தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 28, 2016

சாணக்கியன்


ஐயா வணக்கம் எங்களது தாமதம் பத்திரிக்கையிலிருந்து ''மதம் தந்த மாதம்"  அப்படின்னு ஒரு கட்டுரை வெளியிடுகிறோம் இதில் தங்களது பேட்டியை சிறப்பு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குகிறோம் தங்களது கருத்து தொகுப்புகள் தொடங்கலாமா ? ம்
நல்லது முதல் வணக்கம் நம் தமிழுக்கு தொடங்கலாம்.

ஐயா மதங்களைப்பற்றி உங்களுடைய கருத்து ? 
மதம் என்ற விசயத்தை பிடித்து வாதம் செய்யும் போதே பிடிவாதம் என்ற சொல் இணைந்து விடுகிறது பிடிவாதத்திற்கு மருந்து இல்லை பிடிவாதத்தை நமது மனதால் மட்டுமே அகற்ற முடியும் அதைப்போல இந்த மதம் என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் மதம் என்ற விசயத்தை நம் மனதிலிருந்தே அகற்றப்பட வேண்டும் மதம் என்ற சொல் நம் வாயிலிருந்து உச்சரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், மதம் என்ற வார்த்தை நமது கையினால் எழுதப்படுவது மறக்கப்பட வேண்டும்.

ஐயா ஒரு மனிதன் நியாயமாக வாழும் வழி முறைகள் எப்படி ? 
முதலில் அவன் தான் சார்ந்த மதத்தை விட்டு வெளியே வரவேண்டும், அல்லது அவன் சார்ந்த மதத்திற்க்குள் கட்டுப்பட்டு வாழவேண்டும் இவை இரண்டில் எதையுமே கடைப்பிடிக்காதவன் நியாயமானவன் என்ற பெயர் எடுக்க தகுதியில்லாதவன்.

அப்படி என்றால் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்கள் நியாயமற்றவர்களா ? 
நான் சொன்ன இரண்டில் ஒன்றை கடைப்பிடிக்கும்போது... தானாகவே மனசாட்சி இணைந்து விடும் பொய் சொல்ல மாட்டார்கள் தவறை தவறுதலாக கூட செய்ய மாட்டார்கள் காரணம் நியாயமே மனசாட்சி என்ற கொள்கையாளர்கள் இவர்களே...

ஐயா இதில் தாங்கள் எதை கடைப்பிடிக்கிறீர்கள்...?.
நான் வெளியே வந்து உட்புறத்துக்குள் வாழ்பவன் மதம் வேண்டுமானால் கூடுதலாக இருக்கலாம் ஆனால் அனைத்து மனிதனுமே ஒருநாள் மரணித்து இறைவனிடம் கூடியே ஆகவேண்டும் உலக மக்கள் அனைவருக்குமே இறைவன் ஒருவனே... இதில் எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் மாற்றுக்கருத்து இருந்ததில்லை இறைவன் மனிதனை படைத்தான் அந்த சுயநலமனிதன் மதத்தை மட்டுமல்ல மாதத்தையும் வகுத்தான்

அப்படியானால் இறைவனை காணவழி ? 
மரணிக்க வேண்டும் அல்லது மரணகாலம் வரை காத்திருக்க வேண்டும் நான் மட்டுமல்ல, நீங்கள் மட்டுமல்ல, சுப்புவும், சுல்த்தானும், சூசையும் மட்டுமல்ல எமது அருமை நண்பர் சிவாதாமஸ்அலியும் கூட காத்திருந்தே காணமுடியும்.

ஐயா மரணத்திற்குபின் மனிதனின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ? 
ஒருவேளை நான் முந்தினால் பதில் உங்களுக்கு நான் கொடுப்பேன் அல்லது நீங்கள் முந்தினால் எனக்கு பதில்தர கடன் பட்டிருப்பீர்கள் இந்த பதிலை கொடுக்ககூட ஒருவருக்கொருவ்ர் காத்திருக்க வேண்டும் என்பது இறைநியதி.

இந்த உலகில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கிறதே இந்த பதில் மட்டும்....?.
 உடனே வேண்டுமெனில் இந்த நிமிடமே மரணிக்க நான் தயார் அதே நேரம் பதிலைப்பெற நீங்களும் மரணித்து என்னுடன் வரத் தயாரா ? ஒருக்கால் பதிலைப் பெற்றாலும் யாரிடம் கொடுப்பீர்கள் ? எப்படி கொடுப்பீர்கள் ? ள்
ஐயா பதிலை உங்களிடம் பெறத்தான் வந்தேன் நீங்கள் என்னிடமே..?.
கேள்வி கேட்டால் அந்தக் கேள்வியில் பதிலெடுத்து கணை தொடுக்கும் சாமர்த்தியத்தை எதிராளிக்கு கொடுக்ககூடியவன் சாணக்கியன் அல்ல கேள்வி கேட்பது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவது போலவும் பதில் சொல்வது பச்சமரத்தில் ஆணியடிப்பது போலவும் இருக்க வேண்டும்.

