தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 23, 2016

மலைத்தமிழன் Weds மாலைத்தமிழன்


யேண்டி, மோகனா உன்னோட காதலரை ஏன் கழட்டி விடணும்னு சொல்றே ?
பின்னேயென்ன... தியேட்டருப் போனால் திரையிலே வணக்கம் போடும்வரை திரையை விட்டு தலையை திசை திருப்ப மாட்றான்...

அப்படினா யூஸ்லெஸ்னு சொல்றே...
ஆமாடி வேற எவனும் மாட்டினால்... சொல்லு ஆமா புதுசா புடிச்சியே உன் ஆளு எப்படி ?

ய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... சரி நம்ம வேதமூர்த்தி சும்மாதான் திரியிறானாம் சொர்ணா சொன்னாள்.
அவன் சரியா வரமாட்டான் சினிமாவுக்கு கூப்பிட்டாலும் ராகுகாலம் பார்ப்பானாம் நம்ம கனிமொழி கழட்டி விட்டது அதுனாலேதானே...

அப்ப ஸெகண்ட் இயர் படிக்கிறானே... மலைராசுவைப் பாரேன்..
அவன் மலை முழுங்கியில10 பைசா நகட்ட மாட்டானே...

உனக்கு எப்படித்தெரியும் ?
ஃபர்ஸ்ட் வருசத்துல இதுக்குத்தானே கழட்டி விட்டேன்.

கார்மேகத்தைப்பத்தி என்ன நினைக்கிறே ?
அவன் பேருக்கேத்த மாதிரிதான் இருக்கான் பகல்லயே தெரிய மாட்றான் இருட்டுல எப்படியிருப்பான் நீயே நினைச்சுப்பாரு.. ?

யேண்டி டைம்பாஸுக்குத்தானே....
அவன்தான் டைம்பாஸுக்கு கூட வேஷ்டுனுதானே வேணி கழட்டி விட்டாள்.

என்னடியிது உன்பாடு இப்படியாகிப் போச்சே... ச்சே
சரிடீ... உன் ஆளைப்பற்றி சொல்லவே இல்லை ?

ய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... நம்ம ராமமூர்த்தியை ட்ரைப் பண்ணிப்பாரேன்...
அவன் நம்மளையே நாமம் போட்டவனாச்சே...

சரி கோதண்டத்தை புடியேன்.
அவன் தண்டோராக் கிராக்கியாச்சே... நம்ம கோகிலாதான் எல்லாத்தையும் சொன்னாளே...

நம்ம தங்கமணி....
அவன் பேரு மட்டும்தான் அப்படி ஈயம் பூசக்கூட வழியில்லை.

சரி பூதப்பாண்டி நல்லா டிப்-டாப்பா இருக்கானே...
அவன்தானே... பூமிகாவை போண்டியாக்குனவன்.

அரியநாயகம் வெயிட்டான பார்ட்டி அவனைப்புடியேன்.
ஹூம் நல்ல ஆளைச்சொன்னே பாரு அவனே காலையில கண்மாயில.. சுத்திசுத்தி வந்து அரிசி பொறக்குறவன் வெளங்குனாப்பலதான்.

தாமரைக்கண்ணன்...
அவனே ஒரு தரை டிக்கெட்டு அவனைப்போயி.... சரி உன்னோட ஆளைப்பத்திதான் சொல்லேன்.

அடியேன்டி ஃபேஸ்புக்குல மலைத்தமிழன் அப்படினு வெளிநாட்டு பார்ட்டியைப் புடிச்சேன்.
ஃபேஸ்புக்லயா அதுவும் வெளிநாடு பார்ட்டியா ? இதுல உனக்கு வருமானம் எப்படி வரும் டைம் பாஸ்தான் ஆகும்.

ஆமாடி காதும், காதும் வச்சது மாதிரி லம்பா அடிக்கலாம் அப்படினு நினைச்சுத்தான் ஜாய்ண்ட் செய்தேன் அது என்னடானா... பிராடு பிச்சை முத்துவா.. இருக்கு.
சரி என்னதான் ஆச்சு ?

இரண்டு மாசமா வண்டி லைன்ல நல்லாத்தான் ஓடுச்சு டக்குனு கொலுசு தொலைஞ்சு போச்சு அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க உடனே வாங்கனும்னு மெஜேச்ல பிட்டைப் போட்டேன்.
சரி பார்ட்டி ட்ராப்ட் அனுப்புச்சா ?

