தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 03, 2016

வியாழன் முதல் நானும் ரௌடிதான்...


I.A.S அலுவலர்கள் என்று சொல்கிறார்களே அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு ஓராண்டுக்கு மேல் படித்து இந்திய அரசு நடத்தும் இரண்டு நிலை தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று பின்னர் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அதையும் இந்தியாவின் எங்கோவொரு மூலையில்தான் கலெக்டர் வேலை செய்ய வேண்டுமாம் தனது மாவட்டத்தில் கலெக்டர் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கும் சிறப்பு பரிட்சைகள் இருக்கின்றதாம் திரைப்படங்களிலும், தொல்லைக்காட்சி தொடர்களிலும் வேண்டுமானால் அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து சொந்த மாவட்டதிலேயே கலெக்டராக வருவார்கள் என்பது வேறு விடயம் சராசரி மனிதர்கள் இப்படி எல்லாம் குட்டிக்கரணம் அடித்துக் காண்பித்து வேலையில் சேர்கின்றார்களே எதற்காக ? சம்பளத்துக்காகத்தானே... எல்லா வேலைக்களுக்குமே சம்பளம் என்பது கண்டிப்பாக உண்டு இந்த வேலையில் ஒரு பெருமை இருப்பதாக சொல்கின்றார்கள் இதை மறுப்பதற்கு இல்லை இவர்களுக்கு அப்படியென்ன ? பிரமிப்பான சம்பளம் கொடுத்து விடுவார்கள் ? எனக்கு சம்பளத்தின் புள்ளி விபரம் தெரியாது இருப்பினும் இவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை வைத்து இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஓரளவு கணித்து விடலாம்.

காரணம் நம்முடன் இணைந்தே வாழும் மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஐ.பி.எஸ் போன்ற பல உயரிய அதிகாரிகள் இவர்களின் வாழ்வாதாரம் போலவேதான் இந்த கலெக்டர்களுக்கும் இருக்கின்றது பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை உண்மைதானே நண்பர்களே... இப்பொழுது பதிவின் விடயத்துக்கு வருவோம்.

அதாவது இவ்வளவு படிப்பவர் இந்தியாவை ஆள்வதற்கு அல்ல ! இந்தியாவில் இருக்கும் மாநிலத்தை ஆள்வதற்கு அல்ல ! ஒரு மாநிலத்துக்குள் இருக்கும் சுமார் 25 முதல் 30 வரையிலான மாவட்டம் இருக்கின்றது அல்லவா ! இதிலொன்றை ஆள்வதற்கு மட்டுமே இவர் ஆட்சியாளர் என்று அழைக்கப்படுகிறார் அதே நேரம் இந்த பரந்து விரிந்த இந்தியாவையோ, மாநிலத்தையோ ஆள்வதற்கு படிப்பறிவு தேவையில்லையாம் இதில் இவர்கள் முன்னொரு காலத்தில் ரௌடிகளாக இருந்தாலும் தப்பில்லையாம் இப்படி எல்லாம் சட்டத்தை வகுத்தது யார் ? நமக்கு முன்னாள் சட்டத்தை வகுத்தவர்கள் மிகப் பெரியவர்கள் என்பதால் தவறுகளை இல்லை என்று சொல்ல முடியுமா ? ஒரு காலத்தில் மடாதிபதியாக இருந்தவர் என்பதற்காக இன்று கொலைகாரன் இல்லை என்று சொல்ல முடியுமா ? 

