தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, நவம்பர் 13, 2016

நன்றியுணர்வு

நன்றியுணர்வு தமிழனுக்கும், அரேபியனுக்கும் உள்ள வித்தியாசம்

அரேபியன்
உதட்டளவில் ஆயிரம் முறை சொல்லி விட்டு உடனே மறந்து விடுவான்.

தமிழன்
பெரும்பாலும் சொல்வதில்லை நன்றியை உள்ளத்தில் நினைத்து விட்டால் கடைசிவரை மறக்க மாட்டான்.

46 கருத்துகள்:

  1. அப்படிங்கறிங்க?

    நீங்கள் சொன்னால் சரிதான்! உதட்டளவிலாவது அவன் நன்றி சொல்ல நினைப்பதும், நம்மாட்கள் செய்த நன்மைக்கு நன்றி சொல்லாமல் விட்டாலும் பரவாயில்லை ஏறிய படிக்கட்டுக்களை மறந்து விடுவதும் உண்டே? நன்மைக்கு தீமை சொல்வோரும் செய்வோரும் தானே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புள்ளை ரொம்பநாளா வெளிநாட்டில் இருக்கு இனிமேதானே இங்கே வரணும்

      நீக்கு
    2. வருக தங்களது கருத்து உண்மையே இருப்பினும் சதவீத அடிப்படையில் நான் சொல்வதே நடைமுறை உண்மை.

      நீக்கு
    3. வருக தோழர் இதோ புறப்பட்டன்ன்ன்ன்ன்ன்.

      நீக்கு
    4. ம்ம் ஆனால் கில்ல்லர்ஜீ சாரை விடவும் அதிக காலம் நானும் வெளி நாட்டில் இருந்தும் என் அனுபவம் தான் சொன்னேன். 27 வருடங்கள் என்பது சும்மாவா?

      நீக்கு
    5. சதவீத அடிப்படையில் நீங்கள் சொல்லும் உண்மை என்பது நீங்கள் இன்னும் உலகத்தில் ஒரு பாதியை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது. இக்காலத்தில் நானும் நீங்களும் நம்மைப்போல் சிலரும் தான் இந்த நன்றி மறவாமையை பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம். கூடப்பிறந்தவர்களே நாம் செய்யும் நல்லதை மறைக்கும்,மறைக்கும் கலி காலம் இது! ஆனாலும் உங்கள்வயதுக்கு இத்தனை நல்ல அனுபவம் கிடைத்தமைக்காக மகிழ்ச்சி. எனக்கெல்லாம் தலை கீழ் அனுபவம் தான்.

      நீக்கு
    6. நான் வெளுத்ததெல்லாம் MILK என்றுதான் ஏமாந்து கொண்டு இருக்கிறேன் என்ன செய்வது ?

      நீக்கு
  2. குறள் 110:
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

    கலைஞர் உரை:
    எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

    மு.வ உரை:
    எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

    சாலமன் பாப்பையா உரை:
    எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

    பரிமேலழகர் உரை:
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை:
    எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

    Translation:
    Who every good have killed, may yet destruction flee;
    Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.

    Explanation:
    He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

    சான்று: http://www.thirukkural.com/2009/01/blog-post_1276.html

    நன்றி பற்றி, மேலுள்ளவாறு வள்ளுவர் சொல்லிவிட்டார். இதற்கு மேல் நான் சொன்னால் அழகிருக்காது. வள்ளுவர் கூற்றைப் பின்தொடரும் தமிழர், நன்றியைச் செயலில் தான் காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களிடமிருந்து மிகவும் சிறப்பான நீண்ட கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. எல்லோருக்கும் இது பொருந்துமா?!!!

