அம்மா தெருவுல உள்ளவங்க பூராம் என்னை வண்டு மகன் வாண்டு அப்படினு சொல்றாங்களே... ஏம்மா ?
உங்க
அப்பா எந்த நேரமும் பேசுறவங்கள்ட்ட காதுல வண்டு குடையுறது மாதிரி தொனத்தொனனு
பேசிக்கிட்டே இருக்காருல அதனாலதான்.
*-------------------------------------------01------------------------------------------*
அப்பா
உன்னை சித்தி விநாயகர் கோயிலுக்கு கூட்டிட்டு போனாரே... நல்லா வேண்டிக்கிட்டியா ?
இல்லேமா, நம்ம சித்தி செல்வநாயகி வீட்டுக்குத்தானே கூட்டிட்டுப்போனாரு...
? ? ?
*-------------------------------------------02------------------------------------------*
ஏம்மா, எனக்கு நிறைய கறியை வச்சுட்டு அப்பாவுக்கு மூளையை மட்டும் வைக்கிறீங்க ?
அப்பவாவது,
உங்க அப்பாவுக்கு வளருதானு பார்ப்போம்.
*-------------------------------------------03------------------------------------------*
அம்மா, செப்டம்பர் 20 தானே உங்களுக்கும், அப்பாவுக்கும் கல்யாண நாளு
ஆமா ஏன் ?
அப்பயேன் அப்பா அவரோட டைரியிலே துக்கநாள்னு எழுதி வச்சு இருக்காரு ?’
? ? ?
*-------------------------------------------04------------------------------------------*
அம்மா கந்தசஷ்டி கவசத்திலே, காக்க காக்க கனகவேல் காக்க அப்படினுதானே படிக்கணும்.
ஆமா,
என்ன... திடீர்னு சந்தேகம் ?
அப்பா, காக்க காக்க கனகவள்ளி காக்க அப்படீனு படிக்கிறாரே அது என்ன கவசம்மா ?
? ? ?
*-------------------------------------------05------------------------------------------*
சித்ரா சித்தி நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்களாமா ?
சித்ரா
சித்தியா அது யாரு... புதுசா ?
அதான்மா, அப்பா என்னை கொண்டு போயி ஸ்கூல்ல விட்டுப்புட்டு ஆஃபீஸ் போகும்போது
ஸ்கூட்டர்ல கூட்டிக்கிட்டு போறாங்களே, அந்த சித்தி.
? ? ?
*-------------------------------------------06------------------------------------------*
சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துறியே, ஏம்மா ?
உன்
அப்பனைத்தான் சாத்தமுடியலை அதுக்காவது சாத்துவோம்னுதான்.
*-------------------------------------------07------------------------------------------*
அம்மா நேத்து அப்பா சொன்னபடி முருகன் கோயில்ல வேண்டிக்கிட்டேன்மா.
அப்பா
என்ன... வேண்டிக்கிற சொன்னாரு ?
சீக்கிரமா புது அம்மா கிடைக்கணும்னு.
? ? ?
*-------------------------------------------08------------------------------------------*
நாம,
அடுத்தவங்களுக்கு செய்யிற உதவியோ, பணமோ வலது கை கொடுக்குறதை இடது கைக்குகூட
தெரியாமல் கொடுக்கணும்.
ஓஹா, அதனாலதான் நேத்து பக்கத்து வீட்டு ஃப்ரீத்தி அம்மாவுக்கு அப்பா
மூக்குத்தி கொடுக்கும்போது மறைச்சு கொடுத்தாங்களோ...?
? ? ?
*-------------------------------------------09------------------------------------------*
அம்மா வாத்தியாரு, என்னை முட்டாப்பய மகனே அப்படினு கூப்புடுறாருமா...
இதிலிருந்து நீ படிச்சுக்கிட்டது என்ன....? என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளியே வந்தே தீரும் நாளைக்கு உன்னோட மகனை இந்த மாதிரி எந்த வாத்தியாரும் சொல்லக்கூடாது அந்த அளவுக்கு நீ படிப்புல கவனம் செலுத்தி படிக்கணும் கேட்டோ...?