அதையேன் கேட்கிறே கொலுசுதானே.. உன்னோட கம்மலை அடகு வச்சு வாங்கிக்க... இந்த மாசம் சம்பளம் வந்ததும் உனக்கு வெஸ்டர்ன் யூனியன்ல  20000 ரூபாய் அனுப்புறேன் மறுநொடியே வாங்கிகிறலாம் உடனே கம்மலை திருப்பிக்க அப்படினு சொல்லுச்சு.
அடகு வச்சியா ?

எனக்கு அடகு கடையெல்லாம் போயி பழக்கம் இல்லைனு சொன்னேன், அப்படினா... என்னோட ஆளு ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன் அவன் கிட்டே கொடு அவன் பணம் தருவான் இந்த மாசசம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிட்டேன் அதனால அடுத்த மாசம் சம்பளம் வாங்கவும் 31ம்தேதி 20000 ரூபாய் அனுப்பி வக்கிறேனு சொல்லுச்சு சரி பின் வாங்குனா.. பார்ட்டி தப்பா நினைச்சுடும் நமக்குத்தான் சொளையா 20000 ரூபாய் வருதே அப்படினு என்னோட செல் நம்பரையும் கொடுத்தேன்.
அப்புறம் என்னாச்சு ?

ஒருத்தான் கால் பண்ணுனான் இந்த மாதிரி ஃபேஸ்புக் நண்பர் மலைத்தமிழன் 4000 ரூபாயை கொடுத்துட்டு கம்மலை வாங்கிக்கிற சொன்னாருனு சொன்னான் சரி வா அப்படினு சொன்னேன் மாவுடியான் மாதிரி இருந்தான்.
கம்மல் எவ்வளவு கொடுத்தியா ?

ஆமா... ½ பவுனு மறுவாரமே ஃபேஸ்புக்ல பார்த்தால் அதே ஐ.டியிலே பெயர் மாறியிருக்கு..
எப்படி ?

மாலைத்தமிழன் அப்படினு... ப்ரொப்ஃபைல் போட்டோவும் அட்ரஸும் மாறி ஒரு புறா பறக்குது உடனே எனக்கு போண் செய்தவன் செல்லுக்கு அடிச்சா இந்த நம்பர் நிலுவையில் இல்லைனு சொல்லுது.
அப்புறம் என்னாச்சு ?

அவன் வெளிநாடே இல்லை பொய் சொன்னது போலவே உண்மையாகவே கம்மல் தொலைஞ்சு போச்சுனு அம்மாகிட்டே சொல்லி வாங்கி கட்டிக்கிட்டேன்.
இது எப்போ நடந்துச்சு ? எங்கிட்டே சொல்லவே இல்லை.

ஜனவரி மாசம், இப்பவும் நாலும் மாசம் ஆச்சு.
யேன்டி ஜனவரி மாசம் சொன்னவன் அடுத்த மாசம் 31ம் தேதி பணம் அனுப்புறேன்னு சொல்லியிருக்கான் பிப்ரவரியில ஏதுடி ? 31

? ? ?
சரி அவனோட பழைய ப்ரொப்ஃபைல் போட்டோ இருக்கா ?

ம் செல்லுல முன்னாடியே எடுத்து வச்சேன் இதோ பாரு...


ஹூம்... சரிதான் மொட்டையடிச்சது உனக்கும்தான்.

52 கருத்துகள்:

 1. இதெல்லாம் எப்படித் தெரியும் உங்களுக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு தடவை பஸ்ஸில் போகும் பொழுது 2 பெண்கள் பேசியதை ஒட்டுக்கேட்டேன் ஐயா

   (ஹையா.... தப்பிச்சுட்டேன்)

   நீக்கு
 2. ஆகா
  அது நீங்கதானா
  ரசித்தேன் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஃபோட்டோ மட்டும்தான் நான்......

   நீக்கு
 3. என்னது?... காத்தவராயன் தப்பிச்சிட்டானா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அவன்தான் காத்துல பறக்கிறவனாச்சே...

   நீக்கு
 4. காலம் மாறிப் போச்சு

  பதிலளிநீக்கு
 5. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது
  எல்லாமே
  கில்லர்ஜி அறிவார்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க தாத்தா என்ன இப்படி சொல்லிட்டீங்க......

