தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 28, 2016

(அ)சிங்கம்


ண்டி.... அலமேலு, ராத்திரி...
சாப்பாட்டுக்கு என் வைக்கட்டும் ?

எதையாவது குழைச்சு வையிடி.
தவிட்டை கொழச்சை வெக்கெவா ?

என்னடி... நக்கலா ?
சரி கிச்சடி வக்கிறேன்.

அதைத்தான் சொன்னேன்.
யேன், கிச்சடி வச்சா ஆடு கொலயே முழுங்கிறது மாதிரி முழுங்களே... ? 

என்னடி... அலமேலு ஆடுங்கிறே... ?
யேன்... ஒங்களைவிட அதுமேலுதான்.

அப்படியென்ன... மேலாப்போச்சு ?
அது காலையிலே பாலாவது கொடுக்குது.

யேண்டி, கூறுகெட்.. கூதரை மகளே.... அதுக்காக நானும் பால் கொடுக்க முடியுமா ?
ஒரு ஜோலிக்குப்போக துப்பில்லே, ஆமை மாதிரி வீட்டுக்குள்ளேயே கிடந்துக்கிட்டு.

ஆம்பளச்சிங்கம் எனக்கென்னடி ?
யேன்... சிங்கத்தை அசிங்கப்படுத்துறீங்க ? வீட்டுல ஒக்காந்துக்கிட்டு கலைக்கானம் பேசமட்டும் தெரியுது....

எம்பேரே... கலைஞானம்தானடி. கலைக்கானம் பேசாம இருப்பேனா ?
தண்டத்துக்கு ஒக்காந்துக்கிட்டு சோத்தைத் திண்ணுக்கிட்டு இருங்க...

அதுக்காக, பிரிண்டிங் ப்ரெஸுக்கு வேலைக்கு போனேன், அங்கே உள்ளவன் பூராம் முதலாளிக்கிட்டே கம்ப்ளைண்ட் கொடுக்கிறாங்கே..
பின்னே எதுக்கெடுத்தாலும் நாய் மாதிரி வள்’’ளுனு விழுந்தா, சொல்ல மாட்டாங்கெளா ?

சர்க்கஸ் கம்பெனிக்கு வேலைக்கு போனேன் கரடி வேஷம் போட்டுக்கிட்டு எவ்வளவு நேரம்தான் நிக்கிறது ?  
வேஷம் போடாமல் நின்னாலும் கரடி மாதிரித்தானே இருக்கும், சும்மாவே நிக்கலாமே.

விறகு கடைக்கு போனேன் ஒரு நிமிஷம் நிக்க விடமாட்றான்.
பின்னே, சண்டிமாடு மாதிரி நின்னா, விடுவாங்கெளா ? அரிசி குடோணுக்கு வேலைக்கு போனீங்களே அங்கேயாவது நிலைச்சு இருந்தீங்களா ?

அவன் என்னடி ஒரே நேரத்துல ரெண்டு மூடை ஏத்தி விடுறான்.
அதுக்காக, கழுதையா பொறந்துட்டு பொதிசுமக்க மாட்டேனா ? விட்ருவாங்கெளா ?

என்னடி... கழுதைங்கிறே.... ?
பின்னே, கழுதை எவ்வளவு பெரிய உழைப்பாளி.

அப்ப, நீ கழுதையவே கட்டியிருக்கலாமே...
இப்ப மட்டும் என்ன வாழுதாம் ?

உனக்கு வர, வர நாக்கு ரொம்பத்தான் நீளுதுடி...
பட்டவளுக்கானே தெரியும் கிளியை வளர்த்து பூனை கையிலே கொடுத்துட்டாங்கே...

ரொம்ப பேசுறடீ...
என்னத்தச் சொன்னாலும் எருமை மாட்டுல மழை பேஞ்ச கதைதான்.

நாளைக்கே ஊரெல்லாம் சுத்தி வேலை புடிக்கிறேன்டி..
நேந்து விட்ட, கோயில் மாடு மாதிரி சுத்துறதுக்கு அதையாவது செய்யுங்க...

குடோணுக்கு பக்கத்து கடைகாரன் கூப்பிட்டான் நாளைக்கு, அங்கே போறேன்டி.
அங்கேயாவது நிரந்தமா வேலை பாருங்க, குரங்கு மாதிரி தாவிக்கிட்டு திரியாமே...

ஹூம் அடுத்த ஜென்மத்துலயாவது நான் கழுதையாப்பொறந்து நீ யேங்கிட்டே மாட்டுவேடி.
யேன... கெரகமா ... ஒங்களை கட்ட அப்பவாவது, எங்க மச்சான் மச்சக்காளையை கட்டிக்கிற மாட்டேன்.

அப்பக்கூட நீ காளையைத்தான் கட்டிக்கிருவியா ?
இஞ்சே பாருங்க, ஏதாவது இளக்காரமா பேசிக்கிட்டு திரிஞ்சீங்க, சோத்துல அரளியை கரைச்சு ஊத்திப்புடுவேன்.

நீ செஞ்சாலும் செஞ்சிடுவே உள்ளதை வையிடி, வெந்ததை தின்னுப்புட்டு விதி வந்தா சாகுறேன்..

சாம்பசிவம்-
ரம்பத்துலயே, கேட்டதுக்கு கிச்சடி வையினு சொல்லியிருந்தா...  இவ்வளவு பஞ்சாயத்து வருமா ?

