படித்து விட்டு சொன்னாள்.

"இனிமேல் எனக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை" 

போதாக்குறைக்கு எச்சியையும் காறித் துப்பிவிட்டு சென்று விட்டாள், இவன் கலாவுக்காக காத்திருந்தான்.

வீட்டுக்கு வந்த கலா அம்மாவுக்காக காத்திருந்தாள், கதவு திறக்கும் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தாள் அம்மா மாலா வந்தாள், மாலாவுக்கு சிறு வயதிலேயே கல்யாணம் ஆகி விட்டதால் இன்னமும் சின்னப்பெண் போலவே இருப்பாள், இருவரும் தெருவில் நடந்து போகும்போது அக்கா-தங்கை போல இருப்பார்கள், தாயும் மகளும் தோழிகள் போலவே பழகுவார்கள் சட்டென லட்டரை அம்மாவிடம் கொடுத்து விட்டாள், லட்டரைப் படித்துப் பார்த்த மாலா கையெழுத்தை பார்த்தவுடன் கோபமாகி விட்டாள் உடனே லட்டருடன் வெளியேறினாள்.

கலாவுக்காக, காத்திருந்த பொன்னுச்சாமி சற்றுமுன் திட்டி விட்டுப் போனவள் எதிரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை கண்டதும் சந்தோஷமானான், "ஆகா பட்சி மடங்கிருச்சு" நேராக இவனிடம் வந்தவள் சொன்னாள் 

"இனிமே எம்பொண்ணுக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை

மீண்டும் மிச்சமுள்ள, எச்சியையும் காறித்துப்பி விட்டு கோபமாக வந்து விட்டாள் அம்மா மாலா. 

திரும்பும்போது சட்டீரெ சப்தம் கேட்டு திரும்பிப் பார்க்க மேலத்தெரு, மேகலா அவனை அறைந்து கொண்டிருந்தாள். 

காணொளி

 

ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற முறையில் பதிவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன் மேலும் விபரங்களுக்கு கீழே கிளிக்கவும்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

57 கருத்துகள்:

  1. அடடா..... எல்லா பெண்கள் பெயரும் லாவிலே முடியுதே.....அதான் பயலுக்கு அல்வாவோட வசவும் கிடைத்து கொண்டு இருந்தது. இப்போ..பூசையும் கிடைக்குதா.....!!!!!!.அய்யோ..பாவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாடா உங்களோட கவனம் இப்பிடி இருக்கும்னு நினைக்கவே இல்லை நண்பா...

      நீக்கு
  2. இப்ப புரியுது பொன்னுச்சாமிய ஏன் இந்தியாவுக்கு அனுப்பினாருனு அவன் அப்பா அங்க இந்த மாதிரி பண்ணினா கழுத்துல கத்தி வைச்சுருவாங்கல்ல....இங்க அப்படியா ஏதோ பொண்ணுங்க காரித் துப்பும் அம்புட்டுதேன்....பொறுக்கியா அலையலாம்...

    பொன்னுச்சாமி அறை எங்க வூடு வரைக் கேட்டுச்சுப்பா....ம்ம் பொன்னுச்சாமிக்கு ஓட்டு போட வேண்டாம் பொறுக்கின்றதுனாலன்னு நினைச்சோம்...ஆனா... பாவம் போனா போது வயசுக் கோளாறு இன்னும் ரெண்டு "லா" க்கிட்ட அடி வாங்கினா செரியா போய்டுவான்னு ஓட்டுப் போட்டுட்டோம்பா.....

    சரி அதென்ன பொன்னமராவதி?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடி கோடியா கொள்ளையட்ச்சான்னு தெரியுது அவனுக்கு மட்டும் ஓட்டு போடுவீங்களோ.... ? பாவம் பையன் லட்டர்தானே கொடுத்தான்...
      பொ.பொ.பொ புரியுதா ?

      நீக்கு
  3. தலைப்புக்கு ஏற்ற வீடியோ....

    தம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அப்படீனா கதை பொருத்தம் இல்லையோ...

