திங்கள், நவம்பர் 14, 2016

DEWA நிர்வாகம்

Devakottai Emirates Welfare Association

இனிய U.A.E வாழ் தேவகோட்டையர்களுக்கு....
நான் U.A.E  நாட்டை விட்டு நிரந்தரமா சில தினங்களில்... இந்தியா செல்வதால் நமது DEWA பணவிபரங்கள் அனைத்தும் அல்அய்னில் இருக்கும் தலைவர் திரு. அண்ணாதுரை சங்கரவேலு அவர்கள் சொன்னபடி அபுதாபியிலிருந்து நானும், செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு. வேலு மாணிக்கம் அவர்களும் 21.10.2016 அன்று சார்ஜா சென்றோம் செயலாளர் திரு. ரமேஷ் சுப்பையா அவர்கள் துபாயில் அன்று அலுவல் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை ஆகவே உபதலைவர் திரு. புகழேந்தி நாகப்பன் மற்றும் புதிய பொருளாளர் திரு. கணேசன் காளீஸ்வரன் அவர்களிடம் கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்பட்டு ஒப்படைத்தோம். கடைசி தருணத்தில் நிர்வாகிகளின் தீர்மானத்தின்படி எனது பெயரில் இருந்த ABUDHABI ISLAMIC BANK கணக்கு 09.11.2016 ரத்து செய்யப்பட்டு பணம் முழுவதும் எடுக்கப்பட்டு எனது வசம் தேவகோட்டை வங்கியில் கணக்கு துவங்கி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு தற்பொழுது பணம் (Dirham’s 8171.28) எனது வசம் உள்ளது அதன் விபரம கீழே.

தற்போது (U.A.E.யில்) வரவேண்டியது – Dirham's 13,000.00
தற்போது எனது கைவசம் உள்ள இருப்பு – Dirham's 8171.28
இதை, இந்திய ரூபாயாக எவ்வளவு என்பதை பிறகு அறிவிப்பேன்

 திரு.கணேசன், திரு.வேலு, திரு.கில்லர்ஜி, மற்றும் திரு.புகழேந்தி
 ுதிய பொருளாளர் பதவியேற்ற திரு. கணேசன் காளீஸ்வரன் அவர்களிடம் கணக்கு விபரங்களை நான் ஒப்படைக்கும்போது...
 வங்கியில் கணக்கு ரத்து செய்யும் சிறிது நேரத்திற்கு முன் ATM இயந்திரத்தில் காட்டிய தொகை
 வங்கியின் ரசீது.
எனது பெயரில் இருந்த ATM Card வங்கி ஊழியரால் பெறப்பட்டு துளையிடப்பட்டு கோப்புகளில் சேர்க்கப்பட்டது,

எடுத்த தொகை - Dirham's 8171.25 (0.03 Fils நீக்கப்பட்டுள்ளது)

இதுவரை சங்கத்தின் பணவிபரங்கள், வேலைகளை ஆத்மார்த்தமாக கவனித்துக் கொண்டு வந்தேன் என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறேன் நான் இந்தியா சென்றாலும் நமது சங்கத்தின் வேலைகளை தேவகோட்டையில் இருந்தே எந்த நேரமும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அடுத்த மாதம் விடுமுறையில் தலைவர் திரு. அண்ணாதுரை அவர்கள் இந்தியா வரும்பொழுது தேவகோட்டையில் நற்பணிகளுக்காக இந்த பணம் செலவிடப்படும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது நான் நாட்டுக்கு சென்றதும் அந்த வேலைகளை தேர்வு செய்து வைப்பேன் மேலும் விபரங்களுக்கு DEWA உறுப்பினர்கள நாட்டுக்கு வரும்பொழுது எப்பொழுதும் எனது இல்லத்தில் காணலாம்.

என்றும் உண்மையுடன்
தேவகோட்டையான் கில்லர்ஜி
DEWA முன்னாள் பொருளாளர்
Devakottai Emirates Welfare Association
Mobile - 055 - 9 321 789
14.11.2016
எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே...
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே...
கில்லர்ஜி தேவகோட்டை
يوم العلم கொடிதினம் Flag Day


கடந்த நவம்பர் 03 ஆம் தேதி U.A.E நாட்டின் கொடிதினம் எங்கள் அலுவலகத்தில் கொடி ஏற்றி கோலாகளமாக கொண்டாடப்பட்டது.
மேலே புகைப்படத்தில் இருப்பது துபாய் முதலமைச்சர் ஷேக். முகம்மது பின் ராஸித் அல் மஹ்தூம்

U.A.E நாட்டின் சரித்திர தினமான இன்று இனிவரும் வருடங்களில் என் நினைவு வருமென எனது பிரிவில் (Division) உள்ள அலுவலர்கள் மட்டும் சேர்ந்து எனக்கு பிரியாவிடை கொடுத்து விருந்து உபசரிப்பு விழா வைத்தார்கள் காரணம் அன்றுதான் எனது வேலை நிறுத்தப்பட்டது என் மனம் நெகிழ்ந்த அதனைக் குறித்த பதிவை பிறகு காண்போம்.
ஸ்வீட் எடு, கொண்டாடு.
காணொளி

42 கருத்துகள்:

 1. எப்பொழுது இந்தியா திரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால் யானைப் படை, குதிரைப் படை, காலாட்படைகள் அணி வகுக்க, 23 பீரங்கி முழக்கத்துடன் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்ய சௌகரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா முனைவர் ஐயாவின் வரவேற்புக்கு நன்றி
   எனது கணக்குகள் இன்னும் முடியவில்லை ஐயா அறையில் சும்மாதான் உட்கார்ந்து இருக்கிறேன் சில தினங்களே....