    பதிலளிநீக்கு
  4. அரேபியர்கள் பற்றி எனக்கு தெரியாது. தமிழர்கள் பற்றி தாங்கள் சொன்னதை நான் வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வழி மொழிதலுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  5. எதிர்ப்புகள் வரலாம் என்பதால் மலையாளிகளையும் மற்ற பிற இந்தியர்களையும் விட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. கசப்பான சில அனுபவங்கள் காரணமா?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எதிர்ப்புகள் வரலாம்//
      பிறரும் அந்த வட்டத்துக்குள் இருப்பவர்கள் என்றுதானே ஐயா அர்த்தம் ஆகவே தமிழனை பிரித்து சொன்னேன், மேலும் சொந்த அனுபவம் மட்டுமல்ல பொதுவான உண்மையுமகூட....

      நீக்கு
  6. 'நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அ'ந்'நன்றி - என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் - தலையாலே தான் தருதலால்.

    கில்லர்ஜி-என்ன சந்தடி சாக்குல தமிழன் 'நன்றி மறவாதவன்' என்று சொல்லிட்டீங்க. நிஜமா? அப்படி இருந்தால் எத்தனை சதவிகிதம் பேர், தனக்கு எழுத்தறிவித்த ஆசிரியனை ஒரு தடவையாவது போய்ப்பார்க்கிறார்கள் (அவருக்கு ஒன்றும் கொடுக்காவிட்டாலும்)?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆசிரியரைத்தேடி சந்தித்து வருபவனில் நானும் ஒருவனே நண்பரே இவ்வளவுக்கும் அவர் தேவகோட்டை இல்லை

      நீக்கு
  7. ஏணில ஏறிக்கொண்டிருப்பவன் (வாழ்க்கைப் படியில் ஏறுபவன்), எப்போது, கீழே உள்ள படிகளைப் பார்ப்பான்? அடுத்து ஏறும் படியிலல்லவா அவன் எண்ணம் இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்லதொரு உள்ளர்த்தம் பொதிந்த கருத்துரை.

      நீக்கு
  8. நான் தமிழன். கில்லர்ஜிக்கு ‘நன்றி’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் தமிழன்தான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. எனக்கும் நெருங்கிய உறவில் இது போன்று நான் செய்த உதவிகள் நன்றி மறக்கப்பட்ட அனுபவங்கள் உண்டு .
    விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு

    வல்லியம் தனைக் கண்டு அஞ்சி மரம்தனில் ஏறும் வேடன்
    கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்
    நல்லவன் தனக்குச் செய்த நலமது மிக்கதாகும்
    புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்குவாரே.

    வல்லியம் என்றால் புலி . தவறு நம் மீது தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான அழகிய பாடல் வரிகளை கருத்துரையாக தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. நீங்கள் சொன்ன கருத்து உண்மை தான் சகோ நீங்க இந்தியா வந்தாச்சா சகோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கு பதில் நாளைய பதிவில் கிடைக்கும் ...

      நீக்கு
  11. தமிழன் என்றைக்குமே நன்றியுள்ளவன்தான்...

    பதிலளிநீக்கு
  12. அரபிகள் பற்றித் தெரியாது நன்றி மறப்பவர் எங்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் இருவருக்கும் உள்ள வேற்றுமையை சொன்னேன் அரபிகளிலும் நன்றி உள்ளவர்கள் இருக்கின்றர்.

      நீக்கு
  13. நேற்று பின்னிரவில் நான் போட்ட த ம வாக்கு விழுந்து இருக்கு ,என் கருத்து எங்கே போச்சுன்னே தெரியலையே ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களது கருத்து வரவில்லையே....

      நீக்கு
  14. நல்லா சொன்னீங்க! நன்றி நண்பா!

    பதிலளிநீக்கு
  15. உங்கள் அனுபவம் !சரிதான்!

    பதிலளிநீக்கு
  16. கருத்து நல்ல கருத்து ஆனால் தமிழரைப் பற்றி இப்படி ரொம்பவே உயர்வான எண்ணம் வைத்திருக்கிறீர்களே ஜி. தமிழர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள் இல்லை என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் இப்போது? இது இவர்கள் என்றில்லை உலகம் முழுவதும் விரிந்து பரந்த ஒன்று ஜி இல்லையா...

    பதிலளிநீக்கு