தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 07, 2016

மர்மச்சாமி


மஸ்காரம் சுவாமி ஜி சமயமலையின் அடிவாரத்திலிருந்து வந்திருக்கும் தங்களிடம் எங்களது கோணமலர் பத்திரிக்கையில் பேட்டி தர சம்மதம் தந்தமைக்கு முதற்கண் நன்றி பேட்டியை ஆரம்பிக்கலாமா ?
முதலில் பெட்டியை எமது சிஷ்யர்களிடம் கொடுத்து விட்டீர்களா ?

காலையிலேயே கொடுத்து விட்டோம் ஜி.
நல்லது ஆரம்பிக்கலாம்.

சுவாமி ஜி தங்களது பெயர் இதுவரையில் மர்மமாகவே இருக்கின்றதே ? 
அதனால்தான் என்னை மர்மச்சாமி என்றும் அழைக்கின்றார்கள்.

தாங்கள் துறவரம் பூண்டமைக்கு காரணம் சொல்ல முடியுமா ?
இப்பொழுது என்னிடம் பேட்டி காண்பதற்கான காரணம் சொல்ல முடியுமா ?

தற்பொழுது இந்தியா முழுவதும் அறியப்படும் சக்தி வாய்ந்த சுவாமி ஜி தாங்கள் உங்களிடம் பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்தால் வியாபாரம் சூடு பிடிக்கும் ஆகவேதான் சுவாமி ஜி.
அதற்கான தட்சிணைதானே தங்களது மேலாளர் தெட்சிணா மூர்த்தி கொடுத்தனுப்பிய பெட்டி.

ஆமாம் ஜி
இதை தங்களது உங்களால் பத்திரிக்கையில் எழுத முடியுமா ?

முடியாது ஜி.
அதைப் போலவே நான் துறவரம் பூண்டதையும் சொல்ல முடியாதவை.

புரிந்து விட்டது ஜி இனி கேள்விகளை கேட்கட்டுமா ?
தாராளமாய்.

எல்லா சுவாமிகளும் காவி உடையில் தரிசனம் தரும் பொழுது தாங்கள் மட்டும் வெள்ளை உடையில் இருப்பதற்கான காரணம் ?
கருப்பு உள்ளம் படைத்த அரசியல்வாதிகள் அனைவருமே வெள்ளை உடையில் பவனி வருகின்றார்களே இதற்கான காரணம் உங்களால் சொல்ல முடியுமா ?

அது... இதுவரை அனைவருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது ஜி.
இதையும் அந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

திரைப்பட நடிகைகள் அனைவருமே தங்களை காண வருகின்றார்களே... எதற்காக ?
என்னிடம் தீட்சை பெறுவதற்காக என்று சொன்னால் நம்புவீர்களா ?

தாங்கள் சொன்னால் உண்மையாகத்தானே இருக்கும் நம்புவோம் ஜி.
நல்லது அதையே நம்பி எழுதுங்கள்.

பிரபல குலுக்கல் நடிகை கும்தா கொலை வழக்கில் சி.பி.ஐ தங்களை நீதி மன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்ததே ஏன் ?
அந்தக் கொலையை செய்தவர்களை கண்டு பிடிக்க முடியாத காரணத்தால் எனது ஞான திருஷ்டியால் கண்டு பிடித்து சொல்ல நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்கள் அதற்காக.

அப்படியானால், தாங்களே எல்லா கொலைகளையும் கண்டு பிடித்து காவல்துறைகளுக்கு உதவலாமே.... ?
இதையேதான் கிடியா மாநில கவர்னரும் என்னிடம் கேட்டார் நான் மக்களுக்கு சேவை புரியவே தோன்றியவன் என்று மறுத்த காரணத்தால் எனது ஆசிரமத்தை ஆக்கிரமித்து கொண்டார்கள் நான் வெளியேறிய காரணத்தால் அந்த மாநில மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள் ஸ்காட்லாண்ட் ஜனாதிபதியும் அழைத்திருந்தார்.