CHIVAS REGAL சிவசம்போ-
இவன் பதிவர்கள்ட்ட அசிங்கப்படணும்னு விதி

நட்பூக்களே... இனி நக்கல், நையாண்டி, நெய்தல், நையப்புடைத்தல், நிலக்கரி, நீலகிரி, விக்கல், விருமாண்டி, குத்தல், குடைச்சல், கேலி, கிண்டல், வெட்டு, வேட்டு, கோடரி, கோதாவரி, தர்பார், தார்பாய், பீர்பால், மோர்பால், வித்தை, மோடிவித்தை, மோசடிவித்தை, எத்தன் வேலை, சித்தன் வேலை, எடக்கு, எகத்தாளம், மடக்கு, மத்தாளம், கைகலப்பு, கலகலப்பு, அதில் சலசலப்பு பிரச்சனைக்குறிய பிரச்சனைகள் பிரித்து மேய்ந்து மீண்டும் வேயப்படும் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தவை இனி கொளுத்தீப் போடப்படும் அதில் சிக்கி சீரழிந்து, சின்னாபின்னமாகி சீக்கு பிடித்து சீரழிபவர் சீர்காழியோ, சீக்காளியோ, முடுமையோ, முடுதாருவோ, கலைஞானமோ, அலமேலுவோ இல்லை அதுக்கும் மேலுவோ யாரோ... யாரறிவாரோ.... இனி அதிர்வேட்டுகள் ஆரம்பம் காரணம் குரு எட்டாம் ஸ்தானத்திலிருந்து இடப்பெயர்ச்சி கொண்டு விட்டான்.

நாரதரின் கலகம் நன்மையில் முடியும்.
நாரதர் வருகிறார் பராக்.... பராக்.... பராக்....

டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...
டண்ட னக்கும்... டணக்கும் னக்கும்...

அன்புடன்
தேவகோட்டையிலிருந்து... கில்லர்ஜி

24 கருத்துகள்:

  1. ஆஹா, தேவகோட்டை வந்தாச்சா? இந்த நக்கல், நட்டுவாக்களி வேலையை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு வந்த வேலையைப் பாருங்க.

    பதிலளிநீக்கு
  2. ஹா.... ஹா.... ஹா...

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. தேவகோட்டையிலிருந்து கில்லர்ஜி!...

    படிக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது... தமிழகம் வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வரவு நல்வரவாகுக நண்பரே

    பதிலளிநீக்கு
  5. எப்படியோ.. ஊர்ல இருக்கிற மிருகத்தையெல்லாம் சேர்த்து ஒரு மாதிரி ஆக்கிட்டீங்க!..

    நல்லதே நடக்கட்டும்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. பார்க்க மனிதன் but ஆடு, ஆமை ,கழுதை, கரடி பூனை ,குரங்கு rolled into one ?

    பதிலளிநீக்கு
  7. அதாவது நாளையிலிருந்து உங்கள் வேலையைத் துடங்குறீங்க, கூலி தரும் வேலையையும் சேர்த்துத்தான். வரவையும் செலவையும் பார்த்துச் செய்யுங்கள். காலம் கெட்டுக் கிடக்குது.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. தேவகோட்டைக்கு யாரிடமும் வம்பிழுக்காமல் அபுதாபியிலிருந்து பத்திரமாக வந்து சேர்ந்த எங்கள் கில்லர்ஜியை வருக வருகவென வரவேற்கிறோம்.
    த ம 6

    பதிலளிநீக்கு
  9. Time and again you prove that you are versatile in HUMOUR THOUGHT PROVOKING articles..ji

    பதிலளிநீக்கு
  10. #சீக்காளியோ#
    இந்த ஜோக்காளி சீரழிய தயாராய் இருக்கிறான் ,கலக்குங்க ஜி :)

    பதிலளிநீக்கு
  11. தமிழகம் சொந்த ஊருக்கு வந்தாச்சா ஜி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. தேவக்கோட்டைக்கு வந்திருக்கும் சகோவுக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  13. இனி அதிர்வேட்டுகள் ஆரம்பமாகட்டும்...நண்பரே...

    பதிலளிநீக்கு
  14. தாய் மண்ணிற்கு வந்திருக்கும் தங்களை வரவேற்கிறேன். இனி அதிர்வேட்டுகள் ஆரம்பம் என சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் இதுவரை தந்தது?

    பதிலளிநீக்கு
  15. ஒரு மனைவி இப்படியெல்லாம் கணவனை அழைக்க முடியுமா உங்களால் முடிகிறது

    பதிலளிநீக்கு
  16. வாருங்கள், வாழ்க வளமுடன்,,,, நலமுடன் தொடருங்கள் சகோ,,

    பதிலளிநீக்கு
  17. தேவக்கோட்டையிலிருந்து முதல் பதிவு என்று நினைக்கிறேன். தங்களது எழுத்துப்பணி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. இனி அதகளம்தான். நடக்கட்டும் நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  19. நல்ல நகைச்சுவையான பதிவு, எனது வலைத்தள பக்கம் வாருங்களேன்

    பதிலளிநீக்கு
  20. ஹஹஹஹ்.... இனி நாரதர் வேலை பார்க்கப் போறீங்களா ஜி!!??

    சரி நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  21. இந்தியா வந்தாச்சா? வாழ்த்துகள். தாய் நாட்டில் சிறப்பான வாழ்க்கையும் தொழிலும் அமைய வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  22. ஒரு சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியேழே , தொடரட்டும் ...ரசித்தேன்.

    பதிலளிநீக்கு