   நீக்கு
 6. நீங்கதான் கில்லர்ஜி ஆச்சே,அந்த கொலைத்தமிழன் வேறு யாரோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சைபர் க்ரைமில் புகார் கொடுக்கவேண்டும் ஜி

   நீக்கு
 7. ஹிஹிஹிஹி, நல்லா இருக்கே! நல்ல கற்பனை வளம்!

  பதிலளிநீக்கு
 8. ச்சே என்ன ஜி சிவாஸ், தாமஸ் அலி கமென்ட் எல்லாம் இல்லாம ஒரு பதிவு...ஹஹஹ் மலைத்தமிழன்-மாலைத்தமிழன் எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே!!! நம்ம கில்லர்ஜியா அது!!! சரியா பார்த்துச் சொல்லுங்க...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த தமிழனை மாலைநேரங்களில் இணையத்தில் காணலாம்.

   நீக்கு
 9. தமிழ்மணம் வந்துச்சா இல்லையா...அது சரி ஓட்டு வர லேட்டாகும்..இங்க ஆட்சி பதவியேற்பு இல்லையா....ஸ்டிக்கர் ஒட்டின வண்டிங்க, கொடி பறக்கும் வண்டிங்கனு ஒரே ட்ராஃபிக் ஜாம் தகிக்கும் வெயிலில்...அவங்க மட்டும் குளிர் அறையில்....ஏழைங்க வந்துருக்காங்க பாருங்க வேகும் வெயிலில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அவங்க காரணத்தோடு ஏசி ரூமில் இருக்காங்க... இவங்களுக்கு ஏன் இந்த வேலை எலிதான் எள்ளுக்கு காயுது எலிப்புழுக்கை எதற்கு காயணும்

   நீக்கு
 10. உன் ஆளைப்பத்தி சொல்லவே இல்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தாலும் ஏதும் சொல்லாமல் தப்பித்த உஷார் பார்ட்டி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உஷாரான பேர்வழிதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. மலைத்தமிழன் ரொம்ப கில்லாடியா இருக்காரே! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவன் மலைமுழுங்கி மகாதேவன் மகனாயிற்றே....

   நீக்கு
 12. கில்லர் கொன்னுட்டிடிங்க.... சூப்பர் பதிவு.

  அந்த போட்டோல இருப்பவரை எங்கேயோ பார்த்திருக்கேன்.

  வாசக "பெண்"மணிகளே..."பொன்" மணிகளே....... உஷார்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கழக பெண்மணிகளிடம் கலகத்தை உண்டு பண்ணுவது போல் இருக்கின்றதே...

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாங்க நண்பா ‘’பீப்’’ விளங்கி விட்டது ஆனால் சொல்ல வருவது..... ?

   நீக்கு
 14. ஆகா..ஆகா... பேஷ் ...பேஷ்.... ரெம்ப உன்னிப்பா...கேட்டு இருக்கிங்க... ...

  பதிலளிநீக்கு
 15. ஐயா மீசைய பாருங்கைய்யா
  எனக்கு அந்த மீசை மேல
  ஒரு கண்ணுயா....

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள ஜி,

  ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...’ மாலை தமிழன் மலை முழுங்கி ஆசாமிபோலத் தெரியுதே...!

  த.ம. 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் பயக்க வயக்கமே இப்படித்தான் மணவையாரே...

   நீக்கு
 17. படிக்க ஆரம்பிக்கும்போதே நீங்களாகத்தான் இருக்குமென்று நினைத்தேன். சரியானது என் நினைப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே ஃபோட்டோ கிடைக்காமல்தான் இதைப்போட வேண்டியதாகி விட்டது பதிவில் வருபவன் நான் அவனில்லை.

   நீக்கு
 18. தங்கள் கற்பனையே அலாதி தான்,,, சகோ

  பதிலளிநீக்கு
 19. .
  தன்னையே கதையின் நாயகனாக்கி கலாய்க்கும் கலை, தங்களைவிட்டால் வேறு யாருக்கு வரும்? பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 20. பதிவ படிக்கும் போது உண்மையாவே இரண்டு பொண்ணுங்க பஸ்சுல நம்ம பக்கத்துல நின்னுகிட்டு பேசிகிட்டு வர்றமாதிரியே ஒரு அசரீரீ கேட்குது, ஹாஹாஹாஹாஹாஹ அருமையான காமெடியான இன்றையதலைமுறை டிரெண்ட் பதிவு,

  பதிலளிநீக்கு