ஸ்காட் விஸிட் உண்டா ?
அதை இறைவன் இன்னும் தீர்மானிக்கவில்லை.

அந்த இறைவன் எங்கு இருக்கின்றார் ?
யாம்... யாமே...

இனி தாங்கள் தமிழ் நாட்டிலேயே நிரந்தரமாக தங்குவீர்களா ?
அதை காலம் சொல்லும்.

இங்கு தங்குவதற்கு மக்கள் தாங்கும் பொழுது உங்களுக்கு தயக்கம் ஏன் ?
இந்த மக்களை நான் நன்கு அறிந்தவன் விளக்கு எரிந்தால் வெளிச்சம் என்றும், விளக்கை அமர்த்தினால் இருட்டு என்றும் சொல்பவர்கள்.

அதுதானே உண்மை சுவாமி ஜி
எல்லாம் மாயை நீயும் சராசரி மானிடனே...

அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்கள் சுவாமி ஜி
பாமரர்களிடம் விளக்கம் கொடுத்து பலனில்லை என்பதை அறிந்த ஞானி நான். நீ ஐந்தும், மூன்றும் எட்டு என்று எண்ணக்கூடியவன்.

அதுதானே சுவாமி ஜி சரியான கணக்கு.
கணக்கு என்றால் என்னவென்று அறியாத உம்மிடம் விளக்கம் கொடுப்பதும், நமீதாவை சேலை கட்டச் சொல்வதும் ஒன்று.

அப்படியானால் தாங்கள் எழுத்தாளர் ஞானியிடம் விளக்கம் கொடுப்பீர்களா ?
பெயரில் மட்டும் ஞானியாக இருப்பவர்களிடம் விவாதம் வைத்துக் கொள்வதில் எமக்கு விருப்பம் இல்லை.

அப்படியானால் இதற்கு வழி ?
இதோ வந்த வழியே எழுந்து போகலாம்.

சினம் கொண்ட சிறுத்தை மன்னிக்கவும்... சினம் கொண்ட சுவாமி ஜி எழுந்து திரையின் மறைவில் மறைந்தார் உடன் சிஷ்ய கேடிகள் வந்து பேட்டி முடிந்து விட்டது சுவாமி ஜி பூஜைக்கு செல்லும் நேரமாகி விட்டது செல்லுங்கள் என நிருபர் நிருபமா ராவையும், கேமராமேன் K 7-னையும் விரட்டினார்கள்.


சிவாதாமஸ்அலி-
ஆமா இப்ப இவங்கே மக்களுக்கு பிரயோசனமா என்னத்தை பேசிட்டாங்கே ?
சாம்பசிவம்-
எல்லா பத்திரிக்கைகாரனும் என்ன கேட்கிறானோ ? அதைத்தான் இவங்களும் கேட்டாங்கே...
Chivas Regal சிவசம்போ-
அப்ப இந்த வாரம் ‘’கோணமலர்’’ வாங்கி படிச்சா தெரியும்.

குறிப்பு - சிஷ்ய கோடிகள் என்பது சிஷ்ய கேடிகள் என்று வந்து விட்டது ஏதோ கணினி பிரச்சனை என்று நினைக்கிறேன் மன்னிக்கவும் தவறாக நினைக்க வேண்டாம் நான் சுவாமிஜிகளை மிகவும் மதிப்பவன் அதுவும் நட''மாடு''ம் மனித சுவாமிஜிகளை பெரிதும் மதிப்பவன் - கில்லர்ஜி

காணொளி

37 கருத்துகள்:

 1. நீங்க எந்த குருவைச் சொல்கிறீர்கள் என்பதே மர்மமாய் இருக்கே :)

  பதிலளிநீக்கு
 2. எதிர்க்கேள்வி ஏகாம்பரமாகவும், நக்கல் நல்லசிவமாகவும் இருக்கிறாரே மர்மச்சாமி! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே சரியாக சொன்னீர்கள் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது

   நீக்கு
 3. மர்மச்சாமி - பலே ஆளா இருக்காரே....