கொலை செய்தவன் கொலையாளிதான் வேண்டுமானால் ஆங்கிலத்தில் KILLER என்றும் சொல்லலாம் காலம் கூடும் பொழுது எல்லோருமே பெரியவர்களே... இன்றைய நிலவரப்படி நானும் கூடத்தான் உலகம் தெரியாமல் குழந்தை மாதிரி இருக்கேன் இன்னும் 50 வருடம் கழிந்தால் (?) நானும் பெரியவர்தானே சரி அது கிடக்கட்டும் ஒரு மாவட்டத்தை ஆள்வதற்க்கே இவ்வளவு படிப்பு அவசியம் என்றால் ? இந்தியாவை ஆள்வதற்கு இதைவிட எத்தனை மடங்கு அதிகம் படிக்க வேண்டும் இதைவிடக்கூத்து என்ன தெரியுமா ? ந்தப் படிக்காத கூமுட்டைகள் ஓட்டுப் பொறுக்க வரும் பொழுது இவ்வளவு படித்தவர் அவுங்களுக்கு சல்யூட் வைக்க வேண்டுமாம். 
என்ன கொடுமை சரவணன் ? 
முன் ஜாமீன் வாங்கி வைத்துக்கொள்ள நமது நாட்டில் சட்டம் இருக்கின்றது அதிகம் எல்லாம் நாம் சிந்திக்க வேண்டாம் சிறிதாக சிந்திப்போமே முன்ஜாமீன் வாங்கும் பொழுதே அவன் தவறு செய்ய ஆயத்தமாகின்றான் என்றுதானே பொருள் அப்பவே அவனை லாக்கப்புல தூக்கிப்போட்டு நம்ம நண்பர் திரு. கும்மாச்சியை விட்டு நாலு கும்மு கும்முனா.... என்னங்கையா... இது ? இடுப்புல கிள்ளுனேன் காதுல ஊழை வடியுதுனு சொல்ற மாதிரி இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்களே அது மாதிரிதான் இருக்கு.

நட்பூக்களே... இந்தப்பதிவின் மகத்துவமே இனிதான் சொல்லப் போகிறேன் நான் I.A.S படிக்காததின் காரணம் உங்களுக்கு தெரியுமா ? எதற்காக இவ்வளவு செலவு செய்து படிக்கணும் நாங்க நினைச்சிருந்தா... இந்நேரம் தேவகோட்டையை மாவட்டமாக்கி கலட்டி இருப்போம் சாரி... கலெக்டராகி இருப்போம் நாங்க ப்ளான் போட்டுத்தான் படிப்பை நிறுத்துனோம் வர்ற வியாழக்கிழமை சாயங்காலம் 3.40 முதல் நானும் ரௌடியாகப் போறேன் நாங்களும் சின்ன வயசுல டீக்டையில் இரண்டு நாள் வேலை செய்திருக்கோம் தெரியும்ல.

சிவாதாமஸ்அலி-
வில்லங்கத்தார் கடவுளை காணவில்லை பதிவு போட்டதிலிருந்து இவரும் ஒரு மார்க்கமாகத்தான் எழுதுறாரு... இவரைச் சொல்லி குற்றமில்லை உசுப்பேற்றி விட்டு தலைப்பா கட்டிய அந்த ஆளுகளைச் சொல்லணும்.

சாம்பசிவம்-
வியாழக்கிழமை முதல் வியாழ நோக்கம் வருதுனு சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து சொல்லி இருப்பாரோ ?

Chivas Regal சிவசம்போ-
அவரு பேச்சைக் கேட்டால் ? 16-ம் பெற்று தெருவில் விற்று’ போகணும்.

50 கருத்துகள்:

 1. சிந்திக்க வைத்துவிட்டீர்கள் ஜி! தேர்தல் முடியட்டும் தெரியும். ஐ.எ.எஸ். கும்புடுராங்களா இல்ல இடுப்ப வளைச்சி கால்ல உளுகராங்களான்னு..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் முதலில் வருகை தந்தமைக்கு நன்றி பார்க்கலாம் நண்பரே எப்படியென்று ?

   நீக்கு
  2. உடம்பு 90 டிகிரி வளையுது அதற்கும் கீழே...நேற்றிலிருந்து....

   நீக்கு
 2. அதென்ன வியாழக்கிழமையிலிருந்து ரௌடி. நான் உங்களுக்குப் பட்டம் அளிக்கிறேன். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் ரௌடிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயா ஏதோ விருது கொடுப்பது போல அறிவிச்சுட்டீங்களே... இருந்தாலும் அன்புடன் ஏற்றேன் நன்றி.

   நீக்கு
 3. அன்பரின் பதிவு ஆழ சிந்தனைக்கு ஆழ்த்தி விட்டது....
  அந்த அளவு சிந்திக்க திறன் இருந்தால் நானும்
  கலட்டியிருப்பேன் ச்ச்ச்சை கலக்டர் ஆகிருப்பேன்...
  நான் இப்பவே ரவுடிதான், வாங்க நட்பரே தங்களுக்கு
  என் ஆதரவும் வரவேற்பும் என்றும் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரௌடியானதற்கு ஆதரவு எதற்கு ? நாளை நான் பெரிய தா(த்)தாவாகி 86 அடி உயரத்திலிருந்து அரசியலில் குதிப்பேன் அப்பொழுது தாருங்கள்

   நீக்கு
  2. தாத்தாவோ,தாதாவோ என் ஆதரவு
   உங்களுக்கே நண்பரே...