நல்லது ஐயா மறுமுறை வரும்போது ஊசியோடு வருகிறேன் வணக்கம்.
நன்றி நானும் ஆணியோடு காத்திருக்கிறேன் தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ 

வாங்கி விட்டீர்களா ? மாதந்தோரும் வெளிவரும் தாமதம் மதத்தைப்பற்றிய ஓர் அலசல் பொய்மையின் எதிர்புறம். 

காணொளி

44 கருத்துகள்:

 1.  மதங்களைப்பற்றி உங்களுடைய கருத்து ? 

  மதம் என்ற விசயத்தை பிடித்து வாதம் செய்யும் போதே பிடிவாதம் என்ற சொல் இணைந்து விடுகிறது பிடிவாதத்திற்கு மருந்து இல்லை பிடிவாதத்தை நமது மனதால் மட்டுமே அகற்ற முடியும் அதைப்போல இந்த மதம் என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் மதம் என்ற விசயத்தை நம் மனதிலிருந்தே அகற்றப்பட வேண்டும் மதம் என்ற சொல் நம் வாயிலிருந்து உச்சரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், மதம் என்ற வார்த்தை நமது கையினால் எழுதப்படுவது மறக்கப்பட  வேண்டும்.....

  அருமையான பதில் இது.....
  என் பதில் என்ன என்றால்
  மதம் யானைக்குரியது
  அது மனிதனுக்கு பிடித்தால்
  தாங்கவே முடியாது....
  யானைக்குரிய மதத்தை மனிதன்
  எடுத்தால் அது அழித்தே விடும்
  வாழ்க்கையை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மதம் யானைக்கானதே மனிதன் அதைக்காண மட்டுமே வேண்டும் அதுவே மனிதனுக்கு அழகு.

   நீக்கு
 2. அன்பின் ஜி. உண்மையில் இப்படி ஒரு இதழ் வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.. அடுத்த இதழ் எப்போது?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தயாராகி கொண்டு இருக்கின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 3. அட! அசைபடத்தில் ஆரம்ப அறிவித்தல் கில்லர்ஜி சார் குரலிலா? அருமை. மதம் தான் உலகின் மிகக்கொடிய ஆபத்து, நாம் பயப்பட வேண்டிய அழிக்க முடியாத தொற்று நோயும் அதுவே!

  மதம் பிடிக்க வைக்கும் மதம் குறித்த நல்ல அலசல்.
  மறக்கப்பட வேண்டும் என சொல்லவும் அதை நினைவில் வைத்திருக்கின்றோம் தானே!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மறக்க வேண்டியதை நினைவில் வைத்து இருக்கின்றோம் உண்மையை சொன்னீர்கள்.

   நீக்கு
 4. காணொளியின் இறுதியில் சங்கொலி கேட்டேன் ,அது மதத்துக்கு ஊதும் சங்கொலியானால் மனித குலம் தளைக்கும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மதவாதிகள் சங்கு ஊதி ஒழிக்கப்பட வேண்டியவர்களே..

   நீக்கு
 5. பாராக்களுக்கு நடுவில் ஒரு இடைவெளி விட்டால் படிக்க வசதியாக இருக்கும் 8பது என் கருத்து. கருத்து தவறானால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மனிதனே தவறானால் இறைவனிடம்தான் முறையிடவேண்டும். சாணக்கியன் நல்ல மனிதன்தான். என்னுடன்தான் படித்தான். ஆனால் கொஞ்சம் கிறுக்குப் பிடித்தவன். அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகவேண்டும். இறைவனைப் பார்க்கப்போகும்போது சொல்லி அனுப்பவும். நானும் வருகிறேன். இதுக்கு மேல் என்னால் பிதற்ற முடியவில்லை. நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய (பிதற்றல்) பதிவுகள் போடுகிறீர்கள் என்ற ரகசியத்தை அடுத்த பதிவில் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவின் கருத்து அடுத்த பதிவுகளில் ஏற்கப்படும்
   சிந்தனை முற்றிய தருணங்களில் எழுதும் பதிவுகள் இப்படியாகி விடுகின்றன என்பது எமது கருத்து வருகைக்கு நன்றி ஐயா.
   வாங்கி விட்டீர்களா ? தா’’மதம்

   நீக்கு
 6. தேவையான கருத்துகளைக் கொண்டிருக்கும் பதிவு. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் நிலைதான் மரணத்துக்குப்பின் என்ன என்பதற்கான பதில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையே மரணத்துக்குப்பின் நடப்பது என்ன ? என்பதை பலவாறும் சொல்கின்றார்கள் மரணித்தவருக்கே விடை தெரியும் என்பது எமது கருத்து.

   நீக்கு
 7. தாமதம் பத்திரிக்கை தலைப்பும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 8. ஆகா
  அடுத்த இதழ் எப்போது நண்பரே
  தாமதம் ஆனாலும் பரவாயில்லை
  தாமதத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்
  நன்றி
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் ஒருநாள் வரும் நண்பரே ஆதரவுக்கு நன்றி.

