தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 16, 2016

விடாக்கண்டன்


இன்று காலை தேவகோட்டை பேரூந்து நிலையத்தில் சிலருடன் நமது விடாக்கண்டன்...

ஏங்க இந்த பஸ்ஸூ எங்கே இருந்து... வந்துச்சு ?
ஜெர்மனியிலிருந்து.
அங்கேயிருந்து... யேன் வந்துச்சு ?
பஞ்சர் பார்க்க.
யேன் அங்கே எல்லாம் பஞ்சர் பார்க்க முடியாதா ?
இங்கே வந்துதான் பஞ்சர் ஆச்சு.
அப்ப இந்த பஸ்ஸூ எதுக்கு வந்துச்சு ?
பஞ்சர் பார்க்க.
சரி டிரைவர் எந்த நாட்டுகாரரு ?
எந்த பாஸ்போர்ட் வச்சுயிருக்காரோ... அந்த நாட்டுக்காரரு.
அப்ப எந்த பாஸ்போர்ட் வச்சு இருக்காரு ?
அவரு எந்த நாட்டுக்காரரோ... அந்த பாஸ்போர்ட்.
ஹும்.. சரிதான் உன் பேரென்ன ?
பஞ்சாட்சரம்.
எந்த ஊரு ?
தேவகோட்டை.
நானும் இந்த ஊருதானய்யா ஏய்யா இப்படிக் கொல்லுறே ?
அப்படியாண்ணே... முன்னாடியே சொல்லக் கூடாது ?
அப்பாடா... சரி இப்பவாச்சும் சொல்லு இந்த பஸ்ஸூ எதுக்கு வந்துச்சு ?
பஞ்சர் பார்க்க.
அய்யோ ஆளை விட்றா சாமி எனக்கு நேரம் சரியில்லே...

விடாக்கண்டன் வேறொருவருடன்...

ஏங்க இந்த பஸ்ஸூ எங்கே போறது ?
எங்கே இருந்து... வந்துச்சோ அங்கே.
அப்ப எங்கே இருந்து வந்துச்சு ?
எங்கே இருந்து... போச்சோ அங்கே இருந்து.
அப்ப எங்கே இருந்து... போச்சு ?
இங்கே இருந்து...
? ... ?... சரி டிரைவர்ட்ட கேட்டுக்கிறேன் பஸ் எப்ப போகும் ?
டிரைவர் எடுத்தா ? இப்பவே போகும்.
எடுக்கலைனா ?
எப்பவுமே போகாது.
ஏய்யா நீ இப்படிப் பேசுறே ? சரி மணி என்ன ?
நேத்து இன்நேரம்.
...? சரி நேத்து மணி என்ன ?
இன்னைக்கு இன்நேரம்.
சரி இப்ப மணி என்ன ?
நேத்து இதேநேரம்.
காலையிலேயே.... ய்யேன்... ? சரி உன் பேரென்ன ?
நேசமணி.
எந்த ஊரு ?
தேவகோட்டை.
நானும் இந்த ஊருதானய்யா ஏய்யா இப்படி வறுக்கிறே ?
அப்படியாண்ணே... முன்னாடியே சொல்லக்கூடாது ?
எங்கே இருந்து... வந்துச்சோ அங்கே.
அய்யோ அய்யோ என்னை விட்றா சாமி நான் பஸ்ஸுல போகலே....

விடாக்கண்டன் மற்றொருவருடன்...

ஏங்க இந்த பஸ்ஸூ யாரு விட்டு ?
இந்த பஸ்ஸோட ஓனர் விட்டு.
சரி ஓனர் யாரு ?
இந்த பஸ்ஸ வாங்குனவரு.
சரிதான் நான் கேட்டுக்கிறேன் டிரைவர் எங்கே ?
ஹோட்டல்ல சாப்பிடப் போயிட்டாரு.
எந்த ஹோட்டலு ?
அவரு சாப்புடுற ஹோட்டலுக்கு.
ஏய்யா.. நீங்க எல்லோரும் எப்பவுமே இப்படித்தானா ?
இல்லே இப்படித்தான் எப்பவும்.
யாருய்யா நீ உன் பேரென்ன ?
பசுபதி.
எந்த ஊரு ?
தேவகோட்டை.
நானும் இந்த ஊருதானய்யா ஏய்யா இப்படி அறுக்கிறே ?
அப்படியாண்ணே... முன்னாடியே சொல்லக்கூடாது ?
அப்பாடா... சரி இப்பவாச்சும் சொல்லு இந்த பஸ்ஸூ யாரு விட்டு ?
இந்த பஸ்ஸோட ஓனர் விட்டு.
ஆளை விட்றா சாமி ஓட்டுப்போட அபுதாபியிலருந்து வந்தேன் பாரு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

விடாக்கண்டன் வேறொ.....

சிவாதாமஸ்அலி-
அய்யோ ஆளை விடுயா சாமி படிச்சது போதும்.