   நீக்கு
 4. இப்பதிவைப் பார்த்ததும் வியாழக்கிழமைக்கு முன்பாக இப்பொழுதே ஆகிவிட்டதுபோலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே அவ்வளவு அட்டூழியமாகவா இருக்கு... ? இருந்தாலும்,
   ‘’ஹாரன் வரும் முன்னே
   ஆம்புலன்ஸ் வரும் பின்னே’’
   இல்லையா ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. அடடா...தேவகோட்டை ஒரு நல்ல கலெக்டரை இழந்து விட்டதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நீங்க உள்ளூர்க்காரவங்க என்பதால் நியாயமாக வருத்தப்படுறீங்க.... நன்றி.

   நீக்கு
 6. நல்ல கருத்து. அருமை.

  பதிலளிநீக்கு
 7. வியாழக்கிழமை வரைக்கும் தாங்காது..

  இன்றைக்கு செவ்வாய்க்கிழமை..
  வெட்டு குத்து இதற்கெல்லாம் நல்ல நாள்...

  இன்றைக்கு சாயங்காலமே ரவுடியாகி -
  நாலு பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வையுங்கள்!..

  நல்வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ‘’செவ்வாயே வெறுவாய்’’ன்னு சொல்லுவாங்களே... அதான் யோசிக்கிறேன் இருப்பினும் தாங்கள் சொல்லிட்டீங்களே... பக்கத்து ப்ளாட் மிசிரி ரொம்ப காலமாகவே மீசையைப் பார்த்து முறைக்கிறான் ஜி அவனை இன்றைக்கு ஒரு வழி பண்ணுறேன்.

   நீக்கு
  2. இன்றைக்கு ஒரு கொலை விழும் என்று எதிர் பார்கலாம்...!!!

   நீக்கு
  3. ஆம் நண்பரே இப்பத்தான் கோடரியை சாணை பிடித்தேன்.

   நீக்கு
 8. நானும் ரவுடிதான் என்று சொல்லப் போகும் வியாழனுக்காக காத்திருக்கிறேன்.

  த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நலமா ? அதான் வியாழக்கிழமைதான் அறிவிச்சாசுல.. வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. ரௌடிகள்..ராச்சியமா...!!!! அப்போ..அஞ்சு வருசமா இருந்தது...?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே காலம் முழுவதும் ரௌடிகள் சாம்ராஜ்ஜியம்தானே...

   நீக்கு
 10. ரௌடி ஆகவுமா நாள் நட்சத்திரம் ,அதென்ன வியாழக் கிழமை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி என்னோட பெயர் ராசிக்கு வியாழக்கிழமைதான் நல்லது’’னு சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்லி இருக்காரு....

   நீக்கு
 11. ஒரு காலத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியதாக இருந்த ஐஏ எஸ் எல்லாம் இப்போது மதிப்பிழந்து விட்டதே! இதுக்காக நீங்க ரௌடி எல்லாம் ஆகவேண்டாம்! அது சரி, வியாழக்கிழமை நல்ல நாளா? வெள்ளியன்னிக்குத் தான் அமாவாசை, நிறைஞ்ச நாள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எங்க குடும்ப சோசியர் குறிச்சுக் கொடுத்தது இப்படித்தான் அவரு சொல்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு அவரு சொல்லித்தான் ஏற்கனவே ஒருமுறை வெட்டிப் போட்டேன் வேப்பமரத்திலிருந்து...