  கேள்விகளையும் பதில்களையும் மிகவும் ரசித்தேன். விடுபட்ட உங்களின் மற்ற பதிவுகளையும் விரைவில் படித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி நிறைய பதிவுகள் வரவில்லைதான் நேரம் இருக்கும் பொழுது படியுங்கள் நன்றி

   நீக்கு
 4. சுவாமிஜி இந்த பேட்டியில் உங்கள் சிஷ்யைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே......நீங்கள் சொல்லாவிட்டால் என்ன சன் டிவியில் கூடிய சீக்கிரம் வெளியிடப் போவாதாக தகவல் வருகிறதே அது உண்மையா ஜீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரே அனாவசிய பிரச்சினையில் என்னை மாட்டி விடாதீர்கள் நான் அப்பாவி

   நீக்கு
 5. மர்ம​சாமி கில்ஜியானந்தா சிஷ்ய கேடிகளையும் கூட்டிக் கொண்டு தமிழ் நாடு வந்து விட்டாரா? இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்கும் ஞாநி பாவம் சும்மா விட்டு விடுங்கள். ​
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுவார் ஐயா வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. உங்கள் அறிமுகங்கங்களிடம் நாங்கள் ஜாக்கிரதையாக இருககவேண்டும் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
 7. ji you do not know that the T.V CHANNEL would blackmail.....
  if the DEAL is not satisfactory to them
  they would expose all....latest ..vendhar...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கும், வருகைக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 8. கேள்வியும் பதிலும் அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 9. ரசித்தேன். சந்தடி சாக்குன நீங்களும் தீட்சை பெற்றிருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் நட'மாடு'ம் சாமியிடம் தீட்சை பெற்றேனா ?

   நீக்கு
 10. தங்கள் மூலம் மமர்மக்குருவைக் தெரிந்து கொண்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே தங்களுக்கு அவசியம் தெரிய வேண்டியதே...

   நீக்கு
 11. அருமையான கேள்விக் கணைகள்
  அதற்கு ஈடான தப்பிக்கும் பதில்கள்
  தாங்கள் பத்திரிகை ஒன்றை நடாத்தலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிகப்பெரிய வேலை சொல்கின்றீர்களே...

   நீக்கு
 12. மர்மச்சாமியை மனசார ரசித்தேன் அண்ணா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்ல காரியம் செய்தீர்கள்.

   நீக்கு
 13. சுவாமிஜி சரியான விடாக்கண்டர் கொடாக்கண்டராய் இருக்கிறாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. கணக்கும் புரியாது நமீதா சேலையில் வருவதும் என்ற வாக்கியம் ஆயிரம் நெத்தியடி))) இப்ப நீங்களும் சாமியார்தான் அறச்சீற்ற சாமியார்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே என்னைப்போய் இப்படி சொல்லிட்டீங்களே...

   நீக்கு
 15. இது எப்படியோ என் பார்வைக்குத் தப்பி இருக்கே! ஹிஹிஹி, நிஜமான சுவாமிஜியிடம் கேட்டு எழுதின பேட்டியோ? :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆமா நம்ம மர்மச்சாமியாரிடம்தான்

   நீக்கு
 16. எல்லா சாமிகளும் மர்ம சாமிகளாகவே இருக்கிறார்கள். எனவே இவர்களிடம் கேள்விகள் கேட்டு சரியான பதிவை பெற இயலாது. பதிவை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கேள்விகளை சமாளிக்கத் தெரிவதில்தானே சாமியார்களின் வெற்றியே இருக்கின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. ஹஹஹ் மர்ம சாமிதான்...பின்ன சிஷ்யைகள் இல்லாத சாமிஜிக்கள் உண்டோ? சிஷ்யைகள் எல்லோரையும் எங்கள் கண்களுக்குக் காட்டாமல் மாயை என்று சொல்லுவது சரியல்ல மர்ம சாமிஜி!!!! கேள்வி பதில்கள் எல்லாம் ரசித்தாலும்...திரைமறைவில் இருக்கும் சிஷ்யைகளையும்...சரி விடுங்கள்....வேண்டாம் வம்பு

  பதிலளிநீக்கு