   நீக்கு
 9. ஆரம்பமே நன்று. அடுத்த இதழுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் காத்திருப்புக்கும் நன்றி.

   நீக்கு
 10. அன்புள்ள ஜி,

  ‘உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
  நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
  அட போங்கடா போங்கடா போங்கடா....’

  காணொளி பாடல் அருமை. ஒன்று ஏழைச்சாமிகள். இன்னொன்று
  பணக்காரச் சாமிகள். ஆசாமிகள் தாமதிக்காமல் உணர்ந்து மதம் பிடிக்காமல் வாழ வேண்டும்.

  த.ம. 6


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும மணவையாரே நலம்தானே ? நிறைய பதிவுகள் இடைவெளியாகி விட்டதே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. வித்தியாசமான இதழ் .. தாமதம் ..

  பதிலளிநீக்கு
 12. மதம்
  கடவுளை அடைய வழிகாட்டும்
  ஆனால்,
  மதவாதிகள்
  தங்கள் மதத்தை அடைய வழிகாட்டுவர்
  நானோ
  தன்னம்பிக்கை இருந்தால்
  எதிலும் வெற்றி காண்பாய் என
  எல்லோருக்கும் வழிகாட்டுவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதை போன்று அழகாக சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 13. எம்மதமும் சம்மதமே தாமதம் மட்டும் வேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அருமையான சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு


 14. தங்களின் பதிவைப் படிக்கும்போது ‘பாவ மன்னிப்பு; என்ற திரைப் படத்தில் வந்த

  “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
  பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
  எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
  எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான்
  மனிதன் மாறிவிட்டான்
  மதத்தில் ஏறிவிட்டான்”

  என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. மதங்கள் மறைந்தால் பகைமை மறையும். அது நடக்குமா என்பது ஐயமே.


  தங்களின் பதிவுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரேஅருமையான பாடல் வரிகளை ஞாபகப்படுத்தினீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. பதிவைப் படித்ததும் சிந்தனை செய் மனமே என்று சிந்திக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 16. வணக்கம் ஐயா.சூப்பர் தலைப்பு ஏற்றவாறு தங்களின் பதிலும் கேள்விக் கேட்டவர் நிலைமையும் அருமை ஐயா.

  நானும் நினைவு தெரிந்த நாள் முதல் மதம் என்பது ஒன்றே கடவுள் என்பதும் ஒன்றே என்று தான் இருக்கிறேன் ஐயா.மதம் என்ற பேய் நம் மக்களிடம் பிடித்துக் கொண்டு ஆட்டி வைக்கிறது ஐயா.பள்ளியில் தொடங்கி எங்கிலும் மதம் தான்.

  சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு ஐயா.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது மிக்க நன்றி

   நீக்கு
 17. மதம் மக்கள்ளுக் அபின் என்பது முன்னோர் முதுமெழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவர் ஐயாவின் ஒற்றை வரிகள் அருமை நன்றி ஐயா.

   நீக்கு
 18. வணக்கம்
  ஜி
  கேள்வியும் பதிலும் சிறப்பு படித்து மகிழந்தேன் வாழ்த்துக்கள் ஜி. த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. பாட்டாளிகளின் ஆசான் தோழர் மார்க்ஸ் கூறியிருக்கிறார் நண்பரே...மதம் ஒரு அபினி..என்று..மதம் போதைக்கு சமமானது.

  பதிலளிநீக்கு
 20. என்ன ஆச்சரியம்! நகைச்சுவை போல
  கட்டுரை மாதிரி வெளுத்து வாங்குகிறீர்களே.
  இனி நல்ல கட்டுரைகளும் எழுத பாஸாகிவிட்டீர்கள்.
  வாழ்த்துகள் சகோதரா.
  நன்று..... நன்று.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களைப் போல் கவிதை எழுத வருவதில்லையே... வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 21. தினம் ஒரு தகவலாய், நிறையவே யோசிக்கின்றீர்கள்... அதனை திறம்பட எழுத்தில் எழுதி அனைவரையும் கவர்கின்றீர்கள் நண்பரே!

  சிந்தனை செய் மனமே!
  சிவகாமியின் அருளினால்
  தீவினை அகன்றிடுமே!
  நல்லோரின் சொல்லால்
  நாடும் நலம் பெறுமே!
  கில்லர்ஜியின் வார்த்தைக்கு
  பொல்லாத மறுப்புரையுமுண்டோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கவிதை வரிகளுக்கு நன்றி

   நீக்கு
 22. நாங்கள் தாமதம்..ஆனால் தா மதம் அல்ல...நல்ல கருத்துகளைப் பேட்டி வடிவில் சொல்லியிருக்கின்றீர்கள். மனிதன் மாறிவிட்டான் மதத்தின் மீது ஏறிவிட்டான். பழையபாடல் நினைவுக்கு வருகிறது...நல்ல பதிவு ஜி...அடுத்த மாதமும் வெளிவருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எல்லா மாதமும் பேட்டி வரத்தானே செய்கிறது

   நீக்கு