   நீக்கு
 12. சகோ, நான் வாழ்க கோஷ்ம் போடுகிறேன். பொறுப்பு உண்டுல,,

  நகைச்சுவை எனினும் உண்மைதான் சகோ,,

  பதிலளிநீக்கு
 13. வியாழக்கிழமை ஒரு ரெளடி உதயமாவதை பார்க்க போகிறது இந்த உலகம். இவர் நல்ல ரெளடி நல்லது செய்வார் என்று எதிர்ப்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ ரௌடியில் நல்ல ரௌடியும் உண்டா ? ஹி ஹி ஹி

   நீக்கு
 14. நல்ல கலேட்டர் ஒருவரை நாடு இழந்துவிட்டது! ஹீ ஒரு மார்க்கமாகத்தான் இப்ப பதிவுகள் . தேர்தல் முடியட்டும்[[[

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா தேர்தல் முடியட்டும் என்று சொல்வது அரசியல்வாதியின் வார்த்தை போலவே இருக்கின்றதே...

   நீக்கு
 15. கலெக்டர் ஆவதை விட ரௌடி ஆவது லாபகரமானது கலெக்டரானால் புறங்கையில் வழிவதைத்தான் நக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இன்றைய அரசியல்வாதிகள் வீட்டில் கோடிகள் புரளுகின்றது அவர்கள் முன்னாள் கேடிகள்தானே.... சரியாக சொன்னீர்கள்.

   நீக்கு
 16. சிந்திக்க வைக்கும் பதிவு. அருமை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ வருகைக்கு நன்றி அபி நலமா ?

   நீக்கு
  2. அபி நலமாக இருக்கிறான். அவனோடு நாங்கள் இருப்பது நேரம் போவதே தெரியவில்லை. நாங்கள் செப்டம்பர் மாதம் தான் இந்தியா வருவோம்.

   நீக்கு
  3. வருக சகோ நல்லது தேர்தல் அமளி எல்லாம் முடிந்தவுடன் வாருங்கள் நன்றி

   நீக்கு
 17. இன்றைய நிலையில் கஷ்டப்பட்டு படித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூட ஆகிவிடலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் திடீரென ரௌடி ஆகி விடமுடியாது. எனவே மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தாதீர்கள். மூட்டைப்பூச்சியை (ஊழல் அரசியல்வாதிகளை) ஒழிக்கப் பாடுபடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மாறுபட்ட நல்லதொரு கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி முயல்வோம்.

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  நாடு விடுதலைக்குப் பின்பு... காமராஜர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ மாவட்ட ஆட்சியருக்கு இந்த இழி நிலை இருந்ததில்லை. அதற்குப் பிறகுதான்... அரசியல் தொண்டல்ல... பிழைப்பு... கொள்ளையடிக்க எளிய வழி... ஆட்சியர் பகடையாக ஆகிறார்கள்... ஆக்கப்படுகிறார்கள்! திருமிகு. சகாயம் போன்றோர் இருந்தால்... அவர் போராட வேண்டியிருக்கிறது. ஆடையில்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரனாகத் தெரிகிறான்.

  த.ம.11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே நல்ல விடயங்கள் சொன்னீர்கள் உண்மைதான் நல்லவர்கள் வாழ்வதற்கு எதிர் காலத்தில் வழிகள் அடைபடும் நிலைதான் வரும் போல தெரிகின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. அரசியல் தானே!.... சகோதரா....!
  எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.
  மகளை பார்க்க இலண்டன் சென்று வந்ததால் தாமதம்..
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ லண்டனில் அனைவரும் நலம்தானே..... வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. நல்லதொரு கேள்வியைக் கேட்டிருக்கின்றீர்கள்....நாங்கள் அடிக்கடிச் சொல்லிக் கொள்ளும் ஒன்று. ஏன் படித்தவர்கள் நாட்டை ஆள வருவதில்லை என்று...ஆனால் காமராசர் இல்லையா? அவரைப் போல யார் இப்போ? இப்போது படித்தவர்களே ஊழல்தானே செய்கின்றார்கள்....றன் சகோக்கள்...இங்கு.. படித்தவர் படிக்காதவர்கள் என்பதை விட நீங்கள் சொல்லுவது போல் ரௌடிகளுக்குத்தான் கோட்டை...ஹும் என்ன சொல்ல..

  அது சரி வில்லங்கத்தார் அழகாகக் கொடுத்த பிரதமர் போஸ்டை தக்க வைத்துக் கொள்ளாமல் ரௌடியானால் எப்படி ஜி??!!ஹஹஹ்ஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரௌடியானால்தானே பிரதமர் ஆகமுடியும்.

   நீக்கு