      நீக்கு
  4. என்ன ஒரே ரகளை ...
    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவா ? ரகளை பாவம் அறை வாங்கிட்டானே... அது தெரியலையா ? தோழா...

      நீக்கு
  5. ஒருவேளை ,இவன் பசுவும் கன்றுமாய் தேடுகிறானோ :)
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே கல்லுல ரெண்டு கொய்யா அடிக்கப்பார்க்கிறான் போலயே.....

      நீக்கு
  6. அறையா இது அறையா?
    ஒரே ஓவராவே இருக்குது?
    முறையா இது முறையா?
    அகிலமும் இதுபோல்தான் நடக்குது?

    (அன்பின் அழுக்காறு
    அகல வேண்டுமா?

    ஆடவனை அறைந்தே
    அரை இடம் வாங்கி விட்டாயே!
    அவனது அங்கத்தில்!.
    அர்த்தநாரீஸ்வரியாக!

    ஆஹா! அறை தெருத்துமோ
    தெரு வரை!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடையா இது நடையா
      ஒரு நாட்டியம்
      அன்றோ நடக்குது

      இடையா இது இடையா
      ஒன்றும் இல்லாதது
      போல் இருக்குது

      நன்றி நண்பர் யாதவன் நம்பி அவர்களே.....

      நீக்கு
  7. எப்படிதான் இப்படி எழுதமுடியுது உங்களால். கதையும்,காணொளியும் பார்த்து சிரித்து முடியேல்லை.
    ஆடியோ வோய்ஸ் யாரோ? Super.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி எனது குரலும் இருக்கிறது.

      நீக்கு
  8. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது அறை வாங்குவதையா ? நன்றி நண்பரே....

      நீக்கு
  9. சிறுகதை போட்டியின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ள தங்களுக்கு வாழ்த்துக்கள்.!!

    பதிலளிநீக்கு
  10. லாவுல முடியிற பேருள்ள பொண்ணுங்களா லவட்டி லாலா பாடலம்ன்னு இருந்திருப்பான் போல... கடைசியில லோ லோன்னு அலை வைச்சிட்டாங்க !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் ராசி அப்படி வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  11. ஹா... ஹா....
    கதை நல்லாயிருக்கு...
    வீடியோ சூப்பர் அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியை பாராட்டுவது அறிந்து மகிழ்ச்சி காரணம் எனது சிரத்தைக்கு கிடைக்கும் அங்கீகாரம் நன்றி நண்பரே..

      நீக்கு
  12. பதில்கள்
    1. ரசிப்பிற்க்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  13. "பொறுக்கி" பொன்னுசாமி பேருக்கு இப்படி ஒரு அர்த்தமா?

    உங்களோட இந்த "லா" வில் முடிகிற இந்த பதிவை படித்தவுடன், எனக்கு கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது என்ன பாடல் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம் அதில்
      உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்...

      இதுவா ?

      நீக்கு
    2. லா லா.....
      வான் நிலா நிலா அல்லல் பொன் வாலிப நிலா
      இந்த பாட்டு தான்.

      நீக்கு
    3. எனக்குத்தெரியும் உங்களுக்குத் தெரியுதானு டெஸ்ட் செய்தேன்.

      நீக்கு
    4. சும்மா இந்த கதை தான் வேண்டாங்கிறது.

      நீக்கு
  14. தாங்கள் பல பொன்னுச்சாமிகளைப் பார்த்திருப்பீர்கள் போலுள்ளது. மிகவும் தத்ரூபமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் நடைமுறை வாழ்வில் காண்பதுதானே முனைவரே...

      நீக்கு
  15. ஹா... ஹா...

    திருந்துவது மாதிரி தெரியவில்லையே ஜி...

    பதிலளிநீக்கு
  16. //கிழித்தெறிந்த லட்டர்களைப் பொறுக்கி எடுப்பதால் பொன்னுசாமி// -இதைப் படித்த பிறகு அரை நிமிடம் போலச் சிரித்துவிட்டுத்தான் அடுத்த வரிக்கு நகர முடிந்தது!