   நீக்கு
 2. தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. நல்லபல செயல்கள் செய்து வந்திருக்கிறீர்கள். இந்தியாவிலும் அதைத் தொடர்வீர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 4. தங்களின் பணி அறிந்து வியக்கிறேன் நண்பரே
  தாய் மண் தங்களை அன்புடன் வரவேற்கிறது
  வாருங்கள் வாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வரவேற்புக்கு மிக்க நன்றி

   நீக்கு
 5. என்ன இருந்தாலும் ஜி, வருத்தமாக இருக்கிறது... ம்... நடப்பதெல்லாம் நன்மைக்கே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி என்ன செய்வது வருமானம் இருக்கும் பொழுதே வாழ்க்கை நகர்த்துவது கடினம் இப்பொழுது வருமானம் இல்லை ஒன்றை இழந்தாலே ஒன்றைப்பெற முடியும் என்பது இறை நியதி.

   இருப்பினும் சமீபத்திய கவிதை ஒன்றுக்கு கருத்துரை இட்ட நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதியது மிகவும் நம்பிக்கையை கொடுத்தது நன்றி ஜி

   நீக்கு
 6. பொருளாளராக இருப்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை அறிவேன். அந்த பொறுப்பை திறம்பட நிறைவேற்றி கணக்கை சரியாக ஒப்படைத்து விடைபெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
  தேவக்கோட்டையிலும் உங்களின் பணி தொடர வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வேைகளை மன நிறையோடு செய்திருக்கின்றேன் உண்மை.
   தங்களது வாழ்த்துகள் அறிந்து மகிழ்ச்சி

   நீக்கு
 7. இந்தியா உங்களை வரவேற்கிறது சகோ. இந்தியாவிலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 8. என்னதான் நண்பர்கள், மிகவும் தெரிந்தவர்கள் என்றாலும், கணக்கு வழக்கில் மிகச் சரியாக Handover செய்துள்ளீர்கள்.

  DEWA - ல உள்ள பஞ்ச் முதலிலேயே எல்லோருக்கும் தெரிவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். DEWA-பொதுவாக எல்லோருக்கும் Dubai Electricity & Water Authorities என்றுதான் நினைவில் வரும்.

  வளம் பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி
   ஆம் DEWA என்றால் துபாயில் இதுதான் ஞாபகம் வரும் உங்களுக்கு இது எப்படிதெரியும் ? நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் ?

   நீக்கு
 9. இனி அபுதாபி நினைவுகளுடன் காலம் ஓடும் வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அந்த நினைவுகள் பதிவுகளாகும் தொடர்ந்து...
   வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 10. தாய்நாடு திரும்பும் கில்லர்ஜிக்கு வாழ்த்துகள். உங்களால் ஒரு பதிவர் சந்திப்பு மீண்டும் நிகழும் வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நிச்சயம் சந்திக்கலாம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. எழுத்தில் நகைச்சுவை. செயலில் யதார்த்தம். சரியான பாணியைக் கடைபிடிக்கின்றீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் வரவால், தேவகோட்டையில் நற்பணிகள் தொடர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :)

  பதிலளிநீக்கு
 13. அபுதாபியில் திறம்பட பணியாற்றி தாயகம் திரும்பும் கில்லர்ஜியை வருக வருகவென வரவேற்கிறேன்.
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தேவகோட்டை விமான நிலையத்தில் நிற்பீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி

   நீக்கு
 14. வாழ்த்துக்கள்....

  என்றும் தங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. வருத்தமாக இருந்தாலும் தாய்நாட்டில் உங்கள் சொந்த ஊரில் இருக்கப்போகிறீர்கள். இங்கேயும் நல்லபடி புதிய வேலை கிடைத்து சௌகரியமாக வாழ்க்கை செல்ல வாழ்த்துகள். உங்கள் நற்பணிகளுக்குப் பாராட்டுகள். அவை தொடரவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. இந்தப் பதிவு எனக்கு ஏனோ அப்டேட் ஆகவில்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீங்கள் மேலேயுள்ள ''என்னைய புடிச்சுக்கிட்டு வர்றவங்க'' அதில் சொடுக்கி இணைப்புக் கொடுக்கவும்

   நீக்கு
 17. இந்தியாவிலும் தங்கள் பணி தொடரட்டும் அண்ணா...

  பதிலளிநீக்கு
 18. ஸ்வீட் எடு.. கொண்டாடு!..
  - என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

  மனம் நெகிழ்கின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பச்சூழல் போய்த்தான் தீரவேண்டும் ஜி என்ன செய்வது ?

   நீக்கு
 19. நல்ல பணிகள் ஜி! இங்கும் தொடருங்கள் தங்கள் நல்ல செயல்களை...

  கீதா: சரி வந்திறங்கும் போது ஒரு வார்த்தை இங்குட்டு சொல்லிருக்கலாம்ல......ஒரு ராயல் வெல்கம் கொடுத்துருப்போம்ல......

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...