ஓகேமா.
*-------------------------------------------10------------------------------------------*
காணொளி
எல்லாம் அருமை அண்ணா...
பதிலளிநீக்குஉடனடி வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குசிரித்து, ரசித்து மகிழ்ந்தேன் ஜி.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி நண்பரே
நீக்குஅப்பா செம வாண்டு போல... ஹா... ஹா...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குசெமையா சிரிச்சு முடிலப்பா...ரொம்ப ரசித்தோம்..
பதிலளிநீக்குதுளசி: கில்லர்ஜி! குக்கிங்க் பண்ணிட்டுருக்கும் போது உங்க லிங்க் வந்துச்சு...பார்த்தா சிரிச்சு....அடுப்புல அடிப்புடிச்சு....காலையில் நான் வாசிப்பது இல்லை. நேற்று கீதா கொஞ்சம் கோபித்துக் கொண்டார். உன் கருத்தும் வந்து போடுவதற்குள் ரொம்ப லேட்டாகிப் போகுது என்று ...அதனால் வந்த வினை.ஹஹ்ஹஹ் என்றாலும் ரிலாக்ஸ்ட்!!! சூப்பர் ஜி! இப்படியே தொடருங்கள்! சோகம் வேண்டாம்...
இப்படியே தொடரவா ? நவரசமும் நமது தளத்தில் வரும்.
நீக்குவண்டு முருகன் மகனா!?..
பதிலளிநீக்குநண்டு மாதிரி அல்லவா துளைக்கிறான்!!..
ஆமாம் ஜி குண்டூர் குருசாமி பேரன்தான்.
நீக்குஹாஹா
பதிலளிநீக்குவாங்க, வாங்க நன்றி
நீக்குசெம காமெடிஸ்..
பதிலளிநீக்குவாங்க சகோ நன்றி
நீக்குபிரீத்தி அம்மாவுக்கு மறைச்சு கொடுத்ததை ,இந்த பய பிள்ளே எப்படித்தான் பார்த்தானோ ?நல்லா வருவான் :)
பதிலளிநீக்குவாங்க ஜி பகவான் வாழ்த்து இருந்தால் கண்டிப்பாக வருவான்
நீக்குநகைக்கவும் சுவைக்கவும் செய்தேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்குஅருமை.
பதிலளிநீக்குதோழருக்கு நன்றி
நீக்குvideo super machan
பதிலளிநீக்குநன்றி மாப்ளே.
நீக்கு2மச்!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஅனைத்தையும் ரசித்தேன்; பாவப்பட்ட பெண்களை நினைத்து வருத்தப்படவும் செய்தேன்.
பதிலளிநீக்குகலக்கல் எழுத்து நண்பரே.
நண்பரது கருத்துரைக்கு நன்றி
நீக்குபடிப்பிலே கவனம் செலுத்தி படித்தால் நல்லதுதான்.
பதிலளிநீக்குகாணொளி அருமை.மலையாளம் பேசுகிறது குழந்தை என்று மட்டும் புரிகிறது.
சகோவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குo....o;;;;yes....
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்குகேள்விக் கணைகள் பலமென்றால்
பதிலளிநீக்குபதில் கணைகளும் பலமாயிருக்கே
தொடருங்க... தொடருகிறேன்
வருக நண்பரே தொடர்வதற்கு நன்றி
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஎல்லாம் அருமையா இருக்கு அதிலும் கனகவள்ளியும் சித்திரா சித்தியும் செம கடைசியில் நல்ல முடிவு வாழ்த்துகள் ஜி
தம +1
சொல்ல மறந்திட்டேன் நல்ல ட்ரெஸ் ஒண்ணு போட்டிருக்கீங்க படம் எடுக்கேக்க ஹா ஹா ஹா
வருக கவிஞரே உடையணிந்துதான் புகைப்படம் எடுத்தேன் கேமரா ஸ்கேனிங் மோடில் இருந்தது உடையில்லாமல் எடுத்து விட்டது
நீக்குஇரசித்தேன்!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி
நீக்கு