நான் அரசியல் பதிவுகள் கோபமாக எழுதுவதாக ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் கருத்துரையில் சொல்லி இருந்தார் சரி ஜனநாயக கடமையை நிறைவேற்றி அவர் மனதை சந்தோசப்படுத்துவோம் என்று இன்று காலை ஹெலிகாப்டரில் தி கிரேட் தேவகோட்டை வந்து இறங்கினேன் பூத்துக்கு சிட்டி பஸ்ஸில் போகலாம்னு போனால் அதுக்கு உள்ளூர்க்காரங்கே என்னை இப்படி சுற்றுல விட்டுடாங்கே கோபத்துல போங்கடா நீங்களும் உங்க ஓட்டும் அப்படினு சொல்லிட்டு அபுதாபிக்கு திரும்பி வந்துட்டேன் கில்லர்ஜி

45 கருத்துகள்:

 1. ஹாஹா!தலைப்பைப்பார்த்து ஊருக்கு போயிட்டிங்களோ என நினைத்து விட்டேன்!

  விடாக்கொண்டனிடம் மாட்டிக்காமல் தப்பி விட்டீர்கள் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதான் சொன்னோம்ல ஊருக்கு வந்துட்டு திரும்பிட்டோம்னு...
   ஒருநாள் லீவுல வந்ததால அவங்கே தப்பிச்சுட்டாங்கே...

   நீக்கு
 2. ஏங்க இப்படி? ஐயா....ங்!

  பதிலளிநீக்கு
 3. விடாக்கண்டன் பலே ஆளுதான்! நான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நிறைவேற்ற முடியலையே.... நண்பரே...

   நீக்கு
 4. ஆஹ்ஹா! விடாக்கொண்டன்கள் நிறையபே பேர் இருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ஒருநாள் தேவகோட்டை வந்து பாருங்க..

   நீக்கு
 5. பாவம் நீங்கள்.....ஆனால் நகைச்சுவையான அனுபவம் அல்லவா??

  பதிலளிநீக்கு
 6. ஆஹா தங்களையே சுற்றுல விட்டாங்களா..!!! கடைசியில் ஓட்டு போட்டீங்களா..??இல்லையா..?? ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே போட அதான் ஹெலிகாப்டர் திருப்புடானு சொல்லிட்டேனே....

   நீக்கு
 7. தேவகோட்டையில் ஒட்டு சதவீதம் குறைஞ்ச காரணம் இப்போதானே தெரியுது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி ஒரு ஓட்டுகூட சிலரை கவிழ்த்தி விடுமே... வியாழக்கிழமை தெரியும் நம்மலோட அருமை...

   நீக்கு
 8. ஓட்டுப் போட வந்து, திரும்பியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. தேவ கோட்டை பே...பே ருந்து நிலையத்திலா...இவ்வளோ நீளமான பஸ்சு.... மாட்டுத்தாவனியில..இந்தப் பஸ்ஸ நான் பாக்கலையே.... கொடாக்கண்டன் இருந்தா .....சூடு பிடிச்சிருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டையில இந்த மாதிரி நிறைய பஸ்ஸூ ஓடுது நண்பரே...

   நீக்கு
 10. நகைச்சுவை பதிவை ரசித்தேன் சகோ.

  பதிலளிநீக்கு
 11. நலமா சகோ?

  நன்றாக சிரிக்க வைத்துவிட்டீர்கள் :)))))))))

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள ஜி,

  விடாது கருப்பு...!

  நன்றி.

  த.ம. 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே நலம்தானே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. பாவம்யா விடாக்கண்டன்
  யாரு வாட்டி வதச்சாங்களோ...!
  எனக்கு என்னமோ இந்த
  மீசை கில்லர்ஜி நண்பர்
  மேலதான் டவூட்டா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவர்கள் சுற்றுல விட்டதே என்னைத்தானே...

   நீக்கு
  2. சரிதான் .....
   உங்கள போய் எப்படி...?
   உங்கள பாத்தா பாவமா இல்லையா...!!!

   நீக்கு
 14. ஒரு வாக்கை இப்புடி அநியாயத்துக்கு வீணாக்கிட்டீயளே!...

  அது சரி.. எலிகாப்டருக்கு பெட்ரோல் செலவு யாரோடது?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி வேறு யாரு.... நம்ம மோ(ச)டியார்தான்...

   நீக்கு
 15. நல்ல நகைச்சுவை பதிவு.

  பதிலளிநீக்கு
 16. ஹாஹாஹா, விடாக்கண்டனா, கொடாக்கண்டனா? எதுவும் தகவல் கொடுக்கலைங்கறதாலே, கொடாக்கண்டன் தான் சரினு நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 17. பாவம் அந்த பஸ் எப்ப போகும் வெளியால[[

  பதிலளிநீக்கு
 18. உங்களுக்கே இந்த நிலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி

   நீக்கு
 19. உங்களைக் கடைசில ஓட்டுப் போட விடவில்லைனு சொல்லுங்க விடாக்கண்டன்..சரி ஜனநாயகக் கடமை ஆற்ற வந்தவர் இதற்காகப் பயந்து கொண்டு ஓடலாமோ?!!!! ஹஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுநாள் டூட்டிக்கு செல்ல வேண்டுமே...

   நீக்கு
 20. விட்ட இடம் தொட்ட இடமென
  விடாக்கண்டன் விடமாட்டான் போல
  நன்றே அலசுகிறீர்

  பதிலளிநீக்கு
 21. விடாக்கண்டனை விடாது தொடர்ந்தேன். நல்ல நகைச்சுவை. அடுத்து கொடாக்கண்டன் வருவார் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தொடர்ந்து வருவதற்கு நன்றி

   நீக்கு