ஏங்க இன்னைக்கு கணவனுக்கு
கல்லடி சினிமாவுக்கு போவோமா ?
அந்த சினிமா பார்க்க
வேண்டாம்.
ஏன் ?
அதுல மனைவி கணவனை
மதிக்கிறதில்லையாம்.
இப்போ நீங்க கூட்டிப்
போகலைனா... உங்களை நான் மதிச்சிடுவேனா ?
அதான் தெரிஞ்ச
விசயம்தானே...
பின்னேயென்ன ?
வேண்டாம் அந்தப் படத்துக்கு
மனைவியை கூட்டிட்டு போறவங்களை தியேட்டருலே ஒரு மாதிரியா... பார்த்து கமெண்ட்ஸ்
அடிக்கிறாங்கே....
இது உங்களுக்கு எப்படித்தெரியும் ?
அது... அது வந்து...
ஃப்ரெண்டு சொன்னான்.
அப்படின்னா... இன்னைக்கு
அந்தப் படத்துக்கு கண்டிப்பாக போறோம்.
சொன்னாக்கேளு, சும்மாவே
எனக்கு மரியாதை இல்லை இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையாவது...
முழுசும் நனைஞ்ச பிறகு
முக்காடு எதற்கு ?
ஏண்டி... இந்தப்
பழமொழி பெரியவங்க இதுக்கா... சொல்லி வச்சாங்க ?
பழமொழி சொன்னவங்க
காரணத்தோடதான் சொல்லி வைப்பாங்க.
அப்படினா... நீ மட்டும்
மேட்னி ஷோவுக்கு போயிட்டு வா
அப்படினா... மூணு நாளைக்கு
வீட்டுல சோறு கிடையாது.
சரி நான் மூணு நாளைக்கு
ஹோட்டலில் சாப்பிட்டுக்கிறேன்.
எதுக்கும் மூணு நாளைக்கு
வெளியில நல்லது பொல்லது சாப்பிட்டுக்கங்க..
ஏன் ?
அப்புறம் சாப்பிட
வீட்டுக்கு வந்துதானே ஆகணும்.
வேறெங்கே... போறது ?
வீட்டுல வந்து
சாப்பிடுறதுதான் கடைசி சாப்பாடு.
ஏன் ?
சோத்துல விசத்தை
வச்சுடுவேன்.
? ? ?
என்ன... பேச்சு மூச்சைக் காணோம் ?
அதான் மூச்சை
நிறுத்திட்டியே...
மூச்சு தொடரணும்னா....
இப்பவே தியேட்டருக்குப் போயி ரெண்டு டிக்கெட் ரிசர்வேஷன் செய்திட்டு வாங்க.
சொன்னவள் ஒரு உஷ்ணப்பார்வை
பார்க்க இவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அருணா தியேட்டருக்கு கிளம்ப... பத்மினி
டி.வியை போட்டாள் அதில் கே.ஜே.யேசுதாஸ் பாடிக்கொண்டு இருந்தார் இப்படி கீழே பாருங்களேன்.
காணொளி
யேசுதாஸ் மௌன ராகம் பாடுகிறாரோ ?இல்லை , எனக்கு மட்டும்தான் இப்படியா ? கணவன் பேசாமடந்தை ஆகிப் போனானா :)
பதிலளிநீக்குநிறைய பேருடைய வாழ்க்கை இப்படித்தானே... ஜி
நீக்குரசித்தேன். பகவான் ஜி... எனக்கு காணொளி எப்போதுமே ப்ராப்ளம்!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குபத்மினி போல் மனைவி அமைவதெல்லாம் ஏதோ சாபத்தின் மிச்சம்
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா வருகைக்கு நன்றி
நீக்குஒரேயடியா அலற ஆரம்பிச்சுட்டார்! எல்லோரும் தூங்கறாங்க! :) ம்ம்ம்ம் சினிமாவுக்குக் கூட்டிப் போகலைனா மனைவி விஷம் கொடுத்துடுவாளா? :( என்ன தான் நகைச்சுவைனாலும் ரசிக்க முடியலை! மன்னிச்சுக்குங்க! :)
பதிலளிநீக்குவருக சகோ குறட்டை விடுவதற்கே டைவேர்ஸ் செய்த காலமாகி விட்டதே... வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான பாடல்! ரசித்தோம்
பதிலளிநீக்குபாடலை ரசித்தமைக்கு நன்றி
நீக்குஅருமையான பாடல் ஜி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குரைட்டுடு.
பதிலளிநீக்குநன்றி தோழரே....
நீக்குகேள்வி - பதில் பதிவுகளில்
பதிலளிநீக்குமுன்னிலையில் நிற்கும்
ஒரே பதிவர் தாங்கள் தான்!
அருமை...
கலக்குங்க அண்ணாச்சி!
நண்பரின் விரிவான பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குகணவனுக்கு கல்லடி சரி..மனைவிக்கு?
பதிலளிநீக்குமனைவிக்கு மட்டையடி அப்படினு தலைப்பு வச்சா பிரச்சனை வருமே...
நீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குதம+1
ரசித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குரைட்டு... அருணா தியேட்டர்ல்ல இப்படிப்படமெல்லாம் வருதா..?
பதிலளிநீக்குஆம் நண்பரே 50-வது நாளாக ஓடுகிறதே...
நீக்குஇரசித்தேன்! பதிவின் தலைப்பை ‘மனைவி அமைவதெல்லாம்’ என்று தந்திருக்கலாம்!
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா... இப்படியும் வைக்கலாமோ ?
நீக்குஇப்படிக்கூடவா நடக்கும்?
பதிலளிநீக்குவாங்க இது கற்பனையில் எழுதினேன். விரைவில் நடந்த உண்மையை எழுதுகிறேன் மாமியார் நைட்டி போடக்கூடாது என்றதால் டைவேர்ஸ் வாங்கிய பெண்ணைப்பற்றி...
நீக்குசினிமாக்காரங்க கோடிகோடியாச் சம்பாதிக்கிறது எப்படீன்னு புரியுது!
பதிலளிநீக்குஆம் நண்பரே காலம் முழுவதும் நாம் ஏமாறுகிறோம்.
நீக்குகலக்குறீங்க தலைவரே...அருமை
பதிலளிநீக்குவாங்க நண்பா வருகைக்கு நன்றி
நீக்குநகைச்சுவை அனைத்தும் அருமை சகோ.
பதிலளிநீக்குவருக சகோ ரசித்தமைக்கு நன்றி
நீக்குகணவனுக்கு கல்லடி ரசித்தேன். பாடல் பின் கேட்கின்றேன் ஜீ!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குகதையும் கானமும் செம
வாழ்த்துகள்
நன்றி கவிஞரே
நீக்குஒரு சினிமாவுக்கு இந்த மிரட்டலா
பதிலளிநீக்குஅவன் வாங்கி வந்த வரம்.
நீக்கு