    இந்தப் பொறுக்கி கேரக்டரை வைத்தே இன்னும் பல நகைச்சுவைப் பதிவுகள் போடலாம்.

    தொடருங்கள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிப்புக்கு நன்றி நண்பரே.. தங்களின் ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்... இனியெனும்.

      நீக்கு
  17. பொன்னுச்சாமி - இப்படியும் சிலர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை நண்பரே இந்தப்பெபயரில் பதிவர்கள் யாரும் இல்லை. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. நல்ல நகைச்சுவைப் பதிவு. வீடியோ இணைப்பும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவன் அறை வாங்குவதில் என்ன சிறப்பு ?
      இருப்பினும் காணொளி கண்டு ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  19. பொ.பொ.பொ.சாமி அடி வாங்கிட்டு திரியுத ... அவன் அப்பாகிட்ட பத்தி வச்சாச்சா.......ஃ?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பா நமக்கெற்க்கு அந்த வேலை.

      நீக்கு
  20. முயற்சி திருவினையாக்கும்-இதுவே பொன்னுசாமியின் கொள்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா கொள்கை என்றே நாம் எடுத்துக்கொள்வோம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  21. நகைச் சுவைதான்! ஆனால் நாடு போகும் போக்கு!!!!!!!?கவலை அளிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகைச்சுவைதான் ஆனால் இதுபோல் நடக்கிறதே... ஐயா தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    காணொளியும் பதிவும் அருமையான பொருத்தம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  23. அன்புள்ள ஜி,

    பொன்னமராவதி நல்ல ஊர்தான்... தேவகோட்டை அதற்கு நெருக்கமான ஊர்தான்....பொறுக்கி பொன்னுச்சாமிய பொறுக்கி எடுத்திருப்பது நன்றாகவே இருந்தது. இதற்குத்தான் அம்மாவெல்லாம் அம்மாமாதிரி இருக்க வேண்டும் என்பது. மாலாவின் மீதுதான் தவறு... அதற்குப் பொன்னுச்சாமி என்ன செய்வான்?
    மாலா சொன்னதும் சரிதான்... ‘இனிமே என் பொண்ணுக்கு லெட்டர் கொடுத்த தொலைச்சுப்புடுவேன்....!’
    ஆமா! ஒரு சந்தேகம் இனிமே யாருக்கு லெட்டர் கொடுக்க வேண்டும் என்கிறாள்? மாலா...!
    இது மாலை நேரத்து மயக்கம்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மணவையாரே... அணுஅணுவாக ரசித்தது கண்டு மகிழ்ச்சி
      மாலா சொல்வது...
      என்னிடமும், எனது மகளிடமும், நாளை எனது பேத்தியிடமும் கொடுக்காதே... வேறு யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்துத்தொலை.

      நீக்கு
  24. வணக்கம்
    ஜி
    எல்லாப்பெண்களும் பேசும் வார்த்தை இதுதான்... அழகாக உங்களின் கருத்தில் சொல்லியுள்ளீர்கள் பதிவுக்கு அமைவாக வீடியோ உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 15
    சிறுகதைப்போட்டி சம்மந்தமான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல..
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும், வாக்கிற்க்கும் நன்றி நண்பரே...

      நீக்கு
  25. என் அழகே இதோ என் காதல் கடிதம். படி. பிடித்தால் வா, இல்லையென்றால் உன் தங்கையை வரச்சொல், அதுவும் இல்லையா, உன் தோழியிடம் கொடு, வேய்டாமா? உன் தோழியின் தோழியிடம் கொடு, விரும்பலையா உன் தோழியின் தோழியின் தோழியிடம் கொடு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுகூட நல்லாத்தான் இருக்கு அடிக்கிறது கல்லுதானே,,,, தேங்காய் வந்தாலும் சரி. மாங்காய் வந்தாலும் சரி.
      வாழ்க்கைக்கு வேண்டிய தத்துவத்தை குறித்துக்கொண்டேன் நன்றி.

      நீக்கு